Published:Updated:

ஆறு '7 சீட்டர்', காரன்ஸின் ஹைலைட்ஸ் என்னென்ன?

MPVs
பிரீமியம் ஸ்டோரி
MPVs

கியா காரன்ஸோடு மார்க்கெட்டில் இருக்கும் 5 எம்பிவி ஜாம்பவான்கள் ஹூண்டாய் அல்கஸார், மாருதி எக்ஸ்எல்6, மாருதி எர்டிகா, மஹிந்திரா மராத்ஸோ, டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா – இவை அனைத்தையும் ஒவ்வொரு அம்சமாக ஒரு சின்ன ஒப்பீடு செய்து பார்த்தோம்.

ஆறு '7 சீட்டர்', காரன்ஸின் ஹைலைட்ஸ் என்னென்ன?

கியா காரன்ஸோடு மார்க்கெட்டில் இருக்கும் 5 எம்பிவி ஜாம்பவான்கள் ஹூண்டாய் அல்கஸார், மாருதி எக்ஸ்எல்6, மாருதி எர்டிகா, மஹிந்திரா மராத்ஸோ, டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா – இவை அனைத்தையும் ஒவ்வொரு அம்சமாக ஒரு சின்ன ஒப்பீடு செய்து பார்த்தோம்.

Published:Updated:
MPVs
பிரீமியம் ஸ்டோரி
MPVs

கியாதான் இப்போதைக்கு ஆட்டோமொபைலில் வெறித்தனமான டாப்பிக். இல்லையா பின்னே… ‘எப்படி கியாவுக்குக் கட்டுப்படியாகுது’ என்று சாமானியர்கள் பேசும் அளவுக்கு, தனது புது காரன்ஸ் காரின் விலையை பொசிஷன் செய்துள்ளது கியா. காரன்ஸின் டாப் எண்ட் விலைதான் இனோவா க்ரிஸ்ட்டாவின் பெட்ரோல் மாடலின் ஆரம்ப விலை. அட, விலைக்கும் பராமரிப்புக்கும் பெயர் போன மாருதியின் எக்ஸ்எல்6 காரைவிடக் குறைந்த விலையில் ஒரு கியாவின் எம்பிவியை வாங்க முடியும் என்பது டாக் ஆஃப் தி ஏரியாதானே!

அப்படிப்பட்ட கியா காரன்ஸோடு மார்க்கெட்டில் இருக்கும் 5 எம்பிவி ஜாம்பவான்கள் ஹூண்டாய் அல்கஸார், மாருதி எக்ஸ்எல்6, மாருதி எர்டிகா, மஹிந்திரா மராத்ஸோ, டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா – இவை அனைத்தையும் ஒவ்வொரு அம்சமாக ஒரு சின்ன ஒப்பீடு செய்து பார்த்தோம். அட என்றுதான் இருக்கிறது. நீங்களும் ‘அட’ சொல்வீர்கள்!

காரன்ஸ் படங்கள்:

காரன்ஸ்
காரன்ஸ்
இன்டீரியர் செம ப்ரீமியம், வசதிகள் ஏராளம்!
இன்டீரியர் செம ப்ரீமியம், வசதிகள் ஏராளம்!
காரன்ஸ், 2,780 மிமீ வீல்பேஸ் அதிகம்
காரன்ஸ், 2,780 மிமீ வீல்பேஸ் அதிகம்
காரன்ஸ், 6 MT/7 DCT டர்போவுக்கு மட்டும்
காரன்ஸ், 6 MT/7 DCT டர்போவுக்கு மட்டும்

நீள அகலப் போட்டி

காரின் நீள அகலங்கள்தான் ஒரு எம்பிவிக்கு ப்ரீமியம் லுக் கிடைக்க வைக்கும். கியா காரன்ஸ் நல்ல நீ..ளம். இனோவாவைத் தவிர கியா காரன்ஸ் அதிகமான நீளம் கொண்டிருக்கிறது. இதன் நீளம் 4,540 மிமீ. இது மற்ற 4 கார்களைவிட நல்ல நீளம். இங்கே நீளம் மற்றும் உயரப் போட்டியில் ஜெயிப்பது காஸ்ட்லியான இனோவா க்ரிஸ்ட்டாதான். இனோவாவில் சாலையில் போனால், ஆலப்புழா படகு மாதிரி அத்தனை நீளமாகப் போய்க் கொண்டே இருக்கும். அதேநேரம், இங்கே வீல்பேஸில் ஜெயிப்பது கியா காரன்ஸ்தான். வேறெந்த காரிலும் இல்லாத 2,780 மிமீ கொண்டிருக்கிறது காரன்ஸ். இதனால், பயணிகளுக்கு லெக் ரூம் செமயாகக் கிடைக்கும்.

இங்கே அகலப் போட்டியில் ஜெயிப்பது மஹிந்திராவின் மராத்ஸோ கார். ஒரு காரின் அகலத்தை வைத்து 3 பேர் நெருக்கடியில்லாமல் உட்காரும் இடவசதியைக் கணக்கிடலாம். அப்படிப் பார்க்கையில், இதில் மராத்ஸோதான் வின்னர். இதன் அகலம் 1,866 மிமீ.

எம்பிவிக்களுக்கு ஒரு வகையில் கிரவுண்ட் கிளியரன்ஸும் முக்கியம்தான். அந்த வகையில் இங்கே ஜெயிப்பது ஹூண்டாயின் அல்கஸார். 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டு ஒரு பெரிய எஸ்யூவிக்கே டஃப் கொடுக்கிறது அல்கஸார். கியாவின் கி.கிளியரன்ஸ் அதற்காக ரொம்பவும் குறை என்று சொல்ல முடியாது. அல்கஸாரைவிட 5 மிமீதான் குறைவு. மராத்ஸோதான் இதில் மிகவும் பின் தங்கியிருக்கிறது. வெறும் 150 மிமீ.

இந்தப் போட்டியில் நீள அகலங்களில் சின்னப் பசங்களாக இருப்பது மாருதியின் இரண்டு கார்கள்தான். 4,445/1,775 மற்றும் 4,395/1,735 மிமீ நீள அகலம் கொண்டு சின்னதாக இருக்கின்றன எக்ஸ்எல்6 மற்றும் எர்டிகா கார்கள். மற்றபடி இந்த இரண்டு மாருதி எம்பிவிக்களும் ஒரே வீல்பேஸ் (2,740மிமீ), ஒரே கி.கிளியரன்ஸ் (180 மிமீ), ஒரே டயர்கள் (185/65R15) என ஒரே அளவைக் கொண்டிருக்கின்றன.

மராத்ஸோ படங்கள்:

மராத்ஸோ
மராத்ஸோ
மராத்ஸோவில் பெட்ரோல் இல்லை, டீசல் ஒன்லி!
மராத்ஸோவில் பெட்ரோல் இல்லை, டீசல் ஒன்லி!
இங்கிருப்பதிலேயே அகலமான கார் மராத்ஸோ
இங்கிருப்பதிலேயே அகலமான கார் மராத்ஸோ
மராத்ஸோ இன்டீரியர் இன்னும் ப்ரீமியமாக இருக்கலாம்
மராத்ஸோ இன்டீரியர் இன்னும் ப்ரீமியமாக இருக்கலாம்

பெட்ரோல் போட்டி

இந்த கார்களில் மராத்ஸோவைத் தவிர எல்லாமே பெட்ரோலில் கிடைக்கின்றன. கியா காரன்ஸ் – இரண்டுவிதமான பெட்ரோல் இன்ஜின்களுடன் வருகிறது. 1,497 சிசி மற்றும் 1,353 சிசி இன்ஜின். இரண்டுமே 4 சிலிண்டர்கள் கொண்டவை. செல்ட்டோஸ் எஸ்யூவியில் இருந்து வாங்கியிருக்கிறது கியா. 1.5 லிட்டருக்கு 115bhp பவரும், 114Nm டார்க்கும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் கொண்ட இது சாதாரண Naturally Aspirated இன்ஜின். இங்கிருப்பதிலேயே காரன்ஸில் மட்டும்தான் டர்போ ஆப்ஷனும் உண்டு. 1.4 லிட்டரான இந்த Direct Injection இன்ஜினின் பவர் 140bhp. காரன்ஸ் டர்போ வாங்குபவர்களுக்கு கியர்பாக்ஸில் மட்டுமே இரண்டு ஆப்ஷன்கள். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன். கியா காரன்ஸ் பெட்ரோலை ஓட்டியபோது மைலேஜைச் சோதனை போட முடியவில்லை. ஆனால், 16.5 கிமீ என்று நம்மிடம் க்ளெய்ம் செய்தது கியா. இது எந்த இன்ஜின்/கியர்பாக்ஸுக்கு என்றும் தெரியவில்லை.

இங்கிருப்பதிலேயே பெரிய இன்ஜின் கொண்டது இனோவா க்ரிஸ்ட்டா. 2,694 சிசி கொண்ட இந்த க்ரிஸ்ட்டாவின் பவர் 166bhp; 245Nm டார்க். அதிக பவர்/டார்க் கொண்டதும் இதுதான். இந்த பெட்ரோல் இன்ஜினுக்கு 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்கின்றன.

அல்கஸாரையும் சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. க்ரிஸ்ட்டாவுக்கு ரொம்ப நெருக்கமாக 159bhp பவரும், 191Nm டார்க்கும் கொண்டிருக்கிறது இந்த அல்கஸாரின் 2.0லிட்டர் NA இன்ஜின். கியர்பாக்ஸைப் பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் இருக்கிறது அல்கஸாரில்.

இரண்டு மாருதி கார்களிலும் இருப்பது ஒரே இன்ஜின்தான். அதாவது, இரண்டுமே சின்னதுதான். குறைந்த பவரைக் கொண்டிருப்பதும் இந்த இரண்டு மாருதி இன்ஜின்கள்தான். இதிலிருப்பது 105bhp பவர் மற்றும் 138Nm டார்க் கொண்ட 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின். ஆனால், இங்கிருப்பதிலேயே லித்தியம் அயன் பேட்டரி, இன்டக்ரேட்டட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் கொண்ட மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் வரும் கார்கள் இந்த எக்ஸ்எல்6 மற்றும் எர்டிகாவும்தான். அதனால், மைலேஜைப் பற்றி மாருதி கார்களில் கவலைப்படத் தேவையில்லை. அதேபோல், ஃபேக்டரி ஃபிட்டட் ஆக வரும் சிஎன்ஜி மாடலும் இங்கிருப்பதிலேயே எர்டிகா மட்டும்தான். பராமரிப்புனா மாருதினு சும்மாவா சொன்னாங்க!

அல்கஸார் படங்கள்!

அல்கஸார்
அல்கஸார்
அல்கஸார், பிரௌன் கலர் இன்டீரியர்.. அருமை
அல்கஸார், பிரௌன் கலர் இன்டீரியர்.. அருமை
அல்கஸாரில் சொகுசு கேரன்ட்டி!
அல்கஸாரில் சொகுசு கேரன்ட்டி!
6 ஸ்பீடு மேனுவல் செம ஸ்மூத்! அல்கஸார்
6 ஸ்பீடு மேனுவல் செம ஸ்மூத்! அல்கஸார்

டீசலில் எது பவர் அதிகம்?

பெட்ரோலுக்கு மஹிந்திரா மிஸ் ஆனது மாதிரி, டீசலில் மிஸ் ஆவது இங்கே மாருதியின் இரண்டு கார்கள்தான். மற்ற எல்லாவற்றிலுமே டீசல் ஆப்ஷன் இருக்கிறது. கியா மற்றும் ஹூண்டாயில் இருப்பது ஒரே 1,493 சிசி கொண்ட 4 சிலிண்டர் டீசல் இன்ஜின். இதன் பவர் பெட்ரோல் போலவே 115bhp. இதன் டார்க் 250Nm. இந்த ஒரு டீசலுக்கு மட்டுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வருகின்றன. இது வேறொன்றுமில்லை; செல்ட்டோஸ் மற்றும் க்ரெட்டாவில் இருக்கும் அதே டீசல் இன்ஜின்தான். டீசலை ஓட்டும்போது கியா நம் காதில் சொன்ன மைலேஜ் 21.3 கிமீ. ரியல் டைமில் சுமார் 16.5 கிமீ தருவதாக க்ரெட்டா உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.

இங்கிருப்பதில் டாப் பவர் கொண்ட கார், வழக்கம்போல் இனோவா க்ரிஸ்ட்டாதான். இதன் 2.4 லிட்டர் இன்ஜினின் பவர் 150bhp. டார்க் 360Nm. இதுதான் இங்கே அதிகம். ஆனால், கியர்பாக்ஸில் கஞ்சத்தனம் காட்டிவிட்டது டொயோட்டா. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸோடு 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டரும் இருக்கிறது.

எர்டிகா படங்கள்

எர்டிகா
எர்டிகா
எர்டிகாவின் இன்டீரியர் பார்த்துப் பழகிய டிசைன்
எர்டிகாவின் இன்டீரியர் பார்த்துப் பழகிய டிசைன்
இங்கிருப்பதிலேயே சின்ன கார் எர்டிகா
இங்கிருப்பதிலேயே சின்ன கார் எர்டிகா

விலையில் எது கையைக் கடிக்காத எம்பிவி?

இங்கே எக்ஸ் ஷோரூமை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இந்தப் போட்டியில் விலை அதிகமான காராக முதலில்… அதாவது பட்ஜெட் டிக் பாக்ஸில் கடைசியில் இருப்பது சந்தேகமே இல்லை – டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டாதான். 16.89 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் ஆரம்பித்து 23.47 லட்சம் வரை க்ரிஸ்ட்டாவுக்கு விலை நிர்ணயம் செய்திருக்கிறது டொயோட்டா. ஆன்ரோடுக்கு வரும்போது இதன் ஆட்டோமேட்டிக் மாடல் சுமார் 29 லட்சம் கொடுத்து வாங்க வேண்டும். இது ஒரு சின்ன பிஎம்டபிள்யூ / ஆடிக்குக் கொஞ்சம் குறைவான விலை. ‘விலை பார்த்துக்கலாம்; தரம்தான் வேணும்’ என்பவர்கள், இனோவா க்ரிஸ்ட்டாவை டிக் அடியுங்கள்.

அல்கஸார் – கியாவைவிட கொஞ்சம் இல்லை ரொம்பவே அதிகமாகவே பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. அல்கஸாரின் விலை 16.34 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை வருகிறது. டீசல் மற்றும் பெட்ரோல் இரண்டுக்குமே காரன்ஸை ஒப்பிடும்போது விலை அதிகமே! ஆனால், க்ரிஸ்ட்டாவை வாங்குபவர்களுக்கு மாற்று ஆப்ஷனாக இருக்கிறது அல்கஸார்.

XL6 படங்கள்

XL6
XL6
XL6, கருப்பு நிறத்தில் சீட்கள், ஸ்போர்ட்டி
XL6, கருப்பு நிறத்தில் சீட்கள், ஸ்போர்ட்டி
XL6, டீசல் இன்ஜின் இல்லை. பெட்ரோலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஸ்மூத்
XL6, டீசல் இன்ஜின் இல்லை. பெட்ரோலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஸ்மூத்
XL6, இன்டீரியர் ஓகே, அனலாக் மீட்டர் தான்.
XL6, இன்டீரியர் ஓகே, அனலாக் மீட்டர் தான்.

மாருதி என்றாலே விலையும் பராமரிப்பும்தானே! எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 இரண்டும்தான் இங்கே விலைப் போட்டியில் ஜெயிக்கிறது. 8.12 – 10.85 லட்சம் வரை எர்டிகாவும்; 10.14 – 12.02 லட்சம் வரை எக்ஸ்எல்6 காரும் வருகிறது. ஹைபிரிட் சிஸ்டம், நீண்ட நாள் உழைக்கும் லித்தியன் அயன் பேட்டரி, மைலேஜ் போன்றவற்றைக் கணக்குப் பார்த்தால்… மாருதியின் இந்த இரண்டில் ஏதாவதொன்றை டிக் அடித்துவிட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம். ஆனால், நீள அகலங்களிலும், இடவசதிகளிலும், எக்யூப்மென்ட் லிஸ்ட்டிலும், சொகுசிலும் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டும்.

மராத்ஸோவை – விலை அதிகமான கார் என்றும் சொல்ல முடியாது; ‘ரொம்பக் கம்மியா இருக்கே’ என்றும் சொல்ல முடியாது. மிகச் சரியாக இதை பொசிஷன் செய்திருக்கிறது மஹிந்திரா. என்ன, பெட்ரோலில் மட்டும் மராத்ஸோவை வாங்க முடியாது.

இனோவா கிரிஸ்டா படங்கள்

இனோவா கிரிஸ்டா
இனோவா கிரிஸ்டா
டொயோட்டாவின் தரம் தெறிக்கிறது
டொயோட்டாவின் தரம் தெறிக்கிறது
சொகுசு, லெக்ரூம் எல்லாமே பக்கா, கிரிஸ்டா
சொகுசு, லெக்ரூம் எல்லாமே பக்கா, கிரிஸ்டா
கனெக்டட் இனோவா
கனெக்டட் இனோவா

நாம் முதல் பாராவில் சொன்னபடி குறைவான விலைதான் கியா காரன்ஸின் ஹைலைட்டே! இந்தப் போட்டியில் விலை குறைவான காரான மாருதி எர்டிகாவைவிட சுமார் 88,000 ரூபாய் அதிக எக்ஸ் ஷோரூம் விலையில்தான் ஆரம்பிக்கிறது கியா காரன்ஸ். 9 லட்சத்திலிருந்து 17 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் வருகிறது காரன்ஸ். நாம் ஏற்கெனவே சொன்னபடி க்ரிஸ்ட்டாவின் ஆரம்ப விலைதான் கியாவின் டாப் எண்ட் விலை. ஏகப்பட்ட வசதிகள் மற்றும் கையைக் கடிக்காத விலை – காரன்ஸ் இந்த எம்பிவி செக்மென்ட்டில் கியாவுக்கு ஒரு ஃப்ளாக்ஷிப் மாடலாகலாம்.

(ஒரு தகவல்: கியாவின் இந்த அதிரடி விலை பின்னாளில் ஏற்றப்படலாம் என்கிற கொசுறுத் தகவலும் கிடைத்திருக்கிறது. அவ்வ்வ்!)

டீசல்:

காரன்ஸ் - இன்ஜின் - 4 சிலி turbo - சிசி - 1,493 - பவர் - 115bhp - டார்க் - 250Nm - கியர்பாக்ஸ் - 6 MT/6 AT

அல்கஸார் - இன்ஜின் - 4 சிலி turbo - சிசி - 1,493 - பவர் - 115bhp - டார்க் - 250Nm - கியர்பாக்ஸ் - 6 MT/6 AT

மராத்ஸோ - இன்ஜின் - 4 சிலி turbo - சிசி - 1,497 - பவர் - 121bhp - டார்க் - 300Nm - கியர்பாக்ஸ் - 6 MT

இனோவா க்ரிஸ்ட்டா - இன்ஜின் - 4 சிலி turbo - சிசி - 2,393 - பவர் - 150bhp - டார்க் - 360Nm - கியர்பாக்ஸ் - 5 MT/ 6 AT

பெட்ரோல்:

காரன்ஸ் - இன்ஜின் - 4 சிலி-NA & turbo - சிசி - 1,497/1,353 - பவர் - 115/140bhp - டார்க் - 144/242Nm - கியர்பாக்ஸ் - 6 MT/7 DCT (Turbo only)

அல்கஸார் - இன்ஜின் - 4 சிலி, NA - சிசி - 1,999 - பவர் - 159bhp - டார்க் - 191Nm- கியர்பாக்ஸ் - 6 MT/6 AT

XL6 - இன்ஜின் - 4 சிலி, NA - சிசி - 1,462 - பவர் - 105bhp - டார்க் - 138Nm - கியர்பாக்ஸ் - 5 MT/4 AT

இனோவா க்ரிஸ்ட்டா - இன்ஜின் - 4 சிலி, NA - சிசி - 2,694 - பவர் - 166bhp - டார்க் - 245Nm - கியர்பாக்ஸ் - 5 MT/6 AT

எர்டிகா - இன்ஜின் - 4 சிலி, NA - சிசி - 1,462 - பவர் - 105bhp - டார்க் - 138Nm - கியர்பாக்ஸ் - 5 MT/4 AT

விலை (எக்ஸ் ஷோரூம்)

காரன்ஸ் - பெட்ரோல் - 9 to 17 லட்சம் - டீசல் - 11 to 17 லட்சம்

அல்கஸார் - பெட்ரோல் - 16.34 to 20 லட்சம் - டீசல் - 16.75 to 20.15 லட்சம்

XL6 - பெட்ரோல் - 10.14 to 12.02 லட்சம்

மராத்ஸோ - டீசல் - 12.80 to 14.92 லட்சம்

இனோவா க்ரிஸ்ட்டா - பெட்ரோல் - 16.89 to 23.47 லட்சம் - டீசல் - 18.18 to 25.32 லட்சம்

எர்டிகா - பெட்ரோல் - 8.12 to 10.85 லட்சம் -

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism