iGen6 எனப்படும் அசோக் லேலாண்டின் BS-6 தொழில்நுட்பம், மற்ற கமர்ஷியல் வாகனத் தயாரிப்பாளர்களின் BS-6 தொழில்நுட்பத்திலிருந்து வேறுபடுகிறது. எப்படி?

PM எனும் நுண் துகள்களை 82 சதவிகிதமும், NOx எனும் வாயுவை 68 சதவிகிதமும் குறைப்பதற்காக Selective Catalytic Reduction (SCR) எனும் தொழில்நுட்பத்தைப் பெரும்பாலான கமர்ஷியல் வாகனத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இன்ஜினில் இருந்து வெளியேறும் எக்ஸாஸ்ட் புகை மீது யூரியாவைத் தெளித்து, அதில் இருக்கும் ஆபத்தான NOx வாயுவை இயற்கையான நைட்ரஜனாக மாற்றி வெளியே அனுப்புவதுதான் இதன் வேலை. அசோக் லேலாண்ட் இன்ஜின் இதே வேலையைச் செய்தாலும், கொஞ்சம் வேறுபட்டு, இன்ஜினில் இருந்து வெளியேறும் எக்ஸாஸ்ட் புகையின் ஒரு பகுதியை மீண்டும் இன்ஜினுக்குள்ளேயே செலுத்தி, அதன் மூலம் NOx வாயு மற்றும் PM துகள்களை உடைக்கிறது. இது iEGR தொழில்நுட்பம். iEGR மற்றும் SCR இணைந்ததுதான் iGen6.

வெறும் SCR முறையில், ஒரு லிட்டர் டீசலுக்கு 80 முதல் 100 மி.லி ஆட்ப்ளூ திரவம் பயன்படுத்தப்படும் என்றால், அசோக் லேலாண்டில் iGen6 தொழில்நுட்பத்தில், 40 மி.லி ஆட்ப்ளூ போதும் என்கிறார்கள். அதுமட்டுமில்லை, பழைய BS-4 வாகனத்தை ஒப்பிடும்போது, இதன் பராமரிப்புச் செலவுகளும் குறையுமாம். என்ன, விலைதான் 10 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்துள்ளது.

தாய்வான் நிறுவனமான மேக்ஸிஸ் டயர்ஸ், 2015-ல் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கியது. தற்போது ஹோண்டா, ஹீரோ போன்ற நிறுவனங்களின் ஸ்கூட்டர்களுக்கு இவர்கள்தான் டயர் சப்ளை. மேக்ஸிஸ் டயர்கள் எப்படி இருக்கிறது என்று அனுபவித்துப் பாருங்கள் என ஒரு செட் ஸ்கூட்டர் டயர்களை நமக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.

நம்மிடம் இருந்த யமஹா ரே-ZR ஸ்கூட்டரில் அதைப் பயன்படுத்தினோம். மற்ற டயர்களை ஒப்பிடும்போடு இந்த டயர்களுக்கு இருக்கும் முதல் அட்வான்டேஜ், இதன் 5 ஆண்டு அன்லிமிட்டட் வாரன்ட்டி மற்றும் ஒரு ஆண்டு ரீப்ளேஸ்மென்ட் வாரன்ட்டி.

இந்த டயர்களின் ரப்பர், மீடியம் ஹார்ட்னெஸ் கொண்டிருப்பதால் எந்த வகையான சாலையாக இருந்தாலும் கிரிப் குறையவில்லை. ஈரமான சாலையிலும் கிரிப் அருமை. டயரின் ஆயுள் நன்றாக இருந்தாலும், பயன்படுத்த ஆரம்பித்த சில நாள்களிலேயே டயரின் நிறம் மங்கிப்போனது போல இருக்கிறது.

விலை, போட்டியாளர்களை விடக் குறைவாக இருப்பது ப்ளஸ்.