Published:Updated:

பெட்ரோல் புள்ளிங்கோ... எது சுட்டி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வென்யூ Vs எக்ஸ்யூவி300 Vs நெக்ஸான் Vs எக்கோஸ்போர்ட்
வென்யூ Vs எக்ஸ்யூவி300 Vs நெக்ஸான் Vs எக்கோஸ்போர்ட்

பெட்ரோல் போட்டி - வென்யூ Vs எக்ஸ்யூவி300 Vs நெக்ஸான் Vs எக்கோஸ்போர்ட்

பிரீமியம் ஸ்டோரி

போன மாதம் செல்ட்டோஸ், ஹெக்டர் உள்ளிட்ட 8 எஸ்யூவிகளுக்கும் நடந்த போட்டிக்குச் செம ரெஸ்பான்ஸ். அவை எல்லாமே 4 மீட்டரைத் தாண்டிய பெரிய எஸ்யூவிகள். ‘‘Sub–4 மீட்டர் கார்கள் என்ன பாவம் பண்ணிச்சு’’ என்று வாசகர்கள் பாசமாகக் கொந்தளித்ததை ஏற்று... இந்த மாதமும் ஒரு எஸ்யூவி போட்டிக்கு ரெடியாகிவிட்டோம்.

வென்யூ, XUV300, நெக்ஸான், எக்கோஸ்போர்ட் – இவர்கள் நால்வரும்தான் அந்தச் சின்ன எஸ்யூவி புள்ளிங்கோ! பெட்ரோல் ஆட்டோமேட்டிக்கையும், டீசல் மேனுவலையும் ஏற்கெனவே டெஸ்ட் செய்தாயிற்று. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் எஸ்யூவிகளுக்கான இந்தப் போட்டி, பெட்ரோல் இன்ஜின்கள் மாதிரியே ஸ்மூத்தாக நடந்து முடிந்தது. நான்கில் எது, படு சுட்டி?

1.  வென்யூவின் கேபின் தரம் அருமை. பயன்பாட்டிலும் எர்கானமிக்ஸிலும் நச்!
2.  இதன் 1.0 லிட்டர் இன்ஜின், நல்ல வேகம். மைலேஜும் மற்றவற்றைவிட அதிகம். (மொத்தமாக 18.27 கி.மீ) 
3. வென்யூவின் பூட் ஸ்பேஸ், 350 லிட்டர். பெரிதாகவும், வசதியாகவும் இருக்கிறது. 
4. பின்பக்க இடவசதியில் மற்ற கார்களிலிருந்து பின்தங்குகிறது வென்யூ. 3 பேருக்குச் சிக்கல்தான்!
1. வென்யூவின் கேபின் தரம் அருமை. பயன்பாட்டிலும் எர்கானமிக்ஸிலும் நச்! 2. இதன் 1.0 லிட்டர் இன்ஜின், நல்ல வேகம். மைலேஜும் மற்றவற்றைவிட அதிகம். (மொத்தமாக 18.27 கி.மீ) 3. வென்யூவின் பூட் ஸ்பேஸ், 350 லிட்டர். பெரிதாகவும், வசதியாகவும் இருக்கிறது. 4. பின்பக்க இடவசதியில் மற்ற கார்களிலிருந்து பின்தங்குகிறது வென்யூ. 3 பேருக்குச் சிக்கல்தான்!

டாக் ஆஃப் தி ஸ்பெக்...

வென்யூவில், i10–ல் இருக்கும் 1.2 லிட்டர் – 83bhp கொண்ட பெட்ரோல் மாடலும் இருக்கிறது. இது பேஸ் மாடல்களில் மட்டும்தான் கிடைக்கும். எடை குறைவான

i20–யிலேயே இது கொஞ்சம் மந்தம்தான் என உதட்டைப் பிதுக்குகிறார்கள் வாசகர்கள். பெரிய வென்யூவில் இதன் பர்ஃபாமென்ஸை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

அதனால், நாம் இங்கே கிளப்பியது 1.0 லிட்டர் T-GDI டர்போ பெட்ரோல் இன்ஜின். 120 bhp பவர் என்பதால், சாலையைக் கிழித்துக்கொண்டு பறந்தது வென்யூ. டார்க்கும் செம... 17.2 kgm. XUV300–ல் இருப்பது 110 bhp பவர். ‘அட, வென்யூவைவிடக் கம்மி’ என்று முடிவு செய்துவிடாதீர்கள். வென்யூவில் 1.0 லிட்டர்தான்; இதில் பெரிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல். டார்க்கும் 20kgm. இங்கே க்ளாஸ் லீடிங் டார்க் என்பது XUV300–யில்தான்.

நெக்ஸானையும் குறை சொல்லிவிட முடியாது. இதன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 110 bhp பவரையும், 17 kgm டார்க்கையும் கொடுக்கிறது. நெடுஞ்சாலைகளில் வெறித்தனம் காட்டும் இந்த நெக்ஸான்.

ஃபன் டு டிரைவ் என்றால்... அது ஃபோர்டுதானே? அதிலும் ஃபோர்டின் எக்கோபூஸ்ட்டை ஓட்டுவது என்றால், கார் வெறியர்கள் சோற்றைக்கூட மறப்பார்கள்.

ஆனால் மன்னிக்கவும்! BS–6 விதிகளுக்காகவோ, அதிக விலைக்காகவோ, குறைந்த மைலேஜுக்காகவோ இந்த இன்ஜினை ஃபோர்டு நிறுத்தும் முடிவில் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

பெட்ரோல் புள்ளிங்கோ... எது சுட்டி?

நாம் இங்கே எடுத்தது 1.5 லிட்டர் ‘டிராகன் சீரிஸ்’ NA (Naturally Aspirated) இன்ஜின். அதாவது டர்போ கிடையாது. ஆனால், இங்கிருப்பதிலேயே அதிக பவர் (123bhp) ஃபோர்டில்தான். ஆனால் டார்க்கில்தான் கஞ்சத்தனம் தெரிகிறது... 15 kgm டார்க்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எது வேகம்?

இங்கிருப்பதிலேயே ஃபோர்டுதான் இரண்டாவது வேகமான கார். 0–100 கி.மீ–க்கு 12.10 விநாடிகள் காட்டியது நமது சோதனையில். இதன் கியர் ஆக்ஸிலரேஷன் மற்ற டர்போ அளவு இல்லை;

கொஞ்சம் சுமார்தான். (3–வது கியரில் 20–80kph-க்கு 13.27 விநாடிகள்; 4–வது கியரில் 40–100 கி.மீ–க்கு 18.51 விநாடிகள்). மிட் ரேஞ்சில் மட்டும் ஃபோர்டு ஃபன் காட்டுகிறது. காரணம் அந்தக் குறைவான டார்க்தான். ஹார்டு த்ராட்டிலிங்கில் நெக்ஸான்... ‘வாவ்’ என்று வியக்க வைக்கிறது. 4.87 விநாடிகள் எண்ணுவதற்குள் 0–60 கி.மீ–யைத் தொட்டுவிட்டது நெக்ஸான். ஆனால் பரிதாபம், 0–100 கி.மீ–யில் நெக்ஸானுக்கு 3–வது இடம்தான். 12.33 விநாடிகள் ஆகிவிட்டது. நெக்ஸானில் கொஞ்சம் டாலர் கியர் ரேஷியோவை செட் செய்திருக்கிறார்கள். எனவே மற்ற வேகப் போட்டியிலும் இது ஸ்லோதான். (20–80கி.மீ–க்கு 14.62 விநாடிகள்; 40–100 கி.மீ–க்கு 19.89 விநாடிகள்) XUV300தான் இங்கிருப்பதிலயே அதிக டார்க். கியர் ரேஷியோ போட்டியில் இது முன்னேறிவிட்டது. மூன்றாவது கியரில் 20–80 கி.மீ–க்கு 11.65 விநாடிகள்; 4–வது கியரில் 40–100 கி.மீ–க்கு 13.96 விநாடிகள் என எகிறிவிட்டது. இத்தனைக்கும் இது நெக்ஸானைவிட 172 கிலோ அதிகம். (1,360 கிலோ). அதேநேரம் 0–100 கி.மீ வேகப்போட்டியில் XUV300தான் கடைசி. 12.80 விநாடிகள் எடுக்கிறது XUV300. டர்போ லேக்கூடக் காரணமாக இருக்கலாம்.

1. கேபின் தரம் அருமை. டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோலும், ஸ்டீயரிங் மோடுகளும் உண்டு.
2.  இங்கிருப்பதிலேயே அதிக டார்க் கொண்டது (20kgm) மஹிந்திராவின் பெட்ரோல் இன்ஜின். 
3. XUV300-ன் பூட் இடவசதி - மற்றவற்றைவிட சுமார் 100லிட்டர் குறைவு. (257லிட்டர்) 
4. அகலமான கார் என்பதால், 3 பேருக்கான இடவசதி அருமை. லெக்ரூமும் ஓகே!
1. கேபின் தரம் அருமை. டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோலும், ஸ்டீயரிங் மோடுகளும் உண்டு. 2. இங்கிருப்பதிலேயே அதிக டார்க் கொண்டது (20kgm) மஹிந்திராவின் பெட்ரோல் இன்ஜின். 3. XUV300-ன் பூட் இடவசதி - மற்றவற்றைவிட சுமார் 100லிட்டர் குறைவு. (257லிட்டர்) 4. அகலமான கார் என்பதால், 3 பேருக்கான இடவசதி அருமை. லெக்ரூமும் ஓகே!

