Published:Updated:

பெலினோவுக்கு நோ சொல்லமாட்டேன்!

ஓனர்ஷிப் ரிவ்யூ: மாருதி பெலினோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஓனர்ஷிப் ரிவ்யூ: மாருதி பெலினோ

ஓனர்ஷிப் ரிவ்யூ: மாருதி பெலினோ

கட்டுரை, படங்கள்: விஷால் அரவிந்த்

ணக்கம்! என் பெயர் விஷால் அரவிந்த், 22 வயது... ஊர் - கோயம்புத்தூர். சிறுவயது முதலே எனக்கு வாகனங்களின் மேல் ஆர்வம் அதிகம்.

என் வாழ்க்கையில் இதுவரை, அமைந்த அனைத்து சிறந்த அனுபவங்களுக்குப் பின்னாலும் ஒரு வாகனம் இருந்துள்ளது. ஸ்கூல் மற்றும் காலேஜில் நடந்த போட்டிகளில் நான் பங்கேற்றது துவங்கி வேலை வாய்ப்புகள் அமையப் பெற்றதுவரை அனைத்தும் வாகனங்கள் சம்பந்தமாகவே அமைந்து வந்துள்ளன... அமைத்தும் கொண்டேன் என்றும் சொல்லலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாருதி பெலினோ
மாருதி பெலினோ

காரோ பைக்கோ வாங்க வேண்டும் என்றால், நானும் என் அப்பாவும் மணிக்கணக்கில் விவாதித்துத்தான் முடிவு எடுப்போம்.

2017-ம் ஆண்டு அப்படி எடுத்த முடிவுதான் இந்த மாருதி சுஸூகி பெலினோ (ஆல்ஃபா டீசல் - ரே புளூ கலர்). .

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஏன் பெலினோ?

அந்த நேரத்தில் எங்களிடம் ஒரு 2007 மாடல் மாருதி சுஸூகி ஸ்விப்ட் VDI இருந்தது. டூர் அடித்தாலும் சரி; போர் அடித்து ரவுண்டு போனாலும் சரி... ஸ்விஃப்ட்தான் எங்களுக்கு எல்லாமே! அந்தக் காரைச் சகட்டுமேனிக்குத் தட்டி எடுத்திருந்தோம். அதனால் நிறைய மெக்கானிக்கல் பிரச்சனைகள் தலைதூக்கின. அதனால் அந்தக் காரை விற்றுவிட்டோம். ஸ்விஃப்ட்டை ரீப்ளேஸ் செய்ய, அதைவிட ஒரு படி சிறந்த காரை வாங்க முடிவு செய்து நான்கு கார்களை ஷார்ட் லிஸ்ட் செய்தோம்.

மாருதி பெலினோ
மாருதி பெலினோ

டீசல் ஹேட்ச்பேக் மாருதி பெலினோ, ஹோண்டா ஜாஸ், போக்ஸ்வாகன் போலோ மற்றும் ஹுண்டாய் i20... இவைதான் எங்கள் சாய்ஸாக இருந்தது.

போலோ எங்களுக்குப் பிடிக்கும்தான். ஆனாலும் ஷார்ட்லிஸ்ட்டில் ஜெயித்தது பெலினோதான். காரணம், எங்களிடம் ஏற்கெனவே ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ TSI இருந்தது. அதே அம்சத்தோடு இருப்பதால், ஒரு சின்ன வென்ட்டோ எதற்கு என்று போலோவை மறுத்து விட்டோம்.

ஜாஸில் டீசல் இன்ஜின் மாடல் 1498cc, 98bhp பவர்/20kgm டார்க் இருந்தாலும், அதனுடைய பர்ஃபாமன்ஸ் பெரிதாக ஈர்க்கவில்லை. போட்டியாளர்களைக் காட்டிலும் வசதிகளும் குறைவாகத்தான் இருந்தது. i20-ன் மைனஸாக இதுதான் தெரிந்தது. அதாவது, உள்ளே இடப்பற்றாக்குறை. பார்வையிலும் கவர்ச்சி இல்லை.

அதனால், கடைசியில் பெலினோவில் வந்து நின்றோம். மாருதி குடும்பத்தின் அடுத்த வாரிசாக இருந்ததால், பெலினோ எந்தவிதத்திலும் எங்களை ஏமாற்றாது என்று உறுதியாக நம்பினோம்; ஏமாற்றவும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பர்ஃபாமன்ஸ்

முந்தைய ஜெனரேஷன் ஸ்விஃப்ட் காரின் 1248cc, 74 bhp/19 kgm இன்ஜின் ஆக இருந்தாலும் மிக ஸ்மூத்தாக இயங்குகிறது. நகருக்குள் ஓட்டிச் செல்ல அற்புதமாக உள்ளது பெலினோ. அடிக்கடி கியர் மாற்றும் அவசியமில்லை; அதுவாகவே பிக்-அப் ஆகிக் கொள்ளும். மேலும், மைலேஜும் சூப்பர். எங்கள் ஓட்டுதலைப் பொறுத்தவரை சுமார் 17-18 கி.மீ நகரத்தில் கிடைத்தது.

மாருதி பெலினோ
மாருதி பெலினோ

சொகுசு

இதன் முக்கிய அம்சமே சொகுசுதான். உட்காருவதற்கும், ஓட்டுவதற்கும் பெரிய செடான் காரைப்போல் வசதியாக இருக்கிறது. சீட்களில் நல்ல சப்போர்ட் உண்டு. டிரைவர் சீட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியும். ஸ்டீயரிங் ரீச் மற்றும் ரேக் (முன்னால்-பின்னால், மேலும்-கீழும்) அட்ஜஸ்ட் செய்வதற்கும் ஆப்ஷன் உண்டு அதனால், யார் வேண்டுமானாலும் எளிதாக ஓட்ட முடியும். மேலும், மேடு-பள்ளங்களில் ஓட்டும்போது மிக சாஃப்ட் ஆக இருக்கிறது. சஸ்பென்ஷன் நம்மூர் சாலைகளுக்காவே டிசைன் செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அது மட்டுமல்ல; தன் போட்டியாளர்களைக் காட்டிலும் நிறைய வசதிகள் பெலினோவில் உண்டு. இந்த வசதிகள்தான் காரை மிகவும் ஃபரஷ்ஷாகக் காட்டுகின்றன. உதாரணத்துக்கு ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஸ்டீயரிங் மவுன்ட்டட் ஆடியோ கன்ட்ரோல், மல்ட்டி இன்போ இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ஆப்பிள் கார் ப்ளே/ ஆண்ட்ராய்டு ஆட்டோ பொருத்தப்பட்ட 7 இன்ச் டச் ஸ்க்ரீன் எனக் கலக்குகிறது பெலினோ.

பாதுகாப்பு

பெலினோ மிகவும் லைட் வெயிட்டான கார். இந்த Alpha டீசல் வேரியன்ட்டின் எடை 935 கிலோதான். இதுவே நாங்கள் முன்பு பயன்படுத்திய ஸ்விஃப்ட்டின் எடை– 1,210 கிலோ. `எடை ரொம்பக் கம்மியா இருக்கே... பாதுகாப்பா இருக்காதோ’ என்று பயந்தோம். ஆனாலும் ஸ்டெபிலிட்டியில் ஓகே. மேலும் 2 காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் மற்றும் EBD உள்ளது. பிரேக் அடிச்சா பக்காவா நிற்கிறது. ஸ்கிட் எல்லாம் ஆகாது என நிச்சயமாகக் கூற முடியும். .

நாங்கள் காரை வாங்கும்போது (டிசம்பர் – 2017) ₹10.35 லட்சம் (ஆன்-ரோடு, கோயம்புத்தூர்) இருந்தது. அதாவது, காசுக்கு ஏற்ற கார்தான்.

சர்வீஸ் & மெயின்டனன்ஸ் (பராமரிப்பு):

மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க்தான் அதன் பலம். குறித்த நேரம், குறைந்த செலவு, எல்லா இடத்திலும் சர்வீஸ் சென்டர், இதெல்லாம் பெரிய ப்ளஸ் பாயின்ட்ஸ். குறைந்த பராமரிப்புச் செலவுக்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், லாக்டெளன் சமயத்தில் இதை சர்வீஸ் செய்தபோது, 175 ரூபாய்தான் பில் போட்டார்கள். இதுவே, எங்களது ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோவை சர்வீஸ் விட்டபோது, இதன் பில் தொகை, ₹1800-க்கு வந்தது.

சர்வீஸில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. ஆனால், ஒரு சிறு மன வருத்தம், மாருதி சர்வீஸ் சென்டர் ஆட்களின் அணுகுமுறை வரவேற்கத்தக்கதாக இல்லை.

மாருதி பெலினோ
மாருதி பெலினோ

மாருதியைப் பொருத்தவரை 10,000 கிலோமீட்டருக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும். இதற்குப் பெரிதாகச் செலவாவதில்லை. ரெகுலர் மாற்றங்கள் தவிர, மற்ற பாகங்களை மாற்ற வேண்டிய அவசியம் வந்ததில்லை. சமீபத்தில்தான் 40,000 கிலோமீட்டர் சர்வீஸ் முடிவடைந்தது. இதில் முன் பிரேக் பேட்ஸ் மட்டும் மாற்ற வேண்டிய ஒரு கட்டாயம். ஆனால், எங்கள் குடும்பத்தின் அக்ரெஸ்ஸிவ் மற்றும் ஸ்மூத் டிரைவிங் காம்பினேஷனுக்கு வேறு வழியில்லை.

பிடித்தது:

  • வசதிகள் - ப்ரீமியமான கேபின்

  • சிறப்பான பர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜ்

  • `பெஸ்ட் இன் கிளாஸ்’ ரைடு கம்ஃபர்ட்

  • ஓட்டுவதற்கு ரொம்ப ஈஸி. பராமரிப்பும் ஈஸி.

பிடிக்காதது:

  • எலக்ட்ரிக் ஸ்டீயரிங் இருப்பதால் பீட்பேக் அவ்வளவாக இல்லை. வேகம் செல்லும்போது நம்பிக்கை வருவதில்லை.

  • இன்டீரியர் தரம் கொஞ்சம் கம்மிதான்.

  • டொயோட்டா கிளான்ஸா பெட்டர் ஆப்ஷன் ஆகத் தெரிகிறது. ஆனால், டீசல் இல்லை.

என் தீர்ப்பு

பெலினோ வாங்கி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் மார்க்கெட்டில் `பெஸ்ட் செல்லிங்’ ஆகவும், அப்டேட்டட் ஆகவும் இருக்கிறது. எங்களை எந்தவிதத்திலும் ஏமாற்றவில்லை. அதனால், பெலினோவுக்கு நான் எப்போதும் `நோ’ சொல்லமாட்டேன். எதற்கும் ஸ்விஃப்ட், 1.0லி ஃபோக்ஸ்வாகன் போலோ TSI காரையும் ஒரு லுக் பார்த்துவிட்டு முடிவெடுங்கள்.