கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக்

car
பிரீமியம் ஸ்டோரி
News
car

கேள்வி-பதில்

நான் புதிதாக கார் வாங்க இருக்கிறேன். என் பட்ஜெட் 10 லட்ச ரூபாய்... பெட்ரோல் கார்தான் வேண்டும். அமேஸ், பெலினோ, வென்யூ ஆகியவை எனக்குப் பிடித்திருக்கின்றன. இடவசதி, இன்ஜின், கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றில் எது ஸ்கோர் செய்கிறது? - நரேந்திரன் ரமேஷ், இமெயில்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெட்ரோல் கார்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு செக்மென்ட்டைச் சேர்ந்தவை. எனவே, காம்பேக்ட்டான கார் வேண்டுமென்றால் ஹேட்ச்பேக்கையும், பூட் ஸ்பேஸுடன் கூடிய 3-Box கார் என்றால் காம்பேக்ட் செடானையும், கெத்தான டிசைனுடன் கூடிய கார் என்றால் காம்பேக்ட் எஸ்யூவியையும் தேர்வு செய்யலாம்.

car
car

உங்கள் தேவைகளான இடவசதியில் பெலினோ மற்றும் அமேஸ் ஸ்கோர் செய்கின்றன. இன்ஜின் ஆப்ஷன்களில் பெலினோ மற்றும் வென்யூ அசத்துகின்றன. கிரவுண்ட் கிளியரன்ஸில் எதிர்பார்த்தபடியே எஸ்யூவியான வென்யூ அதிரடிக்கிறது. எனவே உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய கார் இல்லை என்றாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது SHVS உடனான பெலினோ நல்ல சாய்ஸாக இருக்கும்.

8 - 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய சிறந்த கார் எது?

- பிரியதர்ஷன், இமெயில்.

நீங்கள் தற்போது பயன்படுத்தும் வாகனம் மற்றும் உங்கள் தேவைகளைப் பற்றிச் சொல்லவில்லை. இருப்பினும் முதன்முறையாக கார் வாங்குபவராக இருந்தால், ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களையே நீங்கள் பரிசீலிக்கலாம். ஜாஸ், i20 ஆகியவற்றின் BS-6 வெர்ஷன்கள் இன்னும் வரவில்லை. பெலினோ, கிளான்ஸா ஆகியவற்றில் BS-6 வெர்ஷன்கள் உண்டு என்றாலும், அதில் டீசல் இன்ஜின் கிடையாது. மற்றபடி இந்த செக்மென்ட்டில் தற்போது BS-6 பெட்ரோல்/டீசல் இன்ஜின்களைக் கொண்ட ஒரே காராக டாடா அல்ட்ராஸ் திகழ்கிறது.

car
car

க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங், லேட்டஸ்ட் வசதிகள், ஸ்டைலான டிசைன், சிறப்பான ஓட்டுதல் அனுபவம், மனநிறைவைத் தரும் இடவசதி என ஒரு ஆல்ரவுண்டர் பேக்கேஜாகத் திகழ்கிறது அல்ட்ராஸ். நீங்கள் காரை மாதத்துக்கு 2,000 கிமீ-யாவது பயன்படுத்துவீர்கள் என்றால், டீசல் மாடலைத் தேர்வு செய்யலாம். ஒருவேளை பெட்ரோல் மாடல் வேண்டுமென்றால், பெலினோ/கிளான்ஸா ஆகியவற்றில் ஒன்றை டிக் அடிக்கலாம். இருப்பினும் இந்த கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு

முடிவெடுப்பது நலம்.

இந்த ஆண்டில் கார் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். பல கட்டத் தேடுதலுக்குப் பிறகு, ஹோண்டா சிட்டி மற்றும் டொயோட்டா யாரிஸ் ஆகிய கார்களை இறுதி செய்துள்ளேன். எனக்கு டாப் வேரியன்ட் வேண்டாம் என்பதுடன், பெட்ரோல் மாடல்தான் தேவை. இன்ஜின் ஆயுள், மைலேஜ், சொகுசான ஓட்டுதல், குறைவான பராமரிப்புச் செலவுகள் என ஈர்க்கும் கார் எது? -சாய் பிரபு, இமெயில்.

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, ஹோண்டா சிட்டி நல்ல சாய்ஸாக இருக்கும் எனத் தோன்றுகிறது. மிட்சைஸ் செடான் விற்பனையில் சியாஸ் டாப்பராக இருந்தாலும், பெட்ரோல் மாடல்களில் சிட்டிதான் லீடிங். இதன் அடுத்த தலைமுறை மாடல் வெளிவரத் தயராக இருக்கிறது. அதேநேரத்தில், தற்போது விற்பனை செய்யப்படும் மாடலிலும் BS-6 பெட்ரோல் இன்ஜினை வழங்கியிருக்கிறது ஹோண்டா. BS-6 யாரிஸின் புக்கிங்கை டொயோட்டா தொடங்கியிருப்பதுடன், அதன் விலைகளும் வந்துவிட்டன. எனவே ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, உங்களுக்குப் புதிய கார் உடனடித் தேவையாக இருக்கும்பட்சத்தில், BS-6 சிட்டியையே தேர்வு செய்யலாம். ஒருவேளை கொஞ்சம் காத்திருக்க முடியும் என்றால், புத்தம் புதிய சிட்டியின் வருகைக்குப் பிறகு காரைத் தேர்ந்தெடுக்கலாம்.

car
car

எனது நண்பர் சான்ட்ரோ Zip (2000 வருட மாடல்) வைத்துள்ளார். தற்போது அதன் ஐந்து வருட FC (Fitness Certificate) முடிவடைகிறது. RTO அலுவலகத்தில் மறுபடியும் ஐந்து வருட FC பெறுவதற்கு அவர் முயற்சித்து வருகிறார். கார் நல்ல கண்டிஷனில்தான் இருக்கிறது. மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன விதிகளை வைத்து, இந்தக் காரைச் சாலையில் ஓட்டுவதற்குத் தடை செய்ய வாய்ப்பு இருக்கிறதா?

-ஆர். விஜய் பாலாஜி, தூத்துக்குடி.

எந்தவொரு தனிநபர் பயன்பாட்டு வாகனமாக இருப்பினும், அதன் முன்பதிவுச் சான்றிதழ் (Registration Certificate) அமலில் இருக்கும்வரைதான் பயன்படுத்தமுடியும் (15 ஆண்டுகள்). அந்த காலக்கெடு முடிவுக்கு வந்தபிறகு பெறக்கூடிய FC வாயிலாக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதனை உபயோகப்படுத்த முடியும். இன்னும் இந்தியாவில் Scrappage Policy அமலுக்கு வரவில்லை என்பதால், 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து நிறுத்துவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. தொடர்ச்சியாக அதிகரித்துவரும் காற்று மாசு காரணமாக, டெல்லியில்தான் முன்னே சொன்ன விஷயத்தை அமல்படுத்தும் முடிவில் அந்த அரசு இருக்கிறது.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com