Published:Updated:

கார் டிசைன் வொர்க்ஷாப்: இந்த லாக்டெளனில் இன்ஜினீயர்களே, இதை மிஸ் பண்ணிடாதீங்க!

Car Design Workshop May 2021
Car Design Workshop May 2021

‛கார் டிசைன் வொர்க்ஷாப்னா என்ன’ என்று பலருக்கும் சந்தேகம் இருக்கக் கூடும். உங்களுக்கு வாகனங்களில் டிசைன் பற்றிய பல விஷயங்களைப் புரிய வைப்பதுதான் இந்த Car Design Workshop.

நன்றாகவே நினைவிருக்கிறது. கோவிட் 19-ன் முதல் அலையின்போது நடந்தது இது. கொரோனா கிளம்பிய சீனாவின் ஒரு மூலையில்தான் நமது கோவில்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஷரோன் ராமலிங்கம், ஓர் அரும்பெரும் சாதனையைச் செய்து கொண்டிருந்தார். ஆம்! எம்ஜி (Morris Garages) கார் நிறுவனத்துக்காக, மாதம் பல ஆயிரங்கள் ஸ்டைஃபண்ட் தொகையுடன் இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருந்தார் ஷரோன். இதில் பெருமை என்னவென்றால், ஒரு பிரிட்டன் நிறுவனத்துக்கு இன்டர்ன்ஷிப் செய்த ஒரே தமிழ் மாணவன் - ஷரோன் ராமலிங்கம். எம்ஜி நிறுவனத்தின் வருங்கால கார்களில் ஷரோனின் கைவண்ணம் இருக்கக் கூடும்.

அவருக்கு இப்படி ஒரு சாதனையைச் செய்ய ஊக்குவித்ததும் வழிகாட்டியதும் - மோட்டார் விகடனும் AYA டிசைன் அகாடமியும் இணைந்து நடத்திய கார் டிசைன் வொர்க்ஷாப்.

Design Ideas
Design Ideas

‛கார் டிசைன் வொர்க்ஷாப்னா என்ன’ என்று பலருக்கும் சந்தேகம் இருக்கக் கூடும். ஒரு கார் இருக்கிறது; ஆக்ஸிலரேட்டரை அழுத்தினால் கார் ஓடும்; பிரேக் பிடித்தால் கார் நிற்கும் என்பதைத் தாண்டி - உங்களுக்கு வாகனங்களில் பல விஷயங்களைப் புரிய வைப்பதுதான் இந்த கார் டிசைன் பயிலரங்கம். நீங்கள் சாலையில் எத்தனையோ கார்களைப் பார்த்திருப்பீர்கள். எப்பொழுதாவது அந்த காரை உற்றுப் பார்த்திருக்கீறீர்களா? ஏதாவது ஒரு விஷயம் நிச்சயம் அந்த வாகனத்தில் தெரியலாம். உதாரணத்துக்கு, மஹிந்திராவின் மராத்ஸோ காரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சுறா மீனை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டுதான் அந்த கார் உருவானது. கியா கார்களின் கிரில்லை உற்றுப் பார்த்தால், புலியின் மூக்குபோல் தெரியும். டாடாவின் நெக்ஸானை எதிரெதிரே நின்று பாருங்கள். அதன் ஹெட்லைட்டும் கிரில்லும் ஓர் அன்பான மனிதன் சிரிப்பது போலவே இருக்கும்.

இப்படி கார்கள் உருவாவதில் ஏகப்பட்ட இன்ஸ்பிரேஷன்கள் இருக்கின்றன. இந்தப் பயிலரங்கத்தை நடத்த இருப்பவர் அப்படிப்பட்ட ஒரு கார் டிசைனர்தான். அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளராக இருக்கும் சத்தியசீலனின் கை வண்ணத்தில்தான் அசோக் லேலாண்ட் பஸ்கள், லாரிகள், தோஸ்த் கமர்ஷியல் வாகனம், டிவிஎஸ் ஆட்டோக்கள் என்று ஏகப்பட்ட வாகனங்கள் சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

Car Design Sketch
Car Design Sketch

ஒரு காரை பேப்பரில் வரைவதில் இருந்து, பின் மென்பொருள்களில் டிசைன் செய்யப்பட்டு, பின்னர் களிமண் உருவமாகி, ஸ்டீல் போன்ற உலோகங்கள் கொண்டு உருவம் கொடுக்கப்பட்டு, பின்னர் ப்ரோட்டோ டைப்பாகி… அதன் பிறகு தயாரிப்பு மாடலாகி… கடைசியாக உயிருடன் சாலையில் ஓடுவது வரை என்னவெல்லாம் நடக்கிறது என்று A to Z உங்களுக்குப் புரிய வைப்பதுதான் இந்த வொர்க்ஷாப்.

Design Inspiration
Design Inspiration

இதில் இன்ஜீனியர்களுக்கு மட்டுமில்லை; ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்த வொர்க்ஷாப் செமையான சாய்ஸ். ஆம்! ஓவியத்தின் அடிப்படை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி… வெறும் நான்கே ஆப்ஷன்களில் ஒரு பொருளை வரைவதுவரை - அதன் ஃபார்முலாக்களை போர் அடிக்காமல் சொல்வதும் இந்தப் பயிலரங்கத்தில் அடங்கும். போன முறை நடந்த பயிலரங்கத்தில் வெறும் நான்கே வயதான சிறுவன் ஒருவன், வெறும் நான்கே நிமிடங்களில் ஆன்லைன் வகுப்பின்போதே ஒரு ஃபோர்டு மஸ்டாங் காரை வரைந்து அப்ளாஸ் அள்ளியதும் பெருமையான விஷயம். இதில் கார் சம்பந்தமான ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொள்கிறார்கள் என்பதும் ஸ்பெஷல்.

சரி; அப்படியென்றால், இது சும்மா ஆர்வமும் பொழுதுபோக்கும் சம்பந்தமானது மட்டும்தானா என்றால்… அதுவும் இல்லை. இன்ஜீனியரிங் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வொர்க்ஷாப்பில் எந்தக் கல்லூரியில் என்ன கோர்ஸ் படித்தால்… ஸ்காலர்ஷிப்புடன் எந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உண்டு என்பது வரையிலும் இங்கே ஐடியா கிடைக்கும் என்பதுதான் ஸ்பெஷல். இப்போது முதல் பாராவைப் படியுங்கள். ஷரோன் போல் இன்னும் ஏகப்பட்ட மாணவர்கள் பிரிட்டிஷ் கார் நிறுவனங்களில், ஜெர்மனியில் வேலை வாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் சிறப்பு.

Car Design Workshop 22 and 23 May 2021
Car Design Workshop 22 and 23 May 2021

இந்த பேண்டமிக் இரண்டாம் அலையில் ஓர் அற்புதமான வாய்ப்பு காத்திருக்கிறது. இந்த மாதம் மே 22 - 23-ம் தேதி நடக்கும் வொர்க்ஷாப்பை உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

Date: 22nd, 23rd May 2021

To Register, Click here: http://bit.ly/CarDesign_May21

அடுத்த கட்டுரைக்கு