போன மாதம் 1 லட்சத்துக்குள் பட்ஜெட் பழைய கார்களைப் பார்த்தோம். இந்த மாதம் 3 லட்சத்துக்குள் வாங்கக் கூடிய டாப்–10 யூஸ்டு கார்களின் லிஸ்ட் இதோ...!

டட்ஸன் ரெடி கோ (பெ)

ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் அதிகமான கி.கிளியரன்ஸ் கொண்ட ஒரே கார் டட்ஸன் ரெடி கோதான். 185 மிமீ. அதனால், மேடு பள்ளங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இதன் டால்பாய் டிசைன் எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியவில்லை. சிட்டிக்குள் இதன் காம்பேக்ட் ஆன டால்பாய் டிசைன், பார்க்கிங் செய்வதற்கு வசதியாக இருந்தாலும், நெடுஞ்சாலைகளில் பயத்தை வரவழைக்கும். 800 சிசி, 3 சிலிண்டர், 53.4bhp பவர்தான் என்பதால், தெறி பெர்ஃபாமன்ஸை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. அதுவும் ஹில் ரைடுகளுக்கு... ப்ச்! 13 இன்ச் சின்ன வீல்கள் என்பதால், இதன் கையாளுமையும் சுமார் ரகமாகத்தான் இருக்கும். நிஸானிலேயே சர்வீஸ் விட்டுக் கொள்ளலாம் என்பதால், உதிரி பாகங்கள் பிரச்னை இருக்காது. விலையும் கையைக் கடிக்காது என்பது ப்ளஸ். கோவின் T மாடலில் ரிமோட் கன்ட்ரோல், சென்ட்ரல் லாக்கிங், கீலெஸ் என்ட்ரி போன்ற வசதிகள் உண்டு.

ஹூண்டாய் i10 (பெ)

10 ஆண்டுகளுக்கு முன்பு, ஒவ்வொரு மாத டாப் 10 விற்பனை லிஸ்ட்டிலும் நிச்சயம் இடம் பிடித்திருக்கும் ஹூண்டாய் i10. அதிலும் DOHC கொண்ட கப்பா இன்ஜின் செம. 1.2 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜினில் 78.9bhp பவரும், 11.18kgm டார்க்கும் பெர்ஃபாமன்ஸ் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். மைலேஜும் i10–ன் ப்ளஸ். இதன் கி.கிளியரன்ஸ் 165 மிமீ என்பது இந்த ஹேட்ச்பேக்குக்கு ஓகே ரகம்தான். Era, Magna, Sportz, Asta என்று பல வேரியன்ட்கள் உண்டு. டாப் மாடலான Asta கிடைத்தால் விடாதீர்கள். வசதிகள் தாராளம். 80,000 கிமீ–க்கு மேல் ஓடியிருந்தால், க்ளட்ச்சில் நிச்சயம் வேலை இருக்கும். ஹூண்டாய் பெரிய நெட்வொர்க் என்பதால், செலவும் கையைக் கடிக்காது. ஒரு க்ளட்ச் அசெம்பிளியின் விலையே 5,500 ரூபாய்க்குள்தான் இருக்கும். 13 இன்ச் வீல்கள்தான். என்ன, ஹைவேஸில் அந்த எடை குறைவான ஸ்டீயரிங்கில்தான் கவனமாக இருக்க வேண்டும்.

நிஸான் மைக்ரா (டீ)

குட்டி காரான மைக்ரா, ஓர் அழகான ஃபேமிலி கார். இதைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், இதன் மைலேஜைப் பற்றித்தான் புகழ்ந்து தள்ளுகிறார்கள். 20–ல் இருந்து 22 கிமீ வரை லிட்டருக்கு மைலேஜ் கிடைத்த மைக்ராக்கள் இருக்கின்றன. இதன் டாப் மாடலான XV Premium வேரியன்ட்டில் ஆட்டோ ஃபோல்டிங் மிரர்கள் வரை சில முக்கியமான வசதிகள் உண்டு. இதன் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், 63.1bhp பவர் கொண்ட இன்ஜின், பெட்ரோல் கார்போல செம ஸ்மூத்தாக இயங்குவதும் இதன் பெரிய ப்ளஸ். பூட் ஸ்பேஸும் 251 லிட்டர் என்பது ஓகே. 2,450மிமீ வீல்பேஸ் என்பதால், பின் சீட் இடவசதிகூட அற்புதமாக இருக்கும். ஹைவேஸில் ஸ்டெபிலிட்டியில் மைக்ரா, அசத்துகிறது. ‘160 கிமீ டாப் ஸ்பீடு வரை போகலாம். சில மைக்ரா ஓனர்கள், ஸ்டீயரிங்கில் அதிர்வு இருப்பதாகவும், இன்ஜின் வைப்ரேஷனும் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

மாருதி ஈக்கோ 7 சீட்டர் (பெ)

விலையும் பராமரிப்பும்தான் மாருதியின் ப்ளஸ்கள். ஈக்கோவின் புது BS-6 மாடலின் ஆன்ரோடு விலையே 5.35 லட்சம்தான் வரும். இருந்தாலும், பழைய கார் மார்க்கெட்டில் ஈக்கோவுக்கு ரீ–சேல் மதிப்பு அதிகம். ஸ்கார்ப்பியோ, பொலேரோ போன்ற பெரிய கார் வாங்க முடியாதவர்களின் பட்ஜெட் ஆப்ஷன்தான் ஈக்கோ. 7 சீட்டரான ஈக்கோ, ஒரு பெரிய குடும்பத்தை ஏற்றிச் செல்ல அற்புதமான ஆப்ஷன். ஆனால் ஏசிகூட இருக்காது. 73 bhp பவர் கொண்ட 1.2லி இன்ஜின், பெர்ஃபாமன்ஸ் பார்ட்டிகளைப் பெரிதாகத் திருப்திப்படுத்தாது. மைலேஜைப் பற்றித்தான் இதில் பெரிதாகக் குறை வைக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். 10 கிமீதான் தருது என்பவர்கள் இருக்கிறார்கள். இதன் பில்டு குவாலிட்டியும் சந்தேகத்துக்கு இடம்தான். அதனால், பாதுகாப்பில் ஈக்கோ பக்கா இல்லை. இதில் ஏசி, பவர் ஸ்டீயரிங் இல்லாத மாடலும் உண்டு என்பதால், கவனம் தேவை.

மாருதி ரிட்ஸ் (பெ/டீ)

டாக்ஸி மார்க்கெட்டில் ஒரு கார் ஹிட் அடித்தால், அது எக்கனாமிக்கலாக நம்பிக்கையான கார் என்று அர்த்தம். ரிட்ஸ், அப்படிப்பட்ட கார்தான். இதன் 1.3 லிட்டர் டர்போ சார்ஜர் கொண்ட ஃபியட் டீசல் இன்ஜின், ஓட்டுதலில் செமையான அனுபவத்தைக் கொடுக்கும். மைலேஜும் 18 கிமீ–க்கு மேல் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். பெட்ரோல் ரிட்ஸின் மைலேஜ் குறைவுதான். ஸ்விஃப்ட்டை விட ரிட்ஸில் இடவசதி அதிகம்தான். ஆனாலும் திருப்தி கிடைக்காது. டால் ஹேட்ச்பேக் டிசைனான இதன் பின் பக்கம் பலருக்கும் பிடிக்கவில்லை. இதன் பூட் ஸ்பேஸ் – 236 லிட்டர். ரிட்ஸ் விற்பனையாகும்போது, ஸ்விஃப்ட்டைவிட 50,000 ரூபாய் விலை குறைவாக வந்தது. ரிட்ஸை ஃபெயிலியர் மாடல் / வெற்றியடைந்த மாடல் என்று எதிலும் தரம் பிரிக்க முடியாது. பெட்ரோல் கார் என்றால், ZXI மாடலைப் பாருங்கள். ரிட்ஸின் சஸ்பென்ஷனிலும், ஏசியிலும் கொஞ்சம் கவனம் வையுங்கள்.

செவர்லே பீட் (டீசல்)

பீட்டின் காம்பேக்ட் ஆன டிசைன், சிட்டிக்குள் புகுந்து புறப்பட்டு வர செமையாக இருக்கும். இதில் க்ளட்ச் குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். நிஜம்தான்; க்ளட்ச் கொஞ்சம் ஹெவிதான். 5 ஸ்பீடு கியர்பாக்ஸும் ஓகே ரகம்தான். இதன் 936சிசி, 4 சிலிண்டர் டீசல் இன்ஜினில் பவர் குறைவுதான்; 57.6bhp. டர்போ லேக்கும் படுத்தும். ஆனால், பீட்டின் மைலேஜ் 3 சிலிண்டர் கார்களுக்கே சவால் விடுகிறது. சிட்டிக்குள்ளேயே ஆவரேஜாக 19 கிமீ தரும் பீட் உரிமையாளர்களைப் பார்த்திருக்கிறேன். கையாளுமையும் சூப்பர். பீட்டின் மிகப் பெரிய சவால் – உதிரிபாகங்களுக்கு மாவட்டம் மாவட்டமாக அலைய வேண்டும் என்பதுதான். பீட்டின் வீடான செவர்லேவே இப்போது இல்லை என்பதால் இந்தச் சிக்கல். எனவே, கம்பெனி சர்வீஸெல்லாம் எதிர்பார்க்க முடியாது. தனியார் சர்வீஸ் சென்டர்களிடம் பீட்டுக்கு உதிரிபாகங்களை கேரன்ட்டி செய்து கொண்டு புக் செய்யுங்கள்.

ஃபோர்டு ஃபியஸ்டா க்ளாஸிக் Duratorq (டீ)

வாடிக்கையாளர் ஒருவர், பழைய ஹேட்ச்பேக் ஒன்று பார்வையிடப் போனவர், ஃபியஸ்டாவின் கட்டுறுதியையும் டிரைவிங்கையும் பார்த்து இம்ப்ரஸ் ஆகிவிட்டார். 3 லட்சத்துக்கு 2012 மாடல் ஃபியஸ்டாவை வாங்கியவர், 45,000 கிமீ ஓட்டிவிட்டார். இதுவரை எந்தப் பிரச்னையும் வரவில்லை என்கிறார். ஃபோர்டின் இன்ஜின் தரம் அப்படி. கூடவே பழைய மார்க்கெட்டில் ஃபியஸ்டாவில் க்ளட்ச் பிரச்னை, கியர்பாக்ஸ் ஜெர்க், ஏசி பிரச்னை என்று ஆயிரங்களில் செலவழிப்பவர்களும் இருக்கிறார்கள். அதாவது, பிரச்னை ஏற்படாதவரை ஓகே... ஃபியஸ்டாவில் பராமரிப்புதான் கையைக் கடிக்கும். இந்த 4 சிலிண்டர் டீசல் இன்ஜினில், ஒரு இன்ஜெக்டரின் விலை 15,000–க்கும் மேல் வரும். இதன் க்ளட்ச் கிட் அசெம்பிளியின் விலை சுமார் 13,000 ரூபாய். ஒரு காலத்தில் மைலேஜுக்குப் பெயர் பெற்ற இந்த டீசல் ஃபியஸ்டா, இப்போதும் லிட்டருக்கு ஆவரேஜாக 17 கிமீ தருகிறது. Gas ஷாக் அப்ஸார்பர் என்பதால், மேடு பள்ளங்களை சொகுசாகச் சமாளிக்கும். இதன் பூட் ஸ்பேஸும் 430 லிட்டர் என்பதால், பெரிய டூர் அடிக்கலாம். ஓட்டுதலுக்குப் பெயர் பெற்ற ஃபியஸ்டாவில், 2,000 ஆர்பிஎம்–க்கு உள்ளே பவர் கொஞ்சம் படுத்தி எடுக்கும். ஹில் டிரைவிங்குக்கு இந்த 68bhp பவர் கொண்ட ஃபியஸ்டா கொஞ்சம் திணறத்தான் செய்கிறது. ஆனால் சரியான ரோடு பிரசன்ஸும், உறுதியான கட்டுமானமும் வேண்டுபவர்கள் ஃபியஸ்டாவை டிக் அடிக்கலாம்.

ஹூண்டாய் இயான் (பெ)

கொரியன் கார் மேக்கரான ஹூண்டாயின் இயான் – ஆல்ட்டோ, க்விட் போன்றவற்றுக்குக் கடும் சவால் விட்டது. சின்ன காராக இருந்தாலும், இதன் கேபின் கொஞ்சம் ப்ரீமியம் ரகமாகவே இருக்கும். சின்ன 13 இன்ச் வீல்கள்தான் இதன் கையாளுமையைச் சொதப்பும். அதனால், ஓட்டுதலில் பெரிய சொகுசை எதிர்பார்க்க முடியாது. இயானில் 800 மற்றும் 1,000 சிசி என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கின்றன. 800சிசி, 56bhp கொண்ட இயானின் பெர்ஃபாமன்ஸ், கொஞ்சம் இல்லை; செம டல்! 3 சிலிண்டராச்சே...! அதனால், 1.0லி கப்பா இன்ஜினுக்குப் போவது பெஸ்ட். என்ன, பட்ஜெட் லேசாக அதிகமாகலாம். லேசான வசதிகள் விரும்புபவர்கள், D-Lite-ல் இருந்து Era+, Magna+க்குப் போவது நல்லது. அடக்கமான டிசைன் என்பதால், இதன் டர்னிங் ரேடியஸ் 4.6 மீட்டர்தான். சட் சட் எனத் திருப்பி வளைக்கலாம். வழக்கம்போல் நெடுஞ்சாலைகளில் இதன் ஸ்டீயரிங்தான் கொஞ்சம் பயமுறுத்தும். இதன் பூட் ஸ்பேஸ் 215 லிட்டர். சின்ன காராக இருந்தாலும், வேகன்-ஆர், ஆம்னி போன்ற கார்களை ஒப்பிடும்போது, நெடுஞ்சாலைகளில் அவ்வளவாக அவ்வளவாக அலைபாயவில்லை என்கிறார்கள். ஏரோ டைனமிக் டிசைனும் ஒரு காரணம். ஹூண்டாய் என்கிற பிராண்ட் வேல்யூவும், பராமரிப்பும், சர்வீஸும் ஈஸி என்பது இயானின் ப்ளஸ்களில் முக்கியமானவை.

டொயோட்டா கரோலா H3 1.8 (பெ)

டொயோட்டாவின் மாஸ்டர் பீஸ் என்று கரோலாவைச் சொல்லலாம். மருந்துக்குக்கூட டிஜிட்டல் இல்லாத காலம் அது. டொயோட்டா கரோலாவும் அப்படித்தான். முழுக்க முழுக்க அனலாக் மீட்டர்தான்; ஆனால் ப்ரீமியமாகவே இருக்கும். விற்பனையில் சக்கைப் போடு போட்டது. 5 ஸ்பீடு மேனுவல் போக ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனைக் கொண்டு வந்தார்கள். ஆண்டு கூடக்கூட H2, H3, H4, H5 என வேரியன்ட்களும் கூடிக் கொண்டே போயின. விலையும்தான். நாம் இங்கே சொல்வது பட்ஜெட்டுக்கு உள்ளே அடங்கும் 2004–2005 மாடல்கள். டொயோட்டாவின் தரம் அந்தக் கால கரோலாவில் நன்றாகவே தெரியும். ஹைவேஸில் இதன் நிலைத்தன்மை வேற லெவல். பவரும் டார்க்கும் கொப்புளிப்பது கரோலாவின் ஸ்பெஷல். அதனால் பெர்ஃபாமன்ஸில் தெறி காட்டும் கரோலா. என்ன, மைலேஜ்தான் பர்ஸைக் காலி பண்ணும். இடவசதியும் சொகுசும் கேரன்ட்டி. என்ன, ஸ்க்ராப்பேஜ் பாலிஸியைக் கணக்கில் எடுத்தால்... FC-க்கும், சர்வீஸுக்கும், உதிரிபாகங் களுக்கும்தான் அலைய வேண்டும்.

ஃபோர்டு ஃபிகோ (டீ)

நீங்கள் பழைய மார்க்கெட்டில் ஃபிகோவைத் தேடினால்.,.. குறைந்தது 80,000 கிமீ–யாவது ஓடிய ஃபிகோவைத்தான் காட்டுவார்கள். காரணம், இதன் இன்ஜின் பெர்ஃபாமன்ஸும் ஃபன் டு டிரைவிங்கும் அப்படி. லேட்டஸ்ட் 100bhp ஃபிகோவைவிட இந்த 68bhp ஃபிகோ, ஃபன் டு டிரைவில் ஒரு படி மேலே என்றுதான் சொல்வேன். சின்ன காராக இருந்தாலும், ஃபிகோவின் பின் பக்க இடவசதி, அருமை. உயரமான ரிட்ஸைவிட உயரம் குறைவான ஃபிகோவில் ஹெட்ரூம், லெக்ரூம், லம்பர் சப்போர்ட் தாராளம். இதன் பூட் ஸ்பேஸும் 284 லிட்டர். ஸ்விஃப்ட்டை விட அதிகம். என்ன, கி.கிளியரன்ஸ்தான் சிக்கல். மேடு பள்ளங்களில் 5 பேரை ஏற்றிக் கொண்டு போனால் நிச்சயம் அடிவாங்கும். ஆனால், 14 இன்ச் வீல்கள், ஓட்டுதலுக்குத் துணை நிற்கும். டாப் எண்டான டைட்டானியத்தில்கூட பின் பக்கம் பவர் விண்டோ இல்லாதது சலிப்பு. நிச்சயம் க்ளட்ச்சில் வேலை இருக்கும் என்பதால், கவனம் தேவை.