Published:Updated:

மோட்டார் கிளினிக்

Kia Carens
பிரீமியம் ஸ்டோரி
Kia Carens ( GEOS98 )

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

மோட்டார் கிளினிக்

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

Published:Updated:
Kia Carens
பிரீமியம் ஸ்டோரி
Kia Carens ( GEOS98 )
மோட்டார் கிளினிக்

ஒரு சந்தேகம். கார்களில் AdBlue Filter என்கிற ஒன்றைக் கவனித்தேன். இது என்ன? இதற்கும் BS-6 தொழில்நுட்பத்துக்கும் என்ன சம்பந்தம்? இது எல்லா கார்களுக்கும் உண்டா… விளக்குங்கள்!

– சரண்ராம், ராமநாதபுரம்.

பெரும்பான்மையான டீசல் கார்களில் இந்த ஆட்–புளூ ஃபில்ட்டர் என்றொரு அம்சம் உண்டு. ஆட்புளூ என்பது ஒரு Fuel Additive கிடையாது. இது எக்ஸ்ட்ராவான எக்ஸாஸ்ட் ஃப்ளூயிட். இதைத் தனியாக ஒரு ரிசர்வாயரில் வைத்திருக்கிறார்கள். இது சில காஸ்ட்லி கார்களில் டீசல் டேங்க்குக்குப் பக்கத்தில் வைத்திருப்பார்கள்; சிலவற்றில் பானெட்டில் இருக்கும்; சில கார்களில் பூட்டில்கூட பொசிஷன் செய்திருப்பார்கள். புளூ கலரில் இதன் மூடி இருக்கும். இது ஆயில் மாதிரி, ஒவ்வொரு பீரியாடிக் சர்வீஸ்களிலும் டாப்–அப் செய்யக் கூடிய விஷயம். இது எக்ஸ்ட்ரா மைலேஜுக்கு உதவக்கூடிய விஷயம்.

இது பன்றிகளின் சிறுநீர் என்றொரு பேச்சு அடிபடுகிறது. ஆனால், ஒரு கலரில்லாத, யூரியா மற்றும் De-Ionised Water போன்றவற்றின் Non-Toxic கலவைதான் இந்த ஆட்புளூ. கார் ஓடும்போது, சின்ன அளவிலான ஆட்புளூ எக்ஸாஸ்ட் கேஸ் வழியாகச் செலுத்தப்படும். அதிக டெம்பரேச்சர்களில் இது அமோனியாவாகவும், கார்பன் டை ஆக்ஸைடாகவும் மாற்றப்படும். ஏற்கெனவே BS-6 வாகனங்களில் உள்ள SCR கேட்டலிஸ்ட் (Selective Catalytic Reduction), எக்ஸாஸ்ட்டில் இருந்து வரும் மோசமான நைட்ரஜன் ஆக்ஸைடுடன், இந்த அமோனியா இணைந்து செயல்பட்டு வெளிவரும்போது – அது மாசில்லாத நைட்ரஜன் வாயுவாகவும் தண்ணீராகவும் மாறுகிறது. பஸ்களிலும் லாரிகளிலும் இதே போன்றதொரு தொழில்நுட்பம் பல காலங்களாகச் செயல்பட்டு வருகிறது.

இது காலியாகும்போது – இன்ஜின் பெர்ஃபாமன்ஸும் பவர் டெலிவரியும் குறையும். இதை ரீ–ஃபில் செய்ய வேண்டும் என்பதையும் கவனியுங்கள். ஏற்கெனவே சொன்னதுபோல், இது காலியாகும்பட்சத்தில் இதை டாப்–அப் செய்ய வேண்டும். இதற்கான வார்னிங், டேஷ்போர்டில் தெரியும். ஆட்புளூ ஃபில்டர் காலியான கார்கள், ஸ்டார்ட் ஆகவும் மறுக்கும்.

எல்லா நிறுவனங்களும், தங்கள் கார்களில் இந்த AdBlue Filter பயன்படுத்தவில்லை. ஜாகுவார், லேண்ட்ரோவர், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற பெரிய கார்களில் இந்த AdBlue Filter இருப்பதைக் கவனிக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மோட்டார் கிளினிக்
GEOS98

எனது பட்ஜெட் 20 லட்சம். டஸ்ட்டர் பயன்படுத்தி வருகிறேன். எனக்குக் கால் வலி என்பதால், மேனுவல் ஓட்டுவதில் சிரமம் உண்டு. ஒரு நல்ல ஆட்டோமேட்டிக் டீசல் எஸ்யூவி வேண்டும். 5 சீட்டராக இருந்தாலே போதும். 6 சீட்டர் இருந்தால் பிரச்னை இல்லை. ஒரு நல்ல சாய்ஸாகச் சொல்லுங்கள்!

– தங்கச் செல்வன், பாண்டிச்சேரி.

நீங்கள் கேட்ட இந்த பட்ஜெட்டில் சில எஸ்யூவிகளை வரிசைப்படுத்துகிறோம். கியா செல்ட்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹேரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி 700, கியா காரன்ஸ் என்று பல ஆப்ஷன்கள் உண்டு.

செல்ட்டோஸும் க்ரெட்டாவும் ‘மாற்றான்’ சூர்யா மாதிரி இரட்டைப் பிறவிகள். ஒரே இன்ஜின்; அதே பவர்; அதே கட்டுமானம்; 2,610 மிமீ அளவு கொண்ட அதே வீல்பேஸ்;ஒரே 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் என எல்லாமே ஒரே! அட, பூட் ஸ்பேஸ் கூட 433 லிட்டர் ஒரே அளவு. சில வசதிகளில் செல்ட்டோஸ்தான் சொகுசு. அதேபோல், பராமரிப்புச் செலவில் செல்ட்டோஸ், க்ரெட்டாவைவிட கொஞ்சம் அதிகம் வருகிறது. இதன் மைலேஜ் சுமார் 10 கிமீ.

ஹேரியரை, லேண்ட்ரோவர் ப்ளாட்ஃபார்மில் தயாராகும் அதன் கட்டுமானத்துக்காகே வாங்கலாம். இப்போது காஸிரங்கா எடிஷன் அற்புதமாக இருக்கிறது. காண்டாமிருகம் போன்ற கிண்ணென்ற கட்டுறுதியும், நெடுஞ்சாலைத்தன்மையும் அருமை. பிளைண்ட் ஸ்பாட் ஏற்படுத்தும் மிரர்களும், ஏ–பில்லர்களும், குறைவான ஸ்டீயரிங் ஃபீட்பேக்கும் இதைக் குறையாகச் சொல்கிறார்கள். விலையும் உங்கள் பட்ஜெட்டைத் தாண்டி வருகிறது. இதன் மைலேஜ் சுமார் 11 கிமீ என்கிறார்கள்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700–ல் AX மாடலில் 5 சீட்டர் இருக்கிறது. ஆனால், ஏகப்பட்ட சொகுசு, பாதுகாப்பு வசதிகளும் கொண்ட லக்ஸூரி பேக், இதன் டாப் எண்டில்தான் வருகிறது. டாப் மாடல் 7 சீட்டருக்குப் போனால், இதன் பட்ஜெட் எகிறுகிறது.

கியா காரன்ஸ் கார் மட்டுமே நீங்கள் கேட்கும் பட்ஜெட்டில், எக்ஸ்ட்ரா சீட்களுடன், (6 சீட்டர் கேப்டன் சீட்கள் செம ஆப்ஷன்), சொகுசு வசதிகளுடன் டாப் மாடலே 20.80 லட்சத்துக்குக் கிடைக்கிறது. நீங்கள் பாண்டிச்சேரி என்பதால், இன்னும் விலை குறையலாம். சன்ரூஃப், வதவதவெனக் காற்றுப்பைகள், வென்டிலேட்டட் சீட்கள், ஓட்டுதலில் உற்சாகம் தரும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், போதுமான மைலேஜ், செக்மென்ட் ஃபர்ஸ்ட் வீல்பேஸ் கொண்ட பின்பக்க வசதி, நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் என நன்றாகவே இருக்கிறது கியா காரன்ஸ். 29 லட்ச ரூபாய் இனோவா க்ரிஸ்ட்டாவுக்கே போட்டியாக இருக்கும் கியா காரன்ஸை நீங்கள் பரிசீலிக்கலாம்.

பெட்ரோல் மாடல் என்றால், எம்ஜி ஹெக்டரையும் ஓட்டிப் பாருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

ஃபார்முலா ரேஸை டிவியில் பார்த்து வியந்திருக்கிறேன். இதன் கார்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்! இதில் என்ன தனிச் சிறப்பு உண்டு?

– தவமணிகண்டன், சென்னை.

உலகின் அதிவேகமான, ஆபத்தான, த்ரில்லிங்கான விளையாட்டு - ஃபார்முலா-1 கார் ரேஸ். 1946-ல் முதல் முறையாக ஐரோப்பாவில் ஃபார்முலா-1 கிராண்ட் ப்ரீ என்னும் பெயரில் ஃபார்முலா–1 ரேஸ் ஆரம்பமானது. இதில் பெரும்பான்மையாகக் கலந்து கொண்டவர்கள் இத்தாலி ரேஸர்கள். இதில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு ஃபார்முலா-A ரைடர்ஸ் என்று பெயர். இதில் முதன் முதலாக டைட்டில் வின் பண்ணியவர், அச்சீலி வர்ஸி என்பவர். தனது ஆல்ஃபா ரோமியோ காரில் கிட்டத்தட்ட 250 கி.மீ வேகம் விரட்டி, ஃபார்முலா-A ரேஸில் முதல் சாம்பியன் என்கிற பெருமையைப் பெற்றார்.

 இந்தியா சார்பில் ஃபார்முலா 1 ரேஸில் முதலில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தவர், நரேன் கார்த்திகேயன். கருண் சந்தோக், இரண்டாவது வீரர்.

 அந்தக் காலத்தில் ஆல்ஃபா ரோமியோதான் ஃபார்முலா-1 ரேஸ்களின் கனவு கார். அதிகரிக்கப்பட்ட இன்ஜின், பவர் போன்ற கார்களுடன் கொஞ்சம் மாடர்ன் ஆக மாறிய ஃபார்முலா-1 ரேஸில், 1950-ல் இங்கிலாந்தில் நடந்த போட்டியில் ஜூஸப் ஃபாரினோ என்பவர்தான் சாம்பியன் பட்டம் பெற்றார். இவரின் காரும் ஆல்ஃபா ரோமியோதான்.

2007-ல் ‘ஃபோர்ஸ் இந்தியா’ என்ற பெயரில் ஒரு ரேஸிங் டீமை ஆரம்பித்தவர், விஜய் மல்லையா. ஸ்பைக்கர் ஃபார்முலா டீமை, 88 மில்லியன் யூரோக்கள் கொடுத்து வாங்கி, அதை ‘ஃபோர்ஸ் இந்தியா டீம்’ ஆக்கி கருண், அர்மான் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்தார் விஜய் மல்லையா.

F1 ரேஸ், ஒரு சின்னத் தவறுதலால்கூட 'டெத் ரேஸ்' ஆகிவிட வாய்ப்புண்டு. வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை 24 பேர்; இண்டியானாபோலிஸ் 500 சாம்பியன்ஷிப்பில் 8 பேர்; டெஸ்ட் போட்டிகளில் 5 பேர்; நான்-சாம்பியன்ஷிப் ஃபார்முலா-1 ரேஸில் 4 பேர் என்று இதுவரை கிட்டத்தட்ட 41 பேர் ரேஸின்போதே இறந்திருக்கிறார்கள்.

ஃபார்முலா-1 வீரர்கள், கார்களில் உள்ள ஸ்டீயரிங்கைக் கழற்றிவிட்டுத்தான் உள்ளேயே செல்ல முடியும். எனவே, ‘ஸ்டீயரிங்கைக் கழற்றி மாட்ட’ என தனிப் பயிற்சியும் வழங்கப்படும். இந்த கார்களில் இருக்கும் ஸ்டீயரிங் வீலின் மொத்த எடையே 1.35 கிலோதான். ஆனால் ECU, மேப், கியர், சஸ்பென்ஷன் டேம்ப்பர் செட்டிங் என்று 120 வகையான ஃபங்ஷன்களுக்கு இந்தக் குட்டி ஸ்டீயரிங்தான் பொறுப்பு. இந்த ஸ்டீயரிங்கின் விலை மட்டும், இந்திய மதிப்பில் சுமார் 28 லட்சத்தில் இருந்து 35 லட்சம் வரை!

உலகின் மிக ஹாட்டான ரேஸும் இதுதான். இந்த காரின் காக்பிட், எக்கச்சக்க சூட்டை உமிழும்; இதனால், ரேஸர்கள் வியர்வையில் குளிப்பார்கள். ரேஸுக்கு முன்பு ஒவ்வொரு ரேஸரும் 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது விதி. ஆஸ்திரேலியா, மலேசியா, பிரேசில் இந்த மூன்று நாடுகளில் நடக்கும் ரேஸ்கள்... செம ஹாட்! இதனால், இந்த நாடுகளில் ரேஸ் நடப்பதற்கு முன்பு மட்டும் 10 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பார்களாம் ரேஸர்கள். இது தவிர காக்பிட்களில், தாது உப்புகள் கொண்ட குடிநீர் கேன்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். ட்யூப் மூலம் தண்ணீர் குடித்துக்கொண்டேயும் கார் ஓட்டலாம். ரேஸ் முடிந்த பிறகு ஒவ்வொரு ரேஸரின் எடையும் 3 முதல் 4 கிலோ வரை எடை குறைந்திருக்குமாம்.

ரேஸர்களின் எடை மட்டுமல்ல; டயர்களின் எடையும் அரைக் கிலோ முதல் முக்கால் கிலோ வரை எடை குறைந்திருக்கும். இந்த டயர்களின் ஆயுள் மொத்தம் 120 கி.மீ வரைதான். ஒரு ரேஸில் கிட்டத்தட்ட 3 முறை டயர்கள் மாற்றுவார்கள். கார்களில் டயர் மாற்றுவதற்கென்று உள்ள இடத்தின் பெயர் பிட்-ஸ்டாப். கிட்டத்தட்ட 18 பேர் கொண்ட குழு, ரேஸுக்கு இடையில் மின்னல் வேகத்தில் கார்களின் டயர்களை மாற்ற வேண்டும். அப்படி ஒரு காரின் நான்கு டயர்களையும் கழற்றி, புது டயரை மாட்டி என்று இந்தக் குழு எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு தெரியுமா? வெறும் மூன்றே விநாடிகள். இதிலும் ரெக்கார்டு பண்ணியிருக்கிறது ஃபெராரி டீம். வெறும் 2.8 விநாடிகளில் டயர்களை மாற்றி சாதனை செய்திருக்கிறது ஃபெராரி.

மொத்தம் 56 முதல் 61 லேப்புகள்; ஒரு லேப்புக்கு 5 முதல் 6 கி.மீ வரை இருக்கும். ஒரு லேப்புக்கு ஒன்று அல்லது ஒன்றரை நிமிடம் என்று 1.30 மணி நேரத்தில் ரேஸை முடித்துவிடுவார்கள். ஒரு ஃபார்முலா-1 காரின் டாப் ஸ்பீடு 300 முதல் 310 கி.மீ வரை. கன்னாபின்னா கார்னர்கள், டெட் எண்டுகள் என்று இருப்பதால், ஒரு ரேஸ் வீரரின் ஆவரேஜ் வேகம், 240 கி.மீதான் இருக்கும்.

இதுவரை இந்தியாவில் ஒரே ஒரு முறைதான் ஃபார்முலா-1 ரேஸ் நடந்தது. இதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த ட்ராக்குக்குப் பெயர் புத் இன்டர்நேஷனல் ரேஸ் ட்ராக். இதில் சாம்பியன்ஷிப் அடித்தவர் செபாஸ்டியன் வெட்டல்.

ஃபார்முலா-1 கார்களில் இருப்பது சிங்கிள் சீட்தான். ஆனால், இரண்டு பெட்ரோல் டேங்க்குகள் உண்டு. ஒரு டேங்க்கின் கொள்ளளவு - 75 லிட்டர். கிட்டத்தட்ட 150 லிட்டர் பெட்ரோலைச் சுமந்துகொண்டு பறக்கும் இந்த காரின் மைலேஜ், சுமார் 1 முதல் 1.25 கி.மீ.

நம் கார்களின் இன்ஜினில் அதிகபட்சமாக 4 முதல் 6 சிலிண்டர்கள்தான் இருக்கும். F1 கார்களில், 10 சிலிண்டர்கள் இருக்கும். 18,000 ஆர்பிஎம்-மில் 800 முதல் 900 bhp பவர் வரை வெளிப்படுத்துகிறது. அதாவது, இந்த இன்ஜின் பிஸ்டன் 1,000 குதிரை சக்தியில் ஒரு விநாடிக்கு 300 தடவை - ஒரு நிமிடத்துக்கு 18,000 தடவை மேலும் கீழுமாக இயங்கும். உலகின் அதிவேகமான F1 கார், மெக்லாரன் MB4-20A. இதன் அதிகபட்ச பவர் 920bhp.

ஒரு F1 காரில் கிட்டத்தட்ட 150 வயர்லெஸ் சென்ஸார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை, கராஜில் உள்ள இன்ஜீனியர்களுக்கு ரேஸில் என்ன நடந்து கொண்டிருக்கிறது; கார் எப்படி ஓடிக்கொண்டிருக்கிறது, ரேஸரின் இதயத் துடிப்பு என்ன போன்ற தகவல்களை, ஒரு விநாடிக்கு 1000-க்கும் மேற்பட்ட தடவை அனுப்பிக் கொண்டே இருக்கும். இதிலும் லோட்டஸ் என்கிற ரேஸிங் டீம் ரெக்கார்டு பண்ணியிருக்கிறது. அதிகபட்சமாக லோட்டஸ் டீமின் சூப்பர் கம்ப்யூட்டர், 38 ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) கால்குலேஷன்களைப் போட்டுக் காட்டி அசத்தியிருக்கிறது.

ஃபார்முலா-1 கார்களின் இன்ஜின்களும் யூஸ் அண்ட் த்ரோ வகையறாவைச் சேர்ந்தவை. முன்பெல்லாம் ஒரு இன்ஜினை ஒரு போட்டிக்கு மேல் பயன்படுத்த மாட்டார்கள். இப்போது 3 முதல் 4 போட்டிகள் வரை ஒரு காரின் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இன்ஜினில் தில்லுமுல்லுகள் நடந்தால், போட்டியாளர் குவாலிஃபையிங்கில் கடைசிக்குத் தள்ளப்படுவார்.

மோட்டார் கிளினிக்

நான் கிராண்ட் ஐ10 டீசல் கார் பயன்படுத்தி வருகிறேன். என் காரில் இருக்கும் டயர்களின் அளவு 165/65R14. இப்போது என் காருக்கு 165/70R14 செக்ஷன் டயர்கள் மாற்றப் பரிந்துரை செய்கிறார் என் மெக்கானிக். இது சரியா.. காருக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படுமா?

- செல்வேந்திரன், திருச்சி.

பொதுவாக, கார்களின் டயர்களுக்கு செக்ஷன் அளவை, அந்தந்த கார் நிறுவனங்களே ஸ்டாண்டர்டாக அளித்துதான் டயர்களைத் தயாரிக்கும். நீங்கள் சொன்ன 165/65R14 அளவு, ஹூண்டாயே ஸ்டாண்டர்டாகப் பரிந்துரைப்பது. டயர் மாற்றும்போது, டயரின் அளவைத்தான் மாற்றக்கூடாது. அதாவது, R14 என்பதை R15 என்று மாற்றுவது தவறு. இதனால், காரின் ஹேண்ட்லிங்கில் இருந்து எல்லாமே பாதிக்கப்படும்.

நீங்கள் சொல்லியிருப்பது செக்ஷன்.165/65–ல் இருந்து 165/70–க்கு மாற்ற இருக்கிறீர்கள். இதில் தவறேதும் இல்லை. இதைப் பலரும் ரெக்கமண்ட் செய்கிறார்கள். இதனால் உங்களின் ரைடிங் உயரம் அதிகரித்து, காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாகக் கிடைக்கிறது. ஓட்டுதலில் ஒரு வித்தியாசத்தை உணரலாம். ‘டம் டம்’ மேடு பள்ளங்களில் ஏற்றி இறக்கும்போது, ரிம்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதும் குறைவாகவே செய்கிறது.

இதில்கூட மோ.வி குழு உங்களுக்கு ஒரு பரிந்துரை செய்கிறது. நீங்கள் சொன்ன செக்ஷன் டயர்களில் ஃபெண்ட ருக்கும் டயருக்கும் நிறைய கிளியரன்ஸ் தெரிகிறது என்று நினைத்தால்… 175/65R14 செக்ஷன் டயர்களைக்கூட உங்கள் காருக்கு ஃபிட் செய்யலாம். இதுவும் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸைக் கூட்டும். ஹேண்ட்லிங்கும் அடிபடாது. ரோடு கிரிப்பும் கிடைக்கும் என்பதே உண்மை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism