Published:Updated:

வாளுக்கும் காருக்கும் சம்பந்தம் உண்டு!

தொடர்
பிரீமியம் ஸ்டோரி
தொடர்

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 33

வாளுக்கும் காருக்கும் சம்பந்தம் உண்டு!

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 33

Published:Updated:
தொடர்
பிரீமியம் ஸ்டோரி
தொடர்
கார் டிசைனிங் என்பது இயந்திரத்தின் மீது அமைக்கப்படும் உறுதியான மூடி என்ற நிலையில் இருந்து விலகி, அது கலாச்சாரத்தின் கூறுகளையும் பிரதிபலிப்பதாக மாறியிருக்கிறது.

கார் பைக்குகள்தான் என்றில்லை; பொதுவாக ஜப்பானிய தயாரிப்புகள் கொண்டாடப்படுவதற்கான காரணம், அவர்களின் தயாரிப்புகளில் இழையோடும் கலாச்சார பின்புலம். ஜப்பானியத் தயாரிப்புகளுக்கு அடிப்படையாக இரண்டு கூறுகள் உள்ளன. ஒன்று தயாரிக்கப்படும் பொருளின் பயன்பாட்டின் பின்னணி. மற்றொன்று அதன் உற்பத்தி உத்தி.

வாளுக்கும் காருக்கும் சம்பந்தம் உண்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கையடக்க விலையில் அற்புதமான செயல்திறன். அதாவது Affordable Performance மற்றும் Mean Processing ஆகிய இரண்டும் அவர்களுக்கு முக்கியம்.

இதில் Mean Processing-ஐ ஐரோப்ப முன்னணி கார் நிறுவனங்கள் அப்படியே பின்பற்றுகின்றன. இந்த உற்பத்தி உத்தியை வடிவமைத்ததில் டொயோட்டா பெருமை கொள்ளலாம். ஜப்பானிய கார்களுக்கு பராமரிப்புச் செலவுகள் எப்பொழுதும் மிகக் குறைவு. அதே நேரத்தில் எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு பெர்ஃபாமென்ஸ் இருக்கும். ஹோண்டா சிட்டியின் உலகளாவிய வெற்றியும், டொயோட்டா இனோவா தொட்ட புதிய உச்சமுமே இதற்குச் சாட்சி.

இந்த வெற்றிக்குப் பின்னால் ஜப்பானியர்களின் பண்பாடும் மறைந்திருக்கிறது. குறிப்பிட்ட ஒரு துறையில் பைத்தியம் பிடித்த மாதிரி விழ்ந்து கிடப்பவர்களை ஜப்பானில் OTAKU என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, ஒரு வேலையைக் கையில் எடுத்துவிட்டால் பசி, தூக்கம் என்று அனைத்தையும் மறந்து அல்லும் பகலும் அதிலேயே அவர்கள் மூழ்கி விடுவார்கள். இப்படிப்பட்ட உழைப்பாளர்களை நான் பல ஜப்பானிய கார் கம்பெனிகளில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். உதாரணமாக, ஒரு கார் அல்லது பைக் ஆகியவற்றின் உற்பத்தியில் வருடக் கணக்கில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறவர்களால்... அந்தப் பொருளை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யக்கூடிய அளவுக்கு ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டுவிடுவார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மிகச் சமீப காலங்களில் குறிப்பாக ஜப்பானிய கார் டிசைனர்கள் தங்கள் படைப்பாற்றல் வழியாக தங்களின் ஆழமான பண்பாட்டைப் பேசுகிறார்கள். Sony Vision S, Mazda Vision Coupe, Mitsubishi E – Evolution போன்ற கார் கான்செப்ட்களைக் கூர்ந்து கவனித்தால் இதைப் பார்க்க முடியும்.

வாளுக்கும் காருக்கும் சம்பந்தம் உண்டு!

போட்டியின் காரணமாக, குறிப்பாக கொரிய கார் கம்பெனிகளின் போட்டி காரணமாக கார்களின் வடிவமைப்பில் ஜப்பானிய கார் நிறுவனங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றன. ஒரெ செக்மென்ட்டில் ஒன்றைப்போல இரண்டு அல்ல; பல கார்கள் போட்டி போடுவதால் ஒவ்வொரு கார் கம்பெனியும் தங்கள் காரை எப்படிச் சந்தைப்படுத்துவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் கார்களைத் தனித்துக் காட்ட, டிசைன் அண்ட் ஸ்டைலிங் மற்றும் சிறப்பு அம்சங்கள்தான் முதன்மையாக வருகின்றன. இங்குதான் பண்பாட்டோடு இயைந்த டிசைன் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் முதல் பார்வையிலேயே கவர்ந்து விடும் FIRST TIME ATTRACTION அவசியமாகிவிட்டது.

