Published:Updated:

மோட்டார் கிளினிக்

கார்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்

கேள்வி-பதில்

7 பேர் செல்லக்கூடிய எம்பிவி வாங்கும் முடிவில் இருக்கிறேன். அது பெட்ரோல் காராக இருப்பதுடன், அதில் வயதானவர்களுக்கு ஏதுவான புஷ் பேக் சீட்கள் இருப்பது அவசியம். மாருதி சுஸூகியின் எர்டிகா அல்லது XL6 ஆகியவற்றில் எதை வாங்கலாம்? இவற்றின் டாப் வேரியன்ட்களில் ஏதேனும் வித்தியாசம் இருக்கின்றனவா?

- நானி, ஃபேஸ்புக்.

கார்
கார்

ரண்டுமே அடிப்படையில் ஒன்றுதான். எர்டிகாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் XL6, எஸ்யூவி ஃபீலிங்கில் ஒரு எம்பிவி வேண்டும் என்பவர்களைத் திருப்திப்படுத்துகிறது. மேலும், எர்டிகா வழக்கமான Arena ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட்டால், XL6 ப்ரீமியமான நெக்ஸா ஷோரூமில் கிடைக்கும். எனவே அதனை நியாயப்படுத்தும் விதமாக LED DRL உடனான LED ஹெட்லைட்ஸ், Leatherette சீட்கள், Follow Me Home உடனான ஆட்டோ ஹெட்லைட்ஸ், Knitted Roof Liner, கறுப்பு நிற கேபின், க்ரூஸ் கன்ட்ரோல், டூயல் டோன் வெளிப்புறம் போன்ற வசதிகளைச் சேர்த்திருக்கிறார்கள். தவிர, எர்டிகாவைவிட அதிக விலையில் வரும் XL-6ன் நடுவரிசையில், பென்ச் சீட்களுக்குப் பதிலாக 2 கேப்டன் சீட்கள். பெயருக்கேற்றபடியே 6 சீட்டராகவே இந்த கார் இருக்கிறது. எனவே 7 சீட்களைக் கொண்ட கார் வேண்டும் என்றால், எர்டிகாதான் உங்களுக்கான சாய்ஸாக இருக்கும். இவை இரண்டிலும் இருப்பது ஒரே 1.5 லிட்டர் SHVS பெட்ரோல் இன்ஜின் - MT/AT கியர்பாக்ஸ் காம்போதான். ரெனோவின் ட்ரைபரைக்கூட நீங்கள் பரிசிலிக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நான் கடந்த 3 ஆண்டுகளாக, பஜாஜ் டொமினார் பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது ரெட்ரோ - மாடர்ன் பைக்குகள் மீதான ஆர்வத்தால், 3 மாடல்களை இறுதி செய்திருக்கிறேன். பெனெல்லி இம்பீரியல் 400, RE க்ளாஸிக் 350, ஜாவா 42 ஆகிய பைக்குகளில் எதை வாங்கலாம்?

- முகமத் சஃபியுல்லா, ஃபேஸ்புக்.

பைக்
பைக்

ற்கெனவே டொமினார் வைத்திருப்பதால், நீங்கள் கூறியிருக்கும் ரெட்ரோ - மாடர்ன் பைக்குகளுக்குச் செல்வது என்பது ஒரு Downgrade ஆகவே இருக்கும். ஏனெனில் க்ளாஸிக் - ஜாவா - இம்பீரியல் ஆகிய பைக்குகளில் டொமினாருக்குச் சமமான திறனைக் கொண்ட இன்ஜின் இருந்தாலும், அவை செயல்திறனில் மிகவும் பின்தங்கியிருக்கின்றன. எனவே, ரிலாக்ஸ்டான ஓட்டுதலை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கும் இவை, டொமினாருடன் ஒப்பிடும்போது பர்ஃபாமன்ஸில் அதிரடிக்காது. இம்பீரியல் BS-6 வெர்ஷனை பெனெல்லி அறிமுகப்படுத்தவில்லை. எனவே, முன்பைவிடக் கூடுதல் விலையில் இது வெளிவரலாம். ஜாவா 42 பைக்கின் BS-6 வெர்ஷன், ஜாவாவின் ஷோரூம்களை எட்டிவிட்டன. Perak பைக்கூட வித்தியாசமான ஆப்ஷனாக இருக்கலாம். அலாய் வீல்கள் - மேட் ஃபினிஷ் கலர்கள் - டியூப்லெஸ் டயர்கள் - டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றுடன் வந்த க்ளாஸிக் 350-ன் BS-6 வெர்ஷன், அதன் இறுதிக்காலத்தில் இருக்கிறது என்பதே நிதர்சனம். இதன் அடுத்த தலைமுறை மாடலைக் களமிறக்கும் முடிவில் ராயல் என்ஃபீல்டு இருப்பது தெரிந்ததே! கொரோனா அதன் அறிமுகத்தைத் தள்ளி வைத்துவிட்டது. எனவே, ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், நீங்கள் சில காலம் காத்திருப்பதே நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5 சீட்டர் ஆட்டோமேட்டிக் எஸ்யூவி வாங்கத் தீர்மானித்து விட்டேன். எனது பட்ஜெட் 12 லட்ச ரூபாய். டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3OO, ரெனோ டஸ்ட்டர், கியா செல்ட்டோஸ் ஆகியவற்றில் எது பெஸ்ட்? டஸ்ட்டர் எனக்குப் பிடித்திருந்தாலும், அதில் பல வசதிகள் இல்லாதது ஏமாற்றத்தைத் தருகிறது. நல்ல காராக இருந்தாலும், செல்ட்டோஸின் வெயிட்டிங் பீரியட் எனக்குச் சரிப்படாது. க்ராஷ் டெஸ்ட்டில் நெக்ஸான் மற்றும் XUV3OO ஆகிய இரண்டுமே 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கின்றன. எனவே, எனக்கு எதை வாங்குவது என்பதில் குழப்பமாக இருக்கிறது. எனக்கு இடவசதி மிகவும் முக்கியம்.

