கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

இண்டிகாவுக்கும் பேலியோவுக்கும் என்ன ஒற்றுமை?

தொடர்
பிரீமியம் ஸ்டோரி
News
தொடர்

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 28

அதுவரை அடைபட்ட பொருளாதாரமாக இருந்த இந்தியாவின் கதவுகள், வெளிநாட்டு முதலீடுகளுக்காக திறந்து விடப்பட்டன. இன்னொருபுறம், மென்பொருள் உற்பத்தியில் இந்தியா துளிர் விடத் துவங்கியிருந்தது.

கையில் காசு புழங்கியதால், இந்தப் புதிய துறைகளைச் சேர்ந்தவர்கள் பலருக்கும் கார் வாங்கும் ஆசை எழுந்தது. இத்தகைய சூழலில்தான், அதாவது 1998-ம் ஆண்டு டெல்லியில் முதல் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றது.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாராகும் முதல் பயணிகள் கார் (passenger car) என்ற அடையாளத்தைக் கொண்ட டாடா இண்டிகா ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக இருந்த து. அந்த வேளையில் அதன் டீசர் படங்களும் கசியவிடப்பட்டன. இந்த டீசர் இத்தாலியின் ஃபியட் கம்பெனியைப் பரபரப்பாக்கியது. காரணம் - இண்டிகா முற்றுமுழுவதும் இந்தியப் பொறியாளர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கார் என்று சொல்லப்பட்டாலும், அதை வடிவமைத்தது இத்தாலியின் `ஐடியா’ என்ற வடிவமைப்பு நிறுவனம். அதன் தலைமை வடிவமைப்பாளர் `ஜஸ்டின் நோரிக். அவர் ஒரு தேர்ந்த வடிவமைப்பாளர் என்றாலும், பெரும் மார்க்கெட்டிங் மூளைக்காரர் என்பது என் எண்ணம். இன்று `ஐடியா” என்ற நிறுவனம் இயக்கத்தில் இல்லையென்றாலும், 90-களின் இறுதியில் பல்வேறு டிசைன் புராஜெக்ட்களை ஒரே நேரத்தில் ஏற்று நடத்திக்கொண்டிருந்தது. அதுவும் பல்வேறு கார் கம்பனிகளின் ஸ்டைலிங் ஐடியாவின் (டொரினோ) ஸ்டுடியோவில் ஒருசேர நிகழ்ந்து கொண்டிருந்தது.

அவற்றுள் FIAT-ன் `பேலியோ’வும் ஒன்று. ஒரே ஸ்டுடியோவின் இருவேறு அறைகளில் உருவாகிக் கொண்டிருந்த இண்டிகாவும் பேலியோவும், ஒரே டிசைனரின் மேற்பார்வையில் வளர்ந்தவை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பாக, இவை இரண்டும் ஒரே செக்மென்ட்டைச் சேர்ந்த கார்கள்.

இண்டிகாவுக்கும் பேலியோவுக்கும் என்ன ஒற்றுமை?

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான டாடா இண்டிகா, இந்திய ஆட்டோ மொபைல் மார்கெட்டில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்தச் செய்தி ஃபியட்டின் காதுகளுக்கு எட்டியது. பேலியோ மூலம் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் காலடி எடுத்து வைக்கத் திட்டம் போட்டிருந்த பியட் நிறுவனத்துக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம் indica வுக்கும் palioவுக்கும் இருந்த உருவ ஒற்றுமை. அறிமுக நாளுக்கு ஒரு நாள் முன்னதாக டெல்லியின் பிரகதி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த இண்டிகா மாடலை, இரவோடு இரவாக ஒரு ட்ரக்கில் ஏற்றி டெல்லியில் வேறு ஒரு பகுதியில் இருக்கும் ஒரு மாபெரும் நட்சத்திர ஹோட்டலுக்குக் கொண்டு வரப்பட்டு, இத்தாலியைச் சேர்ந்த ஃபியட் குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு ரகசியமாகக் காட்டப் பட்டது. எந்தெந்த வகையில் அது பேலியோவில் இருந்து வேறுபட்டது என்று டாடாவினர் விளக்க, ஒருவழியாக இந்தப் பஞ்சாயத்து வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

எந்தெந்த வகையில் இண்டிகா, பேலியோவில் இருந்து வேறுபட்டது என்று டாடாவினர் விளக்க, ஒருவழியாக இந்தப் பஞ்சாயத்து வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

இரு வேறு நிறுவனங்களின், குறிப்பாக எதிரெதிரான போட்டியாளர்களின் கார் மாடல்கள் டிசைன் ஒன்றுபோல் இருப்பது, சம்பந்தப்பட்ட கார் தயாரிப்பு நிறுவனங்களால் தவிர்க்க முடியாத நிலை அப்போதுவரை இருந்துவந்தது. இந்தக் குறையைப் போக்கவும், தனித்தன்மையைத் தேடியும் உலகின் பெரிய கார் தயாரிப்பு கம்பெனிகள் தங்களுக்கு என்று தனி டிசைன் டீமை உருவாக்க முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தார்கள்.

இதன் விளைவாக, 90-களின் தொடக்கத்தில் உலகின் புகழ்பெற்ற டிசைன் ஸ்டுடியோக்கள், கார் கம்பெனிகளின் R&D நிறுவனங்களுக்கு உள்ளேயே செயல்பட ஆரம்பித்தன. இதில் இத்தாலியைச் சேர்ந்த டிசைனர்களையும் கார் கம்பெனிகள் துணைக்கு அமர்த்திக் கொண்டன.

