Published:Updated:

டீசல் வேண்டாம்... பெட்ரோல் போதும்! - ரெனோவின் ப்ளான்

ரெனோவின் ப்ளான்
பிரீமியம் ஸ்டோரி
ரெனோவின் ப்ளான்

எக்ஸ்க்ளூசிவ்

டீசல் வேண்டாம்... பெட்ரோல் போதும்! - ரெனோவின் ப்ளான்

எக்ஸ்க்ளூசிவ்

Published:Updated:
ரெனோவின் ப்ளான்
பிரீமியம் ஸ்டோரி
ரெனோவின் ப்ளான்

ப்ரல் மாதம் முதல் BS-6 கட்டாயமாவதால், டீசல் களத்திலிருந்து ரெனோ விலகப் போவது உறுதியாகியுள்ளது. ரெனோவின் பெரிய எம்பிவி மாடலான `லாஜி'யை நிறுத்தப்போகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ரெனோ இந்தியாவின் நிர்வாக இயக்குநர் வெங்கட்ராம் மாமிலப்பள்ளியுடன் சமீபத்தில் சில நிமிடங்கள் உரையாடினோம்.

அப்போது, இந்தியாவில் ரெனோவின் திட்டம் என்ன என்பதைப் பற்றிப் பேசினார். அடுத்த ஆண்டு கொண்டு வரப்போகும் 4 மீட்டருக்கு உட்பட்ட எஸ்யூவி மூலம் யுட்டிலிட்டி கார்கள் சந்தையில் ரெனோ முழுக்கவனம் செலுத்தப்போகிறது என்று அப்போது அவர் நம்மிடம் தெரிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இந்தியாவுக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ட்ரைபர் மாடலுக்குக் கிடைத்த வருகையைப் பார்த்து, தற்போது 600 ட்ரைபரை தென் ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளார்கள். தென்ஆப்பரிக்காவில் இதன் விற்பனையைப் பொருத்து, இந்த காரை இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்'' என்று அப்போது அவர் கூறினார்.

டீசல் வேண்டாம்... பெட்ரோல் போதும்! - ரெனோவின் ப்ளான்
டீசல் வேண்டாம்... பெட்ரோல் போதும்! - ரெனோவின் ப்ளான்

``இப்போதைக்கு பெட்ரோல் கார்களான ட்ரைபர், க்விட், டஸ்ட்டர் ஆகியவற்றில்தான் ரெனோவின் கவனம் இருக்கும். 2021-ம் ஆண்டுக்குள் டீலர் நெட்வொர்க்கை விரிவுபடுத்திவிட்டு, அதற்குப் பிறகு எலெக்ட்ரிக் கார் சந்தையிலும் களமிறங்கப் போகிறது ரெனோ'' என்பதுதான் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட பிரத்யேக நியூஸ்.