Published:Updated:

ஒரு காரில் இத்தனை லைன்களா?

ஒரு காரில் இத்தனை லைன்களா?
பிரீமியம் ஸ்டோரி
ஒரு காரில் இத்தனை லைன்களா?

தொடர் - நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 23

ஒரு காரில் இத்தனை லைன்களா?

தொடர் - நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 23

Published:Updated:
ஒரு காரில் இத்தனை லைன்களா?
பிரீமியம் ஸ்டோரி
ஒரு காரில் இத்தனை லைன்களா?

ஓர் அழகிய கார் வடிவமைப்பை மதிப்பிடவும், அந்த மதிப்பீட்டைத் தெளிவாகவும் சிறப்பாகவும் பகிர்ந்துகொள்ள, கார் டிசைன் டெர்மினாலஜி பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக, புதிய கார் குறித்த ரெவ்யூக்களில் உபயோகப்படுத்தும் சரியான கலைச்சொற்கள், அந்தத் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். காரின் பக்கவாட்டு வடிவம், சில குறிப்பிட்ட லைன்களால் அளக்கப்படுகிறது.

1. A லைன் 2. பெல்ட் லைன்

3. ஷோல்டர் லைன்

4. ஜா லைன் அல்லது கேரக்டர் லைன்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் முன்பக்க ஓவர்ஹாங், பின்பக்க ஓவர்ஹாங், வீல்ஆர்ச், அப்ரோச் மற்றும் டிபார்ச்சர் கோணங்கள். வீல்பேஸ், ராக்கர் பேனல் - இவைதான் காரின் பக்கவாட்டுத் தோற்றத்தை அலங்கரிக்கின்றன. கார் டிசைனைப் பொறுத்தவரை வீலில் இருந்து தான் தொடங்க வேண்டும். பொதுவாகவே, காரின் பக்கவாட்டுத் தோற்றத்தை வரையத் தொடங்கும்போது, சக்கரத்திலிருந்தே ஆரம்பிப்பார்கள். இந்த இரண்டு சக்கரங்களுக்கு இடைப்பட்ட தூரம்தான், அது என்ன வகை கார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும். பக்கவாட்டுத் தோற்றத்தில் இரண்டு வீல்களுக்கு இடைப்பட்ட தூரம்தான் வீல்பேஸ். சக்கரங்களுக்கு முன்னும் பின்னும் ஃப்ரன்ட் ஓவர்ஹாங், ரியர் ஓவர்ஹாங்.

ஒரு காரில் இத்தனை லைன்களா?

ராக்கர் பேனல் என்பது, இரண்டு வீல்களும் இடைப்பட்ட வலிமையான ஸ்டீலால் ஆன பாகம். இந்த ராக்கர் பேனலுக்கு மேலேதான் கதவுகள் ஜம்மென்று அமர்ந்திருக்கின்றன. ராக்கர் பேனல், பொதுவாக தரைதளத்துக்கு நேர் இணையாக இல்லாமல், சற்றே முன்னோக்கி ஓர் இறக்கமான கோணத்தில் இருக்கும். இதை ஒரு வேகக் குறியீடாகப் பார்க்க வேண்டும். சக்கரங்களுக்கு மேல் பகுதி ‘வீல் ஆர்ச்’ என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் கார் தோன்றிய தொடக்கக் காலத்தில், சக்கரங்கள் இன்ஜினுக்கு வெளியே தனியாக, சுதந்திரமாக இருந்தன. அவற்றுக்கு மேலே இன்றுள்ள பைக்குகளின் சக்கரங்களுக்கு மேலே இருப்பதுபோல விங்ஸ்தான் இருந்தன.

ஏ லைன் (A line) என்பது, பக்கவாட்டுத் தோற்றத்தின் (Side View) உச்ச வடிவ புரொபைல். பெல்ட் லைன் (Belt line) என்பது, டிஎல்ஓ (DLO-Day Light Opening)வின் அடிப்பகுதி. சில கார்களில் இந்த பெல்ட் லைன், ஏ பில்லரின் முன் பகுதியில் பாயும்போது `விங் லைன்’ என்றும் சொல்வதுண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு காரில் இத்தனை லைன்களா?

பிஎம்டபிள்யூ ஸ்டைலிங்கில், விங் லைன் என்பது ஒரு முக்கிய அம்சம். குறிப்பாக 7 சீரிஸ் கார்களில் இந்த feature மிகக் கவனமாகக் கையாளப்பட்டு, கவர்ச்சிகரமாக சித்திரிக்கப் பட்டிருப்பதை எந்தக் கோணத்திலிருந்தும் ரசிக்கலாம். ஸ்கோடா சூப்பர்ப், ஒருபடி மேலே சென்று கூரான edgy-யான வளைவாகச் செதுக்கியிருப்பது சிறப்பு கவனம் பெறுகிறது. ஷோல்டர் லைன் (Shoulder line) என்பது, வடிவமைப்பாளர்கள் பெரிதும் விரும்பி, ரசித்து தனித்தன்மையை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் ஓர் அங்கமாகிவிட்டது.

பொதுவாக, ஹெட்லைட்டில் துவங்கி டெயில் லைட்டில் முடியும் ஓர் அதிவேகத் தீற்றல் என்றே சொல்லலாம். பாய்ந்து செல்லும் வழியில் முன்பக்க வீல் ஆர்ச்சில் தழுவி, ரியர் வீல் ஆர்ச்சில் நழுவிச் சென்று, பின் விளக்கில் விழுவது ஓர் பேரழகு என்று சுவைத்த வடிவமைப்பாளர் அறிவர். ரியர் வீல் ஆர்ச்சுக்கு மேலே C பில்லரை விலக்கிய பின் பகுதியை ஷோல்டர் (shoulder) என்று அழைப்பர். ஆஸ்டன் மார்ட்டின், போர்ஷே மற்றும் வால்வோ கார்கள் மிக அழகான எடுப்பான ஷோல்டர் கொண்டவை.

ராக்கர் லைன் அல்லது கேரக்டர் லைன் என்பது, ராக்கர் பேனலுக்கு நேர் மேலே சறுக்கி மேல் எழும்பும். குறிப்பாக, ஸ்போர்ட்ஸ் கார்களில் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டப்படும் ஓர் அம்சம் இது.

 பிரஸ்டீஜ் டிஸ்டன்ஸ்...
பிரஸ்டீஜ் டிஸ்டன்ஸ்...

மேற்சொன்ன தீற்றல்கள் அவற்றோடு இணைந்தும் பிரிந்தும் அழகுற வெளிப்படும் வீல் ஆர்ச்சுகள் என ஒரு சார்புடைப் புரிதலே கார் டிசைன். இதில் கவனித்து மனதில் இருத்த வேண்டிய ஒன்றுண்டு. அத்தனை முக்கிய அம்சங்களும் ஒரு குவியத்தில் தொடங்கி, பிரிந்து, வேகமாகப் பாய்ந்து பின் ஒன்றிணைந்து ஒருமித்த திடமான வடிவமைப்பாக மிளிர்கின்றன. குறிப்பிட்ட குவியத்தைத் தனித்துவத்துடன் கையாள்வதில், பலப் பல புதிய கார்களும் பிராண்ட்களுமாக ஆகி மனித நுகர்வுக்குப் பயனூட்டுகின்றன. கதவு திறந்து மூடுவதிலும், முன்னே உள்ள பானெட் திறந்து மூடுவதிலும் உள்ள எல்லைப் பிளவுகளை ‘Shut Line’ என்று சொல்லலாம். பிளவுத் தீற்றல் என்றும் கொள்ளலாம்.

Cab Forwad

ஓட்டுநரும் பயணிகளும் அமர்ந்திருக்கும் பகுதி Cabin என்று அழைக்கப்படுகிறது. இது ட்ரக் மற்றும் விமானத்துக்கும் பொருந்தும். விமானத்தில் உள்ளே கையோடு எடுத்துச் செல்லும் பையை ‘Cabin Bagage’ என்று சொல்வது இதனால்தான்.

 கேப் ஃபார்வேர்டு டிசைன்...
கேப் ஃபார்வேர்டு டிசைன்...

Cab Forwad என்று ஒரு ஸ்டைலைச் சொல்வர். கேபின், கிட்டத்தட்ட வீலுக்கு மிக அருகில் வந்துவிடும். Cab Back என்பது, விஸ்தாரமான பெரிய இன்ஜின் கொண்ட சில ஸ்போர்ட்ஸ் கார்களில், பானெட் நீண்டு இருக்கும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கும். அமெரிக்க ஸ்போர்ட்ஸ் கார்கள் Cab Back ஸ்டைலில்தான் இருக்கும். அமெரிக்கர்கள் நீண்ட பூட்டுடன் ஃப்ரன்ட் இன்ஜின் கார்களையே பெரிதும் விரும்புவர்.

Prestige Distance

ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லி போன்ற சூப்பர் லக்ஸூரி கார்களில் பிரஸ்டீஜ் டிஸ்டன்ஸ் (Prestige Distance) எனும் சொல்லாடல் உலவி வருகிறது. இதில் எல்லாமே பிரமாண்டமானதாக இருக்க வேண்டும். Space பற்றிய கவலை இல்லை. சாதாரணமாக, முன் சக்கரத்தின் பின்னால் உடனே கதவுகள் வந்துவிடும்.