கூடுதலாக, எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் தொழில்நுட்பமே கோலோச்சப் போகிறது என்ற கருத்தாக்கமும் பெரிதாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றமானது, கார் நிறுவனங்களின் எல்லைகளைத் தாண்டி சோனி போன்ற எலெக்ட்ரானிக் கம்பெனிகளையும் கார் டிசைனில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறது .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2020 ஜனவரியில் அமெரிக்காவின் CES -ல் (Consumer electronic show) சோனி முதன் முதலாகத் தயாரித்து அறிமுகப்படுத்திய SONY VISION S என்ற கான்செப்ட் கார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திறது. வருங்காலத்தில் கார் டிசைன் என்பது ஆச்சரியப்படத்தக்க வகையில் தன் எல்லைகளைப் பெருமளவில் விரிவுபடுத்தும் என்பதே உண்மை!

வாளுக்கும் காருக்கும் சம்பந்தம் உண்டு!

புதிய டிசைன் DNA அல்லது டிசைன் லாங்குவேஜ் என்பதை, பெரிய கம்பெனிகள் அனைத்தும் தங்களின் கான்செப்ட் கார்களின் வாயிலாகவே உலகுக்கு உணர்த்துகின்றன. இதற்கு ஜப்பானின் MAZDA விதிவிலக்கல்ல.

மாஸ்தா விஷன் கூபே என்ற கான்செப்ட் கார், சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கிக் குவித்தது. கோடோ (KODO) டிசைன் என்ற ஒன்றை தன வருங்கால புதிய டிசைன் வழிகாட்டியாக, டிசைன் DNA-வாக அது அறிமுகப்படுத்துகிறது.

வாளுக்கும் காருக்கும் சம்பந்தம் உண்டு!

ஜப்பானிய மொழியில் கோடா என்றால் Soul in Motion. பார்த்துப் பார்த்து மெருகேற்றப்பட்ட இந்த மாடலைச் சுற்றி வந்து பார்வையிட்டால், மிளிரும் பரப்புகளின் ஹைலைட், உங்கள் ஆன்மாவைக் கவர்ந்து இழுத்துச் செல்வது உறுதி. அதனால்தானோ என்னவோ 2018-ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட அந்த ஆண்டின் மிகச் சிறந்த கான்செப்ட் என்னும் உயரிய விருதை விஷன் கூபே பெற்றது.

நளினமாக வளைக்கப்பட்ட லைன்கள் (subtly rounded lines). குழிவான பக்கப் பரப்புகள் (concave sides). சற்றே வளைந்த விளிம்புகள், கூராக நீண்டு பளபளக்கும் டீட்டெய்ல்ஸ் என அவுட்ஸ்டாண்டிங் மற்றும் கிளாஸிக்கான இந்த கான்செப்ட் டிசைனுக்கு அடிநாதமாக ஆதாரமாக இருப்பது சோரி (sory). சோரி என்பது சாமுராய்களின் பிரத்தியேக வாள்.

சாமுராய்களின் வாளை நீங்கள் பார்க்க நேர்ந்தால், மற்ற போர் வாள்களைவிட தனித்துவ அடையாளத்துடன் இருப்பதைப் பார்க்க முடியும். ஒரு வாளுக்கும் கார் டிசைனுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்ற கேள்வி இயல்பாகவே நமக்கு வரலாம் . சாமுராய்களின் சோரி என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். அதாவது, இந்த வாளை ஏந்துவதற்கு சாமுராய் வீரன் என்ற நிலை மிக அவசியம் . இந்த வாள் புனிதத்தன்மை கொண்டதாக நம்பப்படுகிறது . ஒரு சாமுராய் வீரன், மிக மிக அவசியமான சூழலில் மட்டுமே இந்த வாளைப் பயன்படுத்துவான் என்று சோரி வாளைத் தொடர்ந்து ஆய்ந்து கொண்டே சென்றால் ஜப்பானியர்களின் தேர்ந்த, ஆழ்ந்த வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளைத் தரிசிக்கலாம்.

வேகம், கூர்மை, பளபள வென்றிருக்கும் தனித்துவமாகத் தயாரிக்கப்பட்ட க்ராஃப்ட்மேன்ஷிப், அறிவு செறிந்த முரட்டுத்தனம் (பவர்) என மேலும் சில காரணிகள் உண்டு. அப்படித்தான் `Mazda vision coupe’ காரில் சோரி எனும் வாள் கொண்டு தீட்டப்பட்டிருப்பதை உணர்ந்தால், டிசைன் அப்ரிசியேஷனுக்கு, வடிவமைப்புக்கு நாம் தயாராகி வருகிறறோம் என்று பொருள்.

(வடிவமைப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism