Published:Updated:

திரும்பவும் போலோ கப்!

ஃபோக்ஸ்வாகன் போலோ கப்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபோக்ஸ்வாகன் போலோ கப்

ரேஸ் வரலாறு: ஃபோக்ஸ்வாகன் போலோ கப்

புனே நகரில் ஃபோக்ஸ்வாகனின் முதல் போலோ கப் ரேஸ் நடைபெற்ற நாள் மே 30, 2010. இந்தியாவில் ஃபோக்ஸ்வாகன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. பந்தயங்களில் நேரடியாக ஈடுபடும் ஒரே கார் நிறுவனம், இந்தியாவில் ஃபோக்ஸ்வாகன் மட்டுமே. 10 ஆண்டுகள் கடந்தும் ரேஸ் களத்தில் தங்களுடைய கார்களை நிரூபிக்க, வேறு எந்த கார் தயாரிப்பாளரும் முன்வரவில்லை.

போலோ கப் என்பது உலகளவில் மதிக்கப்படும் கார் பந்தயம். இதை இந்தியாவில் கொண்டு வரும் கனவோடு ஃபோக்ஸ்வாகன் இறங்கியது. ஆனால், காலப்போக்கில் வென்ட்டோ கப், ஏமியோ கப் எனப் பல மாற்றங்கள் அடைந்து, இப்போது 2020 முதல் மீண்டும் போலோ கப் ஆக மாறியுள்ளது.

ஃபோக்ஸ்வாகன் போலோ கப்
ஃபோக்ஸ்வாகன் போலோ கப்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

போலோ கப்பின் முதல் இரண்டு சீசன்கள், நேரடியாக ஃபோக்ஸ்வாகன் ஜெர்மனியின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. போலோ கப்-பின் முதல் கார் சுவாரஸ்யமானது. போலோ TDI 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் போல்ட் மூலம் தனியாக ரோல் கேஜ் பொருத்தப்பட்ட கார். இந்தியாவில் முதன்முதலில் டீசல் இன்ஜினை ரேஸில் பயன்படுத்தியது ஃபோக்ஸ்வாகன் தான்.

இன்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் டயர் ரேஸுக்கு ஏற்ப டியூன் செய்யப்பட்டிருந்தது. ஏபிஎஸ் இல்லை. வேகமாக கியர் மாற உதவும் சீக்வென்ஷியல் கியர்பாக்ஸ் கிடையாது; சாதாரண காரில் வரும் அதே மேனுவல் கியர்பாக்ஸ்தான். முதல் முதலில் கார் ரேஸில் ஈடுபட நினைக்கும் அத்தனை பேருக்கும் ஒரு சரியான ஆரம்பமாக இருந்தது அப்போதைய போலோ.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதல் சீசனின் வெற்றியாளர் ஜெர்மனியில் நடைபெற்ற Scirocco R-Cup போட்டியில் கலந்து கொண்டார். 2012-ம் ஆண்டு, இந்தப் போட்டி முதல் முறையாக புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்தியாவின் ரேஸ் போலோ, இரண்டாம் தலைமுறைக்கு மாறியது. புது காரில், 1.4 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டது. 177bhp பவர் தரும் இந்த இன்ஜின் டர்போ சார்ஜர் மற்றும் சூப்பர் சார்ஜர் இரண்டும் சேர்ந்த காம்பினேஷனுடன் சிலிர்க்கும் வேகங்களுக்கு அடிக்கோடிட்டது. ரேஸுக்காகவே தயாரிக்கப்பட்ட 6 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் மற்றும் பேடில் ஷிஃப்ட்டர் டிரைவர்களுக்கு இன்னும் உற்சாகத்தைக் கொடுத்தது.

2013-ல் நடைபெற்ற போலோ கப் போட்டியைப் பார்க்க, 20,000 பேர் புத் சர்க்யூட்டில் கூடினார்கள். இந்தியாவில் ஒன்மேக் போட்டிக்கு வந்த பார்வையாளர்களில் இதுதான் அதிகம். ஃபோக்ஸ்வாகன் போலோ கப்பின் கடைசி ஆண்டு அதுதான். இந்த ஆண்டின் இறுதியில்தான் போலோ கப், வென்ட்டோ கப்பாக மாறியது. தொடர்ந்து போலோ கப் சாம்பியன்கள் கோல்ஃப் கப் போட்டிக்கு போலந்துக்கும், சிரோகோ R Cup போட்டிக்கு ஜெர்மனிக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முந்தைய இரண்டு கார்களும் ஜெர்மன் பொறியாளர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டது என்றால், வென்ட்டோதான் முதல் முதலில் இந்திய இன்ஜினீயர்களை ரேஸ் களத்துக்குக் கூட்டி வந்தது. டிரைவ் ட்ரெயின், போலோ TSI-ல் இருந்த அதே பீஸ். ஆனால், ரோல்கேஜ் சேஸியோடு வெல்டு செய்யப்பட்டு, காரின் வடிவமே மாற்றப்பட்டது. இது ஹேண்ட்லிங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 2015-ல் போலோ கப் முடிந்து வென்ட்டோ கப் உருவானது.

ஃபோக்ஸ்வாகன் போலோ கப்
ஃபோக்ஸ்வாகன் போலோ கப்

2017, முழுவதும் ஃபோக்ஸ்வாகன் இந்தியாவால் உருவாக்கப்பட்ட ரேஸ் ஏமியோ, போட்டிக்குத் தயாரானது. 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 205bhp பவர், ரேஸ் ஸ்பெக் கியர்பாக்ஸ், நீட் ஃபார் ஸ்பீடு வீடியோ கேமில் வருவதுபோன்ற ஸ்டைலான ஸ்பாய்லருடன் களமிறங்கியது ஏமியோ. இது ஃபோக்ஸ்வாகன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தலைவர் கிரிஷ் விசா முயற்சியில் உருவான கார். சாதாரண ரோடு டிரைவர்களை ரேஸ் டிரைவர்களாக மாற்ற உருவாக்கப்பட்ட கார் என்று இதைச் சொல்வார்கள்.

இப்போது ஏமியோ கப், ஒன் மேக் என்ற நிலையில் இருந்து முன்னேறி, FMSCI-யால் நேஷனல் சாம்பியன்ஷிப் ரேஸ் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. MRF நேஷனல் சாம்பியன்ஷிப்பில் ஏமியோ க்ளாஸ் வந்துவிட்டது. ஆறு ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் போலோ கப் வருகிறது. 2020 போலோ கப் டிரைவர்களுக்கான தேடல் முடிந்துவிட்டது. விரைவில் போலோ கப் சாம்பியன்ஷிப், நேஷனல் சாம்பியன் ஷிப்பில் இணையும் வாய்ப்புகள் உண்டு.

இந்த 10 ஆண்டுகளில் ஃபோக்ஸ்வாகன் சர்க்யூட் ரேஸில் மட்டுமில்லை, ராலியிலும் தடம் பதித்துள்ளது. ரேஸ் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்லை; ஒரு மெஷினை டெஸ்ட் செய்ய மிக முக்கியமான களம். இதன் மூலம் புதிய சர்வதேசத் தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு வருகின்றன.

`ஃபோர்டு VS ஃபெராரி’ படத்தில் இப்படி ஒரு வசனம் வரும்: “என்ஸோ ஃபெராரி உலகின் சிறந்த கார் தயாரிப்பாளராக வரலாற்றில் இருப்பார். அவரின் கார் வெற்றியைக் குறிக்கிறது. மக்களுக்கு அந்த வெற்றியில் கொஞ்சம் தேவைப்படுகிறது.” வெற்றி என்பது ஒரு போதை. இந்தியாவில் கார் தயாரிப்பாளராக ஃபோக்ஸ்வாகன் எத்தனை விமர்சனங்களைக் கடந்தாலும், மோட்டார் ஸ்போர்ட்ஸில் அதன் அடுத்த 10 ஆண்டுகள் பிரகாசமாகவே இருக்கிறது.