என்ன தான் டெக்னாலஜி டெவெலப் ஆனாலும், எவ்வளவு புதுப் புது அம்சங்களுடன் கார்கள் வந்தாலும், பழைமையான கார்களுக்கு என்றுமே மவுசு குறையாது. சாலையில் ஒரு வின்டேஜ் காரை பார்த்தாலே நம் புருவம் உயர்ந்து விடும். கிட்டத்தட்ட 50 வின்டேஜ் கார்களுக்கு மேல ஒரே இடத்துல பார்க்க வாய்ப்பு கிடைச்சா எப்படி இருக்கும்? ஒரு வாசகனான எனக்கு இந்த மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மோட்டார் விகடன். அப்புறம், `மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் க்ளப்’.

இந்த க்ளப் கடந்த 19 ஆண்டுகளாக இயங்கி வராங்க. அவங்கதான் `தி சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ டிஸ்ப்ளே’ என்ற இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இது ஜனவரி 10-ம் தேதி ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது. இந்த மாதிரி கார் ஷோ செல்வது எனக்கு இதுவே முதல் முறை. காலை 8:45 மணிக்கெல்லாம் ஸ்பாட்டில் ஆஜராகிவிட்டேன். அதுக்கும் முன்னாடி இருந்தே சில பேர் காத்துக்கிட்டு இருந்தாங்க. கேட் க்ளோஸ் ஆகி இருந்துச்சு. ஒரு சில வின்டேஜ் கார்கள் அப்பதான் என்ட்ரி ஆச்சு. அதோட சத்தத்தைக் கேக்கறப்ப அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு. என்னைக் கடந்து அந்த கார்கள் சென்றதை என்னால இப்பயும் மறக்க முடியாது. ஒரு நூறு வருஷம் பின்னோக்கிப் போன மாறி ஒரு ஃபீலிங். நேரம் ஆக ஆக கேட் வெளியே கூட்டம் கூடிட்டே இருந்துச்சு. என் பக்கத்தில் ரெண்டு முதியவர்கள் இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி குறிப்பை கட் பண்ணி வச்சிருந்தாங்க. காலேஜ் பசங்களில் இருந்து சீனியர் சிட்டிஸன் வரை எல்லாருமே பத்து மணிக்காக வெயிட்டிங். கேட்டுக்கு அந்தப் பக்கம் அத்தனை காரும் பார்வையாளர்களுக்காக வெயிட்டிங்.

ஷார்ப்பா 10 மணிக்கு கேட் ஓபன் ஆச்சு. இவ்வளவு வின்டேஜ் காரைப் பாக்குறது இதுவே ஃபர்ஸ்ட் டைம். ஃபியட்ல இருந்து ரோல்ஸ்ராய்ஸ் வரைக்கும் அத்தனை காரையும் பாக்க முடிஞ்சது. அது மட்டுமில்லாம, உலகத்தின் முதல் காரின் மாடலையும் பார்த்தது, போன ஜென்ம புண்ணியம்னுதான் சொல்லணும். ஆமாங்க... பென்ஸின் நிறுவனர் கார்ல் பென்ஸ் உருவாக்கிய உலகின் முதல் ஆட்டோமொபைல் எனச் சொல்லப்படும் 1886 பென்ஸ் பேட்டன்ட் மோட்டார் வேகன் இந்த டிஸ்ப்ளேயில் வெச்சிருந்தாங்க. அதே மாதிரி ஃபோர்டு நிறுவனர் ஹென்றி ஃபோர்டு தயாரிச்ச முதல் குவாட்ரிசைக்கிளும் இடம் பெற்றிருந்தது. இந்த ரெண்டு காருமே ஆட்டோமொபைல் வரலாற்றில் மிக முக்கியக் கண்டுபிடிப்புகள்.

பென்ஸ் காரைச் சுத்தி மக்கள் பட்டாளம் கூடியே இருந்துச்சு. எல்லாருமே அந்த காருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அதனுடைய டிசைன் ஒரு குதிரை சாரியாட் மாறி இருந்துச்சு. அதுல ரெண்டு பேருதான் உட்கார முடியும். ஆரம்ப காலகட்டத்துல காரின் டிசைன் ரொம்ப சிம்பிளா இருந்ததைப் பாக்க முடிஞ்சது. எல்லா காரைச் சுத்தியும் பொது மக்கள் ரொம்ப ஆர்வமா வியந்து பாத்துட்டு இருந்தாங்க. நிறைய பெற்றோர்கள் தங்களோட குழந்தைகளையும் கூட்டிட்டு வந்து இருந்தாங்க. அங்க இருந்த ஃபோக்ஸ்வாகன் பீட்டில் காரைப் பார்த்ததும், அதை `ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்’ படத்தில் வரும் கார்னு நெனச்சு சிறுவர்கள் அதோட புகைப்படம் எடுத்துக்கிட்டாங்க.

இங்குள்ள அனைத்து கார்களுமே பக்கா ரன்னிங் கண்டிஷன்ல இருந்தது ரொம்ப ஆச்சர்யம். இந்த காருடைய உரிமையாளர்கள் ஒருத்தர்கிட்ட பேசினேன். அவர் பெயர் ஷங்கர் சுந்தரம். இருபது வருஷமா அவர் வின்டேஜ் கார்களைச் சேகரிச்சுட்டு வர்றார். மொத்தம் 25 கார்களுக்குச் சொந்தக்காரர். அவரிடம் 1937 ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்ட்டம் 3 காரும் உண்டு. ரோல்ஸ்ராய்ஸின் நிறுவனர் ஹென்றி ராய்ஸ் கடைசியாக உருவாக்கிய கார் இது தான். இது மட்டுமில்லாமல், உலகில் உள்ள இருபத்திஆறு கார்களில் ஒன்றான 1937 ஃபோர்டு 7W ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலும் இவரிடம் உண்டு. சென்னையிலே அதிக ஜாகுவார் கார்களுக்குச் சொந்தக்காரரும் இவர்தான்னு சொன்னாரு.

இந்த ஷோவில் வின்டேஜ் பைக்குகளும் இடம்பெற்று இருந்தது. ராஜ்தூத், யமஹா, ராயல் என்பீல்டு, கைனட்டிக் , மேட்ச்லெஸ், பிஎஸ்ஏ என பழமையான பல பைக்குகளைப் பார்க்க முடிந்தது. அங்கிருந்த சில பைக்குகளுக்குச் சொந்தக்காரர் சிவகுமார். அவரிடம் பேசினேன். 2005-ல் முதன்முதலில் 1941 மேட்ச்லெஸ் எனும் பிரிட்டிஷ் மாடல் தான் அவரின் முதல் வின்டேஜ் பைக் என உற்சாகத்தோடு தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்த பைக்தான் அவருக்கு வின்டேஜ் பைக்குகள் மீது காதல் வரக் காரணமாக இருந்தது எனவும் கூறினார். அவருடைய முதல் பைக்கை அவரே ரெடியும் செய்தாராம். இன்று பைக் கலெக்ட் செய்வது மட்டுமின்றி, வின்டேஜ் பைக்கை ரெஸ்டோர் செய்து தருவதும் தனக்குக் கை வந்த கலை என்கிறார் புன்னகையோடு.

நேரம் ஆக ஆக, மக்கள் கூட்டம் கூடிக்கிட்டே இருந்துச்சு. நிக்கிறதுக்குக்கூட இடம் இல்லை. செல்ஃபி எடுக்க ஒரே போட்டா போட்டியா இருந்துச்சு. இந்த ஆட்டோ டிஸ்ப்ளே சென்னை மக்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம்ங்கிறது அவங்க முகத்திலேயே பார்க்க முடிஞ்சது. எனக்கும்தான்!

தேங்க்ஸ் டு மோட்டார் விகடன் & மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் க்ளப்!