Published:Updated:

அடுத்த லெவல் எம்ஜி!

எம்ஜி ஆஸ்ட்டர்
பிரீமியம் ஸ்டோரி
எம்ஜி ஆஸ்ட்டர்

ஃபர்ஸ்ட் லுக்: எம்ஜி ஆஸ்ட்டர்

அடுத்த லெவல் எம்ஜி!

ஃபர்ஸ்ட் லுக்: எம்ஜி ஆஸ்ட்டர்

Published:Updated:
எம்ஜி ஆஸ்ட்டர்
பிரீமியம் ஸ்டோரி
எம்ஜி ஆஸ்ட்டர்

மிட் சைஸ் SUV செக்மென்ட்டில் MG-யிடம் ஹெக்டர் இருந்தாலும், அதன் பேஸ் மாடலின் ஆன் - ரோடு மாடலின் விலையே 16 லட்சத்தைத் தாண்டுகிறது. இதனால், 12 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும் க்ரெட்டா, செல்ட்டோஸ் ஆகிய கொரிய கார்கள் செக்மென்டைத் தங்கள் வசம் கொண்டுள்ளன. இதன் காரணமாக ZS EV-ன் பெட்ரோல் இன்ஜின் மாடலை 10 - 15 லட்ச விலைக்குக் கொண்டு வரவிருக்கிறது MG.

ஏற்கனவே ‘MG ZS EV’ என்பது ABCD - யைக் கலைத்துப் போட்டதுபோல் உள்ளதால், ‘ஆஸ்ட்டர்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறது MG. ‘இன்டர்நெட் இன்சைடு’ என ஹெக்டருக்கு அடைமொழி சூட்டியதுபோல ஆஸ்ட்டருக்கு ‘AI இன்சைட்’ எனச் சூட்டியுள்ளது MG. செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence)-ன் சுருக்கம்தான் AI.

அதென்ன AI இன்சைடு?

தற்போது உள்ள கார்களின் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம், பாடல்கள் கேட்க, AC கூலிங் அட்ஜஸ்ட் செய்ய என காருக்குள் இருக்கும் அம்சத்தை மட்டுமே கன்ட்ரோல் செய்ய முடியும். MG-ன் iSmart Hub இயங்குதளம் (OS) இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. வழக்கமாக டேஷ்போர்டின் மீது சிறிய பிள்ளையார் வைக்கும் இடத்தில் குட்டியாக க்யூட்டாக ஒரு AI அசிஸ்டன்ட் உங்களைப் பார்த்துக் கண் சிமிட்டும். ஜியோ சிம் மூலம் எப்போதும் ஆன்லைனில் இருக்கும் இந்த அசிஸ்டன்ட், நமது உத்தரவுகளுக்குத் தயாராக இருக்கும்.

எம்ஜி ஆஸ்ட்டர்
எம்ஜி ஆஸ்ட்டர்
Astor Dashboard
Astor Dashboard


பார்க் + நிறுவனத்துடன் ஒருங்கிணைத்து, மால்களில் நமக்காக பார்க்கிங் புக் செய்து கொள்ளலாம். டிக்கெட் நமது Fastag அக்கவுன்ட்டில் இருந்து பிடித்துக் கொள்ளப்படுமாம். நாம் வருடத்துக்கு எவ்வளவு கிமீ ஓட்டுகிறோம், எத்தனை முறை ஸ்பீடு லிமிட்டைத் தாண்டிச் செல்கிறோம் என்பதை ‘Koinearth’ எனும் நிறுவனம் சேமித்து வரும். இந்த டேட்டாவை உங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டால், ப்ரீமியம் குறைவாக இருக்கும். மேலும் இந்த டேட்டா மைக்ரோசாஃப்ட் சர்வர்களில் இந்தியாவிலேயே சேமிக்கப்படும் எனச் சொல்கிறது MG. இது எந்தளவுக்கு நடைமுறையில் சாத்தியப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆஸ்ட்டர், `Level 2 Automatic Driver Assist System’ கொண்டிருக்கும். முன்புறம் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், பாதசாரிகள் ரோட்டைக் கடப்பதை நாம் கவனிக்கவில்லை என்றாலும், தானாக அவசர கால பிரேக் அடித்து விபத்தைத் தடுக்கும். அதேபோல, க்ரூஸ் கன்ட்ரோலில் சாலையின் ஸ்பீடு லிமிட் பலகைகளை உணர்ந்து வேகத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் இருப்பதால், முன்புறம் செல்லும் வாகனம் சடர்ன் பிரேக் அடித்தால், கால தாமதமின்றி பிரேக் அடித்து நிற்கும். மேலும், ரிவர்ஸுக்கும் இது பொருந்தும்.

வாகனங்களின் எலெக்ட்ரிக் உபகரணங்களில் பொருத்தப்படும் ‘சிப்’க்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், ஆஸ்ட்டர் முழுக்க முழுக்க கனெக்டெட் கார் என்பதால், தட்டுப்பாடு நீங்கும் வரை தயாரிப்பு இருக்கப் போவதில்லை. எனவே என்ஜின், பெர்ஃபாமன்ஸ் போன்ற மெக்கானிக்கல் அம்சங்கள் மற்றும் விலை எதையும் வெளியிடவில்லை MG.