பாலாஜி, ஃபேஸ்புக்.

கார்
கார்

ஹிந்திரா XUV3OO காரின் பெட்ரோல் மாடலில், ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் கிடையாது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது வயதாகிவிட்டாலும், இன்றுமே டஸ்ட்டர் ஒரு சிறப்பான எஸ்யூவிதான். எனவே தற்போது விற்பனையில் இருக்கும் NA இன்ஜின் கொண்ட மாடலைவிட, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட டஸ்ட்டருக்காக நீங்கள் கொஞ்சம் காத்திருக்கலாம். உங்கள் பட்ஜெட்டை நீங்கள் அதிகப்படுத்தினால் மட்டுமே, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனான கியா செல்ட்டோஸை நீங்கள் வாங்கமுடியும். இதனால் BS-4 மாடலைவிட 10bhp கூடுதல் பவருடன் வந்த நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் BS-6 மாடல், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தயாரிப்பாக இருக்கலாம். உங்கள் பட்ஜெட்டை 1 லட்ச ரூபாய் வரை அதிகப்படுத்தினால், போதுமான வசதிகளுடன் கூடிய XZA+ DT வேரியன்ட்டை நீங்கள் வாங்க முடியும். டெஸ்ட் டிரைவ் செய்துபார்த்துவிட்டு முடிவெடுங்கள்.

பல்ஸர் NS160 பைக்கின் BS-6 மாடல் எப்படி இருக்கிறது?

- ரமேஷ் கண்ணன், ஃபேஸ்புக்.

பைக்
பைக்

BS-4ல் இருந்து BS-6க்கு அப்கிரேடு ஆகும்போது, பல டூ-வீலர்கள் தமது செயல்திறனில் கொஞ்சம் சரிவைக் கண்டிருக்கின்றன. ஆனால் பல்ஸர் NS160 பைக்கைப் பொறுத்தவரை, அது முன்பைவிட 1.7bhp அதிக பவரை அதிக ஆர்பிஎம்மில் வெளிப்படுத்துவது ஆச்சர்யமான விஷயம்தான் (BS-4: 15.5bhp@8,500rpm, BS-6: 17.2bhp@9,000rpm). ஆனால், ட்வின் டிஸ்க் பிரேக்கைக் கொண்டிருந்த BS-4 பல்ஸர் NS160-யைவிட (145 கிலோ), அதன் BS-6 மாடல் 6 கிலோ அதிக எடையில் இருப்பது மைனஸ் (151 கிலோ). மற்றபடி பைக்கின் வெளித்தோற்றம் மற்றும் வசதிகளில் எந்த மாறுதலும் இல்லை. தற்போதைய சூழலில் MT-15 பைக்கைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 150-160சிசி செக்மென்ட்டில் பவர்ஃபுல்லான நேக்கட் பைக் பல்ஸர் NS160தான். BS-4 வெர்ஷனில் அப்பாச்சி RTR 160 4V பைக்கிடம் இழந்த இடத்தை, இந்த பஜாஜ் பைக் மீண்டும் தன்வசப்படுத்தி இருக்கிறது.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com