பிரீமியம் ஸ்டோரி

நான் முதன்முறையாக பைக் வாங்க முடிவெடுத்துள்ளேன். அது சிறப்பான மைலேஜ் மற்றும் ஸ்டைலான டிசைனைக் கொண்டிருக்க வேண்டும். நான், எனது மனைவி மற்றும் குழந்தை பயணிக்கும்படி அது சொகுசான பைக்காகவும் இருப்பது அவசியம்.

BS-6 காரணமாக பைக்குகளின் விலை அதிகரித்திருப்பதால், 125சிசி அல்லது 150சிசி ஆகியவற்றில் எதை வாங்குவது என்பதில் குழப்பம் இருக்கிறது. பட்ஜெட் ஒரு பொருட்டல்ல!

-எஸ்.எம்.சுந்தரம், இன்ஸ்டாகிராம்.

ங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, சிங்கிள் பீஸ் சீட் கொண்ட பைக் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இருப்பினும் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்வது என்பது, பாதுகாப்பான விஷயம் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். நகரத்தில் மட்டுமே பைக்கைப் பயன்படுத்துவீர்கள் என்றால், 125சிசி பைக்கே உங்களுக்குப் போதுமானதாக இருக்கும்.

ஒருவேளை நெடுஞ்சாலைகளிலும் பயணிப்பீர்கள் என்றால், 150சிசி பைக்கை நீங்கள் தேர்வு செய்யலாம்.

கேள்வி-பதில்
கேள்வி-பதில்

125சிசி செக்மென்ட்டில் ஷைன் BS-6 மற்றும் 150சிசி செக்மென்ட்டில் பல்ஸர் Neon BS-6 ஆகியவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். இரண்டுமே கம்யூட்டர் வகையைச் சேர்ந்தவை என்பதால், அடிப்படை குணாதிசயத்தில் இரு பைக்குகளுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இதனாலேயே ஒவ்வொரு மாதமும் அதிகமாக விற்பனையாகும் டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் இவை தவறாமல் இடம்பிடித்து விடுகின்றன. இரு பைக்கையும் டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவெடுக்கவும்.

நான் 1986-ம் ஆண்டைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்டு புல்லட்டைப் பயன்படுத்தி வருகிறேன். இதுபோன்ற பழைய வாகனங்களுக்குக் கொடுக்கப்படும் FC-யை, தமிழக அரசாங்கம் நிறுத்தப் போகிறதா? இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்?

- ராகுல், ஃபேஸ்புக்.

கடந்தாண்டில் வெளியான மோட்டார் வாகனச் சட்டத்தில், அபராதம் மற்றும் தண்டனைகளே அதிகரிக்கப்பட்டன. மேலும் Scrappage Policy குறித்த பேச்சுவார்த்தைகளில் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. எனவே, மத்திய அல்லது மாநில அரசாங்கத்திடமிருந்து இதுபற்றிய முறையான அறிவிப்பு வரும்வரை, உங்கள் பைக்கிற்கு FC பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. பழைய புல்லட்கள் கொஞ்சம் கரும்புகையைக் கக்குவதில் பெயர் பெற்றவை என்பதால், உங்கள் வாகனத்தை முழுவதுமாக சர்வீஸ் செய்துவிடுவது நலம். மேலும் FC-க்குப் பைக்கை எடுத்துச்செல்லும் முன்பு, அதன் இன்சூரன்ஸ் காலாவதி ஆகாமல் அப்டேட்டாக இருப்பதுடன், முறையான புகை மாசுச் சான்றிதழைப் பெற்றிருப்பதும் அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் 2018-ம் ஆண்டைச் சேர்ந்த ஹூண்டாய் i20 காரை வைத்திருக்கிறேன். எத்தனை முறை துடைத்தாலும், அது பளபளப்பாகவே இருந்ததில்லை. மேலும் காரை வாங்கிய நாளில் இருந்தே, அதில் Buffing Scratches அதிகமாக இருக்கின்றன. இதைச் சரிசெய்ய வழி உண்டா? கேபின் ஃப்ளோரில் PVC ஃப்ளோர்மேட் பயன்படுத்தலாமா?

-ஆர்.எஸ்.சிவக்குமார், ஃபேஸ்புக்.

ங்கள் காரில் மெட்டாலிக் பெயின்ட் இருக்கும்பட்சத்தில், தாராளமாக நீங்கள் உங்கள் காரில் Nano Ceramic Coating மேற்கொள்ளலாம். இதில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேக்கேஜைப் பொறுத்து, முழு காருக்கும் செய்யப்படும் கோட்டிங்கின் வாரன்ட்டி மாறுபடும். இந்தப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, காரின் பாடியில் திடமான ஸ்க்ராட்ச் அல்லது பெயின்ட்டில் இடர்பாடு ஏதும் இருந்தால், அதனை முதலில் முழுக்கச் சரிசெய்து விடுவார்கள்.

கேள்வி-பதில்
கேள்வி-பதில்

மொத்தத்தில் இது கொஞ்சம் காஸ்ட்லியாகத் தெரிந்தாலும், கொடுக்கும் காசுக்கான மதிப்பு இருக்கவே செய்கிறது. Nano Ceramic Coating செய்யப்பட்ட காரில், தூசு/மண் - பறவைகளின் எச்சம் - மழை நீர் ஆகியவை நிற்காது என்பது ப்ளஸ். தனித்தனிப் பாகங்களாக இருக்கும் ஃப்ளோர்மேட்களைப் பயன்படுத்தும்போது, காரின் கேபினைச் சுத்தம் செய்வது சுலபமான வேலையாக இருக்கும். மேலும் காரின் ஃப்ளோருக்குள் நீர்/அழுக்கு புகாத தன்மையை இவை பெற்றுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் சில நேரங்களில், இவை சீப்பான லுக்கையும் தரவே செய்கின்றன.

கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் முன்பு, எனது காரில் ஃபுல் டேங்க் பெட்ரோல் போட்டிருந்தேன். தற்போது 2 மாதங்களாக, காரில் மேற்கொண்டு பெட்ரோல் போடுவதற்கான தேவை ஏற்படவில்லை. இதனால் காரில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?

-சிவராமன், ஃபேஸ்புக்.

நீங்கள் காரை கவர் போடாமல் வெயிலில் அப்படியே நிறுத்தியிருந்தால், வெப்பம் காரணமாக பெட்ரோலின் அளவில் சிற்சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி டேங்க்கில் தொடர்ச்சியாக பெட்ரோல் இருப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஏனெனில் நீங்கள் இக்னீஷனை ஆன் செய்தபிறகே, டேங்க்கில் இருக்கும் பெட்ரோல் இன்ஜினுக்குச் செல்லத் தயாராகும்.

எனவே, இதற்கு வழிவகை செய்யும் பாகங்களிலும் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும் வாரத்துக்கு இருமுறையாவது காரை ஸ்டார்ட் செய்து, ஐடிலிங்கில் 5-10 நிமிடங்கள் வரை அப்படியே ஓடவிடுவது நல்லது.

கேள்வி-பதில்
கேள்வி-பதில்

இந்த நேரத்தில் காரில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் விஷயங்களான லைட்டிங், மியூசிக் சிஸ்டம், ஏசி, பவர் விண்டோஸ், ரிமோட் லாக்கிங், மிரர்கள், வைப்பர்கள் ஆகியவை சரியாக இயங்குகின்றனவா என்பதையும் செக் செய்யலாம்.

மேலும் முடிந்தால், வீடு இருக்கும் பகுதியைச் சுற்றி ஒரு ரவுண்ட் போய் வருவது நலம். இதனால் டயர்களில் Flat Spot ஏற்படுவது குறையும் என்பதுடன், கியர்பாக்ஸ் -க்ளட்ச் - ஸ்டீயரிங் - பிரேக்ஸ் - சஸ்பென்ஷன் ஆகியவற்றைப் பரிசோதனை செய்த மாதிரியும் இருக்கும். இதனை முடித்துவிட்டு, நிழலில் காரை நிறுத்தினால் நல்லது.

நான் பல்ஸர் 150 பைக்கை வைத்துள்ளேன். பல்ஸர் 220 பைக்கில் இருக்கும் செமி ஃபேரிங் மற்றும் க்ளிப் ஆன் ஹேண்டில்பாரை எனது பைக்கில் பொருத்தலாமா? இதனால் சட்டரீதியாக ஏதேனும் சிக்கல் வருமா? போலீஸ் கேட்கும்போது, பைக்கின் ஆவணங்களை mParivahan மொபைல் ஆப்பில் காட்டலாமா?

-சீனிவாசன், ஃபேஸ்புக்.

நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், சிங்கிள் பீஸ் ஹேண்டில்பாருடன் வந்த பல்ஸர் பைக்கையே நீங்கள் வைத்திருப்பதாக தோன்றுகிறது. ஒரே பெட்ரோல் டேங்க் - ஸ்விட்ச்கள் - மீட்டர்தான் பல்ஸர் 150 மற்றும் 220 பைக்கில் இருப்பதால், நீங்கள் கேட்ட மாடிஃபிகேஷன் செய்வது கொஞ்சம் சுலபம்தான். ஆனால் செமி ஃபேரிங்கைச் சேர்க்கும்போது, உங்கள் பைக்கின் முன்பக்கத்தில் எடை கூடிவிடும்.

கேள்வி-பதில்
கேள்வி-பதில்

இதனால் முன்பக்க டயர், பிரேக், ஃபோர்க் ஆகியவற்றின் தேய்மானம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். வாகனத்தின் கண்டிஷனைப் பொறுத்து, பர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜிலும் வித்தியாசம் இருக்கும். மேலும் இதிலிருக்கும் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுக்கு ஏற்றபடி, வயரிங் - Inner Shield - பேட்டரியில் மாற்றம் செய்ய வேண்டும்.

தவிர, 2 பீஸ் ஹேண்டில்பாருக்கு ஏற்றபடியான ஆக்ஸிலரேட்டர் மற்றும் கிளட்ச் கேபிள்களைப் பொருத்த வேண்டும். இதனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பைக்கின் ஓட்டுதல் அனுபவத்தில் கணிசமான மாறுதல் தெரியும். முன்னே சொன்ன மாற்றங்களால், RC புக்கில் இருக்கும் விபரங்களுக்கும் இதற்கும் ஒற்றுமை இருக்காது.

எனவே இதை Endorsement செய்யாத பட்சத்தில், நீங்கள் கேட்ட மாடிஃபிகேஷன்களைச் செய்வதை ஏற்கமுடியாது. Digi Locker மற்றும் mParivahan செயலிகளை, வாகனத்தின் ஆவணங்களை டிஜிட்டலாகச் சேமித்து வைக்கப் பயன்படுத்தலாம். தேவை ஏற்படும்போது, இதிலிருப்பதை போலீஸிடம் காண்பிக்கலாம். ஆனால், வாகனத்தில் இந்த ஆவணங்களின் ஜெராக்ஸ் காப்பியை உடன் வைத்திருப்பது நலம்.

எனது பட்ஜெட் 10 லட்ச ரூபாய். ஏற்கெனவே டொயொட்டா இனோவா வைத்திருந்தாலும், ஒரு 5 சீட்டர் டீசல் காரை வாங்க ஆசைப்படுகிறேன். அது குறைவான பராமரிப்பைக் கொண்டிருப்பது அவசியம். 1.8 லட்சம் கிமீ ஓடிவிட்டதால்,

2013-ம் ஆண்டைச் சேர்ந்த இனோவாவை விற்க முடிவு செய்து விட்டேன். அதன் ரீ-சேல் மதிப்பு என்ன?

-பி.எஸ்.பாரதி, ஃபேஸ்புக்.

ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் இருக்கக் கூடிய பெலினோ - கிளான்ஸா - i20 ஆகியவற்றில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. புதிய i20-ல், டீசல் இன்ஜினின் கம்பேக் அமையக்கூடும். கொரோனா காரணமாக, ஜாஸின் BS-6 டீசல் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இதன் அறிமுகம் காலதாமதமாகிவிட்டது. எனவே, டீசல் கார் உடனடியாக வேண்டும் என்றால், டாடாவின் அல்ட்ராஸை நீங்கள் தேர்வு செய்யலாம்.

கேள்வி-பதில்
கேள்வி-பதில்

ஸ்டைலான டிசைன், மாடர்ன் கேபின், அதிக வசதிகள், மனநிறைவைத் தரும் பர்ஃபாமன்ஸ் - மைலேஜ், ஓட்டுதல் அனுபவம், விலை, பராமரிப்பு என ஒரு ஆல்ரவுண்டர் பேக்கேஜாக இது அசத்துகிறது. மேலும் Global NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார் ரேட்டிங்கை அல்ட்ராஸ் பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்கது. உங்கள் இனோவா 2.5V வேரியன்ட் - 2வது ஓனர் என நீங்கள் குறிப்பிட்டதால், 8 லட்ச ரூபாய் வரை விலை போவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை பெட்ரோல் ஹேட்ச்பேக் வாங்கும் முடிவில் இருந்தால், டொயோட்டா ஷோரூமுக்குச் சென்று, இனோவாவை எக்ஸ்சேஞ்ச்சில் கொடுத்துவிட்டு, SHVS உடனான கிளான்ஸாவை அப்படியே வாங்கி விடலாம்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு