Published:Updated:

பிரியோ ஏன் தோற்றுப் போனது?

பிரியோ ஏன் தோற்றுப் போனது?
பிரீமியம் ஸ்டோரி
பிரியோ ஏன் தோற்றுப் போனது?

Miss List cars

பிரியோ ஏன் தோற்றுப் போனது?

Miss List cars

Published:Updated:
பிரியோ ஏன் தோற்றுப் போனது?
பிரீமியம் ஸ்டோரி
பிரியோ ஏன் தோற்றுப் போனது?

ந்திய ஆட்டோமொபைல் சந்தை மற்ற நாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. குளோபல் விற்பனையைப் பொறுத்தவரை அங்கே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தயாரிப்பாளர் ஒரு காரின் மாடலை அப்டேட் செய்யவில்லை என்றால், அந்த கார் ஃபீல்டு-அவுட் ஆகிவிடும்.

ஆனால், நம் ஊரில் அப்படி இல்லை. 1948 முதல் 2014 வரை பெரிய மாறுதல் ஏதும் இல்லாமல் அம்பாஸடர் தயாரிக்கப்பட்டு வந்தது. அதேபோல, மாருதியின் 800, ஆம்னி, ஜிப்ஸி, டாடாவின் சுமோ, சஃபாரி, இண்டிகா போன்ற கார்களும் - காலங்கள் கடந்தும் நிலைத்து நின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சில கார்களுக்கு இந்த விதி பொருந்தாது. வந்த சுவடே தெரியாமல் காணாமல் போன சில கார்களும் உண்டு. ஒரு சில கார்கள் மட்டும் ஏன் தோல்வியைத் தழுவின என்ற கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சியே இந்த மினி கட்டுரைத் தொடர். இந்த மாதம் ஹோண்டாவின் பிரியோ ஹேட்ச்பேக் மாடலைப் பற்றிப் பார்க்கலாம்.

பிரியோ ஏன் தோற்றுப் போனது?

1995-ம் ஆண்டு சியல் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து, நொய்டா அருகே தொழிற்சாலை அமைத்தது ஹோண்டா. அசத்தலான பெர்ஃபாமன்ஸ், ஸ்மூத்தான இன்ஜின் கொண்ட சிட்டி மாடலைக் களமிறக்கிவிட்டு ஆட்டத்தைத் தொடங்கியது அந்நிறுவனம். தனக்கென ஒரு பெஞ்ச்மார்க்கைப் பதித்து, வந்த வேகத்திலேயே D-செக்மென்ட் மார்க்கெட்டைக் கைப்பற்றியது ஹோண்டா சிட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படியே 15 ஆண்டுகள் முன்னோக்கிப் பார்த்தால், டீசல் இன்ஜின் இல்லாமல் ஃபோக்ஸ்வாகன் போலோ - வென்ட்டோ இரட்டையர்களிடம் விற்பனையை இழந்து கொண்டிருந்தது ஹோண்டா. கூடவே பிரியோவையும் வெளியிட்டது ஹோண்டா. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகவில்லை பிரியோ. காரணம், ப்ரீமியம் ஹேட்ச்பேக் என்று இதற்குக் குத்தப்பட்ட முத்திரைதான். அதனால், எகிறியடித்த விலைதான் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.

போட்டிகள் நிறைந்த B செக்மென்ட்டில் அப்போது ஸ்விஃப்ட்தான் ராஜா. ஆனால், 5 ஆண்டுகளாகப் பெரிய மாறுதல் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்ததால், வாடிக்கையாளர்களின் கவனம் ஹூண்டாய் i10 பக்கம் திரும்பியது. இதைக் கவனித்த ஹோண்டா, இந்தியாவில் ஸ்விஃப்ட்போல, தாய்லாந்தில் நன்கு விற்பனையாகிக் கொணடிருந்த பிரியோவை நம் நாட்டுக்குக் கொண்டுவர முடிவு செய்தது.

பிரியோ ஏன் தோற்றுப் போனது?

ஆனால், 2011 மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால், பிரியோவின் ரிலீஸ் தள்ளிப் போனது. ஒரு வழியாக செப்டம்பரில் 4.2 லட்சம் எக்ஸ்- ஷோரூம் விலைக்கு பிரியோவைக் கொண்டு வந்தது ஹோண்டா. அதேசமயத்தில்தான் இரண்டாம் தலைமுறை ஸ்விஃப்ட் வெளியானது. இதனால் ஹோண்டா பிரியோவுக்கு ஸ்விப்ட்டுடன் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் மாருதியின் ஸ்விஃப்ட், ஜஸ்ட் லைக் தட் பிரியோவைப் பின்னுக்குத் தள்ளியது.

பிரியோவின் பின்னடைவுக்குக் காரணம் என்ன என்பதை விளக்கமாகவே பார்க்கலாம். ஜாஸ் காரிடமிருந்து பெறப்பட்ட 1.2 லி i-VTEC இன்ஜின், 6,000 rpm-ல் 88 bhp-யும், 4,500 rpm-ல் 10.9 kgm டார்க்கும் வெளிப்படுத்தி, 0-100 kmph வேகத்தைத் தொட, ஸ்விஃப்ட்டைவிட இரண்டு விநாடிகள்தான் குறைவாக எடுத்து கொண்டது.

3,610 மிமீ நீளம் என்பது குறைவாகத் தோன்றினாலும், ஹோண்டாவின் மேன் மேக்ஸிமம் - மெஷின் மினிமம் டிசைன் கோட்பாட்டினால், நான்கு பேர் வசதியாக உட்காரும்படி இதன் இடவசதி இருந்தது. இந்தக் குறைவான நீளம்தான் 4.5 மீ டர்னிங் ரேடியஸ் மட்டுமே கொண்டு, பிரியோவை நகருக்குள் சுலபமாக U-டர்ன் அடிக்க உதவியது.

அன்றைய தேதிக்குப் போதுமான சிறப்பம்சங்கள், பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் அதிக மைலேஜ் என ஹோண்டாவுக்கே உண்டான நிறைகள் இருந்தாலும், பிரியோ விற்பனையில் சொதப்பியதற்கு முக்கியக் காரணம், அதன் டிசைன்தான்.

மாருதி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள், டிசைனில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்க, முழுக்கக் கண்ணாடியால் ஆன பிரியோவின் டெயில் கேட் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. என்னதான் 5 மிமீ தடிமன் கொண்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ள டெயில் கேட் என ஹோண்டா சொன்னாலும் - விபத்து ஏற்படும்போது, கண்ணாடி உதிரி பாகங்களுக்குச் சொற்பத் தொகையை மட்டுமே இழப்பீடாக வழங்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள். சராசரி இந்திய வாடிக்கையாருடன் இது பொருந்திப் போகவில்லை. இப்படி கூட்டத்தில் தனியாகத் தெரிய வைத்த டிசைனே, பின்னர் பிரியோவுக்கு வில்லன் ஆனது.

சிறிய டிக்கி மற்றும் தனித்துவமான சிறப்பம்சங்கள் எதுவும் இல்லாதது போன்ற குறைகள் இருந்தாலும், நகருக்குள் அன்றாடம் பயன்படுத்த ஹோண்டா பிரியோ தரமான கார் என மோட்டார் விகடன் first drive ரிப்போர்ட்டிலும் சொல்லிருந்தோம்

ஆனால், பொம்மை கார் போன்ற டிசைன், உள்ளே செய்யப்பட்ட காஸ்ட் கட்டிங் விஷயங்கள் போன்ற வாடிக்கையாளர்களின் கவனத்தை, விற்பனையாக மாற்ற முடியாமல் தோற்றுப் போனது பிரியோ.

பிரியோ ஏன் தோற்றுப் போனது?

வெளியாகி 7 ஆண்டுகளுக்குப் பின்னர், 2018 அக்டோபர் - டிசம்பர் மூன்று மாத காலகட்டத்தில் இந்தியா முழுவதும் வெறும் 45 கார்கள் மட்டுமே விற்பனை ஆனது பிரியோ. 2019-ம் ஆண்டு பழைய கார்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் பாஸ் ஆனாலும், BS-6 மாசு விதிமுறைகளுக்கு மாற்றம் செய்யவேண்டியிருக்கும் என்பதால், பிப்ரவரியில் சைலன்டாகத் தயாரிப்பை நிறுத்தியது ஹோண்டா. 5 லட்ச ரூபாய்க்குள் ஒரு காரைக் கொண்டு வந்து, கவன ஈர்ப்பு பெறலாம் என ஹோண்டா போட்ட கணக்கு, தப்புக் கணக்காகியது பிரியோவால்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism