கர்நாடகாவின் ஜோக் ஃபால்ஸ் வாயிலில், ‘உலகப் புகழ் பெற்ற ஜோக் ஃபால்ஸ் உங்களை வரவேற்கிறது’ என்ற பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் வரவேற்றது. நிஜம்தான். திரும்பும் திசை எல்லாம் வெளிமாநிலத்தவரைவிட வெளிநாட்டுக்காரர்கள்தான் வெல்கம் சொன்னார்கள். கால் இல்லை... தொடையே தெரியும் அளவுக்கு அநியாயத்துக்குக் கால்சட்டையோடு வெள்ளைக்காரப் பெண்கள். நாம் தங்கிய ஹோம்ஸ்டே பில்டிங்கிலேயே, அடுத்த ரூமில் ஆஸ்திரேலிய ஜோடிதான் ஹாய் சொன்னது. ‘`வி ஆர் இன் அவர் ஹனிமூன்!’’ என்றார்கள் ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில்.

‘‘எங்களோட ஃபார்ச்சூனர் 4X4 ரெடியா இருக்கு.’’ என்று போன மாசமே வாய்ஸ்–ஸ்நாப் செய்திருந்தனர் திருப்பூர் மணிகண்டனும் ராமச்சந்திரனும்.

ஃபார்ச்சூனர் என்றால் ஆஃப்ரோடு செய்தால்தான் மரியாதை. முதலில் வால்பாறை பக்கம் ஒரு காட்டுக்குத்தான் திட்டம் போட்டிருந்தோம். ‘‘ஜோக் ஃபால்ஸில் ஆஃப்ரோடிங் என்ன, வாட்டர்வேடிங்கே பண்ணலாம்!’’ என்று முன்கூட்டியே நமக்குச் சொல்லியிருந்தார் கைடு ஒருவர்.

அப்புறமென்ன... அண்ணன்–தம்பியோடு தி வேர்ல்ட் ஃபேமஸ் ஜோக் ஃபால்ஸுக்கு ஃபார்ச்சூனரில் பறபற...!

கர்நாடகாவின் ஷிமோகா போய்த்தான் ஜோக் அருவி போக வேண்டும். 3 ரூட் சொல்லியது கூகுள். நமது செலெக்ஷன் - பவானிசாகர், பண்ணாரி, திம்பம், மைசூர், கொள்ளேகால், அரிசிகேரி, ஷிமோகா, சாகர்... அப்புறம் ஜோக் அருவி. கிட்டத்தட்ட 550 கி.மீ. 3 லிட்டர் இன்ஜின் கொண்ட 7 சீட்டர் காரில் வெறும் 4 பேர்தான். சும்மா பறபறவெனப் பறந்தது ஃபார்ச்சூனர்.

பிரேக்ஃபாஸ்ட், லன்ச் முடிந்ததே தெரியவில்லை. ஒரே மிதி... இருள்வதற்குள் ஷிமோகாவில் இருந்தது ஃபார்ச்சூனர். கர்நாடகாவில் ரைடர்களைக் கடுப்பேற்றும் ஒரு பிரச்னை – ஸ்பீடு பிரேக்கர்கள். 150 கி.மீ–யைத் தொட்ட அடுத்த 150 மீட்டரில் ஒரு ஸ்பீடு பிரேக்கர். ரோட்டில் ஸ்பீட் பிரேக்கர்கள் என்பதற்குப் பதிலாக, ஸ்பீட் பிரேக்கர்களுக்கு இடையிடையே ரோடு இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், சிக்னலுக்கு ஒரு ஸ்பீடு பிரேக்கர்.

கர்நாடகாவில் தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் எண் கொண்ட கார்களைத்தான் வளைத்து வளைத்துப் பிடிக்கிறார்கள். சீட் பெல்ட் போடாமல் காரோட்டினால், சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டினால்... சிக்னல் தாண்டினால்... கர்நாடகா கவர்ன்மென்ட்டுக்குக் கல்லாதான். தமிழ்நாடுபோலவே இங்கேயும் கையில் பிரம்போடு ஹெல்மெட் போடாதவர்களைக் குறிவைத்துப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் சில காவலர்கள்.

ஷிமோகாவில் இருந்து 10 கி.மீ தொலைவில் லயன்- டைகர் சஃபாரி இருக்கிறது. பன்னெருகெட்டா போலவே ஒரு பெரிய ஜீப் அல்லது வேனில் திறந்தவெளிக் காட்டுக்குள் கூட்டிப் போகிறார்கள். ஓங்கி அடிச்சால் ஒன்றரை டன் வெயிட் கொண்ட சிங்கம், புலிகளைப் பக்கமாகப் பார்க்கலாம்.

நேரமின்மையால் சிங்கம்–புலியை அப்புறமாப் பார்த்துக்கலாம் என்று பறந்தது ஃபார்ச்சூனர். சாகர் என்ற ஊரைத் தாண்டி ஜோக் ஃபால்ஸ் போகும் வழி செம மிரட்டலாக இருந்தது. ‘காடுன்னும் சொல்ல முடியாது; ரோடுன்னும் சொல்ல முடியாது’ எனும் பாணியில் இருந்த சாலையில் பயணிப்பது கொஞ்சம் த்ரில்லிங்காகவே இருந்தது. போகும் வழியில் குள்ளநரியெல்லாம் ஹாய் சொன்னது. ஆனால் புகைப்பட நிபுணரின் தந்திரம், நரியாரிடம் எடுபடவில்லை.

ஜோக் ஃபால்ஸில் தங்கும் இடங்களுக்குப் பிரச்னையே இல்லை. 50 கி.மீ–க்கு முன்பாகவே ‘ஃபால்ஸ் வியூ’... ‘மவுன்டெய்ன் ரிஸார்ட்ஸ்’ என்றெல்லாம் போர்டுகள் ஆசையைத் தூண்டின. ஜோக் அருவியில் ஃபேமஸான தங்கும் இடம், மயூரப்பா என்றொரு கவர்மென்ட் காட்டேஜ். ஆனால், காசுதான் பர்ஸைக் காலி பண்ணிவிடுகிறது. தலைக்கு 2,000 முதல் 3,000 வரை யாசிக்கிறார்கள்.

என்ட்ரன்ஸிலேயே கைடுகள் சுற்றி வளைத்து விடுகிறார்கள். சிரூர் என்றொரு ஏரிக்கு எதிராக, குறைந்த விலையில் அம்சமான ஒரு ஹோம் ஸ்டே கிடைத்தது. அதாவது, லேக் வியூ வீடு. கீழே வீடு; மேலே வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். ஊர் முழுவதும் வரிசையாக ஹோம் ஸ்டே. ‘பிக்கல் பிடுங்கல் இருக்காது’ என்று நினைத்தால்... ‘‘ரண்டு மணி நேரம் லேட் ஆயிடுச்சு. 400 ருபீஸ் யக்ஸ்ட்ரா குடு’’ என்று ஃபைன் போட்டார் ஹவுஸ் ஓனர். ஜோக் ஃபால்ஸில் மதியம் 12 மணிதான் செக்–அவுட் டைம் என்பதை நினைவில் கொள்க. ஆஸ்திரேலிய ஹனிமூன் பார்ட்டிகள், துல்லியமான நேரத்தில் செக்–அவுட் செய்து ஃபைன் கட்டாமல் கெட்–அவுட் ஆனார்கள்.

குளிர்ந்து நடுங்கவும் இல்லை; வியர்த்து வழியவும் இல்லை; அப்படியொரு சாரல் கிளைமேட்டில் தங்கினால்... தூக்கம் யாருக்கும் சொக்கும். பலாக்காயில் சாம்பார் தோசை, புளிச்சட்னி என்று வீட்டுச் சாப்பாட்டில் கைவைக்கும்போது கைடு வந்தார். ‘‘நான்தான் புன்னகை மன்னன், லிங்கா, கும்கி, கல்கி, அசுரன் படத்தோட கைடு.. போலாமா’’என்று அரைகுறைத் தமிழில் அறிமுகம் செய்து கொண்டார் கைடு நாகராஜ் அண்ணன். ஆம், இந்தப் படங்களெல்லாம் ஜோக் ஃபால்ஸில்தான் எடுக்கப்பட்டது என்று சில இடங்களுக்குக் கூப்பிட்டுப் போனார்.

போகும் வழியில் ‘போட்டிங்; வாட்டர் ஸ்போர்ட் கேம்’ என்று போர்டு வைத்திருந்தார்கள். ‘இங்க வேணாம்;

லிங்கா அணைல போட்டிங் போலாம்’ என்று ஒரு அணைக்குக் கூட்டிப்போனார் கைடு. ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஓர் அணை கட்டுவாரே.. அந்த அணை என்றார். மொத்தம் 2 அணைக்கட்டுகள் இருந்தன. லிங்கனமக்கி, தலக்கலாலே. லிங்கனமக்கியில் அனுமதி இல்லை. 60 ஏக்கருக்குப் பரந்து விரிந்த தலக்கலாலே அணையில், 200 அடி ஆழ நீரில் செமையான படகுச்சவாரி போனோம். டூரிஸ்ட்கள் சிறப்பு அனுமதி வாங்கித்தான் போக வேண்டும்.

ஜோக் ஃபால்ஸுக்கு சீஸன் என்பதே இல்லை. ‘சன்னுக்கு ஏது சண்டே’ என்பதுபோல், ஜோக் அருவிக்கு ரெஸ்ட்டே இல்லை. கார் பார்க்கிங் செய்யும்போதே, தூரத்தில் அருவி ஆசையைத் தூண்டிவிடுகிறது. மொத்தம் 1,400 படிகள் இறங்கித்தான் (டூ வே என்றால் 2,800 படிகள்) அருவியின் அடிவாரத்துக்குப் போக முடியும். 2k கிட்ஸுக்கே மூச்சு வாங்கித் தள்ளியது. 70S கிட்ஸ் என்றால், நிச்சயம் பெட் ரெஸ்ட்தான். ஆனால், ‘தேங்காய் வேணும்னா தென்னை மரம் ஏறித்தான் ஆகணும் குமாரு’ என்ற சந்தானத்தின் டயலாக்தான் நினைவுக்கு வந்தது. அருவியை அனுபவிக்கணும்னா, 2,800 படி ஏறி/இறங்கித்தான் ஆக வேண்டும் மக்களே!

மொத்தம் 4 அருவிகள். ராஜா, டைகர் ரோரிங், ராக்கெட், ராணி என்று 4 அருவிகளுக்குப் பெயர்க் காரணம் சொன்னார் நாகராஜ் அண்ணன். எல்லாமே 960 அடி உயரத்தில் இருந்து சந்தோஷமாய் விழுகின்றன. அத்தனை உயரத்திலிருந்து விழும் அருவி நீரைத் தலைக்கு வாங்கினால்... நிச்சயம் காலிதான். குளிக்க முடியாது; கால் நனைக்கவும் முடியவில்லை. 100 அடிப் பள்ளம் என்றார்கள். ஆனால் பார்க்கும்போதே சாரல் நனைத்து விடுகிறது. ‘‘‘புன்னகை மன்னன்’ படத்தில் கமலும் ரேகாவும் குதிக்கிறது அதிரப்பள்ளியில். ஆனால் கீழே காட்டுறது இந்த ஜோக் ஃபால்ஸைத்தான்’’ என்று ஹிட்டன் நியூஸ் சொல்லி, அடிவாரத்தில் ஓரிடத்தைக் காட்டினார் கைடு.

‘இந்த அருவியை டாப் ஆங்கிளில் பார்க்கலாம் வாங்க...’ என்று நாகராஜ் அண்ணன் ஒரு சின்ன ட்ரெக்கிங் கூட்டிப் போனார். ஆர்ச்சில் இருந்து சட்டென இறங்கிய ஒரு பள்ளத்தில் ட்ரெக்கிங். ‘இங்கதான் ‘கும்கி’ படத்தோட ஷூட்டிங் நடந்தது’ என்றார். பாறைகள், செடிகள், பலா மரங்கள் என்று பாதைக்குள் பாதை கண்டுபிடித்துப் போனோம்.

சட்டென ஒரு பாறையில் ஹோல்ட் ஆன் செய்தார் நாகராஜ். சுற்றிப் பார்த்தால், நான்கு அருவிகளின் பிரம்மாண்டமும் ஓரளவு பக்கத்தில்... நம்மை அறியாமல் மனசும் உடம்பும் பரவசமானது. ‘அவதார்’ பட லொகேஷன்போல் இருந்தது டாப் ஆங்கிள் ஜோக் ஃபால்ஸ்.

இந்த அருவியை நின்னமேனிக்குப் பார்க்கக் கூடாது. 960 அடி உயரப் பாறையில் குப்புறப்படுத்தபடிதான் பார்க்க வேண்டும். அப்போதுதான் உயிருக்கும் உடலுக்கும் உத்தரவாதம். 960 அடிக்குக் கீழே அருவியைப் பார்த்தால்... ஏதோ ஒரு ஜென் நிலை கிடைத்தது. பட்டப்பகலில் ராணி அருவி வானவில்லில் வர்ணஜாலம் காட்டியது.

இங்கே கைடு உதவியோடு வந்தால் மட்டும்தான் அனுமதி. ‘குளிக்கிறதுன்னா அங்க குளிச்சிக்கலாம்’ என்று சின்னதாக ஓர் அருவியைக் காட்டினார் கைடு. யாருக்கும் வலிக்காமல் செல்லமாய் விழுந்து கொண்டிருந்தது ஒரு குட்டி அருவி. ‘‘இதுவே ஆகஸ்ட் மாதம் வந்தால், இங்கே நடக்கலாம் முடியாது; பாறையே முங்குற அளவுக்குத் தண்ணி இருக்கும்’’ என்று போனில் ஒரு வீடியோ காட்டினார் நாகராஜ். மெர்சலாக இருந்தது. ‘அசுரன்’ பட லொக்கேஷன் என்றோர் இடத்தைக் காட்டினார். ‘அசுரன்’ தீம் மியூஸிக் போட்டு ஷூட் செய்தால், ஒவ்வொருவரும் தனுஷ் ஆகலாம்.

‘இது ஜோக் இல்லை; ஜோக் ஃபால்ஸ் அழகு கொடுத்த ஷாக்கில் இருந்து இன்னும் மீளவில்லை’ என்று டூர் முடிந்து வாட்ஸ்–அப் செய்திருந்தார்கள் அண்ணனும் தம்பியும்.

நோட் பண்ணுங்க!

சென்னையில் இருந்து கிளம்புபவர்கள், ஜோக் ஃபால்ஸுக்கு ஒரு நாள் டூர் அடிப்பது கஷ்டம். போகும் வழியில் ஷிமோகாவில் தங்கி சிங்கம்/புலி சஃபாரிக்குத் திட்டம் போடலாம். காட்டுக்குள் ஹாயாகத் திரியும் சிங்கம், புலிகளைப் பக்கமாகப் பார்க்கலாம். ஜோக் ஃபால்ஸில் தங்கும் இடத்துக்குப் பஞ்சமே இல்லை. நுழைந்ததுமே கைடுகள் சுற்றி வளைப்பார்கள். அரசாங்க காட்டேஜில் தங்கினால், பணமில்லாத ஏடிஎம் போல் பர்ஸ் மெலிந்துவிடும். சிரூர் (Sirur) ஏரிக்குப் பக்கத்தில் விலை மலிவான சில ஹோம் ஸ்டேக்களைக் கண்டுபிடியுங்கள். இங்கே செக்–அவுட் டைமிங் பகல் 12 மணிதான் என்பதை நினைவில் கொள்க.

1 மணி நேரம் தாமதித்தாலும், டிராஃபிக் போலீஸ் மாதிரி சில நூறுகள் அபராதம் போடுகிறார்கள். ஆனால் வீட்டுச்சாப்பாடு என்பது இங்கே ப்ளஸ். ‘அருவிக்கு வந்துட்டு குளிக்காமப் போனா எப்படி’ என்பவர்களுக்குக் குட்டிக் குட்டி ஸ்பாட்கள் உண்டு. கைடுகள் உதவியுடன் அருவியின் டாப் ஆங்கிளைப் பார்க்க மறவாதீர்கள். போட்டிங், வாட்டர் கேம், அருவிக் குளியல், அணைக் கட்டு வியூ பாயின்ட் என்று ஜோக் ஃபால்ஸில் எக்கச்சக்க அம்சங்கள் உண்டு.

என்னென்ன பார்க்கலாம்?

ஷிமோகாவில் இருந்து...

அகும்பே (65 கி.மீ)

தென்னிந்தியாவின் சிரபுஞ்சி இது. செமையான காடு. ராஜ நாகங்கள் இங்கே அதிகம். வனவிலங்குகள் பார்க்க அற்புதமான இடம்.

ஷிவ்கங்கே அருவி (130 கி.மீ)

ட்ரெக்கிங் போய்க் குளிக்க அற்புதமான அருவி.

ஜோகிகவுண்டி அருவி (70 கி.மீ)

மற்ற அருவிகள்போல் உயரத்தில் இருந்து விழாமல், குகைகள்–பாறைகளுக்கு நடுவே இருந்து விழும் அருவி. அனுமதி வாங்கிப் போய் குளிக்கலாம்.

மண்டகாடே பறவைகள் சரணாலயம் (32 கி.மீ)

ஜூலை – அக்டோபர் வரை darter, egret, snake-bird, cormorant என வித்தியாசமான பறவைகள் பார்க்கலாம். 82 கி.மீ–ல் ‘குடவி’ என்றொரு சரணாலயமும் உண்டு.

பர்கானா அருவி (69 கி.மீ)

மழை சீஸனில்தான் தண்ணீர் விழும். மேற்குத் தொடர்ச்சி மலைகள் வழியே ட்ரெக்கிங் போய் அருவியில் குளிக்கலாம்.

தவரகொப்பா லயன் சஃபாரி (10 கி.மீ)

ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட் கொண்ட புலி, சிங்கங்களை வெட்ட வெளியில் ஜீப்பில் இருந்தபடி பார்க்கலாம்.

Hidlumane Falls (75 கி.மீ)

மூகாம்பிகை எனும் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் அருவி. ட்ரெக்கிங் மூலம்தான் அருவிக்குப் போக முடியும்.

கொடசத்ரி மலை (75 கி.மீ)

சுமார் 4,411 அடி கடல் மட்டத்தில் இருந்து உயரமான மலைச் சிகரம். தனிமை விரும்பிகளுக்கு அற்புதமான ட்ரெக்கிங் ஸ்பாட்.

ஃபார்ச்சூனர் எப்படி?

பல்க்கி ஸ்டைல்தான் ஃபார்ச்சூனரின் ஸ்பெஷல். நாம் போனது பழைய 3.0 லிட்டர் இன்ஜின். சுமார் 2 டன் எடை கொண்ட ஃபார்ச்சூனர், சாஃப்ட்ரோடுகளில் சில பவர்ஃபுல் செடான்களுக்கே சவால் விடுகிறது. 4வீல் டிரைவ் என்பது, ஆஃப்ரோடு ஏரியாக்களில் இன்னும் ஸ்பெஷல். எப்படிப்பட்ட சாலைகளிலும் ஃபார்ச்சூனர் இருந்தால் பயப்படவே தேவையில்லை. வாட்டர் வேடிங்கூட அற்புதமாகப் பண்ண முடிந்தது.

‘‘இன்ஜின்தான் சார் எனக்கு ரொம்பப் பிடிக்கும் டொயோட்டாவில். 5 லட்சம் வரை ஓடின ஃபார்ச்சூனர்லாம் பார்த்துருக்கேன்’’ என்கிறார் மணிகண்டன்.

என்ன, சில சொகுசு வசதிகளில்தான் ஃபார்ச்சூனர் கொஞ்சம் கஞ்சத்தனம் காட்டுகிறது. மற்றபடி 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் என்பது, இத்தனை பெரிய காருக்குக் குறைவுதான். ‘‘மேனுவல்ங்கிறதால மைலேஜ் சுமாரா 11 கிடைக்குது,. ஆட்டோமேட்டிக்னா சிங்கிள் டிஜிட்டில்தான் கிடைக்கும். சரியா?’’ என்கிறார் மணிகண்டன்.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!