இங்கே வேகமான கார், வென்யூதான். இதன் 0–100 கி.மீ வேகம், வெறும் 11.24 விநாடிகள்தான். மற்ற மூன்றையும்விட இதுதான் வேகம். அதேநேரம் கியர் ரேஷியோ வேகப்போட்டியில் XUV300-யை மட்டும்தான் வென்யூவால் முந்த முடிகிறது. 3–வது கியரில் 20–80 கி.மீ–க்கு 11.96 விநாடிகளும்; 4–வது கியரில் 40–100 கி.மீ–க்கு 13.89 விநாடிகளும் எடுத்துக்கொண்டது வென்யூ.

நாலும் நாலு விதமான டிரைவிங்...

‘பார்க்கிறதுக்கு ஸ்நேகா மாதிரி இருந்துக்கிட்டு பண்றதெல்லாம் நமீதா வேலை’ என்பது வென்யூவுக்குப் பொருந்தும். ஆரம்பத்தில், சின்ன இன்ஜின் கொண்ட வென்யூவை இங்கிருப்பதிலேயே வேகமான கார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இதன் டர்போவும், பவர் டெலிவரியும், உறுதியான மிட் ரேஞ்ச் பர்ஃபாமென்ஸும், குறிப்பிட்ட ஆர்பிஎம்–ல் திணறடிக்காத டர்போ லேக்கும்தான் இதை வேகமான காராக மாற்றியிருக்கிறது.

1. நெக்ஸானின் இன்டீரியர், ஓகே. பாகங்கள் உறுதி இல்லை. ஃபிட் அண்ட் ஃபினிஷ் ஓகேதான்.
2.  குறைந்த வேகங்களில் ஒரு ஜெர்க் தெரிகிறது, நெக்ஸானின் 1.2லி டர்போ பெட்ரோல் இன்ஜினில்.
3. 350 லிட்டர் இடவசதி. ஆனால் லோடிங் ஏரியா உயரமாக இருப்பதால், பொருட்கள் வைக்கக் கஷ்டமாக இருக்கிறது.
4. இடவசதி தாராளம்தான். ஆனால் சீட் தாழ்வாக இருப்பதால், பிக்பாஸ் வீடுபோல் வெளியே நடப்பது தெரியவில்லை.
1. நெக்ஸானின் இன்டீரியர், ஓகே. பாகங்கள் உறுதி இல்லை. ஃபிட் அண்ட் ஃபினிஷ் ஓகேதான். 2. குறைந்த வேகங்களில் ஒரு ஜெர்க் தெரிகிறது, நெக்ஸானின் 1.2லி டர்போ பெட்ரோல் இன்ஜினில். 3. 350 லிட்டர் இடவசதி. ஆனால் லோடிங் ஏரியா உயரமாக இருப்பதால், பொருட்கள் வைக்கக் கஷ்டமாக இருக்கிறது. 4. இடவசதி தாராளம்தான். ஆனால் சீட் தாழ்வாக இருப்பதால், பிக்பாஸ் வீடுபோல் வெளியே நடப்பது தெரியவில்லை.

அது மட்டுமில்லை; பயன்படுத்தவும் யூஸர் ஃப்ரெண்ட்லியாக இருக்கிறது வென்யூ. இதன் லைட்டான கிளட்ச்சும், ஸ்மூத்தான கியர்ஷிஃப்ட்டிங்கையும் வைத்து இதைச் சொல்கிறோம். ரிஃபைன்மென்டும் ஸ்மூத். 3 சிலிண்டர் இன்ஜின் என்பதை நம்ப முடியவில்லை. எக்கோஸ்போர்ட்டிலும் 3 சிலிண்டர்தான். இங்கே பெயருக்கு ஏற்றபடி ஸ்போர்ட்டியான இன்ஜின், எக்கோஸ் போர்ட்டில்தான். இத்தனைக்கும் இதில் டர்போ கிடையாது. வழக்கமான NA இன்ஜின்தான். அதனால் டர்போ அளவுக்கு இல்லாமல், கொஞ்சம் ஹார்டு ஆக்ஸிலரேஷன் கேட்கிறது ஃபோர்டு.

மிட்ரேஞ்சிலேயே பட்டையைக் கிளப்புகிறது எக்கோஸ்போர்ட்! லோ எண்ட் ஆர்பிஎம்மில், அதாவது சிட்டிக்குள் 3–வது கியரிலேயே அதகளம் பண்ணலாம். இங்கிருப்பதிலேயே குறைவான கியர், 5 ஸ்பீடு கொண்டது எக்கோஸ்போர்ட் மட்டும்தான். துல்லியமாகத்தான் இருக்கிறது. ஆனால், கிளட்ச் ப்ளேவுக்குத்தான் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

XUV300–யின் கியர்பாக்ஸ்தான் இங்கே கவனம் பெற்றது. நெக்ஸான் போன்று லாங் டிராவல் இருந்தாலும், செம ஸ்மூத். கிளட்ச்சும் லைட் வெயிட். லேசான டர்போ லேக், லேசாகப் படுத்துகிறது. குறைந்த வேகங்களில் பூஸ்ட் கிடைக்காமல் திணறுகிறது. 2,000 rpm–க்கு நெருக்கத்தில் டர்போ முழித்துக் கொண்டு விட்டால்... ஜாலியாக இருக்கிறது. ரெட்லைன் வரை அதிகம் திணறாமல், விசில் அடித்தபடி பறக்கிறது டர்போ. இதன் ரிஃபைன்மென்ட்டும் சூப்பர்.

1. பெரிய டச் ஸ்க்ரீன் ஃபோர்டில்தான். நிறைய அப்டேட்ஸ். ஆனால் டிசைன் பார்த்துப் பார்த்துப் போர் அடித்துவிட்டது. 
2.  இங்கே டர்போ இல்லாத ஒரே இன்ஜின். ஆனால் பர்ஃபாமென்ஸில் பெப்பே காட்டவில்லை. பெப்பியாக இருக்கிறது.
3. அதிக பூட் ஸ்பேஸ் எக்கோஸ்போர்ட்டில்தான். 352 லிட்டர். பொருள்களை வைப்பது எளிது.
4. உயரமான சீட்கள், நிறைய இடவசதி இருப்பதுபோல் இருக்கிறது. காரும் உயரம் என்பதால், ஹெட்ரூமும் சூப்பர்.
1. பெரிய டச் ஸ்க்ரீன் ஃபோர்டில்தான். நிறைய அப்டேட்ஸ். ஆனால் டிசைன் பார்த்துப் பார்த்துப் போர் அடித்துவிட்டது. 2. இங்கே டர்போ இல்லாத ஒரே இன்ஜின். ஆனால் பர்ஃபாமென்ஸில் பெப்பே காட்டவில்லை. பெப்பியாக இருக்கிறது. 3. அதிக பூட் ஸ்பேஸ் எக்கோஸ்போர்ட்டில்தான். 352 லிட்டர். பொருள்களை வைப்பது எளிது. 4. உயரமான சீட்கள், நிறைய இடவசதி இருப்பதுபோல் இருக்கிறது. காரும் உயரம் என்பதால், ஹெட்ரூமும் சூப்பர்.

இங்கிருப்பதில் ரிஃபைன்மென்ட்டில் சுமாரான இன்ஜின், நெக்ஸானில்தான். எல்லா ரெவ்களிலும் ஏதோ ஒரு கடாமுடா சத்தம், பயணம் முடியும் வரை நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் டிரைவிங் மோடுகள் வைத்து நம்மைக் குஷிப்படுத்த முயற்சிக்கிறது டாடா. அந்த எக்கோ மோடு, கொஞ்சம் இல்லை; ரொம்பவே மந்தம். சிட்டி மோடு ஓகே. ஸ்போர்ட்ஸ் மோடுதான் பர்ஃபாமென்ஸ் விரும்பிகளுக்கானது.

ஹைவேஸில் நன்றாக க்ரூஸ் செய்து பறக்கலாம். கியர்ஷிஃப்ட் ஸ்லிம் அண்ட் ஸ்லீக்! பிரச்னை என்னவென்றால், குறைந்த வேகங்களில் பவர் டெலிவரியில் ஒரு ஜெர்க்கினெஸ் தெரிகிறது. தினசரி கம்யூட்டிங்குக்கு, நெக்ஸான் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

ராக் அண்ட் ரோல்

இன்ஜினில் பல்பு கொடுத்தாலும், டிரைவர்ஸ் கார் என்று நெக்ஸானைத் தைரியமாகச் சொல்லலாம். காரணம், இதன் டைனமிக் செட்–அப் அந்தளவு பிரமாதம். காற்றைக் கிழித்துக் கொண்டே நெக்ஸானில் தைரியமாகப் பயணிக்கலாம். ஸ்டீயரிங் துரிதமாகவும் சொன்னபடியும் கேட்கிறது. பாடி ரோல்கூட நன்றாகக் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. குறைந்த வேகங்களில், மிதமான வேகங்களில் மோசமான சாலைகளைச் சூப்பராகச் சமாளிக்கிறது சஸ்பென்ஷன். இங்கிருப்பதிலேயே அதிக கி.கிளியரன்ஸ் நெக்ஸானில்தான். 209 மிமீ கொண்ட நெக்ஸானில், மேடு பள்ளங்கள் – ஸ்பீடு பிரேக்கர்களெல்லாம் அசால்ட் பண்ணலாம்.

பெட்ரோல் புள்ளிங்கோ... எது சுட்டி?

ஹேண்ட்லிங் என்று வந்துவிட்டால், ஃபோர்டு கார்களைச் சந்தேகிக்க முடியாது. இதன் லைட் வெயிட் ஸ்டீயரிங், 1,274 கிலோ எடை கொண்ட இந்த எக்கோஸ்போர்ட்டை, ஹேட்ச்பேக் ஓட்டுவதுபோல் ஜாலியாக்குகிறது. நெக்ஸான் போல இதிலும் ஓட்டுதல் - கையாளுமை சூப்பர். டாப் எண்ட் மாடல்களில், முன்பு 17 இன்ச் வீல்கள் கொடுத்தது ஃபோர்டு. ஆனால் நாம் ஓட்டியது 16 இன்ச்தான். 2017 ஃபேஸ்லிஃப்ட்டில் சஸ்பென்ஷனை கொஞ்சம் சாஃப்ட் செட்–அப்பாக மாற்றியிருந்தது ஃபோர்டு. இருந்தாலும் மோசமான சாலைகளில் கொஞ்சம் இறுக்கமாகவே பயணிக்க வேண்டியிருக்கிறது. இதன் கி.கிளியரன்ஸ் 200 மிமீ.

இங்கிருப்பதில் எடை அதிகமானதும், பெரிய வீல்களும் கொண்ட கார் – XUV 300தான். 1,360 கிலோ எடைக்கு இந்த வீல்கள் நல்ல கிரிப். அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் இதன் ஸ்டீயரிங், செம! ஸ்டீயரிங்குக்கெல்லாம் மோடுகள் வைத்து மஹிந்திரா ஓவர்ஆக்டிங் செய்கிறதோ எனத் தோன்றுகிறது. ஆனால் அனுபவித்தால் ஜாலியாகவே இருக்கிறது. குறைந்த வேகங்களில் இதன் ஓட்டுதல் தரம் அருமை. இதன் சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்–அப், பெரும்பான்மையான பள்ளங்களை ஈஸியாக உள்வாங்கிக் கடக்கிறது. இதுவே வேகமாகப் போனால், பயணிகள் ‘பவுன்ஸ்’ ஆகிறார்கள். ‘தடால்’ என வேகமாக ஒரு பள்ளத்தில் இறக்கி ஏற்றினால்... அலாய் வீல்களில் அந்த ‘தடாலை’ உணர முடிகிறது. நீளமான பானெட்டும், அகலமான டைமென்ஷனும் கொஞ்சம் நம்பிக்கை தருகின்றன.

பெட்ரோல் புள்ளிங்கோ... எது சுட்டி?

வென்யூவின் சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமானதுதான். இருந்தாலும் குறைவான, மிதமான வேகங்களில் கார் லேசாக ஆட்டம் போடுகிறது. சின்ன காராக இருந்தாலும், வேகங்களில் அத்தனை ஸ்டெபிலிட்டி தெரிகிறது வென்யூவில். பொதுவாக, ஹூண்டாயின் ஸ்டீயரிங்கின் மேல் ஓர் அதிருப்தி இருக்கும். இதில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் டாடா மற்றும் ஃபோர்டு அளவுக்கு நெருங்க முடியவில்லையே ஹூண்டாய்?

இடம் எதில் தாரா...ஆளம்.?

ரைடிங் தவிர்த்து எஸ்யூவியில் என்ன எதிர்பார்ப்போம். ஆம்! இடவசதிதான். XUV300தான் இங்கே இடவசதியில் தாரா..ளம் காட்டுகிறது. இங்கிருப்பதிலேயே அகலமான கார் (1,821மிமீ) என்பதால், லெக்ரூமும் இடவசதியும் சூப்பர். பின்னால் பெரிய வீட்டுக்குள் இருப்பதுபோன்ற ஓர் உணர்வு. பின் பக்கம் 3–பாயின்ட் சீட்பெல்ட்டும், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்டும் இருப்பது, வேறெதிலும் இல்லாத அம்சம். ஏகப்பட்ட வசதிகள் இருந்தும், ரியர் ஏ.சி வென்ட் கொடுக்காததற்காக மஹிந்திராவுக்கு ஒரு கண்டனம்.

ஃபோர்டுக்கும் ஒரு கண்டனம். எக்கோஸ்போர்ட்டிலும் ரியர் ஏ.சி வென்ட் இல்லை. பின் பக்க இடவசதி சூப்பர் இல்லை; ஓகே! இங்கிருப்பதிலேயே உயரமான கார் இதுதான் (1,647 மிமீ). அதனால் ஹெட்ரூம் விஷயத்திலும், உயரமான சீட்டிங் விஷயத்திலும் எக்கோஸ்போர்ட் சூப்பர். ஆனால், லெக்ரூம் மஹிந்திரா அளவுக்கு இல்லை. முன்பக்க சீட்டில் உட்கார்ந்தால், பெரிய எஸ்யூவியில் இருப்பதுபோல கெத்தாக இருக்கிறது. ஆனால் அந்த ‘Y’ வடிவ ‘A’ பில்லர்கள், பெரிய பிளைண்ட் ஸ்பாட்டை ஏற்படுத்துகின்றனவே?

கூஃபே டிசைன், சரிந்து வரும் கூரை... இதையெல்லாம் மனதில் வைத்து ‘இடவசதி எங்கே இருக்கப் போகுது’ என்றுதான் நெக்ஸான் லாஞ்ச் ஆனபோது நினைத்திருப்பார்கள். ஆனால், XUV300 அளவுக்கு லெக்ரூமையும் ஹெட்ரூமையும் டாடா வழங்கியிருப்பதற்குப் பாராட்டுக்கள். அதேநேரம், பின் சீட் வடிவமைப்பைப் பார்க்கும்போது, இரண்டு பேரை மட்டும் மனதில் வைத்தே வடிவமைத்திருப்பது தெரிகிறது. அந்த விண்டோ லைன், வெளிச்சாலை விஸிபிலிட்டியைக் காலி செய்கிறது. ரியர் ஏ.சி வென்ட்டுக்கு நன்றி டாடா! பின் பக்கத்தைப்போலவே முன் பக்கத்திலும் தாழ்வான சீட்கள், ஒரு ஹேட்ச்பேக்கை ஓட்டுவதுபோலவே கிச்சென இருக்கிறது.

நிஜமாகவே ஹேட்ச்பேக்கில் அமர்ந்திருப்பது போலதான் இருக்கிறது வென்யூ. அளவுகளில் இருந்து எல்லாமே சிறுசு; வெளிச்சாலை வியூ நன்றாகவே தெரியும்படி, டிரைவர் சீட் பொசிஷன் இருக்கிறது. ரியர் ஏ.சி வென்ட்டுக்குப் பாராட்டுக்கள்தான்; ஆனால் பின்பக்க இடவசதியை இதுவே காலி செய்வதுபோல் இருக்கிறது. அகலம் குறைவு என்பதால், பின் பக்கம் 3 பேர் நெருக்கிக்கொண்டு போவதுகூடச் சிரமம்தான்.

எது பிராக்டிக்கல்?

டேஷ்போர்டை வைத்தே இது ஹூண்டாய் என்று சொல்லிவிடலாம். அவர்களின் பாரம்பரிய நெடி அடிக்கிறது. ஸ்மார்ட் ஆன ஸ்டீயரிங் வீலும், எர்கானமிக்கலாக டிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டும் அருமை. 8 இன்ச் டச் ஸ்க்ரீன் உயரத்தைச் சரியாக வடிவமைத்திருக்கிறார்கள். கன்ட்ரோல் பட்டன்களும் எளிதாக இயக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. தரமும் நிஜமாகவே அருமை. அங்கங்கே பாட்டில், போன் போன்ற பொருட்கள் வைக்க ஏகப்பட்ட ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உண்டு.

XUV300– இன்டீரியர் டிசைனில் கலக்குகிறது. டிசைனில் மட்டுமில்லை; ஆம்பியன்ட் லைட்டிங், கலர்கள் என லுக்கிலும் ஜொலிக்கிறது. 7 இன்ச் டச் ஸ்க்ரீன்தான் இதில். முன்பக்க இடவசதியில் மஹிந்திரா அருமை.எக்கோஸ்போர்ட்டிலும் பிராக்டிக்காலிட்டியில் அசத்துகிறது. 2017 ஃபேஸ்லிஃப்ட்டில் ஃபோர்டு சில மாற்றங்கள் செய்திருப்பது... சூப்பர். இ்ங்கிருப்பதிலேயே பெரிய டச் 9 இன்ச் ஸ்க்ரீன் கொண்ட கார், ஃபோர்டுதான். சீட்டுகளுக்கு இடையில், பொருள்கள் வைக்க அந்த மூடிய க்ளோவ்பாக்ஸ் – ஆர்ம்ரெஸ்ட்டாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். சில இடங்களில் ஹார்டு பிளாஸ்டிக்குகளும், பார்த்துப் பழகிய டேஷ்போர்டும், எக்கோஸ்போர்ட்டுக்கு வயசாயிடுச்சோ என நினைக்க வைக்கிறது.

நெக்ஸானின் டேஷ்போர்டு நீட் அண்ட் க்ளீன். ஆங்காங்கே டெக்ஷர்டு பிளாஸ்டிக்குகள், பணக்காரத்தன்மை கொடுக்கின்றன. ஸ்விட்ச் கியர்களில் இன்னும் தரம் வேண்டும். கோபத்தில் இயக்கினால் கையோடு வந்துவிடும் போல! டோர் பாக்கெட்டுகளும் சிறுசு. சென்டர் ஸ்டோரேஜ் இடவசதியும் கொஞ்சம் குறுகலாக இருப்பதும் சிக்கல்தான். முக்கியமாக அந்த பென் டிரைவ் மாட்டும் இடம்... பாதி கை உள்ளே போய்விடுகிறது.

எர்கானமிக்ஸில் டாடா இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும். வென்யூவிலும் நெக்ஸானிலும் 350 லிட்டர் பூட் ஸ்பேஸ். எக்கோஸ் போர்ட்டில் 2 லிட்டர் அதிகம்.

ஆனால் ஃபோர்டைவிட, வென்யூவிலும் நெக்ஸானிலும்தான் பொருள்களை எளிதாக ஏற்றி இறக்க பூட்டை வடிவமைத்து இருக்கிறார்கள். ஃபோர்டில் உயரமாகவும், குறுகலாகவும் இருப்பதால் கொஞ்சம் சிரமம். இங்கே மஹிந்திராதான் மற்றவற்றைவிட சுமார் 100 லிட்டர் பின் தங்கியிருக்கிறது. இதில் வெறும் 257 லிட்டர் பூட் ஸ்பேஸ்தான்.

வசதிகளில் கில்லி!

வழக்கம்போல வசதிகளில் ஹூண்டாய் சொல்லியடிக்கிறது. வென்யூதான் வயர்லெஸ் போன் சார்ஜிங், சிம் கனெக்ட்டிவிட்டி கொண்ட ஒரே கார். லெதர் சீட்கள், ஆப்ஷனல். சன்ரூஃப்பும் அசத்தல். மோடுகள், ஹீட்டட் விங் மிரரில் மட்டும்தான் கஞ்சத்தனம் காட்டிவிட்டது ஹூண்டாய். அதேபோல் அந்த ஆல்வீல் டிஸ்க் எங்கே? அது சரி; க்ரெட்டாவிலேயே இது கிடையாது.

ஹூண்டாய்க்கு மேலே போய்விட்டது மஹிந்திரா. ஸ்டீயரிங் மோடுகள், சன்ரூஃப், டயர் ப்ரஷர் மானிட்டர், டச் ஸ்க்ரீன், ஆட்டோ டிம்மிங் மிரர், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், லெதர் சீட், ஹீட்டட் விங் மிரர்கள், ரியர் டிஸ்க் என்று எதை எழுதினாலும் டிக் அடிக்கலாம் XUV300-ல். காற்றுப்பைகளில்கூட ஒன்று அதிகம் கொடுத்து அசரடித்துவிட்டது. சாதாரணமான ரியர் ஏ.சி வென்ட்டையும், ட்ராக்ஷன் கன்ட்ரோலையும்தான் விட்டுவிட்டது மஹிந்திரா. ஃபோர்டு நிறைய குழப்பத்தில் இருக்கிறதுபோல! நாம் ஓட்டியது டைட்டானியம் மாடல். ஆனால் இந்த 1.5 பெட்ரோல் மேனுவல், இப்போது டைட்டானியம் ப்ளஸ் வேரியன்ட்டிலும் கிடைக்கிறது. தனது டிரேட்மார்க் SYNC3 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை, இந்த மாடலில் காலி செய்துவிட்டது ஃபோர்டு. ஆண்ட்ராய்ட்/ஆப்பிள் கனெக்ட்டிவிட்டி மிஸ்ஸிங். இது எக்கோபூஸ்ட் மற்றும் டீசல் மாடல்களில், ‘S’ வேரியன்ட்டில் மட்டும்தான். நல்லவேளை – 6 காற்றுப்பைகள் உண்டு.

நெக்ஸானில் வசதிகளைத் தேட வேண்டும். காற்றுப்பைகளில்கூட கஞ்சத்தனம்; 2 மட்டும்தான். டச் ஸ்க்ரீனும் சிறுசு; 6.5 இன்ச்தான். இங்கே GPS, ESC, ஹில் ஹோல்டு, ஆட்டோ டிம்மிங் மிரர், சன்ரூஃப் போன்ற முக்கியமான வசதிகள் இல்லாத ஒரே கார் நெக்ஸான் மட்டும்தான்.

ஆனால், டிரைவிங் மோடுகள் ஜாலியாக இருக்கின்றன. அதேநேரம் இங்கிருப்பதில் கட்டுமஸ்தான புள்ளிங்கோ, நெக்ஸான் மட்டும்தான். பின்னே... Global NCAP டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கிய ஒரே உறுதியான கார் இதுதான். ஃபோர்டும் மஹிந்திராவும் 4 ஸ்டார் (Euro NCAP). வென்யூ இனிதான் க்ராஷ் டெஸ்ட்டுக்குத் தயாராக வேண்டும்.

பெட்ரோல் புள்ளிங்கோ... எது சுட்டி?

தையும் இங்கே ஈஸியாக எலிமினேட் செய்துவிட முடியவில்லை. நாலும் நாலு விதம்! ரைடு அண்ட் ஹேண்ட்லிங், டைனமிக்ஸ், தாராள இடவசதி என்று நெக்ஸான் கலக்குகிறது. ஆனால், கொடுக்கும் விலைக்கு ஏற்ற வசதிகளில் டாடா காட்டிவிடுகிறது டாடா. ஃபிட் அண்ட் ஃபினிஷிலும், பெட்ரோல் ஸ்மூத்னெஸ்ஸிலும் நெக்ஸான் முன்னேற வேண்டும்.

பெஸ்ட் ஹேண்ட்லிங், ரைடு என்றால், எக்கோஸ்போர்ட்தான். கியர்ஷிஃப்ட் தவிர்த்து, இது செம யூஸர் ஃப்ரெண்ட்லி. மைலேஜில் முன்னேற்றம் வேண்டு்ம். அராயிலேயே 16.5 கி.மீதான் தருகிறது. பின் பக்கப் பயண அனுபவமும், எக்ஸைட்டிங்காக இல்லை.

பெட்ரோல் புள்ளிங்கோ... எது சுட்டி?

எக்ஸ்ட்ரா டார்க், ரீஃபைன்மென்ட், வசதிகள், இடவசதி, கேபின் தரம் என்று எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரா, மஹிந்திரா. சின்ன பூட்டைத் தவிர்த்து, வேறெந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஹேண்ட்லிங் ஓகேதான்; ஆனால், இவ்வளவு ஹை டார்க் காருக்கு டைனமிக்ஸ் இன்னும் கொஞ்சம் ஷார்ப் ஆக இருந்திருக்கலாம். அதேபோல், வசதிகளில் குறை வைக்காத வென்யூவைவிட சுமார் 1 லட்சம் விலை அதிகம் என்பது ஓகேவா?

இன்டீரியர் டிசைன், தரம், எக்யூப்மென்ட் லிஸ்ட், ரிஃபைண்டு இன்ஜின் என்று வென்யூ, முன்னால் போய்க் கொண்டிருக்கிறது. பின் பக்க இடநெருக்கடியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்... அப்படியே க்ரெட்டாவின் ட்வின்ஸ்போல்தான் இருக்கிறது வென்யூ. அதேநேரத்தில் விலையும் சூப்பர். சிக்கன் பிரியாணி சாப்பிடும்போது, ‘சின்ன காலா இருந்தாலும், நல்லா இருக்குடா’ என்று ஒரு படத்தில் விவேக் சொல்வார்; அதுபோல், சின்ன காராக இருந்தாலும் பர்ஃபாமென்ஸும் வசதிகளும் செமையா இருக்கு வென்யூவில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு