Published:Updated:

”என் கிளான்ஸா, லிட்டருக்கு 28 கிமீ கொடுக்குது!”

வாசகர் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் அனுபவம்

மைலேஜ் ஸ்டோரி: வாசகர் அனுபவம்

”என் கிளான்ஸா, லிட்டருக்கு 28 கிமீ கொடுக்குது!”

மைலேஜ் ஸ்டோரி: வாசகர் அனுபவம்

Published:Updated:
வாசகர் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் அனுபவம்

கார் வைத்துள்ள பலரும் கான்சென்ட்ரேட் பண்ணக்கூடிய விஷயம் - மைலேஜ்தான். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் ரேஞ்ச் ரீடிங் அதிகமாக இருந்தால், மனசு துள்ளிக்குதிக்கும். `நீ சூப்பர் டிரைவர்டா’ என்று நமக்கு நாமே அப்ரிஷியேட் செய்து கொள்ளத் தோன்றும். அப்படி ஒரு உற்சாகத்தில்தான் நமக்கு போன் செய்தார், உளுந்தூர்ப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ். ``சார், என் டொயோட்டா கிளான்ஸா 27 கிமீக்கு மேல மைலேஜ் வருது.. வந்து பாக்கிறீங்களா’ என்று நமக்கு காரின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை வாட்ஸ்-அப்பும் செய்தார். ஒரு எட்டு உளுந்தூர்ப்பேட்டைக்குப் போய், கிளான்ஸாவில் டிரைவ் போனபடி ராஜேஷிடம் பேச்சுக் கொடுத்தோம்.

கிளான்ஸா
கிளான்ஸா

டொயோட்டா கிளான்ஸா G கார் என்னோட மாடல். ஆரம்பத்துல 21 - 22 கிமீ வரை மைலேஜ் கிடைச்சது. வண்டி ஓட்ட ஓட்ட செட்டாக ஆரம்பிச்சது. ரேஷ் டிரைவ் செய்ய மாட்டேன். 60 - 70 கிமீ ஸ்பீடில்தான் போவேன். மிகவும் அவசரம் என்றால் கூடுதலாக 20 கிமீ வேகம் செல்வேன். அவ்வளவுதான். அதனால், இப்போ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சராசரியாக 28 கிமீ மைலேஜ் தருகிறது

ஆபீஸ்ல வேலை சம்பந்தமா தினமும் சராசரியா 140 கிமீ பயணிப்பேன். சில நாட்கள் 200 கிமீ வரை கூட காரை ஓட்டுவேன். இதுவரை இரண்டு ஸ்டேஷன்ல மட்டும்தான் பெட்ரோல் தொடர்ச்சியாகப் போட்டுக்கிட்டு வர்றேன். காரை ஓட்டும்போது துவக்கத்திலேயே விரட்ட மாட்டேன். அதேசமயம் எவ்வளவு சீக்கிரமா கியரை டாப் கியருக்கு மாற்ற முடியுமோ, அந்த இடைவெளியில் கியரை மாற்றிடுவேன். அதற்காக, சீக்கிரமாக கியரை மாற்ற வேண்டும் என்பதற்காக கடகடவென இடிக்கிற மாதிரி கியரை மாற்றமாட்டேன். வேகத்துக்கு ஏற்ற மாதிரிதான் கியரை மாற்றுவேன். சாலையில் வண்டியை ஓட்டும்போது சரியான இடைவெளிவிட்டு ஓட்டுவேன் என்பதால் பிரேக், கிளட்ச் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்த வேண்டிய அவசியமே வராது.

கிளான்ஸா
கிளான்ஸா

தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது, முன்னாடி போற வண்டிக்கும் என் காருக்கும் குறைந்தது 8 முதல் 10 மீட்டர் இடைவெளி இருப்பது மாதிரி பார்த்துக் கொள்வேன். காரணம் - முன்னாடி போற வண்டி பிரேக் அடிச்சா, நாம அதற்கு ஏத்தமாதிரி காரை முன்கூட்டியே ஸ்லோ பண்ணி ஓட்ட முடியும். மிகவும் நெருக்கமாகப் போகும்போது சடர்னாகப் பிரேக் போட்டு கியரை மாத்தி காரை ஓட்டினால், எரிபொருள் கன்னாபின்னானு காலியாகும்.

பம்பர் டு பம்பர் டிராபிக்கில் வீணாகச் சீறாமல், காரை மெதுவாக உருட்டிக் கொண்டு சென்றாலே போதும். நான் அதைத்தான் ஃபாலோ பண்றேன்.

கிளான்ஸா
கிளான்ஸா

இந்த ஸ்பீடில் போனால் சிறந்தது என்று என்னுடைய காரே சொல்லிவிடும். கூடுமானவரை அதன்படிதான் போவேன். இல்லையெனில், நமக்கே தெரியும் இந்த வேகத்தில்தான் போக வேண்டுமென்று. அப்படி ஓட்டினால் போதுமானது. கிளட்ச், பிரேக்கை தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தினால் போதும். ஸ்பீடு பிரேக்கர் வந்தால் கியரைக் குறைத்து ஓட்டிச் செல்வது நல்லது.

வாரத்தில் ஒரு முறை கட்டாயம் டயரில் காற்று சரியாக இருக்கிறதா என்று செக் பண்ணி விடுவேன். காற்று குறைவாக இருந்தால், அதிகமான இன்ஜின் பவர் தேவைப்படும், அதனால் பெட்ரோல் அதிகம் தேவைப்படும். எங்க காரை 5000 கி.மீட்டருக்கு ஒரு முறை கட்டாயம் வீல் அலைன்மென்ட் பண்ணனும். அதுமட்டுமில்லாமல், 2500 கிமீ போகும்போது ஒரு செக்-அப் பண்ணனும். இது மைலேஜ் சரியாக கிடைக்க மிக அவசியமானது.

Mileage History - Trip
Mileage History - Trip

ஏசி ஆன் செய்து ஓட்டினால், 2 கிமீ வரை மைலேஜ் குறையும் என்பார்கள். அதற்காக, நாங்கள் ஏசி போடாமலெல்லாம் இதுவரை ஓட்டியது கிடையாது. அதேபோல், விண்டோவை இறக்கி விட்டு ஓட்டினாலும் மைலேஜ் அடிவாங்கும்.

அப்புறம் 5000 கிமீதான் லிமிட் என்றால்... அதற்குள் இன்ஜின் ஆயிலைக் கட்டாயம் மாற்ற வேண்டும். இதனால், இன்ஜின் ஸ்மூத்தாக இருக்கும்; மைலேஜும் சரியாகக் கிடைக்கும்.”