Published:Updated:

காரும் காற்றும் ஒப்பந்தம் செய்துகொண்டால்... அதுதான் சூப்பர்சோனிக்!

தொடர்
பிரீமியம் ஸ்டோரி
தொடர்

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 29

காரும் காற்றும் ஒப்பந்தம் செய்துகொண்டால்... அதுதான் சூப்பர்சோனிக்!

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 29

Published:Updated:
தொடர்
பிரீமியம் ஸ்டோரி
தொடர்
அது என்ன சூப்பர்சோனிக்? வாயு வேகம் - மனோ வேகம் என்பதுபோல, இது ஒலி வேகம். ஒலியின் வேகம் மணிக்கு 1,235 கி.மீ. ஒலியின் வேகத்துக்கு ஈடான வேகத்தில் பறக்கும் காரின் வடிவம் என்பதாகத்தான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இது மிகையான சொல்லாடல் என்றாலும், உண்மையில் இந்த வடிவமைப்பு - ஒரு வேக ஊக்கிதான் என்று பரிசோதனை முடிவுகள் சொல்கின்றன. ஏரோடைனமிக் என்பதை வேறு ஒரு வகையில் அணுகும் முயற்சிதான் இது. இந்த இடத்தில் ஒரு அடிப்படையான தகவலை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 தொடர்
தொடர்

ஒரு குதிரைவீரன் தன் கவச குண்டலங்கள், கனமான ஆயுதங்கள், அதோடு கூட ஒரு காதலியையும் தூக்கிக்கொண்டு மின்னல் வேகமாக பிரித்விராஜன்போல் தப்பிச் செல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஓரிடத்தில் அந்தக் காதலியை இறக்கி விட்டுவிட்டால், குதிரை இன்னும் வேகம் கூடும். கிலோ கணக்கில் கணக்கும் கவச குண்டலங்களையும், வேலையும், வாளையும் வீசி எறிந்து விட்டால்... வேகம் இன்னும் கூடலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுபோக , ஒருவேளை அவனே இறங்கிக் கொண்டால் குதிரை முன் எப்போதும் இல்லாத வேகத்தில் தெறித்து ஓடக்கூடும். இது குதிரைக்கு வேண்டுமானால் பொருந்தும்; கார் இன்ஜினுக்கு இது சாத்தியமில்லை.

காரும் காற்றும் ஒப்பந்தம் செய்துகொண்டால்... அதுதான் சூப்பர்சோனிக்!

கார் வடிவமைப்பாளர்கள் பல்வேறு உத்திகளைச் சோதித்துப் பார்க்கிறார்கள் . அதில் எடைக் குறைப்பு, ஓர் உத்தி. ஸ்டீலுக்குப் பதில் அலுமினியம் பயன்படுத்தலாம்... அல்லது ப்ளாஸ்டிக் மெட்டீரியலை அல்லது அதற்கும் ஒருபடி மேலே சென்று கார்பன் ஃபைபர் எடை க் குறைப்பு எனப் பல பரிசோதனை முயற்சிகளைச் செய்யலாம். இதில் எடை குறைந்தாலும், உறுதி குறையாமல் வேகம் கூடுவது அவசியம்..காற்றோடு கார் செய்து கொள்ளும் ஒப்பந்தம்தான் ஏரோடைனமிக்ஸ் டிசைன். முன்னோக்கிய வேகத்தில் காற்றின் பலம் ஒரு தடையாக இல்லாமல், மாறாகத் தட்டிக் கொடுத்து முன் தள்ளும்படி காற்றை பாசிட்டிவ் எனர்ஜியாகப் பயன்படுத்தும் யுக்தி அது.அடுத்து வேகத்தினால் ஏற்படும் இரைச்சல் அல்லது ஒலி அளவுகள். கார் `சர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று சத்தத்தோடு வந்து நிற்பதற்கும், பொசுக்கென்று சத்தமே இல்லாமல் முன் வந்து நிற்பதற்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு இல்லையா? நீரைக் கிழித்து கொண்டு வேகமாக முன்னேற சுறா போன்ற வேட்டை விலங்குகளுக்கு அதிகம் பயன்படுவது , பக்கவாட்டிலும் மேல் பகுதியிலும் இருக்கும் கத்தி போன்ற கூரான வடிவில் இருக்கும் ஃபின்ஸ்.வேகத்துக்கான அடிப்படை இதுதான் என்று புரிந்து கொண்டு aerodynamics, fluid dynamics இரண்டையும் சரியாகக் கையாண்டால், பிரமிக்கத்தக்க வேகலாவகங்கள் எதிர்காலத்தில் இன்னும்கூட அதிகமாகச் சாத்தியப்படலாம். நம் முன்னோர்கள், காற்றின் மொழியையும் கடலின் மொழியையும் கற்று வைத்திருந்தவர்கள் என்பது வரலாற்றின் வாயிலாகத் தெரிகிறது. ராஜேந்திர சோழனின் அவையில் இருந்த பல்துறை வல்லுநர்கள் இவற்றில் மிகுந்த அறிவுடன் இருந்தார்கள் என்பதை முந்நீர் பழந்தீவுகளும், கடாரத்தீவுகளும் மெய்க்கீர்த்திகளாக இன்றளவும் கல்வெட்டுகளில் காணக்கிடைன்றன.

சூப்பர்சோனிக் ஸ்டைலிங்கைப் பொருத்தவரை - முன்பக்கம் மிக நீண்ட பானெட்டுகளையும், அந்த நீண்ட நெடிய சர்பேஸை நம்பி மேல் ஏறும் காற்றின் வேகத்தை, அங்கு எதிர்ப்படும் விண்ட் ஷீல்டு துல்லியமான கோணத்தில் சரிந்து நின்று காற்றை வழுக்கி மேலேறும்படி செய்கிறது . இதனால் காற்று தடுக்கப்படாமல், எதிர்வினையாக முன்னோக்கிய விசையாக மாறுகிறது. முன்பக்க ஸ்டைலில் கியா, தன் பெரும்பாலான கார்களில் கிரில்லை, ஒரு நீள்வட்ட வடித்திலேயே அடக்கி வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. அது ஆல்ஃபா ரோமியோவாக இருந்தாலும் ஆஸ்ட்டன் மார்ட்டினாக இருந்தாலும் எலிப்டிக்கல் கிரில்தான். அந்தக் காலகட்டத்தில் அது அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பது இப்போது வியப்புடன் நோக்கப்படுகிறது. ஆனால், காற்றின் திசையைத் தடுக்கும் நிகழ்வுகள் பக்கவாட்டில்தான் ஏற்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வேகமாகச் சுழலும் வீல்களைச் சுற்றியுள்ள வீல் வெல்கள், காற்றின் திசைக்கு எதிரான சுழல்களை ஏற்படுத்தும். இதனால் வேகக்குறைப்பு மட்டுமல்லாது, அதிக சத்தமும் எழும்.

காரும் காற்றும் ஒப்பந்தம் செய்துகொண்டால்... அதுதான் சூப்பர்சோனிக்!

கியாவின் வடிவமைப்பாளர்கள், அந்த காற்றுச் சுழலை அனுமானித்து வீல் வெல்களின் மேல் பகுதியை, கிட்டத்தட்ட ஒரு சதுர வடிவில் அமைத்து ஒரு புதுமையைச் செய்தார்கள். சைடு வியூவில் ஷோல்டர் லைனுக்குக் கீழே கூர்மையான வேல் போன்ற ஒரு டிசைன் விரைவாக ஓடுகிறது. இது டெயில் லைட்ஸ் தொடங்கி முன்னே ஹெட்லைட்ஸ் வரை வேகமாய்ப் பாய்கிறது. இது வேறெந்த காரிலும் காண முடியாத சிறப்பம்சம் . இந்த ஃப்ளாட்டான மேல் பகுதியை பேலன்ஸ் செய்வதற்கு இப்படி ஒரு அழகான ஃப்யூச்சரைவிடப் பொருத்தமானது வேறென்ன இருக்க முடியும்? சூப்பர்சோனிக் ஸ்டைலிங் பின்பக்க அழகை எடுத்துச் சொல்வதற்கு சொற்களே கிடையாது. பக்கவாட்டிலிருந்து வேகமாக ஊடுருவும் வேல் போன்ற அம்சத்தை இத்தனை அழகுணர்ச்சியுடன் டிசைன் செய்திருப்பதுதான் இதன் ஹைலைட். விமானத்தின் இறக்கையில் இருக்கும் ஜெட் டீட்டெய்ல் போன்று இருப்பது இதன் ஸ்பெஷாலிட்டி.

அதற்கு மேலும் மெருகேற்றுவதுபோல, இந்த ஜெட் டீட்டெய்லுக்கு நடுவே டெயில் லைட்ஸைப் பொருத்தி இருப்பது கொள்ளை அழகு. சூப்பர்சோனிக் ஸ்டைலிங்கின் மிக அழகான பகுதி இந்தப் பின்பகுதிதான் என்பது என் தனிப்பட்ட கருத்து.இன்டீரியரில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை எடுத்து டேஷ்போர்டின் நடுவில் வைப்பது மிக தைரியமான முடிவு. இதனால் LH கார்களை RH கார்களாக மாற்றுவது எளிதான, குறைந்த செலவெடுக்கும் என்பது கூடுதல் ப்ளஸ்.

1960-களில் அமெரிக்க கார் உற்பத்தியாளர்கள், கியாவை முழுமையாக ஆட்கொண்டார்கள் என்று சொல்லுமளவுக்கு அங்கிருந்து திரண்டு வந்து, ஏறக்குறைய எல்லா அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களும் கியாவை தங்கள் டிசைன் பார்ட்னராக ஏற்றுக்கொண்டார்கள்.

காரும் காற்றும் ஒப்பந்தம் செய்துகொண்டால்... அதுதான் சூப்பர்சோனிக்!

குறிப்பாக, ஃபோர்டும் கியாவும் மிக நீண்ட காலத்துக்குச் சேர்ந்தே பயணித்தார்கள். போர்டு ஃபியஸ்ட்டா UK வின் இன்ட்டீரியர் ட்ரிம்கள் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக கியாவின் டிசைன்களே! கார் டிசைன் வரலாற்றில் மிக நீண்ட இன்ட்டீரியர் பார்ட்னர்ஷிப் ஆக இது குறிப்பிடப்படுகிறது.

பொதுவாகவே அமெரிக்கர்கள் தங்கள் கார்களைத் தனித்துவமாக வடிவமைத்துக் கொண்டார்கள். உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் கார்களைவிடவும் அமெரிக்க கார்கள் தனித்து தெரிய வேண்டும் என்பதில் உறுதியோடு இருப்பவர்கள். அமெரிக்க கார் டிசைன் என்பது என்னவாகப் புரிந்து கொள்ளப்பட்டு வந்திருக்கிறது? அதன் சாதனைகள்... சவால்கள் என்ன?

(வடிவமைப்போம்)