Published:Updated:

ஆல் இன் ஆல் ஆலமரம் சாம்சங் கார்!

டிஜிட்டல் காக்பிட் 2020
பிரீமியம் ஸ்டோரி
டிஜிட்டல் காக்பிட் 2020

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 35

ஆல் இன் ஆல் ஆலமரம் சாம்சங் கார்!

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 35

Published:Updated:
டிஜிட்டல் காக்பிட் 2020
பிரீமியம் ஸ்டோரி
டிஜிட்டல் காக்பிட் 2020
ஜெர்மனியோடு தோளோடு தோள் நின்று போட்டி போடும் அளவுக்கு இன்று தென் கொரியா வளந்திருப்பதற்கு முக்கியக் காரணம் - டிசைன் துறையில் அது அடைந்திருக்கும் வளர்ச்சி என்பதை, சென்ற இதழில் பார்த்தோம். இந்த வளர்ச்சிக்கு சாம்சங்கின் டிசைன் அணுகுமுறை எந்த அளவுக்குத் துணை நின்றிருக்கிறது என்பதை இந்த இதழில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இங்கிலாந்து அரசின் டிசைன் கவுன்சில், அண்மையில் ஓர் ஆய்வை நடத்தியது. ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக, தென்கொரியாவைம் சீனாவையும் கள ஆய்வுக்கு அது எடுத்துக் கொண்டது. இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, அதற்குக் காரணமாக அமைந்த உற்பத்தித் திறன், அதோடு இந்த வளர்ச்சியினால் அடிமட்டத்தில் இருக்கும் மக்கள் அடைந்திருக்கும் பயன் ஆகிய மூன்றையையும் ஆய்ந்து, `ஆசிய நாடுகளில் இருந்து வரும் படிப்பினை' என்று தலைப்பிட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது.

ஆம்! இவை மூன்றும் நிகழ்வதற்கு டிசைன் துறையில் இந்த நாடுகள் அடைந்த வளர்ச்சிதான் காரணம் என்கிறது அந்த அறிக்கை.

ஆல் இன் ஆல் ஆலமரம் சாம்சங் கார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வடிவமைப்பு மற்றும் படைப்பாற்றல் தொழில்நுட்பம் சார்ந்த புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை இந்த நாடுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பே ஊக்குவித்ததையும், அந்த நாடுகளில் நிலவும் Design Environment பற்றியும் இந்த அறிக்கை வியந்து குறிப்பிடுகிறது.

இன்று சாம்சங் ஒரு மாபெரும் நிறுவனம். துணி வியாபாரம் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை; கார் தயாரிப்பு தொடங்கி கப்பல் கட்டுமானம் வரை; எலெக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து செல்போன்கள் வரை... எல்லாத் துறைகளிலும் கிளைத்து எழுந்திருக்கும் ஒரு ஆல் இன் ஆல் ஆலமரம் அது. இன்றைய மதிப்பில் 303 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமானமுள்ள நிறுவனம். தென்கொரிய வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு சாம்சங் என்கிற நிறுவனத்தால் மட்டும் ஈட்டப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை சாம்சங்கின் தயாரிப்புகள் இல்லாத வீடுகளே இல்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்படிப்பட்ட சாம்சங், 25 ஆண்டுகளுக்கு முன்பு சாமானிய சராசரி எலெக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனமாகத்தான் இருந்தது. அன்று விலை மலிவான, பெரிதும் பேசப்படும் எலெக்ட்ரானிக் சாதனங்களின் சாயலில், பிரதி எடுத்ததைப்போல இருக்கும் இரண்டாம் வகை தயாரிப்புகளைத்தான் அது தயாரித்து வந்தது. வேகவேகமாக, ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்து தள்ளுவதுதான் சாம்சங்கின் அப்போதைய வியாபார யுக்தி. ஒப்புக்காக இருந்த ஒன்று இரண்டு டிசைனர்கள், உறை போல ஏதோ ஒன்றை சாம்சங் தயாரிப்புகளுக்கு மாட்டி 'டிசைன் செய்துவிட்டேன்' பேர்வழி என்ற விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள்.

ஆல் இன் ஆல் ஆலமரம் சாம்சங் கார்!

படைப்பாற்றலும், கற்பனைத் திறனும், எதிர்கால நோக்கமும் இல்லாத இந்த தயாரிப்பு முறையால் வேதனையடைந்த அன்றைய சேர்மன் லீ குன் ஹீ, வாடிக்கையாளர்களின் மனநிலையைக் கண்டறிய ஒரு சர்வே எடுத்தார். இந்த சர்வேயின் முடிவில், தங்கள் நிறுவனம் தயாரித்து வந்த பொருட்கள் அனைத்திலும் டிசைன் என்ற விஷயம் மிஸ் ஆவது அவருக்குத் தெரிய வந்தது. சரியாக வடிவமைக்கப்படாத எந்த ஒரு பொருளும் உயிரற்ற உடல் போன்றது என்ற உண்மையும் அவருக்கு விளங்கியது.

``21-ம் நூற்றாண்டை எதிர்கொள்ள டிசைன் வல்லமை முக்கியம். உலகத்தின் ஒரு தலைசிறந்த நிறுவனமாக சாம்சங் வளரவேண்டும் என்றால், அதற்கு ஒரு படைப்புச் சூழலை (design environment) உருவாக்குவது அவசியம்!'' என்ற தீர்மானத்துக்கு வந்தவர், உடனடியாக மாற்றங்களுக்குத் தேவையான சீர்த்திருத்தங்களைச் செய்தார்.

அன்று அவர் போட்ட விதையால், இன்று சாம்சங் டிசைன் சென்டரில் 1,600 டிசைனர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். `சாம்சங் டிசைன் குவாலிட்டி' என்று உலகமே குறிப்பிடும் அளவுக்கு அது ஒரு அளவுகோலாகவே ஆகிவிட்டது.

ஆனால், இவை அனைத்தும் அத்தனை சுலபமாக நிகழ்ந்துவிடவில்லை. உலகின் ஆகச்சிறந்த டிசைனர்கள் வேண்டும் என்றால், வெளிநாடுகளில் இருந்து பெரும் பணம் கொடுத்து வரவழைக்க வேண்டும். ஆனால் லீ குன் ஹீ அப்படிச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, SADI, அதாவது `Samsung Art and Design Institute' என்ற கல்லூரியைத் தொடங்கி, உலகின் தலைசிறந்த டிசைன் பேராசிரியர்களை வரவழைத்து, திறமை மிக்க தன் நாட்டு இளைஞர்களையே தலைசிறந்த டிசைனர்களாக வார்த்தெடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1993 தொடங்கி இன்றும் இயங்கும் இந்தக் கல்லூரியில், உலகத்தரம் வாய்ந்த டிசைன் அறிவைப் அந்நாட்டு மாணவர்கள் பெற்று வருகின்றனர்.

``டிசைன் என்பது, எதிர்காலத்தை இன்று தயாரிப்பது. டிசைன் என்பது நம் நிறுவனத்தின் சொத்து மட்டுமல்ல, நமது பண்பாடு மற்றும் வாழ்வியல் தத்துவங்களின் வெளிப்பாடு’’ என்ற அவர்களுக்கு அங்கே சொல்லித் தரப்படுகிறது.

``எங்கள் வடிவமைப்பின் மையத்தில், குவியத்தில் வாடிக்கையாளரை அமர்த்தி இருக்கிறோம். எனவே, எங்கள் வாடிக்கையாளரின் மனநிறைவே எங்கள் டிசைன் பிலாசபி!” என்று சொல்லும் சாம்சங், 1996-ம் ஆண்டை, டிசைன் புரட்சியின் ஆண்டாகக் கொண்டாடுகிறது.

சாம்சங் என்றால் டிவி, மொபைல்தான் பலரின் நினைவுக்கு வரும். அது ஒரு கார் தயாரிப்பு நிறுவனமும்கூட!

1994-ல் ஆரம்பிக்கப்பட்ட சாம்சங் மோட்டார்ஸ், 1998-ல் தனது முதல் காரை அறிமுகப்படுத்தியது. நிஸான், ஆரம்ப காலத்தில் சாம்சங்குக்குப் பல கார் தயாரிப்பு உத்திகளைக் கொடுத்து உதவியது.

