Published:Updated:

Ola Electric Car: 4 விநாடிகளில் 0-100கி.மீ; 500 கி.மீ ரேஞ்ச்,கண்ணாடி ரூஃப்; கலர்ஃபுல் ஹைலைட்ஸ்!

Ola Electric Car ( (Image credit: Ola Electric / Screenshot via YouTube) )

சிங்கிள் சார்ஜில் இது சுமார் 500 கி.மீ தூரம் போகலாம் என்றும் சொல்லியடித்திருக்கிறது ஓலா. இதுவே பெரிய பேட்டரி கொண்ட டாடா நெக்ஸானின் அராய் ரேஞ்ச் சுமார் 437 கி.மீ.

Ola Electric Car: 4 விநாடிகளில் 0-100கி.மீ; 500 கி.மீ ரேஞ்ச்,கண்ணாடி ரூஃப்; கலர்ஃபுல் ஹைலைட்ஸ்!

சிங்கிள் சார்ஜில் இது சுமார் 500 கி.மீ தூரம் போகலாம் என்றும் சொல்லியடித்திருக்கிறது ஓலா. இதுவே பெரிய பேட்டரி கொண்ட டாடா நெக்ஸானின் அராய் ரேஞ்ச் சுமார் 437 கி.மீ.

Published:Updated:
Ola Electric Car ( (Image credit: Ola Electric / Screenshot via YouTube) )
ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்றும் அரசாங்கம் அலெர்ட்டாக இருக்கிறதோ இல்லையோ… ஓலா அலெர்ட்டாக இருக்கும். ஆகஸ்ட் 15 அன்றுதான் தனது ஓலா ஸ்கூட்டரை லாஞ்ச் செய்தது; அதே நாளில்தான் புக்கிங்கைத் தொடங்கியது. இப்போது நேற்றும் அதேபோன்றதொரு அலெர்ட்டை ஆரம்பித்துவிட்டது ஓலா.

எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட தனது எலெக்ட்ரிக் காரின் டீஸரை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி விட்டது ஓலா. அது மட்டுமில்லை; ஓலா எலெக்ட்ரிக் காரின் லாஞ்ச் ஆண்டையும் உறுதிப்படுத்திவிட்டது. மேலும், ‘‘எலெக்ட்ரிக் மொபிலிட்டியில் புதிய புரட்சியை ஏற்படுத்துவோம்!’’ என்றும் அறிவித்திருக்கிறார் அதன் நிறுவனர் பவிஷ் அகர்வால். 2024–ல் செம ஃப்ரெஷ் அப்பீலுடன், ஸ்போர்ட்டி ஸ்டைலுடன் வரப் போகும் ஓலா எலெக்ட்ரிக் காரைப் பற்றிய முழுமையான டெக்னிக்கல் தகவல்கள் தெரியவில்லை. இருந்தாலும், நமக்குத் தெரிஞ்ச வரை என்னென்ன ஹைலைட்ஸ் இருக்குனு பார்க்கலாம்!

இந்த அறிவிப்பில் இரண்டு முக்கியமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறது ஓலா. இது 0–100 கிமீ வேகத்தை வெறும் 4 விநாடிகளில் கடக்கும் அளவுக்கு இதன் பெர்ஃபாமன்ஸ் இருக்கும் என்று சொல்லியிருக்கிறது. அப்படியென்றால், இதன் மோட்டாரும் பேட்டரியும் பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும். இதன் பேட்டரி kWh அளவு தெரியவில்லை; ஆனால் நிச்சயம் டாடா நெக்ஸான் EV Max–ல் உள்ள 40.5kWh பேட்டரியைவிடப் பெரிதாகவே இருக்கும் என்று நம்பலாம். காரணம், இதன் இன்னொரு முக்கியமான அம்சம் – இதன் ரேஞ்ச். இன்னொரு காரணம், நிச்சயம் இது நெக்ஸானுக்குப் போட்டியாகத்தான் வரும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிங்கிள் சார்ஜில் இது சுமார் 500 கி.மீ தூரம் போகலாம் என்றும் சொல்லியடித்திருக்கிறது ஓலா. இதுவே பெரிய பேட்டரி கொண்ட டாடா நெக்ஸானின் அராய் ரேஞ்ச் சுமார் 437 கி.மீ. சிங்கிள் சார்ஜுக்கு 500 கி.மீ தூரம் என்பது இந்த செக்மென்ட்டில் வேறெந்த கார்களிலும் இல்லாத ஒரு சிறப்பம்சம். செக்மென்ட்டின் காஸ்ட்லியான கியா EV6, காரின் அராய் ரேஞ்ச் 528 கி.மீ. இது கியா அளவுக்கு காஸ்ட்லி காராக இருக்காது. மிட் பட்ஜெட் வாடிக்கையாளர்களை நோக்கித்தான் வரவிருக்கிறது ஓலா எலெக்ட்ரிக்.

இதன் ஜூலை மாத டீஸரில்… இது ஒரு குட்டி ஹேட்ச்பேக் எலெக்ட்ரிக்காக இருக்கலாம் என்று நினைத்தார்கள். நெக்ஸானுக்குப் போட்டி என்பதால்… இது ஒரு எஸ்யூவியாக இருக்கலாம் என்றால்… அதுவும் இல்லை.. இது ஒரு முழுமையான செடான் வடிவில் வரவிருக்கிறது. இதன் ஸ்போர்ட்டி லுக்கையும், கண்ணாடியால் ஆன ஃபாஸ்ட்பேக் ரூஃபையும் பார்த்தால்… இது ஒரு ஸ்போர்ட்ஸ் செடானாகத்தான் வரும்.

Ola Electric Car concept
Ola Electric Car concept

வசதிகளில் ஓலாவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இதில் கீலெஸ் என்ட்ரி, டச் ஸ்க்ரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ /ஆப்பிள் கார் கனெக்டிவிட்டி, டிரைவிங் அசிஸ்ட்டன்ஸ், Move OS போன்ற அம்சங்களுடன் இந்த எலெக்ட்ரிக் கார் வரவிருக்கிறது. ஆனால், இதன் விலை என்னவென்று தெரியவில்லை.

இதற்கான தனது ஃப்யூச்சர் ஃபேக்டரியையும் சில ஏக்கர்களுக்கு விரிவடையச் செய்ய இருக்கிறது ஓலா. இந்த உற்பத்தித் தொழிற்சாலையில் சுமார் 10 மில்லியன் ஸ்கூட்டர்களும், 1 மில்லியன் எலெக்ட்ரிக் கார்களும் உற்பத்தி செய்யும் ஐடியாவில் இருக்கிறதாம். மேலும், இந்த கார் தவிர்த்து இரண்டு ப்ளாட்ஃபார்ம்களும், 6 எலெக்ட்ரிக் கார்களையும் இந்தத் தமிழ்நாட்டுத் தொழிற்சாலையிலேயே மேக்–இன் இந்தியா தயாரிப்பாகக் கொண்டு வரும் திட்டமும் இருக்கிறதாம் ஓலாவிடம்.

இந்த எலெக்ட்ரிக் கார் அறிவிப்புகளுடன் கூடவே… தனது ஓலா S1 ஸ்கூட்டர் மாடலை ரீ–லாஞ்ச் செய்திருக்கிறது ஓலா. ஓலா ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை மாடல் இதுதான். இதன் எக்ஸ் ஷோரூம் விலை சரியாக 1 லட்சம். S1 Pro தயாரிக்கப்படும் அதே ப்ளாட்ஃபார்மில்தான் இந்த S1 ஸ்கூட்டரும் தயாராக இருக்கிறது. 3kWh பேட்டரி செட்அப் கொண்ட இதன் அராய் ரேஞ்ச், 128 கிமீ. இது எக்கோ மோடுக்கானது. ஸ்போர்ட்ஸ் மோடுக்கு 101 கிமீ க்ளெய்ம் செய்கிறது ஓலா. S1 Proவில் இருக்கும் நேவிகேஷன், மியூசிக் போன்ற வசதிகளுடன் இது வரவிருக்கிறது. இதன் டாப் ஸ்பீடு 95 கிமீ. S1 Pro–வின் டாப் ஸ்பீடு 115 கிமீ.

கூடவே, இன்னொரு விஷயத்தையும் அறிவித்திருக்கிறார் பவிஷ் அகர்வால். பேட்டரி தயாரிப்பிலும் இறங்கி விட்டது ஓலா. ஆம், ஓலா தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் லித்தியம் அயன் பேட்டரியையும் காண்பித்தார் பவிஷ். இனிமேல் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முதன் முறையாக பேட்டரி விஷயத்தில் OEM (Original Equipment Manufacturer) ஆக ஒரு இந்தியத் தயாரிப்பே இருக்கப் போகிறது ஓலா.

ஸ்கூட்டர்… ஸ்போர்ட்ஸ் கார்… பேட்டரி… இன்னும் என்னென்ன வரப் போகுது ஓலா!!