Published:Updated:

ஏரோடைனமிக்ஸ் டிசைன்... விதை இவர் போட்டது!

 ஆஸ்ட்டன் மார்ட்டின் DB GT ஸகாட்டோ
பிரீமியம் ஸ்டோரி
ஆஸ்ட்டன் மார்ட்டின் DB GT ஸகாட்டோ

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 27

ஏரோடைனமிக்ஸ் டிசைன்... விதை இவர் போட்டது!

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 27

Published:Updated:
 ஆஸ்ட்டன் மார்ட்டின் DB GT ஸகாட்டோ
பிரீமியம் ஸ்டோரி
ஆஸ்ட்டன் மார்ட்டின் DB GT ஸகாட்டோ

த்தாலியை விலக்கிவிட்டு எப்படி `கார் டிசைன்’ என்ற ஒன்றைப் புரிந்து கொள்ள இயலாதோ, அதைப்போலவே `ஸகாட்டோ’ (ZAGATO) எனும் டிசைன் நிறுவனத்தை விலக்கி வைத்து விட்டு - இத்தாலிய கார் ஸ்டைலிங்கைப் புரிந்து கொள்ள முடியாது. ஸகாட்டோ, முன்பு குறிப்பிட்ட ஏனைய டிசைன் ஹவுஸ்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

குறிப்பாக ஸ்போர்ட்ஸ் கார்களின் ஸ்டைலிங்கை மிக நுட்பமாக, தனக்கென ஒரு தனித்துவமான அணுகுமுறையுடன் கையாண்டதால்தானோ என்னவோ, இன்றும் அது உயிர்ப்புடன் இருக்கிறது.

 யூகோ ஸகாட்டோ
யூகோ ஸகாட்டோ

இதன் நிறுவனர் `யூகோ ஸகாட்டோ’ (UGO ZAGATO). புகழ்பெற்ற டிசைனர்களைப்போலவே கோச் கட்டும் பின்னணி கொண்டவர் என்றாலும், 1910-களின் விமானங்களின் கட்டுமானத்தில் ஈடுபட்டு, அதன் பிறகு கார் டிசைன் செய்ய வந்த இவர் மிலனில் (MILAN) தன் நிறுவனத்தை நிறுவினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு முழுமையான காரை வடிவமைப்பதுதான் டிசைன் ட்ரெண்ட் ஆக இருந்த காலகட்டத்தில், முடிவடைந்த ஒரு ஆஸ்ட்டன் மார்ட்டினின் மாடலை எடுத்து, சில ரகசிய மசாலாக்களை இட்டு ஒரு அரிய சுவையை உருவாக்கினார். உண்மையில் ஸகாட்டோ, ஒரு மெருகேற்றலின் சகாப்தம்தான்.

கார் டிசைன்
கார் டிசைன்

துவக்கத்திலிருந்தே ஸகாட்டோ, தன் வடிவமைப்பில் மினிமலிஸத்தை ஒட்டிய சித்தாந்தத்தையே கடைப்பிடித்து வந்தார். அதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு

1924-ன் ஆல்ஃபா ரோமியோ RL ஸ்போர்ட். தேவையற்ற எந்த எக்ஸ்ட்ராஃபிட்டிங்குகளும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்காது. இருப்பினும் இந்தக் காலத்திலும் இந்த மாடல் க்யூட்டாகவும், ஸ்டைலாகவும் தெரிவது ஆச்சர்யம்!

ஸகாட்டோவோடு பெரிதும் இணைந்து பணியாற்றிய நிறுவனங்கள் என்றால் அவை - புகாட்டி, மஸராட்டி, டயாட்டோ (Diatto, இது ஒரு இத்தாலிய கார் நிறுவனம் - 1929-ல் மூடப்பட்டது) மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் ஆகியவையே!

இவை அத்தனையும் 1920-களிலேயே, அதாவது ஸகாட்டோவின் தொடக்க காலத்திலேயே ஸகாட்டோவை நம்பி, பெரும் வடிவமைப்புப் பொறுப்புகளைத் தந்திருக்கின்றன. 1930-கள் என்பது ஏரோடைனமிக்ஸின் காலம். எல்லோரையும் போலவே ஏரோடைனமிக்ஸ் வகை கார்களில் கவனம் செலுத்திய ஸகாட்டோ, தன் வடிவமைப்பில் பல புதிய மாற்றங்களைச் சாதித்துக் காட்டினார். அதுவரை செங்குத்தாக நின்ற விண்ட்ஷீல்டை, காற்றின் திசையில் சாய்த்து வைத்தார்.

அந்த நாள் வரை வெளியே தனியாகத் துருத்திக் கொண்டு அமர்ந்திருந்த ஹெட்லைட்ஸை பானெட்டில் பொருத்தியது மட்டுமல்லாமல், அதற்கு குடைவான ஒரு இடத்தை ஏற்படுத்தியதும் இவர்தான்.

 ஆஸ்ட்டன் மார்ட்டின் DB GT ஸகாட்டோ
ஆஸ்ட்டன் மார்ட்டின் DB GT ஸகாட்டோ

எங்கே அது ஏரோடைனமிக் டர்புலன்ஸை ஏற்படுத்திவிடுமோ என்று, அலுமினியப் பட்டையால் பிடிக்கப்பட்ட கண்ணாடி மூடி கொண்டு ஹெட்லைட்ஸை கவர் செய்தார். இதுவே பின்னாட்களில் `Clear Headlamps’ எனும் இன்றைய பாலி கார்பனேட் கவர்களுக்கான மூலம்.

யூகோ ஸகாட்டோ, விமான வடிவமைப்பின் பின்புலத்தில் இருந்து வந்ததால், `Weight Reduction’ என்ற எடைக் குறைப்பு உத்தியையும், எடைக் குறைப்புக்குப் பெரிதும் உதவும் அடிப்படைக் காரணிகளான மெட்டீரியல்களைத் தேர்ந்தெடுக்கும் உத்திகளையும் கையில் எடுத்துக் கொண்டார்.

எடுத்துக்காட்டாக, அலுமினியைப் பயன்பாட்டை ஊக்குவித்தார். `ப்ளெக்ஸி கிளாஸ்’ (Plexiglass) எனும் புத்தம் புதிய மெட்டீரியலைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததும் யூகோ ஸகாட்டோதான். இது இப்போது ப்ளாஸ்டிக் மெட்டீரியலான Acrylic-க்கு இணையான ஒரு மெட்டீரியல். இது கண்ணாடியைவிடப் பல மடங்கு எடை குறைந்தது.

இதுபோன்ற எடைக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கார்களின் எடையை வெகுவாகக் குறைத்தார். மேலும், தேவையற்ற பல துருத்தல்களைத் தவிர்ப்பதையும் இவர் தனது ஸ்டைலாக ஆக்கினார்.

கார் டிசைன்
கார் டிசைன்

உதாரணத்துக்கு, யூகோ ஸகாட்டோவின் டிசைன்களில் பம்பர் என்ற ஒன்றே இருக்காது. பக்கவாட்டில் பார்த்தால், ஒரே நூலில் பிடித்து வரைந்ததுபோல், கர்வியாக (Curvy) இருக்கும். இது ஏரோடைனமிக்குக்குப் பெரிதும் கைகொடுக்கும்.

கார்களின் பாடி ஸ்டைலில் மினிமலிசம் மூலமாக தேவையற்ற டர்புலன்ஸ்களை அகற்றி, `ஸ்ட்ரீம் லைன் டிசைனை’ உறுதி செய்வதுபோன்ற தனித்துவங்களால், அவர் இன்றும் டிசைனர்களால் மட்டுமின்றி, பொறியியல் வல்லுநர்களாலும் போற்றப்படுகிறார்.

ஆர்ப்பாட்டமற்ற அமைதி, எடுப்பான திருப்பங்களற்ற எளிமை, பெரும் கனமும் எடையுமற்ற இலகுவான மென்மை - ஆகியவைதான் `லக்ஸூரி’, அதாவது சொகுசுக்கு கேரன்ட்டி. அதைத் தாண்டி இவைதான் வேகம் என்பதை அவர்தான் நிரூபித்துக் காட்டினார். தற்கால ஆல்ஃபா ரோமியோ, பென்ட்லி ஆகிய ஸ்போர்ட்ஸ் மற்றும் லக்ஸூரி கார்கள், இதற்கு நகரும் சாட்சியங்கள்!

குறிப்பாக, ஆஸ்ட்டன் மார்ட்டின் கார்களை எடுத்துக் கொண்டால், 1960-களில் ஆரம்பித்த இந்தக் கூட்டுமுயற்சி இன்றும் வெற்றிகரமாகத் தொடர்கிறது. ஆஸ்ட்டன் மார்ட்டின் DB GT ஸகாட்டோ, இதற்கு ஒரு மாபெரும் உதாரணம். ஸகாட்டோவின் சிக்னேச்சராகவே அந்த கார் ஆகிப்போனது.

யூகோ ஸகாட்டோ, ஒரு நிறுவனத்தின் முழுமையடைந்த ஒரு காரின் தயாரிப்பை அப்படியே எடுத்து, அதில் சில பாகங்களைத் நீக்கிவிட்டு, சில ஸ்டீல் பாகங்களை அலுமினியமாக மாற்றி, சில ஏரோடைனமிக் மாற்றங்களைச் செய்து - அதே மாடலை, அதே இன்ஜினோடு கிட்டத்தட்ட அதன் ஸ்டைல் மாறாமல், தன் `ரகசிய ரெசிபி’யைப் போட்டு மிக வேகமான காராக மாற்றிவிடுவார். அதில் அவர் கில்லாடி.

கார் டிசைன்
கார் டிசைன்

அன்று அவர் ஆரம்பித்து வைத்த ஆட்டத்தை, அதற்குப் பிறகு அவர் வழிவந்தவர்கள் இன்றும் பின்பற்றி பெருவெற்றி ஈட்டுகிறார்கள்.

மிக அண்மையில் `ஆஸ்ட்டன் மார்ட்டின் 2020 DBS GT ஸகாட்டோ’ சூடாகவும் சுவையாகவும் வெளிவந்தது இதற்குச் சான்று.

(வடிவமைப்போம்)