Published:Updated:

காரில் ஒளிந்திருக்கிறது காட்டு மிருகம்!

கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

கார் எழுப்பும் ஒலியும், அதன் சக்தியும் மேலும் அவர்களை ஈர்க்கிறது.

காரில் ஒளிந்திருக்கிறது காட்டு மிருகம்!

கார் எழுப்பும் ஒலியும், அதன் சக்தியும் மேலும் அவர்களை ஈர்க்கிறது.

Published:Updated:
கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

ங்கள் மகனோ, மகளோ... வெளியே அழைத்துச் செல்லும்போதெல்லாம், கண்ணில்படும் கார்களின் பெயர்களை யெல்லாம் சொல்லி, அவை பற்றி நிறையப் பேசுகிறார்களா… அது செடான், இது ஹேட்ச்பேக், இது எஸ்யூவி, க்ராஸ்ஓவர், ஆஃப்ரோடர் என்று பிரமிக்கிறார்களா? அவர்களின் கனவுகள் நனவாக வழிகாட்ட வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு.

கார்
கார்

உங்கள் குழந்தைகளின் கனவுக்குள் செல்ல வேண்டுமானால்... வீட்டிலோ வீதியிலோ தெரியும் டிவிஎஸ் அப்பாச்சி பைக், மஹிந்திரா மராத்ஸோ என்று ஏதாவது ஒரு வாகனத்தை லாங் ஷாட்டில் பாருங்கள்; நிச்சயம் ஒரு சுறா மீன் தெரியும். கியா கார் பம்பரில் புலியின் மூக்கைப் பார்க்கலாம். பல கார்களின் டேஷ்போர்டில் அருவியின் சாயல் தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெரியவர்களைவிடவும் குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் கற்பனைத் திறன் அதிகம். அதனால்தான் கார்களையும் பைக்குகளையும் பார்த்த மாத்திரத்தில் பரவசமடைகிறார்கள். கார் எழுப்பும் ஒலியும், அதன் சக்தியும் மேலும் அவர்களை ஈர்க்கிறது.

`கார் டிசைனிங் என்றால் இத்தாலிதான் என்றில்லை. இந்தியாவாலும் முடியும்’ என்கிற நிலை உருவாகிக் கொண்டிருப்பதால், சரியான வழிகாட்டுதல் இருந்தால் அவர்கள் விரும்பும் கார் டிசைனிங் துறையிலேயே, அவர்களால் நிறைய சாதிக்கவும் சம்பாதிக்கவும் முடியும். அதனால்தான் மோட்டார் விகடன் இதைக் கையில் எடுத்திருக்கிறது.

க.சத்தியசீலன்
க.சத்தியசீலன்

கல்லூரி மாணவ-மாணவிகளுக்காக மோட்டார் விகடன் நடத்திவரும் கார் டிசைனிங் பயிலரங்கத்தின் அறிமுகத்தைச் சில நாள்களுக்கு முன்பு 5 முதல் ப்ளஸ்-2 வகுப்பு வரை பயில்கிறவர்களுக்கு நடத்தியது. நடத்தியவர் சத்தியசீலன். டிசைன் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். அசோக் லேலாண்ட் நிறுவனத்தில், டிசைன் துறையின் துணைத் தலைவர். நாம் சாலையில் பார்க்கும் பல அசோக் லேலாண்ட் வாகனங்களின் டிசைன், இவரது குழுவினரின் கைவண்ணத்தில் உருவானதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜூம் செயலி வாயிலாக நடைபெற்ற இந்த அறிமுகப் பயிலரங்கத்தில் சுவாரசியத்துக்கும், கலகலப்புக்கும் பஞ்சமேயில்லை.

“ஒரு காரை வரைய ஆர்வம் இருந்தால் போதும்’’ என்று ஆரம்பித்து, பென்சிலை இப்படிப் பிடித்தால்தான் ஒழுங்கான வட்டம் வரும்; முட்டைபோன்ற எலிப்ஸ் உருவத்துக்கு இப்படித்தான் பென்சிலைப் பிடிக்க வேண்டும்; என்று கார் வரைவதற்கான பல இலக்கணங் களை எளிமையாகச் சொல்லிக் கொடுத்தார்.

காரில் ஒளிந்திருக்கிறது காட்டு மிருகம்!

சில வருடங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் களுக்காக மோட்டார் விகடன் நடத்திய இதுபோன்ற பயிலரங்கத்தில் கலந்து கொண்ட ஷரோன் ராமலிங்கம் என்ற மாணவர், இப்போது லண்டனில் இருக்கும் ராயல் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் படித்தபடி, எம்ஜி மோட்டார்ஸுக்காக இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருக்கிறார். ``அவர் ஒரு சாதாரண பின்னணியிலிருந்து வந்தவர். அவரால் முடியும் என்றால் உங்களாலும் கார் டிசைனிங்கில் சாதிக்க முடியும்!’’ என்று பல நம்பிக்கை உதாரணங்களையும் சத்தியசீலன் குறிப்பிடத் தவறவில்லை.

அறிமுகப் பயிலரங்கத்துக்கு வரவேற்பு பெரிய அளவில் இருந்ததால், அடுத்த கட்டமாக இதோ, நான்கு நாள் பயிலரங்கத்துக்கு மோட்டார் விகடன் ஏற்பாடு செய்துவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism