கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

கார் டிசைனிங் கோர்ஸ்… என்ன செய்யணும்?

கார்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்

ஆன்லைன் வொர்க்‌ஷாப்கள்

ந்த மாதமும் மோட்டார் விகடனும், சத்தியசீலனின் ஆயா அகாடமியும் இணைந்து கார் டிசைன் வொர்க்ஷாப்பை 4 நாட்கள் நடத்தியது. ஆன்லைன் க்ளாஸ் ஆங்கிலத்தில் நடந்தது. இந்த முறையும் மாணவர்கள் முதல் புரொஃபஷனல்ஸ் வரை ஏகப்பட்ட பேர் கலந்து கொண்டனர். வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்களும் இதில் அடக்கம்.
கார் டிசைனிங் கோர்ஸ்… என்ன செய்யணும்?

ஒரு காரை எந்தவிதமான பேப்பரில், எப்படிப்பட்ட ஸ்கெட்ச்களில் வரையலாம் என்பதில் ஆரம்பித்து, அதை களிமண்ணில் உருவாக்கி, அதற்கென உள்ள இலியாஸ் எனும் சாஃப்ட்வேரில் அதை டெவலெப் செய்து, பின்பு கான்செப்ட் காராக மாற்றி, அதை சாலையில் ஓட விடுவது வரை என்னவெல்லாம் சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கும் என்பதைத் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்கினார் பயிற்சியாளர் சத்தியசீலன். மஸ்டாங், கமேரோ என்று பல கார்களையும் மாணவர்களுக்கு இதில் வரைந்து காட்டி அவர்களையும் வரைய உற்சாகப்படுத்தினார்.

கார் டிசைனிங் கோர்ஸ்… என்ன செய்யணும்?

கார் டிசைன் கனவுகளை நனவாக்க என்ன படிப்பு படிக்க வேண்டும். எங்கே படிக்க வேண்டும்; எந்த இன்ஸ்டிட்யூட்டில் படிக்க வேண்டும்; எங்கே படித்தால் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை எல்லாம் ஸ்லைடு போட்டுக் காட்டி விளக்கினார்.

கார் டிசைனிங் கோர்ஸ்… என்ன செய்யணும்?

``கார் டிசைன் என்பது ஒரு எமோஷலான விஷயம். அது நம் இந்திய மாணவர்களிடம் அதிகம். இந்த டிசைன் துறையில், நம் மாணவர்களும் இறங்கினால், பெரிய மாற்றத்தையே கொண்டு வரலாம். இதற்கு முற்றுப்புள்ளியே கிடையாது!’’ என்றார்.

உண்மைதான், இந்த வொர்க்ஷாப்புக்கு மட்டுமில்லை; மாணவர்களின் திறமைக்கும் எண்ட் கார்டே போட முடியாது.