Published:Updated:

காஞ்சிபுரம் – அங்குத்தி சுனை; “இங்கிட்டு காக்காவே வராது” அங்குத்தி அருவிக்கு அற்புத ட்ரெக்கிங்...

காஞ்சிபுரம் – அங்குத்தி சுனை
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சிபுரம் – அங்குத்தி சுனை

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: கியா செல்ட்டோஸ்

காஞ்சிபுரம் – அங்குத்தி சுனை; “இங்கிட்டு காக்காவே வராது” அங்குத்தி அருவிக்கு அற்புத ட்ரெக்கிங்...

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: கியா செல்ட்டோஸ்

Published:Updated:
காஞ்சிபுரம் – அங்குத்தி சுனை
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சிபுரம் – அங்குத்தி சுனை

லகத்திலேயே ரொம்பச் சின்னதான ஞாயிற்றுக்கிழமையை ஜாலியாகக் கழிக்க ஓர் அற்புதமான ஸ்பாட், திருப்பத்தூருக்குப் பக்கத்தில் இருக்கிறது. சென்னையில் இருப்பவர்களுக்கு இந்த ஒன்–டே டூரிஸ்ட் ஸ்பாட், பயங்கரமான மெமரீஸை மெடுல்லா ஆப்லெங்கேட்டா முழுக்க நிரப்பிவிடும்.அதிகாலையில் கிளம்பினால், இரவுக்குள் நினைவுகளைச் சுமந்து கொண்டே படுக்கையில் சாய்ந்து விடலாம்.

 அங்குத்தி சுனைக்கான அறிவிப்புப் பலகை இது மட்டும்தான்.
அங்குத்தி சுனைக்கான அறிவிப்புப் பலகை இது மட்டும்தான்.

‘‘காஞ்சிபுரத்தில் இருக்கோம். எங்க செல்ட்டோஸில் கிளம்பிடலாம். அப்பாவைக் கஷ்டப்பட்டு கியா வாங்க வெச்சிருக்கேன். கிளம்பலாமா?’’ என்றார்கள், டீன் ஏஜ் இளசுகளான விஷ்வா அர்ஜூன் மற்றும் விஷால் குமார். அப்பா ஆனந்த், மகன்கள், நான், புகைப்பட நிபுணர் என்று செல்ட்டோஸை முழுவதுமாக நிரப்பிக் கொண்டு, இடத்தைச் சொல்லாமல் சஸ்பென்ஸாகவே அழைத்துப் போனோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘திருப்பத்தூர்னு சொன்னீங்க.. எந்த இடம்னு சொல்லுங்க?’’ என்று ஆர்வமாகக் கேட்டுக்கொண்டே வந்தார்கள் இருவரும். வேலூர், வாணியம்பாடி, ஆம்பூரில் 140 கி.மீ-யில் பறந்தது செல்ட்டோஸ். நடுவே வாணியம்பாடியில் லஞ்ச்சுக்காக பிரியாணியை பார்சல் செய்தபோது, ‘‘திருப்பத்தூர் பக்கத்துல அங்குத்தி சுனைனு நெட்ல பார்த்தேன். அதுக்குத்தான் போறோமா?’’ என்று எதையோ கண்டுபிடித்த பூரிப்பில் பேசினார் விஷால் அர்ஜூன். ‘‘மோ.வி. ஒவ்வொரு மாசமும் படிச்சுக்கிட்டே இருக்கேன். இந்தப் பக்கம் ஏலகிரி, ஜலகாம்பாறை, குந்தாணிமலை, கேஆர்பி அணைனு எல்லாம் கிரேட் எஸ்கேப் பண்ணியாச்சு. இது மட்டும்தான் மிச்சம். அதை வெச்சுத்தான் கண்டுபிடிச்சேன்!’’ என்றார்கள் அண்ணன்–தம்பி இருவரும்.

கரெக்ட்... திருப்பத்தூர் தாண்டி 30 கி.மீ தொலைவில் உள்ள ‘அங்குத்தி சுனை’ எனும் அருவிக்குச் சென்று தலை நனைப்பதுதான் நமது திட்டம். செம குஷியாக ஆரம்பித்தது பயணம்.

