Published:Updated:

15 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ வாங்கலாமா?

Used Premium Cars
பிரீமியம் ஸ்டோரி
Used Premium Cars

பழைய கார் மார்க்கெட்: லக்ஸூரி கார்கள்

15 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ வாங்கலாமா?

பழைய கார் மார்க்கெட்: லக்ஸூரி கார்கள்

Published:Updated:
Used Premium Cars
பிரீமியம் ஸ்டோரி
Used Premium Cars
15 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ வாங்கலாமா?

நமக்குத் தெரிந்து ஒரு மிடில் க்ளாஸ் வாசகர், லக்ஸூரி கார்களின் மிகப் பெரிய விசிறி. ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஜாகுவார், லேண்ட்ரோவர் என்று சொகுசு கார்கள் எல்லாமே அவரது ஹிட் லிஸ்ட்டில் உண்டு. ஆனால், பெரிய வருமானம் இல்லாததால், சின்னதாக முதலில் ஒரு புது செலெரியோ வாங்கினார். அதன் பிறகு ஒரு லக்ஸூரி கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மார்க்கெட்டில் தேட ஆரம்பிக்க, அவரின் கைக்குச் சிக்கியது ரெனோ கோலியோஸ்.

கோலியோஸும் கிட்டத்தட்ட ஒரு ப்ரீமியம் வகை எஸ்யூவிதான். சுமார் 22 லட்சத்துக்கு பழைய 2015 ஆட்டோமேட்டிக் கோலியோஸ் வாங்கியவர், கொஞ்ச நாட்களுக்குப் பிறகு திண்டாட ஆரம்பித்தார். அதாவது, சர்வீஸில் அவருக்குச் சரியான உதிரிபாகங்கள் கிடைக்கவில்லை. ``அடுத்த வாரம்… அடுத்த மாசம்’’ என்று சமாளித்திருக்கிறார்கள் சர்வீஸ் சென்டரில். இப்போது புலம்பியபடிதான் இருக்கிறார் இன்னும்.

அந்த காரின் ஒரிஜினல் விலை ரூ.32 லட்சம். இந்த வாசகர் செய்த முதல் தவறு - விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று ஒரு விற்பனையாகாத ப்ரீமியம் காரை வாங்கியது. காரணம், அந்த காருக்கு ஷோரூமிலேயே புது காரின் விலையில் 6 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி கிடைத்தது. இரண்டாவது - அது விற்பனையாகாத கார் என்பதால், தயாரிப்பும் உடனே நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, உதிரிபாகங்களில் சிக்கல் ஏற்பட்டது. அப்படியென்றால் லக்ஸூரி கார் வாங்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?

``ஒரு வகையில் இது உண்மைதான். கார்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம்.. சர்வீஸ் ஹிஸ்ட்ரி… நமது தேவைக்கேற்ற மாடல்… காருக்கு ஏற்ற விலை… ஓரளவு மைலேஜ்… இதில் கவனம் செலுத்தினால் போதும். நல்ல யூஸ்டு ப்ரீமியம் காருக்கு ஓனராக சந்தோஷமாக இருக்கலாம்’’ என்கிறார், முஹமது முஸ்தஃபா.

சென்னை ராயப்பேட்டையில் `Route 66’ எனும் பெயரில் யூஸ்டு ப்ரீமியம் கார் ஷோரூம் வைத்திருக்கும் முஸ்தபா, இந்த பேண்டமிக் சூழ்நிலையிலும் மாதத்துக்குச் சராசரியாக 25 முதல் 30 கார்கள் வரை விற்றுக் கொண்டிருக்கிறார். பெரிய ஜாகுவார், வால்வோ போன்ற புது கார்களின் ஷோரூம்களே தோற்றுவிடும் அளவுக்குப் பராமரித்து வரும் அந்தப் பழைய கார் டீலர்ஷிப்பில் இருப்பவை எல்லாமே பிஎம்டபிள்யூ, மினிகூப்பர், பென்ஸ், ஆடி, வால்வோ, போர்ஷே, மினிகூப்பர்தான்.

15 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ வாங்கலாமா?``பழைய லக்ஸூரி கார்கள் வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்கணும்’’ என்று வாசகர்களுக்கு டிப்ஸ் அளித்தார் முஸ்தபா.

``எல்லோருக்குமே லக்ஸூரி கார் வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், பட்ஜெட்டை நினைத்துத்தான் பயப்படுவார்கள். லக்ஸூரி கார் ஓனர்களாக வேண்டும் என்றால், பெரிய லட்சாதிபதிகளாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், அதற்கென்று சில விஷயங்களைக் கடைப்பிடித்தால் நல்லது.

லக்ஸூரி கார் வாங்க நினைப்பவர்கள் முதலில் நீங்கள் ஏற்கெனவே ஒரு சாதாரண காருக்குச் சொந்தக்காரராக இருந்தால் நல்லது. சிலர் பணம் இருக்கிறது என்பதற்காகவும், கார் ஓட்டப் பழகும்போதே முதலிலேயே ப்ரீமியம் கார் வாங்கி விடுவார்கள். அதுவும் தவறு. காரணம், சர்வீஸ் - சேதாரம் என்று பெரிய சிக்கலில் மாட்டிவிடும். முதலில் உங்கள் பட்ஜெட்டைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதேபோல் சிலர் 6-8 லட்ச ரூபாய்க்குள் பிஎம்டபிள்யூ வாங்கிவிட முடியாதா என்று பார்ப்பார்கள். அதுவும் சிக்கல்தான். ஒருவர் ஏலத்தில் விற்பனையான ஆடி A6 காரை வெறும் 7 லட்சத்துக்கு வாங்கியிருக்கிறார். அதாவது, ஒரு கோடி ரூபாய் காரை 10 மடங்கு விலை குறைவாக டிக் அடித்திருக்கிறார். ஆனால், போகப் போக பெரிய செலவு அவருக்கு.

இன்னும் சிலர் குறைந்தது 30 - 35 லட்சம் இருந்தால்தான் பெரிய ப்ரீமியம் கார்கள் வாங்க முடியும் என்று நினைப்பார்கள். இதுவும் தவறு. ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால், நீங்கள் 10 -12 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் ஒரு பென்ஸ் C 220, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் போன்ற கார்களை வாங்கிவிட முடியும். 80 லட்ச ரூபாய் ப்ரீமியம் கார்கள் 25 லட்ச ரூபாய்க்குள் வாங்கி விடலாம் என்பதுதான் உண்மை. அதேபோல், ஆடி A6, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் போன்ற பெரிய சலூன்களும் 25 லட்சத்துக்குக் கிடைக்கும்.

இரண்டாவது, உங்களுக்குப் பிடித்த கம்பெனியை, அதாவது ஆடியா, பிஎம்டபிள்யூவா, ஜாகுவாரா என்பதை முடிவு செய்யுங்கள். அதேபோல் சலூனா எஸ்யூவியா என்பதையும் தேர்வு செய்யுங்கள். 7 பேர் என்றால், பெரிய எஸ்யூவி… உதாரணத்துக்கு பென்ஸ் GL, பிஎம்டபிள்யூ X6, ஆடி Q7 போன்றவை நல்ல ஆப்ஷன்கள். எங்களிடம் இருக்கும் ஒரு கோடி ரூபாய் பென்ஸ் GL எஸ்யூவி, 23 லட்ச ரூபாய்தான் என்றால் நம்புவீர்களா?

mohammed mustafa
mohammed mustafa
15 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ வாங்கலாமா?

ப்ரீமியம் கார்கள் வாங்கும்போது, மிகவும் பழைய மாடல்களாக இல்லாமல், ஓடோ மீட்டர் அதிக ரீடிங் இல்லாமல் பார்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. உதாரணத்துக்கு, 4 அல்லது 5 ஆண்டு பழைய மாடல்கள்- வெறும் 75,000 கிமீ ஓடிய கார்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்தால் தப்பிக்கலாம்.

லக்ஸூரி கார் வாங்குபவர்கள் சர்வீஸைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை. காரணம், எங்களைப் போன்ற டீலர்ஷிப்களே சர்வீ்ஸ் பிரச்னையையும் கவனித்துக் கொள்வார்கள். எல்லாமே டெக்னாலஜி அப்டேட் என்பதால், எந்த ஏமாற்று வேலையும் செய்து விட முடியாது. அதேபோல், `நாளாகிடுச்சே… ரிப்பேர் ஆகிடுமோ’ என்று லக்ஸூரி கார் வாங்கும்போது பயப்படவும் தேவையில்லை. நமது பட்ஜெட் கார்களைவிட ப்ரீமியம் கார்கள் பலவும் ஜெர்மன் கார்கள் என்பதால் தரத்திலும் இன்ஜின் விஷயத்திலும் நீண்ட நாட்கள் உழைக்கும்படிதான் தயாராகி இருக்கும். இந்த கார் 15 வருஷ பழைய மாடல் என்றால் நம்புவீர்களா?’’ என்று ஒரு பழைய வால்வோ காரைக் காண்பித்தார். பெயின்ட் கொஞ்சம்கூட ஃபேடு ஆகவில்லை. அதேபோல், 4 லட்சம் கிமீ ஓடோ மீட்டர் ரீடிங் கொண்ட கார்கள்கூட நல்ல கண்டிஷனிலேயே இருந்ததையும் சுட்டிக் காண்பித்தார்.

15 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ வாங்கலாமா?நாம் போனபோது, சரியாக லாக்டெளனுக்கு முந்தைய நாள் என்பதால், ஷோரூமில் விற்பனை நடந்து கொண்டிருந்தது. பட்ஜெட் கார் உரிமையாளர் ஒருவர், ``பென்ஸ் வாங்கணும்னு அடம்பிடிக்கிறான் என் பையன்’’ என்றார். 15 லட்ச ரூபாய்க்குள் பென்ஸ் சலூன் கார் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தது அவரது குடும்பம். அவருக்கு காம்பேக்ட் காரான ஃபோக்ஸ்வாகன் பீட்டில்கூடப் பிடித்திருந்தது. பீட்டில் காரைக் கதாநாயகனாக வைத்து ஒரு ஹாலிவுட் படம்கூட வந்திருந்ததை நினைவுகூர்ந்தான் அவரது 12 வயது மகன். ``அப்பா, `Herbie fully Loaded’ படம்ல வருமே.. அதே கார்தாம்ப்பா.. இது வாங்குவோம்’’ என்றான் அந்தச் சிறுவன். 2014 மாடல் ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட அது, 40,000 கிமீ ஓடியிருந்தது. 17 லட்சம் கோட் வைத்திருந்தார்கள். ஜெர்மன் கார்கள் தரத்தில் மட்டுமில்லை; பில்டு குவாலிட்டியிலும் பட்டையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், லக்ஸூரி கார் வாங்கும்போது மைலேஜில் மட்டும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டும்.

அதேபோல், இதற்குத் தவணை முறையிலும் திட்டம் இருப்பதையும் சுட்டிக் காட்டினார் முஹமது முஸ்தஃபா. சாதாரண மாருதி, டாடா கார்கள் வாங்குவதைப்போலவே இரண்டு லட்சம் முன்பணம் கட்டி, 30 லட்ச ரூபாய்க்கு பெரிய வால்வோ வாங்க வழிகள் உண்டு என்பதையும் சொன்னார்.

பட்ஜெட் கார்களின் பழைய மார்க்கெட்டைப் போல, ப்ரீமியம் கார்களின் மார்க்கெட்டும் பட்டையைக் கிளப்பட்டும்.

15 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ வாங்கலாமா?

கார்மாடல்கிமீவிலைலேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் (டீ)201849,00042.9 லட்சம்ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் (டீ)20111,10,00028.50 லட்சம்ஜாகுவார் XJ (டீ)201167,00027.50லட்சம்ஃபோக்ஸ்வாகன் பீட்டில் (பெ)201440,00017.90 லட்சம்பிஎம்டபிள்யூ X5 (டீ)201650,00039.9 லட்சம்மெர்சிடீஸ் பென்ஸ் GLA (டீ)201922,00029.9 லட்சம்வால்வோ V90 (டீ)-63,00039 லட்சம்பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (டீ)201385,00017 லட்சம்பிஎம்டபிள்யூ X5 (டீ)201642,00046 லட்சம்லேண்ட்ரோவர் வோக் (டீ)201390,00039.5 லட்சம்ஆடி A8 (டீ)201555,00049 லட்சம்மெர்சிடீஸ் பென்ஸ் E க்ளாஸ் (டீ)201644,00027.8 லட்சம்மெர்சிடீஸ் பென்ஸ் ML 250 (டீ)-41,00035 லட்சம்மினிகூப்பர் எஸ் 20188,500 கிமீ38 லட்சம்வால்வோ XC90201663,00048 லட்சம்

15 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ வாங்கலாமா?
15 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ வாங்கலாமா?

பழைய ப்ரீமியம் கார் வாங்கும்போது…

லக்ஸூரி கார்கள் வாங்குவதற்கு 40 - 50 லட்சம் பட்ஜெட்டுக்கும் கார்கள் இருக்கின்றன. 10-15 லட்சத்துக்கும் ஆப்ஷன் இருக்கிறது. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பென்ஸ் C க்ளாஸ் போன்றவை ஆரம்ப கட்ட ஆப்ஷன்கள்.

பட்ஜெட் கார்களைவிட லக்ஸூரி கார்கள் பலவும் ஜெர்மன் கார்கள் என்பதால், தரத்திலும் இன்ஜினிலும் சந்தேகமே படத் தேவையில்லை. வருடக் கணக்கானாலும் பெயின்ட் நிறம் கூட மங்காது.

ப்ரீமியமான கார்கள் என்பதால், பேட்டரி மற்றும் எலெக்ட்ரானிக் அம்சங்களில் கவனம் வையுங்கள். காஸ்ட்லி கார்களில் 2 பேட்டரி கொண்ட கார்களெல்லாம் உண்டு. புளூடூத், இன்ஃபோடெயின்மென்ட், சர்வீஸ் போன்றவற்றை க்ராஸ் லிஸ்ட் செய்ய மறக்காதீர்கள்.

நீங்கள் வாங்கப் போகும் கார் மாடிஃபைடு செய்யப்பட்டதா என்பதில் ஒரு கண் வையுங்கள். கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டதா… உதிரி பாகங்கள் கிடைக்குமா என்பதை சர்வீஸ் ஆட்களிடம் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

முடிந்தால், அந்த காரை வைத்திருந்த பழைய ஓனரைத் தொடர்பு கொண்டு, வாகனத்தின் ப்ளஸ் மைனஸ்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ப்ரீமியம் கார்கள், பெரும்பாலும் மைலேஜில் சிங்கிள் டிஜிட்டுக்குள் தான் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். அதாவது, ப்ரீமியம் கார்களில் மைலேஜை காம்ப்ரமைஸ் செய்துதான் ஆக வேண்டும்.முஹமது முஸ்தஃபா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism