‘‘வழக்கமாக நடக்கும் ஒர்க்ஷாப்களைவிட பிராக்ட்டிக்கலாக நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது மஹிந்திரா வேலுசாமி சாரின் ஒர்க்ஷாப்!’’ – இப்படி நாம் சொல்லவில்லை. போன மாதம் 28–ம் தேதி நடந்த ஒர்க்ஷாப்பில் வந்த ஒரு மாணவரின் கமென்ட் இது.

தலைப்பே ஆட்டோமோட்டிவ் டிசைன் மற்றும் டெவலப்மென்ட் பற்றியதுதான். நூற்றுக்கணக்கான பேர் கலந்து கொண்ட இதை விகடன் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரும், மோட்டார் விகடன் ஆசிரியருமான பா.சீனிவாசன் துவக்கி வைத்தார்.

முதலில் வேலுசாமி பற்றிய ஒரு சின்ன அறிமுகம். மஹிந்திராவின் Global Product Development துறைத் தலைவர் வேலுசாமி. லேட்டஸ்ட்டாக குளோபல் என்கேப்பில் 4 ஸ்டார் வாங்கிய மஹிந்திரா தார் ஜீப்பை டிசைன் செய்த பட்டாளத்தின் தளபதி இவர். ஆட்டோமொபைல் நிறுவனங்களின் டிசைன் மற்றும் டெவலப்மென்ட் எப்படி நடக்கிறது? இந்தத் துறையில் என்னென்ன வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்பதைப் பற்றி வேலுசாமி நடத்திய ஒர்க்ஷாப் நிச்சயம் வாவ் ஃபேக்டர்!

சில லட்சங்கள் செலவழித்து ஒரு காரை புக் செய்துவிட்டு, காரை ஓட்டும் நாம் ஏகப்பட்ட குறைகளைச் சொல்வோம். ஆனால், ஒரு கார் தயாராவதற்கு எத்தனை ஆயிரம் சோதனைகளை நடத்த வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி அவர் சொன்னபோது மலைப்பாக இருந்தது.

பேப்பரில் டிசைனாக வரைவதில் ஆரம்பித்து அந்த கார் ப்ரோட்டோடைப் டிசைனாக மாறி, கான்செப்ட் வடிவில் வந்து, சாலையில் விற்பனைக்கு வருவதற்கு அது ஆயிரம் கட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கும். .

‘‘என்னடா சீட் இது. டிசைன் இன்னும் கொஞ்சம் கம்ஃபர்ட்டா இருந்திருக்கலாமே’’ என்று வாடிக்கையாளர்கள் குறைபட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பார்த்துப் பார்த்து வடிவமைக்கும் டிசைனுக்குப் பெயரே Occupant Architecture. அதாவது, ஒரு டிசைனைக் கலையாய்ப் பார்க்கிறார்கள். இப்படி டிசைன் முதல் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், புரொடக்ஷன், சிஸ்டம் என்று பல்லாயிரக்கணக்கான இன்ஜீனியர்களின் திறமை இந்தத் துறையில் எப்படி வெளிப்படுகிறது என்பதை வேலுசாமி சொன்னபோது, மாணவர்கள் லயித்துப் போனார்கள்.

இது போதாது... ஒரு வாகனம் எப்படி உருவாகிறது என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் நின்று ஆற அமர விளக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார்கள் மாணவர்கள்!

அடுத்த ஒர்க்ஷாப்பில் இதற்கு நிச்சயம் விடை உண்டு.