Published:Updated:

யெஸ்... பேபி எஸ்-க்ளாஸ் இந்த சி-க்ளாஸ்!

பென்ஸ் C-க்ளாஸ் (5th Gen)
பிரீமியம் ஸ்டோரி
பென்ஸ் C-க்ளாஸ் (5th Gen)

ஃபர்ஸ்ட் டிரைவ்: மெர்சிடீஸ் பென்ஸ் C-க்ளாஸ் (5th Gen)

யெஸ்... பேபி எஸ்-க்ளாஸ் இந்த சி-க்ளாஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: மெர்சிடீஸ் பென்ஸ் C-க்ளாஸ் (5th Gen)

Published:Updated:
பென்ஸ் C-க்ளாஸ் (5th Gen)
பிரீமியம் ஸ்டோரி
பென்ஸ் C-க்ளாஸ் (5th Gen)
யெஸ்... பேபி எஸ்-க்ளாஸ் 
இந்த சி-க்ளாஸ்!
யெஸ்... பேபி எஸ்-க்ளாஸ் 
இந்த சி-க்ளாஸ்!

பென்ஸ் என்றால் க்ளாஸ் என்பது நமக்குத் தெரியும். அதிலும் S-க்ளாஸ் இருக்கே... இதுதான் சொகுசின் உச்சம். `இப்போ எதுக்கு S-க்ளாஸ் பற்றித் தெரிஞ்ச விஷயத்தைச் சொல்லிக்கிட்டு’ என்கிறீர்களா? அப்படிப்பட்ட எஸ்-க்ளாஸின் சொகுசுக்கு இணையாக ஒரு C-க்ளாஸ் காரை லாஞ்ச் செய்திருக்கிறது பென்ஸ். இது சி-க்ளாஸுக்கு 5-வது ஜெனரேஷன். இது பற்றி பென்ஸ் CEO ஒலா கலினியஸ், "இந்த C- க்ளாஸ் `பேபி S-க்ளாஸ்’ அனுபவத்தைக் கொடுக்கும். அகராதியில், C மற்றும் S எழுத்துகள் இரு முனைகளில் இருக்கும். ஆனால், பென்ஸ் நிறுவனத்தின் அகராதியில் இந்த இரண்டு எழுத்துகளும் நெருங்கி வருகின்றன!" என்றார்.

முதன்முதலாக 1982-ல் பிறந்த C-க்ளாஸ், இதுவரை ஐந்து தலைமுறைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் 2001-ல் கால்தடம் பதித்து கிட்டத்தட்ட 37,000-க்கும் மேற்பட்ட யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவில் C-க்ளாஸ், என்ட்ரி லெவல் பென்ஸ் காராக இருந்தது. ஆனால், இப்போது சி-க்ளாஸின் லெவலே வேறு! இதன் அவுட்லுக்கே - S- க்ளாஸ் பென்ஸின் ஜெராக்ஸ்போலவே இருக்கிறது.

வளர்ந்துவிட்ட பென்ஸ் சி-க்ளாஸின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இதோ!

டிசைன்

ஒரு விஷயம் எதேச்சையாக நடந்ததா… வேண்டுமென்றே நடந்ததா என்று தெரியவில்லை. இதை பேபி எஸ்–க்ளாஸ் என்று பென்ஸ் சொல்வது உண்மைதான்போல! அப்படியே லாங் ஷாட்டில் சின்ன எஸ்-க்ளாஸ் மாதிரிதான் இருக்கிறது. குழம்பி விட்டேன். C-க்ளாஸ் காரின் டிசைனைப் பொருத்தவரை, இதை அப்படியே இதன் அளவுகளை அதிகரித்துள்ளார்கள். கிட்டத்தட்ட முந்தைய ஜெனரேஷன் E- க்ளாஸ் பென்ஸ் அளவுக்கு இருக்கிறது. ஆனால், சி-க்ளாஸுக்கான சில ஃபேவரைட் விஷயங்களை மாற்றவில்லை. பின் பக்கத்தை வைத்தே இது சி-க்ளாஸ் என்று கண்டுபிடித்து விடலாம்.

இதன் மூக்கை ஏஎம்ஜி கிட் வெர்ஷனில் இருந்து எடுத்துள்ளார்கள். கிரில் அப்படித்தான் இருக்கிறது. ரெகுலர் காரின் கிரில்லுக்குள் செங்குத்தான ஸ்லாட்டுகள் இருக்கும். இதில் ஸ்டார் வடிவ ஸ்லாட்டுகள் கொடுத்திருப்பதை வைத்து இதைச் சொல்கிறேன்.

சி-க்ளாஸில் உள்ள ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்தை அப்படியே இதிலும் ரீட்டெய்ன் செய்திருக்கிறார்கள். இதில் ஒரு சிறப்பம்சம் – குளோபலாகத் திரியும் சி-க்ளாஸ்களில் ரியர் வீலுக்குக்கூட ஸ்டீயரிங் உண்டு. ஆனால், நமக்கு நஹி!

சி-க்ளாஸின் கதவை மூடும்போது, ஒரு விஷயம் உணர்ந்தேன். பொதுவாக, மெர்சிடீஸில் ‘Thunk’ என்றொரு சத்தம் கேட்கும். இதிலும்தான்; ஆனால் பழைய சி-க்ளாஸ் மாதிரி இல்லை இதில் கொஞ்சம் சேஸியை அப்டேட் செய்திருக்கிறது பென்ஸ்.

யெஸ்... பேபி எஸ்-க்ளாஸ் 
இந்த சி-க்ளாஸ்!

உள்ளே…

இதன் முந்தைய ஜெனரேஷன் காரைவிட இது நீண்ட வீல் பேஸுடன் வருகிறது. காரின் டேஷ்போர்டை ஒரு கலைப்படைப்பைப்போலக் கவர்ச்சியாக வடிவமைத்து இருக்கின்றனர். அதேதான், உள்ளேயும் S-க்ளாஸின் சாயல் தென்படுகிறது. சட்டென நம்மை மிகவும் கவர்ந்தது – ஆல் பிளாக்கில் அந்த ஃப்ளாட் பாட்டம் ஸ்போர்ட்டியான ஸ்டீயரிங் வீல். இது ஏஎம்ஜி கார்களில் காணப்படுபவை.

மெட்டாலிக் கார்பன் – ஃபைபர் ஃபினிஷும் ஏஎம்ஜி உபயம்தான். பார்க்கும்போதே ப்ரீமியம் உணர்வு தொற்றிக் கொள்கிறது. டேஷ்போர்டு முழுக்க அங்கங்கே ஃப்ளோட்டிங் சமாச்சாரங்கள் நிறைய தென்பட்டன. எல்லாமே அப்படியே மிதப்பதுபோன்ற ஒரு எஃபெக்ட். டோர் பேடுகளுக்குக்கூட ஃப்ளோட்டிங் எஃபெக்ட் தெரிந்தது எனக்கு மட்டும்தானா? டோர் ஹேண்டில்களும்தான். அதற்கு எல்இடி லைட்டிங்கெல்லாம் கொடுத்திருப்பது கலைப்படைப்பின் உச்சம்.

சன்ரூஃப்தான் காருக்குப் பெரிய வெளிச்சத்தைக் கொடுக்கிறது. இதை ஓப்பன் செய்வதற்குக் கொஞ்ச நேரம் ஆகிறது. விரல்களை நீளமாக ஸ்லைடு செய்ய வேண்டியிருக்கிறது.

அடுத்த அட்ராக்ஷன், இதன் டச் ஸ்க்ரீனில். இது 11.9 இன்ச்சில் செங்குத்தாக இருக்கிறது. அட, இதுவும் எஸ் க்ளாஸ்தான் பாஸ். இந்த ஸ்க்ரீனுக்குக் கீழேயே ஏர்கான் கன்ட்ரோல் பட்டன்கள் வருகின்றன. டச்சின் மூலமாக ஆப்பரேட் செய்து கொள்ளலாம். க்ளாஸியாக இருக்கிறது. நல்லவேளையாக, மெனுவுக்குள் போய் … அங்கே தேடி அலைய வேண்டியதில்லை இந்த கன்ட்ரோல்களுக்கு. சி-க்ளாஸில் வட்ட வடிவ ஏசி வென்ட்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இது Circular என்பதால், C. இல்லுமினேட்டட் டிசைனில் பக்காவாக இருக்கிறது.

இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டச் ஸ்க்ரீனைவிடப் பெருசு. 12.3 இன்ச். இந்த செக்மென்ட்டில் இதுதான் பெருசு. ஆனால், இதன் பூட் ஸ்பேஸ் வெறும் 455 லிட்டர்தான். இப்போதுள்ள பி செக்மென்ட் செடான்களிலேயே 500–யைத் தாண்டும்போது, இது குறைவுதான். எல்லாவற்றுக்கும் அந்த ஸ்பேர் டயர்தான் காரணம். ரியர் சீட்களை வேண்டுமானால், ஃப்ளிப் செய்து கொள்ளலாம் எக்ஸ்ட்ரா இடவசதிக்கு!

டீசல் பவர் செம! பெட்ரோலில் இன்னும் பஞ்ச் வேண்டும்.
டீசல் பவர் செம! பெட்ரோலில் இன்னும் பஞ்ச் வேண்டும்.
455 லிட்டர் பூட் ஸ்பேஸ் இதற்கு ரொம்பக் குறைவு. அந்த ஸ்பேர் வீல்தான் காரணம்.
455 லிட்டர் பூட் ஸ்பேஸ் இதற்கு ரொம்பக் குறைவு. அந்த ஸ்பேர் வீல்தான் காரணம்.
அட, உள்ளேயும் ஒரு பெரிய எஸ்-க்ளாஸ் காரைப் பார்ப்பதுபோலவேதான் இருக்கிறது. ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள்! ஆனால், வென்டிலேட்டட் சீட்ஸ் இல்லையே!
அட, உள்ளேயும் ஒரு பெரிய எஸ்-க்ளாஸ் காரைப் பார்ப்பதுபோலவேதான் இருக்கிறது. ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள்! ஆனால், வென்டிலேட்டட் சீட்ஸ் இல்லையே!
Mercedes Me கார் ஆப்பில் கனெக்ட் செய்து கொள்ளலாம்.
Mercedes Me கார் ஆப்பில் கனெக்ட் செய்து கொள்ளலாம்.
18 இன்ச் வீல்கள், நல்ல ஹேண்ட்லிங்!
18 இன்ச் வீல்கள், நல்ல ஹேண்ட்லிங்!

தொழில்நுட்பம்…

தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பென்ஸின் ஃபேவரைட் MBUX (NTG7) சிஸ்டத்தைச் சொல்லலாம். பயோமெட்ரிக் செக்யூரிட்டி வசதி ,வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்‌ஷன் வசதி என ஏகப்பட்ட வசதிகள். அந்த ஃபிங்கர் ப்ரின்ட் வசதிக்காகவே பென்ஸ் சி-க்ளாஸுக்கு ஒரு லைக்! அப்படியே நீல நிறத்தில் மாறி, நமது புரொஃபைலை செலெக்ட் செய்து, நமக்கு ஏற்றபடி ஸ்டீயரிங் பொசிஷன், சீட் பொசிஷன், ஆம்பியன்ட் லைட்டிங், டெம்பரேச்சர், கடைசியாக எந்த ரூட்டில் போனோம்; கடைசியாக என்ன பாட்டுக் கேட்டோம் என்பது வரை எல்லாமே பக்கா. வாய்ஸ் ரெகக்னைஷன் என்றால்… `Hey Mercedes… Load my Profie’ என்றால் போதும்; எல்லாம் பக்காவாக நடக்கும்.

இதில் பர்மெஸ்டர் 3டி சரவுண்ட் சிஸ்டம் வேற லெவல் எஃபெக்ட். இதில் சில எக்ஸ்ட்ரா வசதிகளைப் பார்க்கலாம். `Mercedes Me’ கார் ஆப்பில் கனெக்ட் செய்து கொண்டால் போதும். எல்லாவற்றையும் மொபைல் போனிலேயே செய்து கொள்ளலாம். மேலும் – ரிமோட்டிலேயே கேபினை கூலிங் செய்யும் வசதி, Here Maps உடன் கனெக்ட் செய்யப்பட்ட 3டி மேப் வசதி, முக்கியமாக அந்த க்ளவுட் கனெக்டிவிட்டி வசதிகள்… இதில் மழை, டிராஃபிக் அலெர்ட்கள் முதற்கொண்டு அசிஸ்டன்ஸ் வரை எல்லாமே உண்டு. இதில் ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், பாதுகாப்பின் அடுத்த லெவல். இந்த இன்பில்ட் நேவிகேஷன், சாலையில் இருந்து பார்வையை எடுக்காமலேயே ஓட்டுவதற்கு அருமையாக இருக்கிறது.

முன் சீட் சொகுசு, சோஃபா போல இருக்கிறது என்றாலும், வென்டிலேட்டட் சீட்கள் இல்லையே! வழக்கம்போல் பவர்டு சீட்கள். இதற்கான பட்டன்கள், கதவுகளில் கொடுத்திருக்கிறார்கள்.

பெட்ரோல் இன்ஜின்

இன்ஜினைப் பொருத்தவரை இதன் என்ட்ரி மாடலான C 200–ல் இருப்பது – 1496 சிசியும், 204 bhp பவரும், 300Nm டார்க்கும் கொண்ட பெட்ரோல் இன்ஜின். இதில் 9 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்கிறது. ரிலாக்ஸ்டு ஆக ஓட்ட ஜாலியாக இருக்கிறது. இதன் பவர் 204bhp. என்றாலும், இந்த காருக்கு இது போதவில்லையோ என்று தோன்றுகிறது. இன்னும் பவர் வேண்டும் என்று, த்ராட்டிலை ஃப்ளோர் வரை அழுத்தும்போது, பவர் டெலிவரி கிடைப்பதில் கொஞ்சம் சுணக்கம் காட்டுவதுபோல் தெரிகிறது இந்த பெட்ரோல் இன்ஜின். ஹை ரெவ்களில் கொஞ்சம் சத்தம் போடுகிறது. அதற்காக இதன் ரிஃபைன்மென்ட்டைக் கோளாறு சொல்ல முடியாது. சிசியும் போதவில்லை என்று நினைக்கிறேன். அதனால் லேக் தெரிகிறது. மிட்ரேஞ்சும் இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்க வேண்டும். 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருக்குப் பதில் DCT கொடுத்திருக்கலாமோ? இதில் கியர் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும் என்று தோன்றுகிறது. 6,100rpm வரை மரியாதையாக… ஒரு ரிலாக்ஸ்டு மேனரில் ஓட்ட இந்த பெட்ரோல் நன்றாக இருக்கும். அதாவது, பெட்ரோலில் இன்னும் பஞ்ச் வேண்டும் என்கிறேன்.

டீசல் இன்ஜின்

டீசலுக்கு வரலாம். சி-க்ளாஸில் இரண்டு டீசல் வேரியன்ட்கள் உள்ளன. இதில் 1993-சிசியும் 4 சிலிண்டர்களும் கொண்ட டீசல் இன்ஜின். இதன் பவரில் மட்டும் இரண்டு ஆப்ஷன்கள். ஒன்று 200bhp; டார்க் 440Nm. இன்னொன்று 265bhp. டார்க் 550Nm. இதன் பெயர் C300d. பெட்ரோல்/டீசல் என இரண்டிலுமே 48v மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் கொடுத்திருக்கிறார்கள். இதிலுள்ள எலெக்ட்ரிக் மோட்டாரின் பவர் 20bhp மற்றும் 200Nm டார்க். இவை பெட்ரோல்/டீசல் இரண்டுக்குமே!

ஃபன் டு டிரைவ் இந்த டீசலில் பக்காவாகக் கிடைக்கிறது. இன்ஜின் ரெவ் ஆகத் துடித்துக் கொண்டே இருக்கிறது. இதிலும் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்தான். சில BS-6 டீசல்களில் போல் பவர் டெலிவரி சுணக்கமாக இல்லை; விருட்டெனக் கிடைப்பது ப்ளஸ். உண்மையில் என்ன நடக்கிறது என்றால், 500Nm டார்க்கும், எலெக்ட்ரிக் மோட்டாரில் இருந்து வேறு ஒரு 200Nm டார்க்கும் கிடைப்பதால்… டெலிவரிக்குப் பஞ்சமில்லை. பெரிய இன்ஜினை வைத்து சின்ன காரைத் தள்ளிக் கொண்டு போவதுபோல்தான் இருக்கிறது. இதன் 0–100 கிமீ வெறும் 5.7 விநாடிகள் என்கிறது பென்ஸ். அதுவும், ஸ்போர்ட் மோடில் இன்னும் தெறி! ஹார்டு பிரேக் அடித்தவுடன் சட்டென டவுன்ஷிஃப்ட் ஆகிறது. இது அமைதியாக இயங்கினாலும், ஐடிலிங்கில் கொஞ்சம் அதிர்கிறது.

சி-க்ளாஸ் ரைடு அண்ட் ஹேண்ட்லிங் எப்படி இருக்கு?

இதில் இருப்பது 18 இன்ச் வீல்கள். வேகங்களில்தான் இதன் டைனமிக்கின் அருமை புரிகிறது. நீளமான நேர்ச் சாலைகளில் அப்படியே கிண்ணென்று உறுதியாகப் பறக்கிறது பென்ஸ் சி-க்ளாஸ். காருக்குள் இருப்பவர்கள், பெரிதாகக் குலுங்கவே மாட்டார்கள். இதன் பாடி கன்ட்ரோலும் அருமை. ஆனால், சில கரடுமுரடு சாலைகளில் லேசாகக் குலுங்கல் இருக்கலாம். சி-க்ளாஸின் எலெக்ட்ரிக் ஸ்டீயரிங் செம வேகம். குறுகலமான கார்னரிங்குகளில் ஸ்டீயரிங்க் Off Centre –க்கு வருவது செம வேகம். முன் பக்கத்தின் ஃபோர் லிங்க் சஸ்பென்ஷனை நன்றாகவே அப்டேட் செய்திருக்கிறது பென்ஸ். பின் பக்கத்தில் மல்ட்டி–லிங்க் செட்அப்புக்கு ஒரு சேஸி –மவுன்டட் சப் ஃப்ரேம் கொடுத்திருக்கிறார்கள்.

முதல் தீர்ப்பு

ஒரு எஸ் க்ளாஸ் டிஎன்ஏ–வுடனும், தொழில்நுட்பத்துடனும், வசதிகளுடனும் – ஒரு சின்ன சி-க்ளாஸைக் கொடுத்ததற்காகவே பென்ஸுக்குப் பாராட்டுகள். ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் வேறு! சின்னக் குறை என்று பார்த்தால்… பெட்ரோல் இன்ஜின் பெர்ஃபாமன்ஸையும், குறைவான பூட் ஸ்பேஸையும் சொல்லலாம்.

இது ரூ.55 - 61 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலை சொல்லியிருக்கிறது பென்ஸ். இதன் போட்டியாளர்களை ஒப்பிடும்போது, ( BMW 3 சீரிஸ் 46.9Lakh, Audi A4 40.5 lakh) இதன் விலை அதிகம்தான். ஆனாலும் 5,000 முன்பதிவுகளைப் பெற்று தனது கெத்தைக் காட்டுகிறது இந்த மெர்சிடீஸ் பேபி

எஸ்-க்ளாஸ்.

யெஸ்... பேபி எஸ்-க்ளாஸ் 
இந்த சி-க்ளாஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism