வீட்டில்கூட ஆன்லைன் க்ளாஸ் என்று மொபைல் போனுடனும் லேப்டாப்புடனும் பரபரப்பாகவே இருக்கிறார்கள் மாணவர்கள். பள்ளிப் பாடம் சரி; எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகளின் கரியர் பற்றிய கேள்விக்குறி பெற்றோர் அனைவருக்குமே எல்லோருக்குமே இருக்கிறது. டிசைன் துறையில் மாணவர்களுக்கு ஒரு பெரிய கதவு திறந்திருக்கிறது என்பதைச் சொல்லத்தான் மோட்டார் விகடன் ஒரு டிசைன் வொர்க்ஷாப்பை நடத்துகிறது.

கார் டிசைன் பற்றிய வொர்க்ஷாப் இது. ஒரு காரை எப்படி வரைய செய்ய வேண்டும்; டிசைன் செய்த பிறகு அந்த காரை எப்படி க்ளே மாடலிங் செய்ய வேண்டும்; சாதாரண பேப்பரில் வரைய ஆரம்பிக்கும் ஒரு கார், எப்படி சாலையில் ஓடுகிறது; அந்த டிசைன் துறையில் மாணவர்கள் எப்படிக் கால் பதிக்கலாம் என்பதைச் சொல்லும் வொர்க்ஷாப்தான் இது.

அசோக் லேலாண்டில் டிசைன் துறையின் தலைவராகப் பணிபுரியும் சத்தியசீலனின் ஆயா அகாடமியுடன் இணைந்துதான் மோட்டார் விகடன் இந்த வொர்க்ஷாப்பை நடத்தியது.

வொர்க்ஷாப் நடத்தத் திட்டமிட்டபோது, “ஏற்கெனவே ஆன்லைன் க்ளாஸ்; இதுல இது வேறயா என்று மாணவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டு விடுமோ’’ என்றுதான் பயந்தோம். ஆனால், வீக் எண்டில் லேப்டாப்பும் கையுமாக செம ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள் மாணவர்கள். `மாப்ளைக்கு அவ்ளோ வெறி’ என்று ஒரு படத்தில் வரும். அதுபோல், `மாணவர்களுக்கு கார் டிசைன் துறையில் அவ்ளோ வெறி’ என்றுதான் நினைக்கத் தோன்றியது. காலையில் தமிழிலும், மாலையில் ஆங்கிலத்திலும் நடந்த இந்த வெபினாரில், 7 நாடுகளில் - 5 வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆன்லைனில் `உள்ளேன் ஐயா’ சொன்னார்கள்.

ஒரு காரை எப்படி வேண்டுமானாலும் வரையலாம் என்பதைத் தாண்டி, இப்படித்தான் வரைய வேண்டும் என்று சத்தியசீலன் சில ரூல்களைப் பட்டியலிட்டார். கோல்டன் புரொப்போஷன், ரூல் ஆஃப் தேர்டு என்பதுதான் அது. ஐஸ்வர்யா ராயின் முக அமைப்பு, கடலில் ஏற்படும் ஸ்பைரல் ஸ்டைல் சுழல், செடிகளின் அமைப்பு எல்லாமே தங்க விகிதத்தின்படிதான் அமைந்திருக்கிறது என்று அவர் ரேஷியோபடி விளக்கிக் காட்டியது செம இன்ட்ரஸ்ட்டிங். கார்களின் சக்கரங்களுக்கு இவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்று அவர் சட்டென ஒரு மஸ்டாங் காரை வரைந்து உதாரணம் சொன்னதும் நச்!

1 பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவ், 2 பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவ், 3 பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவ், Horizon என்று வரைதலுக்கான இன்னும் சில எளிமையான யுக்திகளையும் சொன்னார் சத்தியசீலன். வெறும் ஒரே ஒரு புள்ளியை மையாக வைத்து, ஒரு அடுக்குமாடிக் கட்டடம் முதல் ஒரு பென்டிரைவ் முதல் எது வேண்டுமானாலும் வரையலாம் என்று சொன்னதோடு, ஒரு ஸ்போர்ட்ஸ் காரை அவர் வரைந்து காட்டியது நிச்சயம் மாணவர்களை நிமிர வைத்திருக்கும்.

பேப்பரில் ஸ்கெட்ச்சால் வரையப்பட்ட ஒரு காருக்கு உயிர் கொடுக்கும் அடுத்த ஸ்டேஜ்தான் க்ளே மாடல். மாணவர்களுக்கு க்ளே மாடல் உருவாகும் விதம் பற்றி வீடியோ காட்டப்பட்டது. ஒரு சிற்பி சிலையைச் செதுக்குவதைப்போல் அத்தனை அற்புதமாக காரைச் செதுக்கினார்கள் டிசைனர்கள். ஒரு சிறுவன், தான் வரைந்த கார்களை க்ளே மாடலிங் செய்ய டிப்ஸ் கேட்டான். எந்தக் களிமண் பயன்படுத்த வேண்டும்; சாஃப்ட்வேர் பயன்பாடு என்று கேள்விகளால் துளைத்தெடுத்தான். எல்லாவற்றுக்கும் பதிலளிக்கப்பட்டது.

க்ளே மாடலுக்குப் பிறகு சர்ஃபேஸ் என்றொரு இன்ட்ரஸ்ட்டிங்கான கான்செப்ட் பற்றிச் சொன்னார் சத்தியசீலன். ஆட்டோடெஸ்க் அலியாஸ், ICEM, CATIA என்று சில கார் டிசைன் டிஜிட்டல் ஸ்கல்ப்ட்டிங் மென்பொருள்கள் பற்றி அவர் சொன்னதுபோது, ``கார் டிசைன் சாஃப்ட்வேர்களை எப்படி டவுன்லோடு செய்வது’’ என்பதுதான் மாணவர்களின் அடுத்த கேள்வியாக இருந்தது. எதிர்பார்த்தபடியே கிட்டத்தட்ட லட்சங்களில் வரும் இந்த ஒரிஜினல் மென்பொருளை, மாணவர்களுக்காகவே இலவசமாகத் தருகிறார்கள் எனும் விஷயத்தையும் சொன்னார்.

கார் என்றில்லை; எது வரைந்தாலும், லைனில்தான் ஆரம்பித்தால்தான் எளிதாக வரைய முடியும் என்று... `3 பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவ்வில் மஸ்டாங் வரையப் போறேன்’ என்று சொல்லி, சில கோடுகளைப் போட்டு, சட்டென ஒரு காரை வரைந்து, அதை கூகுளில் ஸ்கேன் செய்து பார்த்தால்… அட, மஸ்டாங் என்று சொல்லியது கூகுள். மாணவர்கள் ஆன்லைனிலேயே கை தட்டினார்கள்.

மாணவர்களுக்குக் கடைசியாக ஒன்றைச் சொன்னார் சத்தியசீலன்: ``மார்க் மட்டும் முக்கியம் இல்லை; க்ரியேட்டிவிட்டியும், Fearless-ம் ரொம்ப முக்கியம். மார்க் தன்னால் வரும்! கார் டிசைனர்களுக்கு இது ரொம்ப அவசியம்!’’