"டியாகோவுல நீங்க கிரேட் எஸ்கேப் பண்ணவே இல்லைணா. வெள்ளைக் கலர் எண்டேவர்ல நீங்க ஒரு தடவை மறையூர் பக்கத்துல லக்கம் ஃபால்ஸ், அமேஸ்ல தூவானம் ஃபாரஸ்ட்லாம் போனீங்கள்ல... அதைத் தாண்டி ஒரு செமையான ஃபால்ஸ் இருக்கு. எங்க டாடி அடிக்கடி கூட்டிட்டுப் போவாரு. இந்த வாட்டி நாங்க உங்களைக் கூட்டிட்டுப் போறோம்... வர்றீங்களா?’’ என்று அழைத்திருந்தான், 11 வயது அஷ்வத்.

நிஜம்தான். உடுமலை தாண்டி மறையூர் வழியாக மூணார் போகும் காட்டுச் சாலையில், கால் தடுக்கி விழும் இடமெல்லாம் அருவிச் சத்தம் காதுகளை இனிமையாக்கும். பயங்கரமான மோட்டார் விகடன் விசிறியான யஷ்வத்தான் இந்த கிரேட் எஸ்கேப்பின் ஹீரோ. ‘‘சில ஃப்யூச்சர்ஸ் மட்டும் மிஸ்ஸிங். மத்தபடி டியாகோ செமையா இருக்கும்!’’ என்றான் யஷ்வத். யஷ்வத்தின் தந்தை சுந்தரமணி, திருப்பூரில் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர். மனைவி நாகஜோதியும் டீச்சர்.

‘‘குடும்பத்தோட ஸ்கூல்களுக்கு லீவ் போட்டோம். போலாமா?’’ என்று மனைவி ஜோதி, இரட்டைக் குழந்தைகள் அஷ்வத்–அஷ்மிதா என குடும்ப சகிதம் கிளம்பிவிட்டார் சுந்தரமணி. மூணாறு போகும் வழியில், காந்தலூர் எனும் இடத்தில் உள்ள பெயரே தெரியாத அருவிக்குத்தான் டியாகோ பறந்தது.

டூரின் முதல் ைஹலைட்டே இதுதான். ‘‘7 மணிக்குக் கிளம்பணும்’’ என்று 6.59–க்கெல்லாம் திருப்பூரில் இருந்து டியாகோவை ஸ்டார்ட் செய்தபோது, செம குளிர். ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோலை ஆன் செய்தபோது, ‘‘நான் எப்பவும் காலையில லேட்டாதான் எந்திரிப்பேன். மோட்டார் விகடனுக்காக சீக்கிரம் கிளம்பினேன் தெரியுமா?’’ என்று வியக்க வைத்தான் அஷ்வத்.

பொள்ளாச்சி தாண்டி உடுமலையில் ஆரிய பவன் எனும் ஹோட்டலில், அற்புதமான காலை உணவை முடித்துவிட்டுப் பறந்தால்... மறையூர் செக்போஸ்ட்.

மறையூர் வருவதற்கு முன்பு ஒரு பொள்ளாச்சியில் ஒரு செமையான ஆப்ஷன் உண்டு. திருமூர்த்தி அருவி மற்றும் அணை. போகும் வழியில் அணையில் போட்டோ ஷூட். பார்க்கிங்கில் காரை விடும்போது, ஏதோ சபரிமலைக்கோ, பழனிக்கோ வந்ததுபோல் ஒரு ஃபீலிங். எங்களைத் தவிர எல்லோருமே சாமிகளாகவே இருந்தார்கள்.

என்ட்ரன்ஸிலேயே எச்சரித்தார்கள். ‘‘பார்த்துப் போங்கண்ணே... குரங்குகிட்ட கேர்ஃபுல்லா இருங்க’’ என்று எச்சரித்தார் டிக்கெட்டர். போகிற வழியிலேயே அவர் சொன்னது நடந்துவிட்டது. புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலில் வந்த குரங்கு ஒன்று, ஒரு பெண்மணியிடம் இருந்து கைப்பையைப் பிடுங்கி பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, பையை மட்டும் கீழே போட்டது வியப்பாக இருந்தது. ‘‘குரங்கு பணம்லாம் திருடும்னு சொல்லவே இல்லப்பா!’’ என்றாள் அஷ்மிதா.

சீஸன் நேரம் என்பதால், பக்தர்களிடம் மாட்டி திமிறிக் கொண்டிருந்தது திருமூர்த்தி அருவி. அற்புதமான அருவிச் சத்தத்தையும், மலைப்பாதை ட்ரெக்கிங்கையும் என்ஜாய் பண்ண சாமிகளுக்கு நேரமில்லை. எங்களைப்போன்ற ஆசாமிகள்தான், ஒவ்வொரு பேக்ரவுண்டிலும் ரசித்து ரசித்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இலந்தை வடை, மாங்காய், கோலி சோடா என்று ஸ்நாக்ஸ் டைமை முடித்துவிட்டு, மறையூர். மொத்தம் 4 செக்போஸ்ட்டுகள். தமிழ்நாட்டுக்கு 2, கேரளாவுக்கு 2. வழக்கம்போல் தமிழ்நாட்டில் 50 ரூபாய் கட்டணம் வசூலித்தார்கள். கேரளாவில் ‘‘பணம் குடுக்க வேண்டாம். ப்ளாஸ்டிக் மட்டும் காட்டுக்குள்ள வேண்டாம்’’ என்று தூய தமிழில் வழியனுப்பி வைத்தார்கள் கேரள செக்போஸ்ட் அதிகாரிகள்.

செக்போஸ்ட் தாண்டித்தான் போன முறை எண்டேவரைவிடப் பெரிய சைஸில் யானை ஒன்று க்ராஸ் செய்தது நினைவுக்கு வந்தது. ‘‘அமேஸில் போகும்போது, சிறுத்தைகூட இங்கே பார்த்தோம்’னு எழுதினீங்களே’’ என்று நினைவுபடுத்தினான் அஷ்வத்.

அடுத்து ஒரு செக்போஸ்ட் வந்தது. ‘மறையூரில் நுழைஞ்சா அருவியா இருக்கும்னு சொன்னாங்களே..’ என்று அருவியைத் தேடினேன். பார்த்தால்... சாரி, கேட்டால்... செக்போஸ்ட்டைத் தாண்டி ஓர் அருவிச் சத்தம்... எருமச்சாடி அருவி என்று போர்டு தெரிந்தது. ஆளே இல்லை. குளிப்பதற்கும் கட்டணம் ரொம்பக் கம்மி. 5 ரூபாய்க்கு எருமச்சாடியில் குளித்துவிட்டு, 15 ரூபாய்க்கு லெமன்-நாட்டுச்சர்க்கரை டீ குடித்தபடி ஒரு செல்ஃபி.

போகும் வழியில் தூரத்தில் தூவானம் அருவி ஹாய் சொல்லியது. தூவானத்தில் ட்ரெக்கிங் போய் காட்டுக்குள் தங்கி, அருவியில் குளிப்பது அலாதி சுகம். மறையூர் தாண்டி காந்தலூர். இதுதான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூக்களின் வசிப்பிடம் என்றார்கள். இன்னும் 10 ஆண்டுகள் வந்தால்தான், குறிஞ்சி மலர்களுடன் காந்தலூரில் கார்களை வைத்து போட்டோ ஷூட் நடத்த முடியும்.

காந்தலூர், மறையூர் போன்ற இடங்களில் தங்குவது அற்புதமான சாய்ஸ். திடீரென காட்டேஜ் ஜன்னலைத் திறந்தால்... ஏதாவதொரு அருவிச் சாரல் அறைக்குள் அடிக்கலாம். மறையூரின் ஸ்பெஷலே சந்துக்குச் சந்து விழும் அருவிகள்தான்.

காந்தலூரைச் சுற்றிலும் மலை என்பதால், மழை நேரங்களில் அருவிகளின் ஆரவாரம் இன்னும் அதிகமாகி இனிய இம்சை கொடுக்கும். தூவானம் அரசாங்கக் காட்டு வீடு அப்படியொரு ஆப்ஷன். ஏகப்பட்ட ஹோம் ஸ்டேக்களும் உண்டு. அருவிக்குப் பக்கத்தில் காட்டேஜ் தேடிப் பிடிப்பது உங்கள் சாமர்த்தியம்.

காந்தலூரில் சும்மாவே காட்டும் குளிர், காலையில் இ்ன்னும் காட்டு காட்டு என காட்டித் தள்ளியது. மறையூர், அருவிகளுக்கு மட்டுமில்லை; இன்னொரு விஷயத்துக்கும் பிரபலம். கரும்பில் இருந்து எடுக்கப்படும் சுத்தமான நாட்டுச் சர்க்கரை, மறையூரில் ஸ்பெஷல். ஒரு நாட்டுச்சர்க்கரை தொழிற்சாலையில் மணக்க மணக்க பாகு கிண்டிக் கொண்டிருந்தார்கள். கிலோ 80 ரூபாய்க்குக் குண்டு குண்டாக நாட்டுச்சர்க்கரை பார்சல் செய்து கொண்டோம்.

காந்தலூர் போகும் வழியில் அங்கங்கே கொண்டை ஊசி வளைவுகள் டியாகோவுக்குச் சவால் விடுத்தன. நடுநடுவே மரங்கள் ஏற்றி வந்த ெஹவிலோடு லாரிகளுக்கு இடையில் கார் ஓட்ட கொஞ்சம் தனித்திறமை வேண்டும். லாரி டிரைவர்களுக்கு அதைவிட!

போகும் இடமெல்லாம் சந்தன வாசம். பார்த்தால்... வரிசையாக சந்தன மரங்கள். 65,000 மரங்கள் இங்கே உண்டாம். ‘‘நம் ஊரா இருந்தா வெட்டி எடுத்துருப்பாங்கள்ல’’ என்றார் ஜோதி டீச்சர். இங்கே அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு மரத்துக்கும் சிப் வைத்திருக்கிறார்கள். மரத்துக்குச் சேதாரம் என்றால், ஃபாரஸ்ட் ஆபீஸுக்கு அலாரம் அடித்துவிடும். அடுத்த நொடி... சந்தன மரச் சட்ட விரோதம் உங்கள் மீது பாயும்.

ஏதோ ஓர் இடத்தில் காரை நிறுத்தி ‘‘இந்தப் பக்கம்தான் போகணும்’’ என்றார் சுந்தரமணி. சாலையோரத்திலேயே அருவிக்கான மூலம் தெரிந்தது. சர்ரென இறங்கிய பாதையில் ஒரு திகில் ட்ரெக்கிங். பயமாகத்தான் இருந்தது. ஊரோரம் ஆதலால், விலங்குகளுக்கு வாய்ப்பில்லை என்பதால் தைரியமாக ட்ரெக்கிங் போகலாம். ஆனால், ஊர் அடங்கி காடு மாதிரிதான் இருந்தது.

காட்டு வசம்புச் செடிகள் படர்ந்த சரிவுகளில் சரேலென இறங்கியது ஒரு கூட்டம். நாங்கள்தான் அது. 500 மீட்டர் தாண்டியதும், ஏதோ அதிரப்பள்ளிக்குத்தான் வந்து விட்டோமோ என்கிறபடி பேரிரைச்சலுடன் விழுந்து கொண்டிருந்தது அந்தப் பெயரே இல்லாத அருவி. ‘‘உன் பேரே தெரியாதே..’’ என்று அருவிச்சாரலில் நனைந்தபடி போஸ் கொடுத்தான் அஷ்வத்.

‘‘ஈ அருவின்னு நுங்களாயிட்டே ஒரு பேரு வெச்சோளின்...’’ என்றார்கள் ஊர்க்காரர்களே! அதாவது, ஊர்க்காரர்களுக்கே அருவியின் பெயர் தெரியவில்லை. ஆனால், ‘‘எப்படி இந்த அருவியைக் கண்டுபிடிச்சீங்க.. கவனமா போங்க’’ என்று மட்டும் வியந்து எச்சரித்தார்கள். ‘‘அப்பா, இதுக்கு அஷ்மிதா–அஷ்வத் ஃபால்ஸ்னு பேர் வெச்சிடலாமா’’ என்று குறும்பாகக் கேட்டாள் அஷ்மிதா.

அதே இடத்தில் குட்டிக் குட்டியாக சில கிளை அருவிகள். தூரத்தில் செல்ஃபி எடுக்கும்போதே கேமராவை சாரல் நனைத்தது. அட்டைப் பூச்சிகள், வசம்புச் செடிகள், சின்னச் சின்ன அகழிகளில் கவனமாக இருக்க வேண்டும். மழை நேரத்தில் அருவிச்சத்தமும் சாரலும் இன்னும் அதிகமாகும் என்றார்கள். சுத்தமான மூலிகை அருவி என்றெல்லாம் பில்டுஅப் கொடுக்க முடியாது. ஆனால், அருவி பேக்ரவுண்டில் செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்தால், லைக்குகள் தெறிக்கும்.

அருவியில் நனைந்துவிட்டு டியாகோ மலை இறங்கும்போது அஷ்வத் கேட்டான்: ‘‘அங்கிள், கியாவில் கார்னிவல் வருதாமே... எங்கப்பாவை வாங்கச் சொல்லிடுறேன். அப்போ எனக்கு லைசென்ஸ் எடுக்கிற வயசு வந்திடும். கார்னிவல்ல ஒரு கிரேட் எஸ்கேப்புக்கு ரெடியா இருங்க!’’

உடுமலைப்பேட்டையில் இருந்து மூணார் போகும் வழியில் காரை விட்டால், சின்னார் வனச்சரகம். இங்கே ட்ரெக்கிங் வசதி, கேரள அரசாங்கமே ஏற்பாடு செய்யும். மொத்தம் 5 செக்போஸ்ட்டுகள் கடந்துதான் மறையூர். மறையூர் நெருங்கியதும் அடிக்கு ஓர் அருவி என்பதால், குளியல் பார்ட்டிகள் செமையாக என்ஜாய் பண்ணலாம். அருவிக்குப் பக்கத்திலேயே காட்டேஜ்களைத் தேடிப் பிடித்துத் தங்குங்கள்.

போகும் வழியில் கேரள அரசின் அனுமதி பெற்று தூவானம் ஃபால்ஸில் தங்கினால், (09188398047) ட்ரெக்கிங் பார்ட்டிகள் வாழ்நாள் முழுதும் மறக்கவே மாட்டார்கள். எக்கச்சக்க ஹோம் ஸ்டேக்களும் உண்டு. சில இடங்களில் 12 மணி நேரக் கணக்கு. காந்தலூர், மறையூரில் எங்கேயாவது ஒரு சந்தில் எதேச்சையாக வாக்கிங் போனால்... ஏதாவது ஓர் அருவியின் தரிசனம் கிடைக்கும்.

இங்கேதான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ பூக்குமாம். மறையூரில் ஜீப் பார்ட்டிகள் சுற்றி வளைப்பார்கள். இரவில் மட்டும் பயணம் வேண்டாம். மூணாறுக்கு வண்டியை விடுபவர்கள், மறையூர்–காந்தலூர் ஏரியாவில் பிட்-ஸ்டாப் செய்ய மறக்காதீர்கள்.

தூவானம் அருவி (5 கி.மீ)

தூரத்திலேயே தெரியும் தூவானம் அருவிக்குப் பக்கத்தில் போக, கைடுகள் உதவியுடன் ட்ரெக்கிங் வசதி உண்டு. .

ஆனமுடி சோழா நேஷனல் பார்க் (19 கி.மீ)

இங்கே ஜீப் வசதி உண்டு. நீலகிரி தார் எனும் வரையாடுகள் இங்கே ஸ்பெஷல்.

மூணார் அருவி (39 கி.மீ)

அருமையான மலைப் பிரதேசம். போட்டிங், ட்ரெக்கிங், ஜில் கிளைமேட் என்று எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்.

லக்கம் அருவி (13 கி.மீ)

‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்’ எனும் ரேஞ்சில் விழும் லக்கம் அருவிதான் மறையூரின் ஸ்பெஷல் ஃபால்ஸ்.

சின்னார் வனச்சரகம் (9 கி.மீ)

கேரள அரசாங்கமே சின்னார் வனச்சரகத்தில் ட்ரெக்கிங் வசதி செய்து தருகிறது. காட்டுக்குள் ஜீப் ட்ரெக்கிங் மூலம் எல்லா விலங்குகளையும் பார்க்கலாம்.

சந்தனக்காடு (2 கி.மீ)

கிட்டத்தட்ட 65,000 சந்தன மரங்கள் இருக்கும் ஏரியா. சந்தன வாசத்தோட திரும்பி வரலாம்.

டால்மென் முனியரா (5 கி.மீ)

பஞ்ச பாண்டவர்கள் வாழ்ந்த இடம் என்கிறார்கள். கற்கால கல்வீடுகள், கற்குகைகள் பார்க்கலாம்.

காந்தலூர் (14 கி.மீ)

காந்தலூரில் ஜீப் ட்ரெக்கிங் வசதியும் உண்டு. ஏகப்பட்ட வியூ பாயின்ட்கள் மூலம் கேரளாவின் மொத்த அழகையும் ரசிக்கலாம்.

எரவிக்குளம் நேஷனல் பார்க் (36 கி.மீ)

காட்டுக்குள் சஃபாரி போகலாம். இங்கு வரையாடுகளோடு ஏகப்பட்ட விலங்குகளையும் பார்க்கலாம்.

ராஜமலை (22 கி.மீ)

வரையாடுகள் வதவதவெனத் திரியும் இந்த இடம், ட்ரெக்கிங் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏகப்பட்ட டீ எஸ்டேட்களும், வியூ பாயின்ட்களும் உண்டு.

மிடில் க்ளாஸ் பட்ஜெட்டுக்கு செமயான ஆப்ஷன் டாடாவின் டியாகோ. ‘‘என்கிட்ட இருக்கிறது XM. 3 சிலிண்டர்ங்கிறதால, ஹில்ஸில் மட்டும் கொஞ்சம் இந்த ரெவோட்ரான் இன்ஜினில் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்க முடியாது. மத்தபடி 84 bhp பவராச்சே... ஹைவேஸில் பறக்கலாம். எனக்கு மைலேஜைப் பொறுத்தவரை நல்ல திருப்தி. ஆவரேஜா 22 கி.மீ கிடைக்கும்.

எக்கோ மோடு மாத்தினா இன்னும் சூப்பர். நான் எப்பவுமே சிட்டி மோடில்தான் ஓட்டுவேன். டாடாவோட டிசைன் இப்போல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. டியாகோவில் ஏரோடைனமிக் சூப்பர். கார், ரொம்பவும் ரோல் ஆகலை. சில ஃப்யூச்சர்ஸ் மட்டும் மிஸ்ஸிங். முக்கியமா சைடு மிரர் அட்ஜஸ்ட் இல்லாதது, ரியர் ஏ.சி வென்ட் இல்லை; சில இடங்களில் ஃபிட் அண்ட் ஃபினிஷ் சரியில்லை; இதைத் தவிர்த்துட்டுப் பார்த்தா டியாகோ எங்களை மாதிரி ஃபேமிலிக்கு ஓகே!’’ என்றார் சுந்தரமணி.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!