டிஜிட்டல் காக்பிட் 2020
டிஜிட்டல் காக்பிட் 2020

2000-களில் ரெனோவுடன் இணைந்த கைகளாக, இன்றுவரை பல கார்களைக் களமிறக்கி வருகிறது. ஆனால் என்ன காரணத்தினாலோ, கொரிய எல்லையைத் தாண்டி சாம்சங்கின் கார்களை வெளியில் பார்ப்பது அரிது. சாம்சங் மோட்டார்ஸ், பெரும் வெற்றி பெற்ற பிராண்ட் என்று சொல்ல முடியாது என்றாலும், குறிப்பிட்டுச் சொல்லும்படியான பெரும் லக்ஸுரி கார்களைத் தயாரித்து அளித்து வந்திருக்கிறது. இடையில் சற்றே திணறி சரிவைச் சந்தித்தாலும், மீண்டு எழுவதற்கு முயற்சி எடுத்து வருகிறது.

2019 இறுதியில் அறிமுகப்படுத்திய சாம்சங் XM3 கான்செப்ட், கொரியாவில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதன் வடிவமைப்பில் ரெனோவின் தாக்கம் இருக்கிறது. மிக ஸ்போர்ட்டியான அடக்கமான எஸ்யூவியான இதில் கவர்ச்சியான ஹெட்லாம்பும், மிக சென்சிட்டிவ்வான பக்க வளைவுகளும், எடுப்பான பின் பக்க வடிவமைப்பும் கட்டாயம் கவனம் ஈர்க்கும்.

ஹோம் அப்லயன்சஸ் ஜெயன்ட் சாம்சங், கார் டிசைன் உலகில் என்ன செய்கிறது என்ற கேள்வி எழலாம். கார் உற்பத்தியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் கோலோச்சிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையின் ஆதிக்கம்தான் அதிகம். அதையும் தாண்டி, டிஜிட்டல் டெக்னாலஜியின் அரசாட்சி நடைபெறுவதால்தான் இந்தத் துறையில் தன் கொடியை பறக்க விட்டிருக்கிறது சாம்சங்!

கடந்த CES 2020-ல் ஜப்பானைச் சேர்ந்த சோனி நிறுவனத்தின் கான்செப்ட் கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது வரை கார் பக்கமே தலை காட்டாத சோனி கார் வடிவமைப்பில் ஈடுபடும்போது, 24 ஆண்டுகளாக கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சாம்சங் ஏன் உலகத்துக்கான கார்களை உற்பத்தி செய்ய யோசிக்கக்கூடாது?

மூன்றாம் ஜெனரேஷன் SM5
மூன்றாம் ஜெனரேஷன் SM5

SM, SQ என்று சேடன் சீரிஸ் கார்களையும், XM வகை எஸ்யூவிகளையும் பார்த்தால், சாம்சங்கின் வடிவமைப்புத் திறன் தெரியும். எலெக்ட்ரானிக் துறையின் உலக சாம்பியன், இப்போது ஃபியூச்சர்ஸ்டிக் கார் டிசைன் உலகிலும் தடம் பதிக்க முயற்சி எடுத்து வருகிறது.

CES 2020-ல் சாம்சங்கும், தன் பங்குக்கு `Digital Cockpit 2020’ என்கிற கார் கான்செப்டைக் காட்சிப்படுத்தியிருந்தது. 5G டெக்னாலஜி, IOT என்னும் Internet of Things, ஆண்ட்ராய்டு 10, SOC எனும் System on Chip, ஏகப்பட்ட சென்ஸார்கள், கேமராக்கள் என ஒரு ஹைடெக் கான்செப்ட் காராகக் காட்சியளித்தது அது. இது காரா... அல்லது செமி கண்டக்டர் டிவைஸா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அதில் பல புதுமைகள் இருந்தன.

இனி வரும் காலங்களில் உங்கள் அலுவலகம் - வீடு... இந்த இரண்டையும் இணைக்கும் பாலமாக உங்கள் கார் இருக்கப் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை.

அந்த காலகட்டத்தில் சாம்சங் கார்கள் உலகின் மற்ற நாடுகளிலும் விற்பனையாகுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.!

(வடிவமைப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism