Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

- கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக்

- கேள்வி-பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

நான் தினசரி அலுவலகம் சென்று வர (30 கி.மீ) புதிதாக ஒரு ஸ்கூட்டர் வாங்கத் தீர்மானித்துள்ளேன். எனது பட்ஜெட் 70 ஆயிரம் ரூபாய். என்ன ஸ்கூட்டர் வாங்கலாம்?

-மதுசுதன், ஒடிசா.

ங்கள் பட்ஜெட்டில், 110சிசி திறன்கொண்ட ஃபேமிலி ஸ்கூட்டர்களை வாங்க முடியும். அதன்படி பார்த்தால், ஹோண்டா ஆக்டிவா 5G மற்றும் டிவிஎஸ் ஜூபிட்டர் ஆகியவற்றின் ஸ்டாண்டர்டு மாடல்கள் வருகின்றன. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் இவைதான் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கின்றன.

மோட்டார் கிளினிக்

எனவே, இவற்றில் எதை நீங்கள் வாங்கினாலுமே, அது பிராண்ட் மதிப்பு - ரீசேல் வேல்யூ - டீலர் நெட்வொர்க் ஆகிய அளவுகோல்களின்படி நல்ல சாய்ஸாகவே இருக்கும்.

கொடுக்கும் காசுக்கு மதிப்பு என்று பார்த்தால், டிவிஎஸ் ஜூபிட்டர்தான்! ஆனால், ஹோண்டா ஆக்டிவா மீதான நம்பகத்தன்மை மக்களிடையே அதிகமாக இருக்கிறது.

ஆகவே இரு ஸ்கூட்டர்களையும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து, உங்களுக்கேற்ற மாடலைத் தேர்ந்தெடுக்கவும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டாடா மோட்டார்ஸ், ஹெக்ஸாவின் உற்பத்தியை நிறுத்தப் போவதாகச் செய்திகள் வருகின்றனவே... அது உண்மையா?

- மோகன் ராஜ், இமெயில்.

து குறித்து டாடாவிடமிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால் 2019 ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த நிறுவனம் காட்சிப்படுத்திய பஸ்ஸார்டு எஸ்யூவி, ஹெக்ஸாவுக்கு மாற்றாக பொசிஷன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அதிக எண்ணிக்கையில் இருந்த தனது ப்ளாட்ஃபார்ம்களின் எண்ணிக்கையை இரண்டாகக் (ஆல்ஃபா, ஒமேகா) குறைத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். இவற்றில் ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி, எம்பிவி என எல்லா வாகனங்களையும் உருவாக்க முடியும். ஆனால், இவற்றில் மோனோகாக் சேஸி மட்டுமே சாத்தியம்!

மோட்டார் கிளினிக்

இதனால் லேடர் ஃபிரேமைக் கொண்டிருக்கும் சஃபாரி ஸ்டார்ம், சுமோ கோல்டு, ஹெக்ஸா ஆகியவற்றை, வரவிருக்கும் BS-6 மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளுக்கேற்ப டாடா மோட்டார்ஸ் அப்டேட் செய்வது சந்தேகமே!

எனக்கு பஜாஜின் டொமினார் மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் தற்போதைய மாடலில், முன்பைப்போல சிவப்பு நிறம் இல்லையே... இது விற்பனைக்கு வருமா?

- கே.எம்.நரேந்திரன், திருவாரூர்.

டந்த ஏப்ரல் மாதத்தில் டொமினாரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பஜாஜ் அறிமுகப்படுத்திய போது, அது பச்சை மற்றும் கறுப்பு ஆகிய இரு நிறங்களில் மட்டுமே கிடைத்தது. ஆனால் டிவி விளம்பரத்தில், சிவப்பு மற்றும் சில்வர் ஆகிய நிறங்கள் இடம்பெற்றிருந்தன.

மோட்டார் கிளினிக்

இந்த நிறங்கள் கொண்ட பைக்குகளை பஜாஜ் இப்போது ஏற்றுமதி மட்டுமே செய்துவருகிறது. ஆனால் விரைவில் இந்த நிற பைக்குகளை இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். சில பஜாஜ் டீலர்களுக்கு ஏற்கெனவே, சிவப்பு நிற டொமினார்கள் வரத் தொடங்கிவிட்டன!

நான் சவுதி அரேபியாவில் பணிபுரிகிறேன். நான் இந்தியாவுக்கு வரும்போது, ரிவோல்ட் RV400 எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். இது FAME-II திட்டத்தின் கீழ் வருமா, எலெக்ட்ரிக் பைக்குக்கான மானியத்தைப் பெறுவது எப்படி?

-மொகமது குத்புதீன், நாகப்பட்டினம்.

FAME-II திட்டத்திற்காக, 10,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது மத்திய அரசு. அதன்படி 10 லட்சம் எலெக்ட்ரிக் 2-வீலர்கள், 5 லட்சம் எலெக்ட்ரிக் 3-வீலர்கள், 55,000 எலெக்ட்ரிக் கார்கள், 7,000 எலெக்ட்ரிக் பஸ்கள் மானியத்தைப் பெறவிருக்கின்றன.

மோட்டார் கிளினிக்

ஆனால் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், கைனடிக் கிரீன் எனர்ஜி & பவர், ஜிதெந்திரா நியூ EV டெக், ஒகினவா ஆட்டோ டெக், ஏத்தர் எனர்ஜி, ஆம்பியர் வெஹிக்கிள்ஸ் ஆகிய 7 நிறுவனங்கள் மட்டுமே, FAME II வகுத்திருக்கும் விதிமுறைகளின்படி தமது தயாரிப்புகளை வைத்திருக்கிறார்கள். இந்த மானியத் தொகை, அவற்றின் விலையிலிருந்து குறைக்கப்படும். எனவே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ரிவோல்ட் RV 400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு, FAME II வழியே இப்போதைக்கு மானியம் கிடைக்காது!

இந்தியா முழுவதும் இனி எலெக்ட்ரிக் கார்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இதனால் வருங்காலத்தில், யூஸ்டு கார்களின் விற்பனை எப்படி இருக்கும்... அவற்றை வாங்கி உபயோகப்படுத்துவதில் பிரச்னை இருக்குமா?

-சாமுவேல் ஜெயராஜ், கோவை.

2023-ல் எலெக்ட்ரிக் 3-வீலர்கள், 2025-ல் எலெக்ட்ரிக் 2-வீலர்கள் (150சிசி திறனுக்குட்பட்டவை), 2030-ல் எலெக்ட்ரிக் கார்கள் ஆகியவற்றைக் கட்டாயமாக்க, மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.

மோட்டார் கிளினிக்

எனவே ஒருவேளை இது கட்டாயமாக்கப் பட்டால், ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமொபைல் துறையின் இயங்குமுறையே மாறிவிடும்! அந்தந்த செக்மென்ட்களில் இன்ஜின்கள் கொண்ட வாகனங்கள் கிடைக்காத பட்சத்தில், யூஸ்டு செக்மென்ட்டில் டிமாண்ட் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

ஒரு புதிய வாகனத்தைப் பதிவு செய்யும்போது, அது 15 ஆண்டுகள் வரை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும். எனவே யூஸ்டு கார்களை வாங்கிப் பயன்படுத்துவதில், எந்தவிதமான சிக்கலும் இப்போதைக்கு இருக்காது. டெல்லியில் 15 ஆண்டுகள் (பெட்ரோல் வாகனம்),

10 ஆண்டுகள் (டீசல் வாகனம்) பயன்படுத்தப்பட்ட வாகனங்களைச் சாலையில் அனுமதிக்கக்கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சொல்லியிருந்த நிலையில், அது அதிகரித்துவரும் காற்று மாசுக்கான தீர்வாக, நாடெங்கும் அமலுக்கு வரக்கூடிய சூழலும் இருக்கிறது. ஆனால் இவை எதுவுமே உடனடியாக நடைபெறாது.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com