Published:Updated:

குங்ஃபூ பாண்டா முதல் எலெக்ட்ரிக் கார் வரை... ஜப்பானை மிஞ்சும் சீனா!

விஷன் - V கான்செப்ட் கார்.
பிரீமியம் ஸ்டோரி
விஷன் - V கான்செப்ட் கார்.

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 38

குங்ஃபூ பாண்டா முதல் எலெக்ட்ரிக் கார் வரை... ஜப்பானை மிஞ்சும் சீனா!

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 38

Published:Updated:
விஷன் - V கான்செப்ட் கார்.
பிரீமியம் ஸ்டோரி
விஷன் - V கான்செப்ட் கார்.
உலகையே வியப்பில் ஆழ்த்தும் விதமாக மூன்று கோடி கார்கள் என்னும் மாபெரும் இலக்கை ஒரு பெரும் பாய்ச்சலில் அநாயாசமாக சீனா தாண்டிவிடும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் .

இதற்கு ஓர் உதாரணம் - செப்டம்பர் 2019-ல் ஜெர்மனியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் காங்கிரஸ். அதில், 400 பெருநிறுவனங்கள் ஒன்றுகூடி விவாதித்த பொருள் - சீனா.

சீனாவில் நிகழவிருக்கும் பெரும் முன்னேற்றத்தில் எவ்வாறு ஜெர்மானிய நிறுவனங்களை இணைத்துக் கொள்வது என்பதுதான் இந்த நிகழ்வின் நோக்கம் .

இந்த காங்கிரஸில் விவரிக்கப்பட்டவை முழுக்க முழுக்க ஆட்டோமொபைல் சார்ந்தது. அவற்றை நான்குவிதமாகப் பிரிக்கலாம்.

குங்ஃபூ பாண்டா முதல் எலெக்ட்ரிக் கார் வரை... ஜப்பானை மிஞ்சும் சீனா!

1. நிறுவனங்கள் இணைந்து செயல்படும் தொழில்நுட்பப் பரிமாற்றம்.

2. எதிர்காலத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மாதிரி வடிவங்கள். குறிப்பாக எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் AI சார்ந்த முன்னெடுப்புகள்.

3. இன்ட்டெலெக்ச்சுவல் ப்ராபர்ட்டி ரைட்ஸ். அதாவது, புதிய ஆராய்ச்சிகளின் விளைவாக வரும் கண்டுபிடிப்புகளின் மீதான உரிமை.

4. திறமைமிக்க பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வேலை வாய்ப்பளித்தல் .

Changan விஷன் - V கான்செப்ட் கார்... சீன வடிவமைப்பின் மாஸ்டர் பீஸ்...
Changan விஷன் - V கான்செப்ட் கார்... சீன வடிவமைப்பின் மாஸ்டர் பீஸ்...

இதுபோல ஆட்டோமொபைல் உலகின் ஜாம்பவான்கள், சீனாவை நோக்கித் திரும்புவதிலிருந்தே நிலையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இதில் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் இல்லாத ஒரு தனித்தன்மை சீனாவுக்கு உண்டு . சீனா தன் வர்த்தக வளர்ச்சிக்கு எந்த ஒரு தனி நாட்டையும் நம்பியிருக்க வேண்டியதில்லை. உலகின் மிகப் பெரிய நிலப்பரப்பை மட்டுமல்ல; ஜனத்தொகையையும் உடைய நாடு என்பதால், மற்ற இரு ஆசிய நாடுகளைப்போல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் வர்த்தகத்தைப் பெருக்க வேண்டிய அவசியம் சீனாவுக்கு இல்லை. எனவே ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளும் சீனாவில் கால் பதிக்கத் துடிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்க நிறுவனமான GM, இதை 2000-த்தின் துவக்கத்திலேயே உணர்ந்து சீனாவில் தன் பிராண்ட்களைக் களமிறக்கியது. 10 ஜாயின்ட் வென்ச்சர்களில் 2017 வரை கிட்டத்தட்ட 10 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது .

சீனா, மிக வேகமாக உலகின் க்ரியேட்டிவ் சூப்பர் பவராக உருமாறி வருகிறது. ஆர்ட், டிசைன், எலெக்ட்ரிக், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் எலெக்ட்ரானிக் டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த விஷுவல் டிசைன் ஆகியவைதான் எதிர்காலத்தில் வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கும்.

ஆர்க்ஃபாக்ஸ் - ஆல்ஃபா - T4 ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் கார்...
ஆர்க்ஃபாக்ஸ் - ஆல்ஃபா - T4 ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் கார்...

சீனாவின் வர்த்தகத் தளர்வுக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளில் பல கோடி மக்களின் வாங்கும் சக்தி பல மடங்கு அதிகரித்திருக்கிறது. எனவே இந்த அபரிமிதமான வாங்கும் சக்தியை, பணப்பரிமாற்றத்தைத் தன் நாட்டுக்குள்ளேயே தக்க வைப்பதுதான் உண்மையான பொருளாதார முன்னேற்றம். இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே படைப்பாற்றல் சார்ந்த அனைத்து டிசைன் துறைகளில் சீன மாணவர்களின் நிபுணத்துவம் அடிப்படையிலிருந்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் முதல் அலையாக `shanzhai’ எனும் இமிடேஷன். காப்பியடித்தல் என்று உலகம் இதைப் புரிந்து கொள்கிறது. ஷன்ஷாய் காலத்தில் டிசைன் பற்றிய புரிந்துணர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக, அமெரிக்க - ஐரோப்பிய டிசைன் கல்லூரிகளில் சீன மாணவர்களின் படையெடுப்பு. மிகச் சரியான நேரத்தில் அவர்கள் பிடிக்க வேண்டிய பஸ்ஸைப் பிடித்து விட்டார்கள்.

அதிலிருந்து தொடங்கிய மின்னல் வேகத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாமல், அதை `சீனா ஸ்பீட்’ என்று குறிப்பிடுகிறார்கள் ஆராச்சியாளர்கள். வாயு வேகம், மனோ வேகம் எல்லாம் போய், சீன வேகத்தில் விண்ணுயர அடுக்கு மாடிக் கட்டடங்கள் நாடெங்கும் எழுந்தன. ஆயிரக்கணக்கான புதிய தயாரிப்புகள் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப் பட்டன. லட்சக்கணக்கில் சிறிய, பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முளைத்தெழுந்தன. புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

2016-ல் அகில உலக பிளாக்பஸ்ட்டர் படமான `குங்ஃபூ பாண்டா 3’ படைப்பு, மூன்றில் இரண்டு பகுதி சீனாவிலேயே நிகழ்ந்தது. இது மிகப் பெரிய டிஜிட்டல் சாதனை.

இன்று லோட்டஸ் மற்றும் வால்வோ என்ற இரண்டு கொம்பன்களை சீனாவின் கீலி ஹோல்டிங் (Geely Holding) வாங்கிவிட்டது. MG எனும் பிரிட்டிஷ் கம்பெனியை SAIC மோட்டார்ஸ் வாங்கிவிட்டது. நார்வேயின் ஆகப்பெரிய ஃபர்னிச்சர் நிறுவனத்தை (Ekornes) கட்டில் வாங்கித் தூக்கி வருவதுபோலத் தூக்கி வந்துவிட்டது சீனா.

வடிவமைப்பு மற்றும் படைப்புத்திறன் என்பது அழகியல் சார்ந்த முகப்பூச்சு வேலை என்ற கருத்தைப் புறம்தள்ளிவிட்டு, தன் நாட்டுக் கலாசாரப் பின்புலத்தோடு டிசைனைப் பயிற்றுவிக்க பல்வேறு டிசைன் பல்கலைக் கழகங்களை சீனா, நாடெங்கிலும் தொடங்கியது.

நல்ல டிசைன் தரத்தை, ஒரு டிசைன் சூழலை உருவாக்குவதன் மூலமே அடைய முடியும். டிசைன் சூழலை டிசைன் கல்வியின் மூலமே உண்டாக்க முடியும். 80-களில் பல்கலைக்கழகங்களில் டிசைன் கோர்ஸ்கள் ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பாக, Academy of Arts & Design, Tsinghua University, School of Design, Hunan University எனச் சொல்லிக் கொண்டே போகலாம். இன்று சீனாவில் 1,000 பல்கலைக்கழகங்களில் டிசைன் பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவற்றில் 90% இண்டஸ்ட்ரியல் டிசைன் படிப்புகள் உள்ளன. இண்டஸ்ட்ரியல் டிசைன் என்பது கார் வடிவமைப்புக்கான அடிப்படை.

இனி வரும் காலங்களில், உலக மக்களின் கார்களின் வடிவமைப்பை சீனாவே முடிவு செய்யும் என்று ஆட்டோமொபைல் வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அடுத்து artificial intelligence துறையில் சீனா அடைந்திருக்கும் வளர்ச்சி. அண்மையில் சீனாவின் கார்களில் இடம்பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் வசதிகள் இதற்குச் சாட்சி. மொத்தத்தில், கார் டிசைனைப் பொறுத்தவரை இன்று ஜப்பானையும் விஞ்சும் நிலையில் இருக்கிறது சீனா.

1,300bhp பவர் கொண்ட நியோ ep9 எலெக்ட்ரிக் சூப்பர் கார்...
1,300bhp பவர் கொண்ட நியோ ep9 எலெக்ட்ரிக் சூப்பர் கார்...

BAIC எனும் நிறுவனத்தின் ArcFox எனும் க்ராஸ்ஓவர் கார் ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. இதில் GT3-esque-ன் aerodynamics உத்தி கையாளப்பட்டிருக்கிறது. அதோடுகூட இன்டீரியரில் `formula-E’-ல் கட்டமைக்கப்பட்ட `state of the art tech solutions`-ம் சேர்ந்து ஓர் ஒப்பற்ற எலெக்ட்ரிக் காராக உருவெடுத்திருக்கிறது.

சீனாவின் டிசைன் தரத்துக்கு மற்றுமோர் உதாரணம், Nio EP9 electric supercar. இது 1,300-க்கும் அதிகமான குதிரைத்திறன் கொண்டது. இதன் பேட்டரி சார்ஜ் 427km வரை தாங்கும். இந்த பேட்டரியை 45 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். Nurburgring என்னும் ஜெர்மன் ரேஸ் ட்ராக்கை 7 நிமிடங்களில் கடக்கும் வேகமுள்ளது இது. இந்த கார், ஷாங்காய், அமெரிக்க சர்க்யூட்களையும் வென்றெடுத்த சாம்பியன்.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய மற்றுமொரு ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் கார், BAIC ArcFox GT. இதுவும்கூட செயல்திறனில் EP9-க்கு இளைத்ததில்லை.

ஒரு காப்பிகேட்டாக அறியப்படும் ஒரு நாடு தன் டிசைன் திறனால், தன்னம்பிக்கையோடு பல மடங்கு செல்ல முடியும் என்பதற்கு உயிருள்ள சாட்சியமாக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2020 Changan Vision-V Concept இருக்கிறது. ஐரோப்பிய சட்டிலிட்டி (subtility), மினிமலிசம், அமெரிக்கக் கூர்மை, ஜப்பானை மிஞ்சிய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம்... மொத்தத்தில் இது ஒரு மாஸ்டர் பீஸ்!

(வடிவமைப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism