Published:Updated:

OLA Electric Car: வாவ், 15 லட்சத்துக்குள் ஒரு ஸ்போர்ட்ஸ் காரா? எக்ஸ்க்ளூசிவ் டீஸர் இதோ!

Ola Sports E-Car

ஓலா நிறுவனத்தின் பவிஷ் அகர்வாலின் கூற்றுப்படி பார்த்தால், இது ஸ்போர்ட்ஸ் காராச்சே… அதனால் 200 கிமீ வரை டாப் ஸ்பீடு போகலாம்; 0–100 கிமீயை வெறும் 6 விநாடிகளுக்குள் கடக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

OLA Electric Car: வாவ், 15 லட்சத்துக்குள் ஒரு ஸ்போர்ட்ஸ் காரா? எக்ஸ்க்ளூசிவ் டீஸர் இதோ!

ஓலா நிறுவனத்தின் பவிஷ் அகர்வாலின் கூற்றுப்படி பார்த்தால், இது ஸ்போர்ட்ஸ் காராச்சே… அதனால் 200 கிமீ வரை டாப் ஸ்பீடு போகலாம்; 0–100 கிமீயை வெறும் 6 விநாடிகளுக்குள் கடக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

Published:Updated:
Ola Sports E-Car
ஓலா, ஒரு ட்வீட் பண்ணினாேலே போதும். குப்பென்று பிடித்து விடும். டீஸர் வெளியிட்டால் சும்மாவா! இப்போதைக்கு ஆட்டோமொபைலின் ஹாட் டாபிக் – ஓலாவின் எலெக்ட்ரிக் கார் பற்றித்தான்!

விற்பனையில் இருக்கும் டூ–வீலரிலேயே அவ்வளவு நெகட்டிவ் கமென்ட்ஸ்களையும், விமர்சனங்களையும்… கூடவே பாராட்டுக்களையும் பெற்று வரும் ஓலா, அது எதைப் பற்றியும் சட்டை செய்யாமல், அடுத்து கார் பக்கம் சென்றுவிட்டது. வரப்போகும் தன்னுடைய எலெக்ட்ரிக் காரின் செம ஸ்டைலான டீஸர் ஒன்றை ‘இந்தியாவின் நச்சுன்னு ஒரு ஸ்போர்ட்ஸ் காரை உருவாக்கத் தயாராகிறோம்’ என்கிற ரீதியில் ஒரு தலைப்புடன் வெளியிட்டுப் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறார், ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வால்.

Ola Sports E-Car
Ola Sports E-Car

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெறும் 3 விநாடி டீஸர் வீடியோவிலேயே காரின் ஸ்டைலும் அட்டகாசமும் தெரிந்து விடுகின்றன. டீஸரைப் பார்க்கும்போது, ஒரு ஸ்போர்ட்ஸ் காராக இதை ஓலா கொண்டு வரவிருப்பது தெரிகிறது. அப்படியென்றால், காரின் ஏரோ டைனமிக்ஸிற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அது நன்றாகவே தெரிகிறது. இது நிச்சயம் ஓலா ஸ்கூட்டர் போலவே, ஓலாவின் கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் தயாராகி, சுத்தமான ‘மேக் இன் தமிழ்நாடு’ தயாரிப்பாக வரப் போகிறது.

காரின் பின் கூரை சரிந்து விழுவதால், நிச்சயம் இது ஒரு ஸ்போர்ட்ஸ் கூபே மாடலாக இருக்கலாம். செடான்களில் இப்போதுள்ள பிரச்னை – கிரவுண்ட் கிளியரன்ஸ்தான். இந்த எலெக்ட்ரிக் செடானில் நம் ஊர் ஸ்பீடு பிரேக்கர்களையும் மேடு பள்ளங்களையும் தாங்கும் அளவுக்கு கிரவுண்ட் கிளியரன்ஸும் ஸ்டிஃப் சஸ்பென்ஷன் செட்அப்பும் கொண்டு வரலாம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போதுள்ள கார்களில் ஒரு ட்ரெண்ட் என்னவென்றால், காரின் அகலம் முழுக்க எல்இடி லைட்டை நீட்டி, சிங்கிள் பீஸாக்கி விடுவதுதான். இது நிச்சயம் செம ஸ்போர்ட்டிவாக இருக்கும். இந்த ஓலா காரிலும் அப்படித்தான் இருக்கிறது. பின் பக்கமும் இந்த சிங்கிள் பீஸ் எல்இடி லைட்டிங் இருக்கும். காரின் பக்கவாட்டைப் பார்க்கும்போது, அதிவேகத்தில் போகும்போது மினிமல் டிராக்கை வெளிப்படுத்தும் என்பது புரிகிறது. அதேபோல் காற்றைக் கிழித்துக் கொண்டு போகும் அதன் ஏரோ டைனமிக் டிசைனும் நன்றாகவே புலப்படுகிறது.

எலெக்ட்ரிக் காருக்கு ரேஞ்ச்தான் பிரதானம். இப்போதுள்ள டிகோர், நெக்ஸான், எம்ஜி போன்ற எலெக்ட்ரிக் கார்கள் சிங்கிள் சார்ஜுக்கு சுமார் 225 முதல் 300 கிமீ வரை ரேஞ்ச் தருகின்றன. ரேஞ்ச்சை அதிகப்படுத்தி லேட்டஸ்ட்டாகத்தான் டாடாவில் இருந்து நெக்ஸான் ப்ரைம் மற்றும் இவி மேக்ஸ் போன்ற மாடல்கள் வந்தன. இதில் எம்ஜி ZS EV காரின் ரேஞ்ச்தான் அதிகமாக இருக்கிறது. ஆனால், எம்ஜிக்குப் போட்டியாக ஓலா வராது என்கிறார்கள். காரணம், இதன் பட்ஜெட்.

இந்த ஓலா காரின் ரேஞ்ச், சுமார் 400 கிமீ இருக்கலாம் என்கிறார்கள். காரணம், இதில் 70kWh பேட்டரியைப் பொருத்த இருக்கிறது ஓலா. இதன் காரணமாக ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் அவசியம் இருந்தாக வேண்டும். ஓலா அதிலும் கவனம் செலுத்தலாம். ஓலா நிறுவனம் பவிஷ் அகர்வாலின் கூற்றுப்படி பார்த்தால், இது ஸ்போர்ட்ஸ் காராச்சே… அதனால் 200 கிமீ வரை டாப் ஸ்பீடு போகலாம்; 0–100 கிமீ–யை வெறும் 6 விநாடிகளுக்குள் கடக்கலாம் என்றும் சொல்கிறார்கள். கார்களைப் பொருத்தவரை பலதரப்பட்ட வேரியன்ட்கள்தான், அதைப் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும். இந்த ஓலா காரிலும் வேரியன்ட்கள் எக்கச்சக்கம் இருக்கலாம். இதில் கியா EV6 மாதிரி ஆல்வீல் டிரைவ் மாடலும் வரலாம். இதில்தான் லாங் ரேஞ்ச் வேரியன்ட் வரலாம்.

Ola EV sports
Ola EV sports

மற்றபடி, காரின் உள்பக்கத்தை இதுவரை ரகசியமாகவே வைத்திருக்கிறது ஓலா. எனினும் இந்த கார் தொழில்நுட்பங்கள் நிறைந்த ஒரு கனெக்டட் காராக இருக்கப் போகிறது. கூடவே, பாதுகாப்பு வசதிகள் நிறைந்த ADAS (Advanced Driver Assist System) தொழில்நுட்பமும் இதில் வரலாம். அதாவது, தானாக லேன் மாறுவது, தானாக பிரேக் பிடிப்பது, தானாக பார்க்கிங் ஆகிக் கொள்வது, ஆக்ஸிலரேட்டர் மிதிக்காமல் தானாகவே போய் தேவையான இடத்தில் பிரேக் பிடிக்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற லெவல்–2 அட்டானமஸ் தொழில்நுட்பத்தில் இந்த கார் வரலாம்.

ஓகே! இதன் பட்ஜெட். இப்போதைக்கு டாடா கார்களுக்குப் போட்டியாக வரவிருப்பதால், இதன் விலை சுமார் 15 – 18 லட்சத்துக்குள் எதிர்பார்க்கலாம். இத்தனை வசதிகளுடன் இத்தனை குறைவான விலைக்கு ஒரு எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் வந்தால், யாருக்குத்தான் பிடிக்காது?!
ஓலா லித்தியம் அயன் பேட்டரி
ஓலா லித்தியம் அயன் பேட்டரி
பின்குறிப்பு: ஓலா நிறுவனம், எலெக்ட்ரிக் கார்/ஸ்கூட்டர் தயாரிப்போடு, பேட்டரி தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது. அண்மையில் ஒரு லித்தியம் அயன் பேட்டரியை உள்நாட்டுத் தயாரிப்பாகக் கொண்டு வந்து அசத்தியிருக்கிறது அந்நிறுவனம்.