சர்வதேச சந்தைகளில் வெளியிடப்பட்ட 3 மாதங்களிலேயே, இரண்டாம் தலைமுறை GLA எஸ்யூவியை நம் நாட்டில் காண்பித்திருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். இந்த நிறுவனத்தின் சிறிய எஸ்யூவியாக பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இது, அநேகமாக அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரலாம். முந்தைய மாடலைப்போலவே இதுவும் க்ராஸ்ஓவர் டிசைனைக் கொண்டிருந்தாலும், மெலிதான ஹெட்லைட் - டெயில் லைட் போன்ற புதிய அம்சங்களைப் பார்க்க முடிகிறது.

பாடி கிளாடிங், 9 மிமீ அதிகரிக்கப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ் (143மிமீ), 17 முதல் 20 இன்ச் அலாய் வீல்களைப் பொருத்தக்கூடிய திறன் என GLA-ன் கெத்தும் கூடியிருக்கிறது. ஃப்ரன்ட் வீல் டிரைவ் கார்களுக்கான MFA-II ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த எஸ்யூவி, 4,410 மிமீ நீளம் (14 மிமீ குறைவு) - 2,020 மிமீ அகலம் (2 மிமீ குறைவு) - 1,611 மிமீ உயரம் - 2,729 மிமீ வீல்பேஸ் (30 மிமீ அதிகம்) எனும் அளவுகளில் இருக்கிறது. GLA-ன் கேபின், முன்பைவிட செம மாடர்னாகக் காட்சியளிக்கிறது.

சிங்கிள் பீஸாகக் காட்சியளிக்கும் டிஜிட்டல் மீட்டர் மற்றும் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் அதற்கான உதாரணம். MBUX சிஸ்டம் இதில் அறிமுகமாவதுடன், இதிலிருக்கும் வசதிகளை டச் பேடு மற்றும் வாய்ஸ் கமாண்ட் வழியே கட்டுப்படுத்தலாம். தரமான மெட்டீரியல்கள் மற்றும் புதிய அப்ஹோல்சரி, இன்டீரியரை அழகாக்குகின்றன.

GLA 220d மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின், 190bhp பவர் மற்றும் 40kgm டார்க்கைத் தருகிறது. GLA 200 மாடலில் உள்ள 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி, 163bhp பவரை வெளிப்படுத்துகிறது. AMG GLA 35 இந்தியாவுக்கு வந்தால், அதில் 306bhp பவரைத் தரக்கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும்.

GLA எஸ்யூவியின் புக்கிங் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், முன்பாக புக் செய்பவர்களுக்கு விலையில் 1 லட்ச ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். உத்தேசமாக 43 லட்ச ரூபாய் விலையில் வரப்போகும் இந்த எஸ்யூவி, ஆடி Q3 - பிஎம்டபிள்யூ X1 - வால்வோ XC40 ஆகிய என்ட்ரி லெவல் லக்ஸூரி எஸ்யூவிகளுடன் போட்டி போடுகிறது.