 எப்பவாவது காட்டு மாடுகளும் மான்களும் க்ராஸ் ஆகும்...
எப்பவாவது காட்டு மாடுகளும் மான்களும் க்ராஸ் ஆகும்...
 • சென்னையில் இருந்துதான் டைட் ஷெட்யூல் ஆக இருக்கும். காஞ்சிபுரம் என்பதால் பிரேக்ஃபாஸ்ட் முடித்துவிட்டு, ரிலாக்ஸாகவே கிளம்பினாலும், சட்டென ஆம்பூர் வந்துவிட்டோம். ஆம்பூரில் பிரியாணிக்கான வேலை தொடங்கப்படவே இல்லை. ‘‘குறைஞ்சது 11.30 ஆவது ஆகும்’’ என்றார்கள். ‘பிரியாணி’ பட கார்த்தி மாதிரி ‘பிரியாணி சாப்பிட்டே தீர வேண்டும்’ என்று வெறித்தனமாக இருந்தார் விஷால்.

 • வாணியம்பாடியில் எங்கள் ஆசை தீர்ந்து விட்டது. லஞ்ச்சுக்கு சில பிரியாணிகளை பேக் செய்து கொண்டோம். ‘அருவிக்கு ட்ரெக்கிங்.. சாப்பாடு கிடைக்காது’ என்பதால், இந்த ஐடியா. போகும் வழியில் டோல்கேட்டில் ‘ஃபாஸ்ட் டேக்’ பிரச்னை. ‘‘ஏற்கெனவே திங்கிற சோத்துல இருந்து எல்லாத்துக்கும் வரி கட்றோம். இதுக்கு டபுள் ரேட்லாம் கட்ட முடியாது’’ என்று குழாயடிச் சண்டை மாதிரி ஃபைட் செய்து கொண்டிருந்தார்கள் குடியுரிமை பெற்ற மக்கள்.

காஞ்சிபுரம் – அங்குத்தி சுனை; “இங்கிட்டு காக்காவே வராது” அங்குத்தி அருவிக்கு அற்புத ட்ரெக்கிங்...
 • ஏலகிரி மலையடிவாரத்தில் இடதுபுறம் திரும்பாமல், நேரே போனால் திருப்பத்தூர். அதைத் தாண்டி இடதுபுறம் திரும்பினால் ஜலகாம்பாறை. அதையும் தாண்டி சிங்காரப்பேட்டை போகும் வழியில் விஷமங்கலம். எங்கேயும் அங்குத்தி சுனைக்கான சைன் போர்டு இல்லை. கோவிந்தாபுரம் கூட்ரோடு எனும் இடத்தில் ‘அங்குத்தி சுனை’ என்று இடதுபுற அம்புக்குறி போட்டு, ஒரே ஒரு போர்டு வைத்திருந்தார்கள்.

 • கொய்யாக்காய் விற்ற வயதான ஐயாவிடம் சில கொய்யாக்களை விழுங்கி, பார்சல் செய்துவிட்டு உள்ளே நுழைந்தது செல்ட்டோஸ். சுற்றிலும் பச்சை நெல்மணிகள், மழைத் தூறல், வயல்பாதை என சுத்தமான தமிழ் லொக்கேஷனுக்கு நடுவே கொரியன் மாடல் செல்ட்டோஸ் ஊர்ந்து போனது செமையான போட்டோ ஃப்யூச்சர்.

 • அங்குத்தியில் காணப்படும் பாம்புகள், பறவைகள், விலங்குகள், மரங்கள் என்று அறிவிப்புப் பலகையெல்லாம் வைத்து ஆர்வத்தைத் தூண்டி விட்டார்கள். வழக்கம்போல் நுழைவுக்கட்டணம் 5 ரூபாய். காருக்கு 25 ரூபாய்.

