Published:Updated:

80’- ஸ் கிட்ஸ் முதல் 20’- ஸ் புள்ளிங்கோ வரை...

மாருதி ஸ்விஃப்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மாருதி ஸ்விஃப்ட்

சமர்ப்பணம்: மாருதி ஸ்விஃப்ட்

ரு பக்கம் ஆல்ட்டோ, வேகன்-R, இன்னொரு பக்கம் காலாவதி ஆகி ஓடிக்கொண்டிருந்த ஜென், மாருதியைத் தாண்டி சிறிய கார் வாங்குபவர்களின் கவனம், அப்போது புதிதாக வந்திருந்த ஹூண்டாய் கெட்ஸ் பக்கம் திரும்பியது. அந்தச் சமயம், அதாவது 2005 -ம் ஆண்டு மாருதிக்குப் புத்துயிர் ஊட்ட, ஜப்பானிலிருந்து வந்து இறங்கியது ஸ்விப்ட்.

சாலையில் ஓடியபோது அதன் ‘Squat’ வடிவமைப்பு, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. வந்த வேகத்திலேயே 2006-ம் ஆண்டுக்கான `இந்தியன் கார் ஆஃப் தி இயர் - ICOTY' விருதையும் வென்று கவனம் ஈர்த்தது. வெறும் பெட்ரோல் இன்ஜினுடன் வெளிவந்த ஸ்விப்ட், 2007-ம் ஆண்டு முதன்முறையாக பியட்டின் 1.3 லிட்டர் இன்ஜினுடன் டீசல் மாடல் களம் இறக்கப்பட்டது. இந்த DDiS இன்ஜின்தான் 13 ஆண்டுகளாகப் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் ஓடிக் களைத்து, கடந்த ஏப்ரல் மாதம் BS-VI காரணமாக உற்பத்தியில் இருந்து நிறுத்தப்பட்டது.

2008-ம் ஆண்டு செடான் பாடியில் வெளிவந்த ஸ்விஃப்ட் டிசையர், ஃபேமிலி ஆடியன்ஸைத் தன் பக்கம் திருப்பியது. அதேசமயம், சென்னை உள்பட இந்தியாவின் 13 மெட்ரோ நகரங்களில் ஓடும் கார்களுக்கு BS-4 மாசுக் கட்டுப்பாடு, 2010-ம் ஆண்டே விதிக்கப்பட்டதால், பழைய 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுக்குப் பதிலாக புதிய 1.2-ல் K-சீரிஸ் இன்ஜின் கொண்டு வரப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அற்புதமான ஹேண்ட்லிங்கும், நிறைவான மைலேஜும் கொண்ட ஸ்விஃப்ட்டுக்குப் பெரிய மைனஸாக இருந்தது பின் பக்க இடவசதி. இதற்குத் தீர்வாக 2011 இறுதியில் வெளியானது இரண்டாம் தலைமுறை ஸ்விஃப்ட். அகலமான பாடி, அதிகரிக்கப்பட்ட வீல்பேஸ் என அது தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2012-ம் ஆண்டுக்கான ICOTY விருதையும் வென்றது. 6 ஆண்டுகள் அப்படியே ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்தால், BS-6, கட்டாய ஏர் பேக், புதிய போட்டியாளர்கள் என ஆட்டோமொபைல் சீன் மாறியிருந்தது. `யாரு படம் ஓடினாலும், ஹீரோ அங்க நான்தான்' என்று சொல்வது போல, மூன்றாம் தலைமுறை ஸ்விப்ட் 2018-ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் என்ட்ரி கொடுத்தது.

மாருதி ஸ்விஃப்ட்
மாருதி ஸ்விஃப்ட்

சொல்லி வைத்தாற்போல், மூன்றாவது முறையும் ‘ICOTY’ விருதைத் தட்டிப் பறித்து ஹாட்-ட்ரிக் சாதனை படைத்தது ஸ்விஃப்ட். இதன் பார்முலாவைப் பல நிறுவனங்கள் காப்பியடிக்க முயற்சி செய்தாலும், தோல்வியே மிஞ்சியிருக்கிறது.

முதன்முதலாக அறிமுகப்படுத்தியபோது, 80’ஸ் ஜென்டில்மேன்களைக் கவர்ந்த ஸ்விஃப்ட், சரியான இடைவெளியில் அப்டேட் ஆகிக்கொண்டே வந்து 2-ம் தலைமுறையில் 90’ஸ் கிட்ஸையும், இப்போது லேட்டஸ்ட் புள்ளிங்கோக்களைக்கூட தன் ரசிகர்களாக வளைத்துப் போட்டதுதான் ஸ்விஃப்ட் செய்த மாயம்!

விநாயக்ராம்