கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

“ஹைவேஸில் செம கிக்!”

நிஸான் கிக்ஸ் டர்போ பெட்ரோல்
பிரீமியம் ஸ்டோரி
News
நிஸான் கிக்ஸ் டர்போ பெட்ரோல்

ரீடர்ஸ் டிரைவ் ரிப்போர்ட்: நிஸான் கிக்ஸ் டர்போ பெட்ரோல்

நீங்கள் கார் ரேஸிங் கேம் `Need for Speed’ விளையாடியிருந்தால், நிஸான் GTR கார் கண்டிப்பாக ஞாபகத்தில் இருக்கும். இப்போது நிஸான் கிக்ஸ் என்று சொன்னாலும் GTR ஞாபகம் வரவேண்டும். ஏனென்றால், புதிதாக வந்திருக்கும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் கிக்ஸ் 2020-ல், GTR இன்ஜினில் இருக்கும் சிலிண்டர் கோட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த நிஸான் கிக்ஸ் 1.3 டர்போ பெட்ரோல் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை கடந்த இதழிலேயே பார்த்திருந்தோம்.

``கிக்ஸ் டெஸ்ட் டிரைவை நான் பண்ணட்டுமா?’’ என்று கேட்டு வந்த வாசகர் சரவணனிடம் பொறுப்பையும் காரையும் ஒப்படைத்தோம். கிக்ஸின் 1.3 HR13DDT டர்போ பெட்ரோல் கொண்ட MT - XV ப்ரீமியம் (O) மாடல் காரை சென்னை முழுவதும் சுற்றிச் சுற்றி ஓட்டிவிட்டு, அவர் சொன்ன நறுக் சுருக் ரிப்போர்ட் இது.

“ஹைவேஸில் செம கிக்!”

டிசைன் மற்றும் அம்சங்கள்

``புதிய 2020 டர்போ கிக்ஸைப் பார்த்தால், வெளித்தோற்றத்திலும் சரி; இன்டீரியரிலும் சரி - பழசுக்கும் புதுசுக்கும் எந்த மாற்றங்களும் இல்லை. எனினும் முந்தைய மாடலில் இருக்கும் LED ஹெட்லைட்ஸ், கார்னரிங் லைட்ஸ், 17 இன்ச் டயர்கள், டைமண்ட் கட் அலாய் வீல் ஆகியவை ஆறுதல் அளிக்கிறது” என்று ஆரம்பித்தார்.

டேஷ்போர்டு தவிர்த்து மற்ற இடங்களில் இருக்கும் பிளாஸ்டிக் தரம் மிகக் குறைவாக இருக்கிறது என்பதைப் பளிச்சென்று பதிவு செய்தார். ``அது தெரிந்த விஷயம்தானே! இட வசதியைப் பொருத்தவரை குறையில்லை. டூயல் டோன் வேலைப்பாடுகள், லெதர் சீட், 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன், Card Fob Key, ‘NissanConnect App’, வாய்ஸ் கமாண்ட், முக்கியமாக 360 டிகிரி கேமரா என பல அம்சங்கள் இருந்தாலும், முக்கியப் போட்டியாளராக இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்ட்டோஸ், கியா சோனெட் கார்களில் இருக்கும் பல சிறப்பம்சங்கள் கிக்ஸில் இல்லையே? உதாரணத்திற்கு வென்ட்டிலேட்டட் சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜிங், சன் ரூஃப், பாட்டில் ஹோல்டர் – இதையெல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்றேன்!’’ என்றார்.

``டர்போ எப்படி இருக்குனு பார்க்கலாம்’’ என்று கூறி ஸ்டீயரிங்கைப் பிடித்தார். வேளச்சேரியில் ஆரம்பித்து, பூந்தமல்லி சென்று பின் அவுட்டர் ரிங் ரோடில் முன்னும் பின்னும் பல முறை ரவுண்ட் அடித்தார்.

டர்போ டிரைவ்

``நகரத்துக்குள் ஓட்டும்போது ஹெவியான க்ளட்ச், டர்போ லேக், சுமாரான கியர்பாக்ஸ் மற்றும் முக்கியமாக டெட் பெடல் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். ``இது மிஸ் ஆவதால், எனக்கு ஈஸியான டிரைவ் அனுபவத்தை தரவில்லை கிக்ஸ். 2000 ஆர்பிஎம்-ல் சிட்டி டிராஃபிக்கில் இந்த காரை ஓட்டுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.’’ என்றவர் முகத்தில், நெடுஞ்சாலைக்குச் சென்றவுடன் ஒரு பேரானந்தம் தெரிந்தது.

“ஹைவேஸில் செம கிக்!”

``வாவ்… 5,000 ஆர்பிஎம் வரை ரெவ் ஆகிறதே… 156bhp பவரும் கிடைத்தது மாதிரி ஓர் உணர்வு தெரிகிறது. டர்போ டர்போதான். ஓட்டுறதுக்கே செம கிக்கா இருக்கு!’’ என்றார்.

``ஒருவேளை, நிஸான் ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பெர்ஃபாமன்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களோ? ஆனால் என்ன, இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப அதிக அம்சங்களை இன்னும் நிஸான் சேர்த்திருக்கலாம். ஆனால், அதனால்தான் 2 லட்சம் குறைவான விலைக்குக் கிடைக்கிறது கிக்ஸ். இதுதானே இந்திய வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்’’ என்றார்.

கிக்ஸை பார்க் செய்துவிட்டு வீட்டுக்குப் போனதும், என் மொபைலுக்கு ஒரு மெசேஜ். ``கிக்ஸ் ஓட்டிவிட்டு எனது க்ரெட்டா ஓட்டும்போது போர் அடிக்குது பாஸ். பவரே இல்லாதது மாதிரி ஒரு ஃபீலிங்!” என்று ஸ்மைலி அனுப்பி இருந்தார், டர்போ பிரியரான சரவணன்.