 • ‘‘ஃபாரஸ்ட்டுக்கு வரணும்னு நினைச்சிருந்தேன். ஆசை நிறைவேறிடுச்சு’’ என்றார் விஷ்வா. அங்குத்தி சுனை போகும் வழி, காட்டுக்குள் காரில் ட்ரெக்கிங் போவதுபோல்தான் இருந்தது. நடுநடுவே பாறைகள், குட்டிக் குட்டி ஓடைகள் என்று செல்ட்டோஸுக்கு டஃப் கொடுத்தது பாதை. கி.கிளியரன்ஸ் 190 மிமீ என்பதால், செல்ட்டோஸில் ஓரளவு பயப்படத் தேவையில்லை.

 • தெங்குமரஹடா, டாப்ஸ்லிப் போன்ற காட்டுப்பகுதியில் பயணிப்பதுபோலவே இருந்தது. ஆனால், விலங்குகள் இல்லை என்பதால் பயமில்லை. ‘‘எப்பவாவது காட்டு மாடுங்களும் மான்களும் வரும்’’ என்றார் ஓர் ஊர்வாசி.

 • ‘இங்கேயே நிப்பாட்டிக்கலாம்’ என்று கடாமுடா சாலையைப் பார்த்துப் பயந்த ஏரியாவைத் தாண்டியும் சில ஸ்கார்ப்பியோ, டவேரா என கார்கள் பார்க் ஆகியிருந்தன. இந்த மாதிரி நேரங்களில் காரை பார்க் செய்துவிட்டு, ஓடைகளில் கால் நனைத்தபடி செல்வதுதான் ரியல் அட்வென்ச்சர் ட்ரிப்பாக இருக்கும்.

 • என்ட்ரன்ஸிலேயே ‘தண்ணி வருதா’ என்று விசாரித்தபோது, ‘‘பொத பொதனு வருது’’ என்று வெறியை ஏற்றிவிட்டிருந்தார்கள். அது உண்மைதான் என்பதுபோல், ‘‘என்னாண்ணே இப்பிடி விறைக்குது... என்னா குளிரு...’’ என்றபடி ஈர உடம்புடன் உதடுகளை டைப் அடித்தபடி சிலர் நம்மை க்ராஸ் செய்தார்கள் சில குளியல் பார்ட்டிகள்.

 தருமன் சுனை... 25 முதல் 30 அடி 
வரை ஆழம்...
தருமன் சுனை... 25 முதல் 30 அடி வரை ஆழம்...
 • அப்பாடா... தண்ணீர்ச் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இதுதான் சரியான சீஸன் என்று சிலர் என்னைப் பாராட்டினார்கள். காரணம், ஏப்ரல் – ஜூன் போன்ற மாதங்களில் வந்து வெறும் பாறையில் செல்ஃபி எடுத்துவிட்டு ஏமாந்து போன பலரின் கதையைச் சொன்னார்கள். மழைக்காலம்தான் அங்குத்தி சுனைக்கான சீஸன் நேரம். நவம்பர் – பிப்ரவரி வரை சரியான சீஸனாம்.

 • ஜவ்வாது மலையடிவாரத்தில் நடக்கும் போதே நம்மை நனைத்துவிட்டது அங்குத்தி சுனை. இனி வழுக்கலான ட்ரெக்கிங் ஆரம்பித்தது. ஒண்டர்லா, குயின்ஸ்லேண்ட் போன்ற தீம் பார்க்குகளில் விளையாடுவதுபோல், சிலர் பாறையிலிருந்து ‘சொய்ங்’ எனச் சறுகி, தடால் என தண்ணீரில் விழுந்து வாட்டர் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

 • மொத்தம் இங்கே 5 சுனைகள் இருப்பதாகச் சொன்னார்கள். தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்று மகாபாரத ஹீரோக்களின் பெயர்களில் சுனைகள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வோர் அளவில் வெறியைத் தூண்டுகின்றன. எமனுக்குப் பிறந்த மூத்தவர் தருமன் சுனை, பிறப்புக்கு ஏற்றாற்போல் கொஞ்சம் டெரரான சுனை. 10 அடியில் இருந்து விழுந்தாலும், இதன் ஆழம் 25 அடி முதல் 30 அடி என்றார்கள். பரந்து விரிந்த சுனைப்பரப்பில் நீச்சல் பார்ட்டிகள் மட்டும் என்ஜாய் பண்ணலாம்.

 நீச்சல் தெரியாத பார்ட்டிகளுக்கான 
சின்ன சுனை...
நீச்சல் தெரியாத பார்ட்டிகளுக்கான சின்ன சுனை...
 • கரெக்ட், பீமன் சுனை பெயருக்கு ஏற்றாற்போல், கொஞ்சம் ஹல்க் மாதிரியே இருந்தது. பீம்பாய் பார்ட்டிகளுக்கு, பீமன் சுனை செம சாய்ஸ். தடால் புடால் என விழுந்து நீச்சல் அடித்துக் கும்மியடிக்கலாம். இங்கேதான் பீமன், முட்டி போட்டு தண்ணீர் அருந்தினாராம்.

 • ‘‘ஹாய்ணா... நாங்க வேலூர்ல இருந்து வர்றோம். 5 சுனைக்கும் போய்ட்டு இப்போதான் வந்தோம். செம எக்ஸ்பீரியன்ஸ். காலையில 8 மணிக்கெல்லாம் வந்தோம்னா கரெக்ட்டா இருக்கும். 5 சுனையையும் பார்த்துட்டு, குளிச்சுட்டு என்ஜாய் பண்ணலாம். எங்க வீக் எண்ட் ஸ்பாட், இந்த அங்குத்தி சுனைதான்!’’ என்றார்கள் சில அண்ணன்–தம்பிகள். சிலர் ‘தருமன் சுனையே போதும்டா சாமி’ என்று கீழேயே குளித்துவிட்டுச் சென்றார்கள்.

 • தமிழ்நாட்டில் காகங்கள் பறக்கப் பயப்படுகிற அருவி என்று இந்த அங்குத்தி சுனை அருவிகளைச் சொல்கிறார்கள். பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் விட்ட சாபம்தான் இதற்குக் காரணம் என்று நீண்ட நேரம் புராணக் கதை சொன்னார் ஒரு பெரியவர். ஸ்ட்ராங்கான இந்த சாபம் நிஜம்தான் போல. அங்குத்தி சுனை என்ட்ரன்ஸில் இருந்து சுனைக்கு மேலே வரை நிஜமாகவே எந்தக் காகங்களும் தென்படவே இல்லை.

 • பாம்பின் தடம் பதிந்த பாறையும் இங்கே ஸ்பெஷல். பாண்டவர்கள் ஐவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, பாம்பின் மீது புரண்டு விட்டனராம். அதனால், இதற்குப் பாம்புத் தடம் பதிந்த பாறை என்கிறார்கள்.

 பஞ்சபாண்டவர்கள் பெயரில் இதுபோல் 
5 சுனைகள்...
பஞ்சபாண்டவர்கள் பெயரில் இதுபோல் 5 சுனைகள்...
 • இது மட்டுமில்லை; குந்தி மோர் கடைந்த இடம், பாண்டவர்கள் தங்கியிருந்த இடம், பாண்டவர்கள் காலத்தில் நோய்கள் தீர்த்த மூலிகை அருவி என்று ஏகப்பட்ட வரலாறுகளை உள்ளடக்கி விழுகிறது அங்குத்தி சுனை.

 • ஞாயிறு வறுத்தெடுக்கும் ஏதோ ஒரு ஞாயிறைத் தேர்ந்தெடுத்துவிட்டு, ஐந்து சுனைகளிலும் அற்புதமாக நனைந்துவிட்டுக் கிளம்புங்கள். அன்றைய ஞாயிறு அற்புதமான ஞாயிறாக அமைந்து விட்டிருக்கும்.

நோட் பண்ணுங்க!

அங்குத்தி சுனைக்குச் செல்வதற்குச் சரியான சீஸன் – மழைக்காலம்தான். அதாவது, அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இதற்கான நல்ல காலம். டிசம்பர் மாதம் என்பது தண்ணீர் வரத்து அதிகமாகும் மாசம். நாம் சென்றபோது, உச்சபட்ச தண்ணீர் வரத்து இதுதான் என்றார்கள். நுழைவுக் கட்டணம் – 5 ரூபாய். பைக் அல்லது கார் இருந்தால்தான் அங்குத்தி சுனைக்குச் செல்வது சாத்தியம். கெடகானூர் கிராமம் வழியாகப் பச்சைப் பசேல் வயல்வெளியில் பயணிப்பதே ஒரு அலாதியான ஜென் நிலையைத் தரும்.

சிற்றோடைகள், சிறு பாறைகள், மணல் பாதைகள் என அங்குத்தி வழி - அதுக்கும் மேல! ஆனால் அங்குத்தியில் சாப்பாட்டுக்கு வழி கிடையாது. பொதுவாக அருவிக் குளியல் என்றால், மீன் வறுவல்/சாப்பாடுதானே பிரசித்தம். இங்கு அதெல்லாம் கிடையாது. எனவே, சாப்பாடு வாங்கிச் செல்வது நல்லது. சாப்பாட்டைப் பிடுங்கித் தின்னும் குரங்குகளிடம் மட்டும் கவனம். தங்கும் வசதியும் அங்குத்தியில் கிடையாது. ஏகப்பட்ட வரலாற்றுச் சிறப்புகளை உள்ளடக்கி இருக்கும் அங்குத்தியில் தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என மொத்தம் 5 சுனைகள் உண்டு. நீச்சல் எக்ஸ்பர்ட்டுகள், நீச்சல் தெரியாதவர்கள், குழந்தைகள் எல்லோருக்குமே இங்கே என்ஜாய்மென்ட் கேரன்ட்டி.

என்ன பார்க்கலாம்?: (கிருஷ்ணகிரியில் இருந்து)

அஞ்செட்டி (85 கி.மீ)

ரிஸர்வ் ஃபாரஸ்ட் என்பதால், காட்டிலாகாவினரின் அனுமதி தேவை. 6 மணிக்குள் செக்போஸ்ட்டைக் கடந்துவிட வேண்டும். வனஆர்வலர்களுக்கு அற்புதமான ஸ்பாட். அருவிக் குளியலும் உண்டு.

கேஆர்பி அணை (22 கி.மீ)

அணைக் குளியல், ஜிலேபி மீன் வறுவல் என்று ஜமாய்க்கலாம்.

புல்லூர் அணை (65 கி.மீ)

வாணியம்பாடியில் இருக்கும் அணை. சீஸன் விசாரித்து விட்டுத்தான் செல்ல வேண்டும். அணைக் குளியல், மீன் வறுவல் இங்கும் ஃபேமஸ்.

அனுமன் தீர்த்தம் (60 கி.மீ)

பொன்னையார் நதிக்கரையோரம் அமைந்திருக்கும் அருவி. ராமன், அனுமன் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். ஆகஸ்ட்–செப்டம்பர் சீஸனில் குளிக்கலாம்.

ஜலகம்பாறை (60 கி.மீ)

ஏலகிரி மலைக்குப் பின்புறம் உள்ள அருவி. கீழே கோவில், மேலே அருவி என்று இயற்கை விரும்பிகளுக்குப் பிடித்த ஸ்பாட். ஆகஸ்ட்–அக்டோபர் நல்ல சீஸன்.

பன்னருகெட்டா (85 கி.மீ)

பெங்களூருவில் உள்ள மிருகக்காட்சி சாலை. வாகனங்களில் சவாரி போய்க்கொண்டே திறந்தவெளியில் திரியும் புலி, சிங்கம், கரடி, யானைகளுக்குப் பக்கத்தில் இருந்து ஹாய் சொல்லலாம்.

மேக்கேதாட்டு (140 கி.மீ)

ஆடு தாண்டும் பாறை என்பதுதான் இதன் அர்த்தம். ஒக்கேனக்கலின் இன்னொரு புறமான இது கர்நாடகாவில் உள்ளது. அருவிக்குளியல், மீன் வறுவல் என்று ஜமாய்க்கலாம்.

அங்குத்தி சுனைக்கு எப்படிப் போவது?

சென்னையில் இருந்து ஒரு நாள் டூர் ஆக அங்குத்தி சுனையைத் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு நிச்சயம் பைக்/கார் தேவை. அங்குத்தி சுனைக்கு ஒரு சைன்போர்டுகூட இல்லை என்பதால், பாதையில் கவனம் தேவை. சென்னை வழியாகச் செல்பவர்கள் ஏலகிரி மலையடிவாரம் வழியாக, மலை ஏறாமல் நேராகவே போனால் திருப்பத்தூர். அங்கிருந்து 27 கி.மீ தாண்டி சிங்காரப்பேட்டை வழியாகப் போனால், விஷமங்கலம், கோவிந்தாபுரம் கூட் ரோடு.

காஞ்சிபுரம் – அங்குத்தி சுனை; “இங்கிட்டு காக்காவே வராது” அங்குத்தி அருவிக்கு அற்புத ட்ரெக்கிங்...

இங்கு மட்டும்தான் சைன் போர்டு இருக்கும். இங்கே இடதுபுறம் திரும்பினால், கெடகானூர் கிராமம் வழியாக அங்குத்தி போகலாம். கிருஷ்ணகிரி வழியாகச் செல்பவர்கள் மதூர், சாமல்பட்டி, ஊத்தங்கரை வழியாக சுமார் 61 கி.மீ போனால், அங்குத்தி சுனை வரும்.

கியா செல்ட்டோஸ் எப்படி?

அரசியல் தலைவரின் வாரிசுகள்போல், செல்ட்டோஸில் குழப்பியடிக்கும் விஷயம் – எக்கச்சக்க வேரியன்ட்கள்தான். ‘‘மொத்தம் 16 வேரியன்ட் இருக்குன்னாங்க. இதுக்கு முன்னாடி ரிட்ஸ் வெச்சிருந்தோம். ஆட்டோமேட்டிக் வாங்கணும்னு ஆசை. 7 DCT / GTX+ வேரியன்ட்தான் எங்களோடது. ஆன்ரோடு விலை 19.20 லட்சம் வந்துச்சு. செம பர்ஃபாமென்ஸ்.’’ என்கிறார்கள் விஷ்வாவும், விஷாலும். இதற்கு முந்தைய GTX வேரியன்ட்டில் 360டிகிரி கேமரா, பாஸ் ஸ்பீக்கர்ஸ், வென்டிலேட்டட் சீட்ஸ், சன்ரூஃப் போன்றவை மட்டும் கிடையாது. GTX+ வேரியன்ட்டில் இவை உண்டு. இதற்காகவே 1 லட்சம் விலை அதிகம்.

காஞ்சிபுரம் – அங்குத்தி சுனை; “இங்கிட்டு காக்காவே வராது” அங்குத்தி அருவிக்கு அற்புத ட்ரெக்கிங்...

பெட்ரோல் மாடல் என்பதால், தடபுட அதிர்வுகள் இல்லை. வேலூர் பைபாஸில் 170 கி.மீ–ல் பறந்தபோதும், எந்த இடத்திலும் நிலைத்தன்மை குறையவில்லை செல்ட்டோஸில். கி.கிளியரன்ஸும் 190 மிமீ என்பதால், குட்டிக் குட்டி ஆஃப்ரோடும் பண்ணலாம். ‘‘வசதிகள்தான் செல்ட்டோஸில் அல்ட்டிமேட். எங்களுக்கு ரொம்பப் பிடிச்சது, ஹெட்அப் டிஸ்ப்ளேதான். வால்வோவில்தானே இதைப் பார்த்திருக்கோம். பட்ஜெட் கார்களில் இதைப் பார்ப்பது செம பிரமிப்பு’’ என்கிறார்கள் செல்ட்டோஸ் பிரதர்ஸ்.

- படங்கள்: பிரபாகரன்

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!