Published:Updated:

காருக்கும் கிரீன் ஹவுஸ்!

காருக்கும் கிரீன் ஹவுஸ்!
பிரீமியம் ஸ்டோரி
காருக்கும் கிரீன் ஹவுஸ்!

தொடர் - 22; நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ்

காருக்கும் கிரீன் ஹவுஸ்!

தொடர் - 22; நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ்

Published:Updated:
காருக்கும் கிரீன் ஹவுஸ்!
பிரீமியம் ஸ்டோரி
காருக்கும் கிரீன் ஹவுஸ்!

ரு கார் என்பது உணர்வுரீதியானது என்று சொல்வதற்குப் பல காரணங்கள் உண்டு. காரின் புறத்தோற்றத்தின் ஸ்டைலைக் குறிப்பிடும்போது பயன்படுத்தப்படும் உலகளாவிய கலைச் சொற்கள் பலவும் நம் வாழ்வோடும், உணர்வுகளோடும் தொடர்புடையதே! தொழில்நுட்பத்தோடு தொடர்புடைய கலைச்சொற்கள் குறைவு.

க்ரியேட்டிவ் டிசைனர்கள், க்ளே மாடலர்கள், டிஜிட்டல் டிசைனர்கள், VR நுணுக்கவியலாளர்கள், ப்ரோட்டோ டைப்பிங் செய்யும் பொறியாளர்கள், CMF குழுவினர் என்று பலதரப்பட்ட கலைஞர்களும் பொறியாளர்களும் சேர்ந்து வடிப்பதுதான் ஒரு கார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிசைன் ஸ்டுடியோவில் பணியாற்றும் இவர்களிடையே புழக்கத்தில் ஏராளமான கலைச்சொற்கள் இருக்கின்றன. அந்தக் கலைச்சொற்களுக்குப் பின்னால் சில சுவையான கதைகளும் இருக்கின்றன.

காருக்கும் கிரீன் ஹவுஸ்!

`கிரீன் ஹவுஸ்‘ என்ற ஒரு சொல்லாடலில் இருந்து ஆரம்பிப்போம். பொதுவாக, கிரீன் ஹவுஸ் என்பது கண்ணாடிக் கூரைக்கு நடுவே, கட்டுப்படுத்தப்பட்ட தட்பவெப்பச் சூழலில் தாவரங்களை வளர்க்கும் இடம். ஆட்டோமொபைல் உலகில் `கிரீன் ஹவுஸ்‘ என்று குறிப்பிடப்படுவதும் நான்கு பக்கமும் கண்ணாடிகளால் சூழப்பட்ட பகுதிதான்.

காரின் முன்பக்கமும் பின்பக்கமும் விண்ட்ஷீல்டு, பக்கவாட்டில் கதவுகளில் இருக்கும் கண்ணாடிகள், மூன்றாவதாக கூரை - இவற்றுக்கு இடைப்பட்ட பகுதிதான் கிரீன் ஹவுஸ். அதாவது காரின் டாப் பகுதி.

கார் ஸ்டைலிங்கில் இந்த கிரீன் ஹவுஸ் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த கிரீன் ஹவுஸின் அமைப்பை வைத்தே, இது என்ன வகை கார் (Body Style) என்றும், எந்த நிறுவனத்தின் கார் என்றும் அறிந்து கொள்ள முடியும். சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதே இந்த இடத்தில்தான். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் - பிஎம்டபிள்யூவின் Hofmeister kink என்கிற டிசைன் அம்சம்தான்.

சில கார்களில் A,B,C என மூன்று பில்லர்கள் வரை இருக்கும். காரைத் தாங்கும் தூண்கள் இவை. `SUV’க்களுக்கும் ’MPV’க்களுக்கும் ‘D Pillar கூட உண்டு.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, காரில் இந்த டாப் பகுதியை அழகுணர்ச்சியுடன் வடிவமைப்பதில் சிக்கல்கள் இருந்தன. அதை உற்பத்தி செய்வதும் சவாலாகவே இருந்தது. BMW நிறுவனத்தின் டிசைன் பிரிவுத் தலைவராக இருந்த `Wilhelm Hofmeister‘ இதற்கு ஒரு தீர்வை வடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காருக்கும் கிரீன் ஹவுஸ்!

இது பலருக்கும் பிடித்துப் போனதால், `C Pillar‘ல் இருந்து இறங்கும் வடிவில் இருக்கும் பகுதிக்கு அவர் பெயரே சூட்டப்பட்டது. இன்றும் பிஎம்டபிள்யூவின் எல்லா கார்களும் இந்த Hofmeister kink அம்சத்துடன்தான் வருகின்றன.

விண்ட் ஷீல்டு என்ற ஒன்று இல்லை என்றால்... வீசும் எதிர்க்காற்றில் காரின் டிரைவரால் வண்டியே ஓட்ட முடியாது. ஓட்டுநர் சாலையைப் பார்க்கும்படி கண்ணாடியாலான திரை. இது இப்போதெல்லாம் இரண்டு அடுக்காகவும் நடுவில் ஒரு ப்ளாஸ்டிக் ஃபிலிம் (Plastic Film) கொண்டும் ஒட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பான கண்ணாடி பாகம். இது உடைபட்டாலொழிய, தெறித்து விழுந்து சேதப்படுத்தாத வகை.

காருக்கும் கிரீன் ஹவுஸ்!

`Day Light Opening‘ என்பது Side View-ல் பளிச்சென்று மின்னும் பக்கக் கதவு கண்ணாடிகள். சுருக்கமாக, DLO. இந்த DLOவை அடுத்து இருப்பது A பில்லர். சில கார்களில் A,B,C என மூன்று பில்லர்கள் வரை இருக்கும். காரைத் தாங்கும் தூண்கள் இவை. `SUV’க்களுக்கும் `MPV’க்களுக்கும் ‘D Pillarகூட உண்டு.

CHMSL’ என்பது ’Center High Mounted Stop Lamp’ என்பதன் சுருக்கம். பின்புறம் இருக்கும் விண்ட் ஷீல்டுக்கு மேல் பளிச்செனத் தெரியும்படி உள்ள சிவப்பு வண்ண பிரேக் லாம்ப்தான் இது.

இப்போது நாம் அடைந்திருக்கும் கார் ஸ்டைலிங் இந்த நிலையை ஒரே நாளில் அடைந்துவிடவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நிகழ்ந்த பரிணாம வளர்ச்சி இது. கடுமையான பல பரிசோதனைகளைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம். ஆனால், இதுவும் நிரந்தரமான நிலை அல்ல!

மற்ற பல சித்தாந்தங்களைப்போல கார் ஸ்டைலிங் என்ற சிந்தாந்தமும் மீண்டும் தன்னை அழித்துக் கொண்டு உருவெடுக்கும். பல காரணங்களுக்காக சில புதிய `Feature‘ களும் உள்ளே வந்து நிலை பெறுவதும் உண்டு.

காருக்கும் கிரீன் ஹவுஸ்!

Green House-ன் பின்பகுதியில் `Back Light‘ எனும் பின் கண்ணாடியின் மேல் அமர்ந்திருக்கும் CHMSL, முதன் முதலில் கனடாவில் 1986-ல் பயனுக்கு வந்தது. பின் நியூஸிலாந்தில் 90-லும் படிப்படியாகப் பரவி, 1998-ம் ஆண்டு `UN Regulation 48‘படி கட்டாயமாக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.

இந்த இடத்தில் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் இரு ஆங்கிலச் சொற்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஆம்! ஒரு சிலர் Feature-யையும், Future-யையும் ஒன்று சேர்த்துக் குழப்பிக் கொள்கிறார்கள். Feature என்பது அம்சங்களைக் குறிக்கும் சொல். இரண்டாவதாக உள்ள Future என்பது எதிர்காலம் என்பதைக் குறிக்கும். காரில் இரண்டாம் வரிசையில் AC என்பது ஒரு சிறப்பு அம்சம், அது காரின் எதிர்காலம் அல்ல.

- வடிவமைப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism