Published:Updated:

2.45 கோடிக்கு 250 கிமீ வேகம் போகும் பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

மெர்சிடீஸ் பென்ஸ் AMG EQS 53 4Matic+
பிரீமியம் ஸ்டோரி
மெர்சிடீஸ் பென்ஸ் AMG EQS 53 4Matic+

ஃபர்ஸ்ட் லுக்: மெர்சிடீஸ் பென்ஸ் AMG EQS 53 4Matic+

2.45 கோடிக்கு 250 கிமீ வேகம் போகும் பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

ஃபர்ஸ்ட் லுக்: மெர்சிடீஸ் பென்ஸ் AMG EQS 53 4Matic+

Published:Updated:
மெர்சிடீஸ் பென்ஸ் AMG EQS 53 4Matic+
பிரீமியம் ஸ்டோரி
மெர்சிடீஸ் பென்ஸ் AMG EQS 53 4Matic+

`மெர்சிடீஸ் என்றால் சொகுசு கார். AMG என்றால் அசுர வேகம். EQ என்றால் மின்சாரக் கார். மின்சாரத்தில் இயங்கும் ஒரு சொகுசு கார், AMG காராக, ரேஸிங் காராக வெளிவந்தால் எப்படியிருக்கும்?' இதோ இப்படித்தான் இருக்கும் என்று AMG EQS 53 4Matic + காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்க்!

பென்ஸுக்கு மின்சார வாகனம் புதிது இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே அவர்கள் EQC என்கிற பெயரில் மின்சார காரை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால், அந்த கார் ஒரு மின்சார ஏஎம்ஜி பெர்ஃபாமன்ஸ் காராக, செடானாக வந்தால்....? அதுதான் இப்போது அறிமுகமாகியிருக்கும் AMG EQS 53 4Matic+.

இந்தக் கார் 560Kw, அதாவது 761bhp அளவுக்குச் சக்தியையும், 1,020Nm அளவுக்கு டார்க்கையும் வெளிப்படுத்தும். எங்கே நாம் குறிப்பிட்டிருக்கும் எண்ணிக்கையில் எழுத்துப் பிழையோ, எண்ணிக்கையில் பிழையோ என்று நினைத்து விடாதீர்கள். இதுதான் AMG EQS 53 4Matic+ காரின் சக்தி. அதாவது, ஒரு என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கொடுக்கக்கூடிய காரின் சக்தியைவிட 10 மடங்கு அதிகம். சுமார் இரண்டரை டன் (2,655 Kg) எடை கொண்ட இந்தக் கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.4 விநாடிகளில் கடந்துவிடும். டாப் ஸ்பீடு - மணிக்கு 250 கி.மீட்டர்

மின்சாரக் கார் என்றால் எழும் அடுத்த கேள்வி, ரேஞ்ச்!, `ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை கிமீ ஓடும்?'. இது 526 முதல் 586 கிமீ வரை வேகத்துக்குத் தகுந்த மாதிரி ஓடும். அப்படியென்றால், இதை சார்ஜ் செய்ய எவ்வளவு நேரமாகும்? 10% - 80% சார்ஜ் ஏற்ற வெறும் 30 நிமிடங்கள்தான் ஆகும். அப்படி என்ன பேட்டரி இதில் இருக்கிறது? லித்தியம் ஐயன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 400 வோல்ட் பேட்டரியில் 107.8Kw அளவுக்குப் பயன்படுத்தக்கூடிய எனர்ஜியை ஸ்டோர் செய்ய முடியும். இது எப்படிச் சாத்தியம்? அங்கேதான் பென்ஸ் பொறியாளர்கள் செல் கெமிஸ்ட்ரியில் வேலை பார்த்திருக்கிறார்கள். பேட்டரியில் இருக்கும் கோபால்ட் அளவைக் குறைத்தன் மூலம் நிக்கல், கோபால்ட், மெக்னிஷியம் ஆகியவை 8:1:1 என்ற விகிதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சரி, பேட்டரி சூடாகுமா? ஆகாது. பேட்டரி சூடானால் அதன் சூட்டைக் குறைப்பதற்கு கூலிங் செட்டப் ஒன்று இருக்கிறது. சரி, பேட்டரி எத்தனை வருடத்துக்கு வரும் என்றால் 2.5 லட்சம் கி.மீ-கள் அல்லது 8 + 2 ஆண்டுகளுக்கு வாரன்ட்டி கொடுக்கிறார்கள்.

வெளிப்புறத்தோற்றம், உள்ளலங்காரம் என்று தனித்தனித் தலைப்பிட்டுச் சொன்னால், அது முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் என்பதால், ஒரே மூச்சில் முக்கியமான விஷயங்களைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.

