Published:Updated:

இது F1 இல்லை... X1 ரேஸ்!

இது F1 இல்லை... X1 ரேஸ்!
பிரீமியம் ஸ்டோரி
இது F1 இல்லை... X1 ரேஸ்!

ரேஸ்: X1 ரேஸிங் லீக்

இது F1 இல்லை... X1 ரேஸ்!

ரேஸ்: X1 ரேஸிங் லீக்

Published:Updated:
இது F1 இல்லை... X1 ரேஸ்!
பிரீமியம் ஸ்டோரி
இது F1 இல்லை... X1 ரேஸ்!

ன்று ஞாயிற்றுக்கிழமை. படுக்கையிலிருந்து எழுந்ததுதான் நினைவில் இருந்தது. கொஞ்ச நேரத்தில் `வ்வ்ர்ரூம்’ சத்தம் காதுகளில் பாய்ந்தது. ஆம்! MMRT ரேஸ் ட்ராக்கில் இருந்தேன். புதிதாக தொடங்கப்பட்ட X1 கார் பந்தயம் அது. வெள்ளை, பச்சை, மஞ்சள் என்று கலர் கலராக கார்கள் பறந்து கொண்டிருந்தன.

ஆறு அணிகள்; ஓர் அணிக்கு இரண்டு கார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். பயிற்சிச் சுற்று முடிந்ததும், முதல் பந்தயச் சுற்று ஆரம்பமானது. பயிற்சி ஓட்டத்தின் லேப் டைமிங் அடிப்படையில் குறைவான டைமிங் கொண்ட கார்கள் முன் வரிசையில் நின்றிருந்தன. ஐந்து நிமிடம் கார்களிலிருந்து சத்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது. அந்தச் சத்தம் ஒரு போதை. காது வழியாகக் கபாலத்துக்குள் புகுந்து, நரம்பின் வழி உடல் முழுவதும் பரவியது. வெயில் கொளுத்தியபோதும், உள்ளூர ஒரு குளிர்ச்சி. ரேஸ் காரின் ஒவ்வொரு அலறல் சத்தத்தின் போதும் உள்ளுக்குள் ஓர் அதிசயம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொடி அசைந்தது. பந்தயம் தொடங்கியது. பலத்த ஆரவாரத்திற்கிடையே கார்கள் வேகமாகச் சீறிப்பாய்ந்தன. சத்தம் மட்டும் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது. அதென்னவோ பந்தயம் என்று வந்துவிட்டால் பின் வரக்கூடிய கார்கள் முன் வர வேண்டும் என்றே மனது துடிக்கிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ரேஸ் ட்ராக் இருந்தது.

 ரேஸ்: X1 ரேஸிங் லீக்
ரேஸ்: X1 ரேஸிங் லீக்

போனை எடுத்து இரண்டு பேருக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதற்குள் ஒரு லேப் முடிந்துவிடுகிறது. மஞ்சள் காரின் மீதான என் பார்வை மட்டும் அப்படியே இருந்தது. சிஎஸ்கே போலவே மஞ்சள்தான் சென்னை அணி. சென்னை இந்த ரேஸில் வென்றுவிடாதா? மஞ்சள் மகுடம் சூடி விடாதா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். ஒரு சிஎஸ்கே ரசிகனின் உணர்ச்சி. எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி தோற்றுப்போனது. மற்ற அணிகளிலிருந்து இரண்டு கார்கள் பறந்து கொண்டிருந்தன. சென்னை அணி சார்பில் ஒரே ஒரு மஞ்சள் கார் மட்டும்தான் ரேஸ் ட்ராக் முழுவதுமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. நான் அந்த ஒரு காரை மட்டும்தான் உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அது முன்னே வந்து விடாதா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். சென்னை மட்டும் ஏன் ஒரே ஒரு கார் ஓட்டுகிறார்கள் என்ற கேள்வி வர, பிட் பக்கம் சென்றேன்.

‘பிட்’ என்று சொல்லப்படும் கார்களை நிறுத்தி வைக்கும் இடத்தில், சென்னையின் ஒரு கார் ரிப்பேர் ஆகி ஓரம்கட்டப் பட்டிருந்தது. ரிப்பேர் ஆன காரை, இறந்தவர்களைப்போல் பார்த்துக் கொண்டிருந்தேன். அது தோனியின் ரன்‌அவுட்டை நினைவூட்டியது. ரிப்பேருக்கு என்ன காரணம் என்பதை அறியும் நோக்கில், பிட் ஸ்டாப்பில் கொஞ்சம் பதற்றத்தோடு காணப்பட்டார் நரேன் கார்த்திகேயன்.

பின், பொறுத்திருந்து பார்த்தேன். அந்த கார் மட்டும் வரவேயில்லை. போதுமான அளவு வீடியோக்கள், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்க்ள போட்டுவிட்டு அங்கிருந்த ரேஸர்களைப் பார்த்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது, இந்த வாழ்க்கையில் நாமும் ஒரு ரேஸர் என்றே தோன்றியது. பைக்கை வேகமாக முறுக்கினேன். நகரத்தின் சாலையை அடைந்தவுடன், டிராஃபிக்கில் எனக்குள் இருந்த ரேஸனைத் தூங்க வைத்து விட்டேன்.