ஒரு சில ஆண்டுகளில் 2000-ம் ஆண்டின் ஆரம்பத்தில், இத்தாலிக்கு டிசைன் புராஜெக்ட்டுகள் செல்வது குறையத் தொடங்கின. இதனால் புகழ்பெற்ற இத்தாலிய வடிவமைப்பு நிறுவனங்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்தன. இத்தாலியப் படைப்பு என்று சொல்லிப் பெருமைப்பட்டு வந்த நிலை மாறி - ஆடி டிசைன், பிஎம்டபிள்யூ டிசைன், ஜிஎம் டிசைன் சென்டர் என்று உலகெங்கிலும் `இன் ஹவுஸ் டிசைன்’ என்ற புதிய நடைமுறை ஏற்பட்டது.

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ்
தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ்

நாளடைவில் இத்தாலியின் பெர்டோனேக்களும் ஐடியாக்களும் சிதைந்து, பல சிறு சிறு நிறுவனங்களாகப் பிரிந்து சீனக் கம்பெனிகளுக்குத் துணை செய்கின்றன. இட்டால் டிசைனும் அப்படியே! பினின்ஃபரினாவோ அதன் அடர்த்தியைத் தளர்த்தி, இன்று ஒரு இந்திய நிறுவனத்தின் கைகளில்! இத்தாலியில் எத்தனையோ டிசைன் ஸ்டுடியோக்கள் இருந்தன என்றாலும், அவற்றில் பினின்ஃபரினா, பெர்டோனே, இட்டால் டிசைன் மற்றும் ஸகாட்டோ போன்ற சூப்பர் ஸ்டார்கள் முக்கியமானவை. இந்தப் பட்டியலில் இறுதியாக வந்து சேர்ந்தது - கரோஸேரியா கியா (Carrozzeria Ghia). இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் என்பதால், அவரது பெயராலேயே அந்த நிறுவனம் குறிப்பிடப்பட்டு வந்தது. .

எல்லோரைப்போலவே கோச் பில்டிங் பின்புலத்திலிருந்து கார் ஸ்டைலிங் துறைக்கு வந்த நிறுவனம் இது. இந்நிறுவனம் பிற்காலத்தில் சூப்பர்சோனிக் ஸ்டைலோடு அடையாளப் படுத்தப்பட்டது. 1916-ல் இத்தாலியின் டொரினோ நகரில் தனித்திறமையான அலுமினியக் கட்டமைப்பு உத்திகளோடு களமிறங்கிய கியா, இரண்டாம் உலகப்போர் துவங்கும் வரை தன்னுடைய நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே கார் கட்டி கொடுத்துக் கொண்டி ருந்தார். ஆல்ஃபா ரோமியோ, பியட் மற்றும் லான்சியா போன்ற தனக்கு அருகில் இருந்த கம்பெனிகளோடு இணைந்து அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். இதில் ஆல்ஃபா ரோமியோ 6C 1500, ஃபியட்508 Balilla sports coupe (1933) ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இரண்டாம் உலகப் போரின்போது கியாவின் தொழிற் சாலை முற்றிலும் தகர்க்கப்பட்டது. அந்த வேதனையிலேயே அவர் இறந்துப்போனார். அதைத்தொடர்ந்து கம்பெனி கைமாறியது. Mario Boano and Giorgio Alberti ஆகிய இருவரும் கியா நிறுவனத்தை வாங்கி அதை அழிவிலிருந்து மீட்டெடுத்தனர். 1948-ம் ஆண்டில் இந்த நிறுவனத்திற்கு சுவிட்சர்லாந்தில் இருந்து முதலீடு வந்தது. 1953-ல் கருத்து வேற்றுமை காரணமாக Boano வெளியேற.... அதே வருடத்தில் இந்த நிறுவனம், முழுக்க முழுக்க அதன் தலைமைப் பொறியியல் மற்றும் வடிவமைப்பாளரான Luigi Segre என்ற துடிப்பான இளைஞரின் கைகளுக்குச் சென்றது.

பீனிக்ஸ் பறவையைப்போல குண்டு வெடிப்பின் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்த கியா, 1953-க்கும் 1963-க்கும் இடையே உள்ள 10 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி கண்டது மட்டுமல்ல, டிசைன் உலகில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

இத்தாலியைத் தாண்டி ஃபோர்டு, க்ரைஸ்லர் என அமெரிக்க கார் கம்பெனிகளோடும், ஆஸ்ட்டன் மார்ட்டின், ஃபோக்ஸ்வாகன் என ஐரோப்பிய நிறுவனங்களோடும் இணைந்து உலகம் வியந்து போற்றும் பல கார்களை வடிவமைக்கத் துணை நின்றது. முதல் பார்வையிலேயே மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும்படியான டிசைன் அமைப்பு, கியாவின் தனி முத்திரையானது.

தொடர்
தொடர்

இதற்கு எடுத்துக்காட்டாக 1953-ல் வெளியான Abarth 1100 Sport Ghia coupe காரைச் சொல்லலாம். ஃபியட்டின் ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனங்களில் ஒன்று அபார்த். அபார்த்துக்காக கியா வடிவமைத்ததுதான் இந்த கார். இன்றைய நாள் வரை இப்படி ஒரு புதிய டீட்டெயிலிங் முன்பக்க கிரில் பகுதியில் யாருமே செய்தது இல்லை. கியாவின் மகுடமாக அனைவ ராலும் புரிந்து கொள்ளப்படுவது சூப்பர்சோனிக் எனும் உத்தி.

(வடிவமைப்போம்)