டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் A-க்ளாஸ் செடானைப் பார்த்தபோது, கொஞ்சம் வியப்பாகவே இருந்தது. ஏனெனில் AMG A35 செட்-அப்பில் கார் இருந்ததே அதற்கான காரணம். எனவே, வழக்கமான மாடலுடன் ஒப்பிட்டால், இதில் பல ஸ்போர்ட்டியான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. லேட்டஸ்ட் மெர்சிடீஸ் பென்ஸ் தயாரிப்புகளைப்போலவே, இங்கும் அகலமான கிரில்லில் நிறுவனத்தின் லோகோ பிரதானமாக இடம் பெற்றிருக்கிறது.

LED DRL உடனான LED ஹெட்லைட்ஸ் மற்றும் ஸ்டைலான பம்பர், இதனுடன் செம கூட்டணி அமைத்துள்ளன. B-பில்லர் வரை பார்க்க A-க்ளாஸ் ஹேட்ச்பேக் போலவே இருந்தாலும், நீளமான பின்பக்கக் கதவுகள் மற்றும் பூட் பகுதிக்குச் சரியும் ரூஃப் ஆகியவை இதை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

பெரிய டெயில் லைட்ஸ் மற்றும் நீட்டான பம்பர், A-க்ளாஸ் செடானுக்கு அழகு சேர்க்கின்றன. டர்பைன் ஏசி வென்ட்கள், டூயல் ஸ்க்ரீன் அமைப்பு (ஒன்று டச் ஸ்க்ரீன், மற்றொன்று டிஜிட்டல் மீட்டர்) செம ஹைடெக் ரகம். MBUX சிஸ்டத்தை, ஸ்டீயரிங் வீல் மற்றும் சென்டர் கன்சோலில் உள்ள டச் பேடு வழியே இயக்க முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 306bhp பவர் - 40kgm டார்க்கைத் தருகிறது.

7 ஸ்பீடு DCT மற்றும் 4Matic அமைப்பு இதனுடன் சேர்ந்து, 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 4.8 விநாடிகளிலேயே AMG A35 எட்டிப்பிடிக்க உதவுகின்றன. ஆனால் நம் நாட்டில் A200 (163bhp) மற்றும் A180d (116bhp) இன்ஜின்களை எதிர்பார்க்கலாம்.

மெர்சிடீஸ் பென்ஸின் காம்பேக்ட் மாடல்கள் தயாரிக்கப்படும் MFA-II பிளாட்ஃபார்மில்தான் A-க்ளாஸ் செடான் உற்பத்தியாகிறது. இது வழக்கமான 2,729 மிமீ வீல்பேஸில் வந்தாலும், A-க்ளாஸ் ஹேட்ச்பேக்கிலிருந்து வேறுபடுத்தும் வகையில், இதற்கு A-க்ளாஸ் லிமோசின் என இந்த நிறுவனம் பெயரிட்டுள்ளது. ஆடி A3, பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் Gran Coupe ஆகிய கார்களுடன் போட்டியிடும் இந்த என்ட்ரி லெவல் லக்ஸூரி செடான், உத்தேசமாக 32-40 லட்ச ரூபாய் விலையில் வரலாம்.