2.45 கோடிக்கு 250 கிமீ  வேகம் போகும் பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!
2.45 கோடிக்கு 250 கிமீ  வேகம் போகும் பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!
2.45 கோடிக்கு 250 கிமீ  வேகம் போகும் பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

AMG-ன் தனி அடையாளமான செங்குத்தான கிரில், 13 லட்சம் பிக்ஸல் அடர்த்தி கொண்ட இரண்டு ஹெட்லைட்ஸையும் இணைக்கும் டிஜிட்டல் பார் லைட், பானெட்டில் இருந்தே ஆரம்பிக்கும் சைட் பேனல் டிசைன் எல்லாம் அழகு. 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய கார் என்பதால், கூபே வடிவிலான இந்தக் கார் முழுக்க முழுக்க ஏரோடைனமிக்ஸ்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கதவுக் கைப்பிடிகள் சற்றே வெளியில் நீட்டிக் கொண்டு இருந்தால், அதுகூட எதிர்க்காற்றைக் கிழித்துக் கொண்டு போக சிறு தடையை ஏற்படுத்தும் என்று... கார் ஓடும்போது அது உள்ளுக்குள் போய்விடுகிறது. அம்புபோல வேகமாகப் போகும் இந்த காரின் மேற்கூரை வில் போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது பொருத்தமாக இருக்கிறது. 21 இன்ச் வீல், அதில் இருக்கும் சிகப்பு வண்ண கேலிப்பர்கள், 3D Helix டிசைன் கொண்ட டெயில் லாம்ப்ஸ் என்று கார் அசத்துகிறது.

அடுத்து காரின் உள்ளே கவர்வது டேஷ்போர்டு. காரணம் இதில் டேஷ்போர்டே இல்லை. அது இருக்க வேண்டிய இடத்தில் 56 இன்ச் அகலத்தில், அதாவது காரின் இடது பக்க A பில்லரில் இருந்து வலதுபக்க A பில்லர்வரை நீண்டிருக்கிறது MBUX ஹைப்பர் ஸ்கிரீன். டிரைவருக்கும், கோ டிரைவருக்கும் தனித்தனியாக 12.3 இன்ச்சுக்குத் தொடுதிரைகள். இரண்டுக்கும் நடுவே 17.7 இன்ச்சில் சென்ட்ரல் டிஸ்ப்ளே. காருக்கு உள்ளே இருக்கும் வெளிச்சத்தின் அளவுக்கு ஏற்ப இந்த தொடுதிரைகளின் பிரைட்னஸ் தானாகவே அட்ஜஸ்ட் ஆகிக்கொள்ளும். இதில் லேயர் லேயராகச் சென்று எதையும் தேட வேண்டியதில்லை. என்ன தேவையோ... அது கண்ணுக்கு எதிரில் தெரிகிறது. 2,432 Cm2 கொரில்லா கிளாஸ், 46.4 GB RAM என்று மிரட்டுகிறது.

2.45 கோடிக்கு 250 கிமீ  வேகம் போகும் பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

குளிர்ந்த அல்லது சூடான காற்றைக் கொடுக்கும் வென்ட்டிலேட்டட் சீட்ஸ் nappa லெதரில் உட்கார மெத்தென்று வசதியாக இருக்கிறது. இசைப் பிரியர்களுக்கு கார் முழுதும் சுற்றிச் சுற்றி 15 Burmester ஸ்பீக்கர்கள் கொடுத்திருக்கிறார்கள். பின்னிருக்கைகளில் வசதிக்காகக் கை வைக்கும் ஆர்ம் ரெஸ்ட்டில் MBUX தனி TAB கொடுத்திருக்கிறார்கள். ஆம்பியன்ட் லைட்டிங், ஹெட்அப் டிஸ்ப்ளே, சன் ரூஃப்... இப்படி என்னென்ன வசதிகள் எல்லாம் நமக்குத் தெரியுமோ - அதைவிட இரண்டு மூன்று மடங்கு வசதிகள் இதில் இருக்கின்றன.

எலெக்ட்ரிக் காரில் ஸ்டீயரிங் வீலில் எதற்கு பேடில் ஷிஃப்ட்டர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்ற கேள்வி வரும். ஆட்டோமேட்டிக் கியர் லீவரில் இருக்கும் N,R,D போன்ற பட்டன்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. 4 வீல் டிரைவ் கொண்ட இந்தக் காரின் டர்னிங் ரேடியஸ் 10.9 மீட்டர்தான் என்பதால் சுலபமாகத் திரும்ப முடியும்.

ADAS level 2 கொண்ட இந்தக் காரில் சுற்றிச் சுற்றிக் கேமராக்களாக இருக்கின்றன. சென்சார்கள் மட்டும் 350-க்கும் மேல்! பாதுகாப்பு பற்றி ஒரே வரியில் சொல்லி விடலாம். குளோபல் NCAP-ல் இது 5 ஸ்டார் வாங்கியிருக்கிறது.

சரி, விலை? அதிகம் இல்லை... ஜஸ்ட் 2.45 கோடிதான்.