நான் ஸ்டீயரிங்கில் உட்கார்ந்தபோது, யோசித்தது இதைத்தான். `ஹூண்டாய் போல் மாருதி ஏன் ஒயர்லெஸ் சார்ஜிங்கில் எல்லாம் மனசு வைக்கவில்லை?’

புது ஸ்விஃப்ட்டில் முக்கியமான மாற்றம் நடந்த பெரிய இடம் – பானெட்டுக்குக் கீழேதான். இந்த இன்ஜினின் பெயர் டூயல்ஜெட். ஒவ்வொரு சிலிண்டருக்கும் 2 இன்ஜெக்டர்கள் என்பது செம! அப்படியென்றால், இந்தச் சின்ன காரில் மொத்தம் 8 இன்ஜெக்டர்கள். பெர்ஃபாமன்ஸிலும் மைலேஜிலும் நிச்சயம் முன்னேற்றம் இருக்கும். டர்போ தேவையில்லை போங்கள். இந்தப் புது இன்ஜினுக்கு, பழசைவிட 2 கிமீ அதிகமாக மைலேஜை க்ளெய்ம் செய்கிறது மாருதி. (23.20கிமீ). இதன் பவர் 90 bhp. பழசில் இருந்தது 83 bhp. 7bhp கூட்டியிருக்கிறார்கள். மற்றபடி டார்க், அதேதான்.

நான் டிசையர், பெலினோவை ஓட்டியிருக்கிறேன். அந்த NA பெட்ரோல் இன்ஜினின் ஸ்மூத்னெஸ் மிகவும் பிடிக்கும். இப்போது ஸ்விஃப்ட்டின் ஆக்ஸிலரேட்டரை மிதித்ததும் அந்த ஸ்மூத்னெஸை உணர முடிந்தது. ஏசி போடாமலேயே இதன் ஐடிலிங்கைக் கவனித்தேன். 600rpm-ல்தான் இருந்தது. பெரும்பான்மையான கார்கள் 900–ல் இருக்கும்தானே! ஸ்விஃப்ட், அப்படியும் ரெஸ்பான்ஸிவ் ஆகத்தான் இருந்தது.

நான் ஓட்டியது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ். (இதில் AMT ஆப்ஷனும் உண்டு.) ஆக்ஸிலரேட்டரை மிதித்த அடுத்த நொடி, 1,200rpm–யை முள் தாண்டியதும், ஒரு இழுபறி தெரிந்தது. ஆனால், அது பவர் டெலிவரி ஸ்ட்ராங் ஆவதற்கான தருணம். மேலும் மேலும் இன்ஜின் ஸ்பின் ஆவது செமையாக இருந்தது. ஸ்விஃப்ட்டில் ஓவர்டேக்கிங்கில் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. 90bhp பவரும் வெளிக்கொணர்வது போல் ஃபீல் ஆனேன். அந்தப் பழைய உற்சாகம். சில கார்களில் ஏகப்பட்ட முயற்சி போட வேண்டியிருக்கும். சிட்டி டிராஃபிக்கில், குறைந்த வேகங்களில் சத்தமும் குறைவுதான். அதனால், நகரங்களில் ஓட்டவும் ஸ்விஃப்ட் சூப்பர். இதில் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியும் இருப்பது, ஓட்டுவதற்கு ஜாலியாகவும் இருக்கிறது.

அதற்காக, ஸ்விஃப்ட்டின் பெர்ஃபாமன்ஸை போலோ, நியோஸ் ஐ10 போன்ற த்ரில்லிங் பெர்ஃபாமன்ஸ் கார்களுடன் ஒப்பிட முடியாது. ஆனால், பெர்ஃபாமன்ஸ் உறுதியாக இருக்கிறது.

0–கிமீ–ல் ஆரம்பித்து முடிந்தவரை ஆக்ஸிலரேட்டரை அப்படியே ஃப்ளோரில் அழுத்தியபடி இருந்தேன். 6,400rpm வரை முள் துடித்தது. 100 கிமீ–யை அடைய ஸ்விஃப்ட், 11.67 விநாடிகள் எடுத்துக் கொண்டது. இது பழைய ஸ்விஃப்ட்டைவிட வேகம்தான். இதுவே கிராண்ட் ஐ10 நியோஸ், 9.82 விநாடிகள்தான் எடுத்துக் கொள்ளும். போலோவும் வேற லெவல். என்ன, இவற்றிலெல்லாம் டர்போ இருக்கிறதே!

மற்றபடி, ஸ்விஃப்ட்டின் சுறுசுறுப்பு எந்தவிதத்திலும் குறையவில்லை. குறைந்த வேகங்களில் ஈஸியாகவும், எளிமையாகவும் இருக்கும் இதன் ஸ்டீயரிங் ஃபீட்பேக்கும் சரி; இன்ஜின் ரெஸ்பான்ஸும் சரி – எனக்குப் பிடித்திருந்தது. சில கார்களில் திருப்பு திருப்பு என்று ஸ்டீயரிங்கைத் திருக வேண்டியிருக்கும். ஸ்விஃப்ட் அதில் அருமை. அதேபோல், இதன் குறைந்த வேக ஓட்டுதலில் இறுக்கமும் மாறவில்லை. அதாவது, அதே ஸ்டிஃப் சஸ்பென்ஷன் செட்–அப்தான். மாருதி, பின் பக்கம் டிஸ்க் கொடுக்கும் நாள் எப்போது வரும் என்று தெரியவில்லை.

இந்த ஸ்விஃப்ட்டை போலோ, நியோஸ் போன்று ஜாலியான கார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இதன் உறுதியான பெர்ஃபாமன்ஸும், சிட்டிக்குள் ஓட்ட இதன் அற்புதமான ரைடிங்கும், குறைந்த வேகங்களில் இதன் பவர் டெலிவரியும் ஓட்டுநர்களுக்குப் பிடிக்கும். ஸ்விஃப்ட்டில் டீசல் இல்லை என்பது ஒரு குறை. இதன் ஆன்ரோடு விலை சுமார் 6.85 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருகிறது. நான் ஓட்டிய இந்த காரின் விலை சுமார் 9.20 லட்சம். மற்றபடி வசதிகள், பிராக்டிக்காலிட்டியிலும் இது ஓகே! இதன் பூட் ஸ்பேஸ் 268 லிட்டர். இதன் க்ளெய்ம்டு மைலேஜைவிட (23.20 கிமீ) இதன் ரியல் டைம் மைலேஜ் நன்றாக இருந்தால், வாடிக்கையாளர்கள் இந்த ஸ்விஃப்ட்டை விடவே மாட்டார்கள்.