ஆனால், இத்தகைய லக்ஸூரி கார்களில் ஒரு நீண்ட இடைவெளிவிட்ட பின்னரே கதவுகள் வரும்.இந்த இடைவெளியே பிரஸ்டீஜ் டிஸ்டன்ஸ்.

 கேப் பேக் டிசைன்...
கேப் பேக் டிசைன்...

Bright Works

பிரைட் ஒர்க்ஸ் (Bright Works) என்ற சொல்லாடல் பல விவரிக்க முடியாத, ஆனால் அவசியமான அம்சங்களை எளிதில் கடத்த (Communicate ) உதவும். க்ரோம் மற்றும் ப்ரஷ்டு அலுமினியம் (Brushed Aluminum) ஃபினிஷில் மின்னும் பல அம்சங்கள் காரில் உண்டு. உதாரணமாக, கிரில் பகுதி, ஹெட்லைட்டின் பளபள டீட்டெய்ல், பிராண்டிங் உள்ளிட்ட பெயர் பட்டைகளைக் குறிப்பிடும் பயனுள்ள சொல்லாடல்.

 டவுன் தி ரோடு கிராஃபிக்ஸ்...
டவுன் தி ரோடு கிராஃபிக்ஸ்...

Down the Road Graphics

இது காரின் முன் பகுதியில் நாம் பார்க்கும் கிரில், ஹெட்லைட், பம்பர் டீட்டெய்ல் டிசைன் ஆகிய அனைத்தையும் குறிப்பிட ஒற்றை வரிச்சொல் உண்டு. காரின் முன் அழகை முகத்தோடு ஒப்பிட்டால், கண், மூக்கு, வாய் போன்ற அமைப்புகளைக் குறிக்கும் சுருக்கமான சொல்லாடல் Down the Road Graphics. கார் நிறுவனங்கள் தங்கள் பிராண்ட்டின் தனித்துவத்தை அழுத்தமாகப் பதிவு செய்யவது இந்த Down the Road Graphics வாயிலாத்தான்.

Tumble Home

டம்பிள் ஹோம் என்பது, ஒரு காரின் முன்னால் இருந்து பார்க்கும்போது DLOவின் மேல் நோக்கிய குவித்தல் ஆகும். இந்தக் குவித்தல் ஒரு ஏரோடைனமிக் அம்சம். காற்றைக் கிழித்து முன்னேறும்போது பக்கவாட்டு அதிர்வுகளைத் தவிர்க்க Tumble Home அவசியம். கப்பல் வடிவமைப்பில் இந்தச் சொல்லாடல் காலங்காலமாக பயன்பட்டு வந்திருக்கிறது. ஒரு கப்பல் நீரின் பரப்பில் செல்லும்போது, அது குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் தண்ணீருக்குள் இருப்பதை ‘Flair’ என்றும், தண்ணீரின் மேல் பகுதியில் தெரியும் தோற்றத்தை ‘Tumble Home’ என்றும் குறிப்பிடுவர். இதுவே கார் வடிவமைப்பிலும் வழக்கத்துக்கு வந்துவிட்டது.

 பிரைட் ஒர்க்ஸ்...
பிரைட் ஒர்க்ஸ்...

Batsman’s crease

சில கார்களில் நடுவில், அதாவது A லைனில் நடுக்கோடு ஒன்று சீராகப் பரவி, பின் பக்கம் வரை செல்லும் அந்த அம்சத்தை பேட்ஸ்மேன் கிரீஸ் என்பார்கள். ஓபல் கார்களில் இந்த கிரீஸைக் காணலாம் . கிரிக்கெட் பேட்டின் பின் பக்கம் காணப்படும் கிரீஸ் லைன் போன்று இருப்பதால், இந்தப் பெயர். இப்படியாக, ஏராளமான கலைச்சொற்கள் டிசைன் உலகில் பயன்பாட்டில் இருந்தாலும், அதிக பயனுள்ளவற்றில் நானறிந்த சிலவற்றைப் பகிர்ந்து கொண்டேன். அன்றியும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல பல ஸ்டுடியோக்களின் உள்ள டிசைனர்கள் தங்களுக்குள் பயன்பாட்டுக்கென்று பிரத்யேகமான வேறு பல கலைச்சொற்களையும் வைத்துக்கொள்வது வழக்கம்.

அடுத்து சில முக்கியமான டிசைன் ஸ்டூடியோக்களையும், ஆகச் சிறந்த டிசைன் ஆளுமைகளையும் பார்க்கலாம் .

- வடிவமைப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism