Published:Updated:

ஹைவேஸில் கிக்... மைலேஜில் பக்!

Nissan Kicks
பிரீமியம் ஸ்டோரி
Nissan Kicks

ரீடர்ஸ் ரிப்போர்ட் : நிஸான் கிக்ஸ் (பெட்ரோல்)

ஹைவேஸில் கிக்... மைலேஜில் பக்!

ரீடர்ஸ் ரிப்போர்ட் : நிஸான் கிக்ஸ் (பெட்ரோல்)

Published:Updated:
Nissan Kicks
பிரீமியம் ஸ்டோரி
Nissan Kicks

‘‘எஸ்யூவிதான் வாங்கணும்னு இருக்கோம். எதுனா எஸ்யூவி வந்தா சொல்லுங்க. நாங்க ஓட்டி டெஸ்ட் ரிப்போர்ட் கொடுக்கிறோம்’’ என்று ஏற்கெனவே வாய்ஸ் ஸ்நாப்/வாட்ஸ்–அப் எல்லாம் செய்திருந்தார்கள், மோ.வி வாசகர்களான நிஷாந்த்/காயத்ரி தம்பதியர்.

நிஸான் கிக்ஸ்
நிஸான் கிக்ஸ்

அவர்கள் ஏக்கத்தை ரொம்ப நாள் கழித்துத் தீர்த்து வைத்துவிட்டது நிஸான். பாகிஸ்தான் பார்டர், குஜராத் பாலைவனம், ராஜஸ்தான், மும்பை என்று எல்லா இடங்களிலும் நிஸான் கிக்ஸை ஓட்டி டெஸ்ட் ரிப்போர்ட் கொடுத்தாயிற்று. ``அதெல்லாம் நீங்க கொடுத்த ரிப்போர்ட். இது எங்க டர்ன். இப்போ நாங்க ஓட்டிப் பார்த்து ரிப்போர்ட் கொடுக்கிறோம்’’ என்று நமது அலுவலகத்துக்கு வந்து, வான்டட் ஆக பெட்ரோல் நிஸான் கிக்ஸ் காரில் ஏறினார்கள் இருவரும். பழைய காராக இருந்தாலும், முதல் முறையாக ரிவ்யூ செய்வதுபோல் உற்சாகமாக செய்தார்கள் இருவரும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உள்ளே

நிஷாந்த்: இன்டீரியர் ஓகே! டச் ஸ்க்ரீன் 8 இன்ச்தானே? ஆப்பரேட் பண்ணிப் பார்த்தேன். ஜிபிஎஸ் செட் செய்றதுக்குத்தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. நல்லவேளை – வழக்கமான நிஸான் கார்கள்ல இருக்கிறது மாதிரி உருண்டை ஏ.சி கன்ட்ரோல் இதில் இல்லை. சாஃப்ட் டச் பட்டன்கள் சூப்பர். இந்த காரில் ஸ்டீயரிங்கில் ஆடியோ கன்ட்ரோல் இல்லையே? மற்றபடி டிரைவிங் கம்ஃபர்ட் ஓகே!

ஹைவேஸில் கிக்... மைலேஜில் பக்!

காயத்ரி: நமக்கு எப்பவுமே பின் சீட் அல்லது கோ–டிரைவர் சீட்தான். முன் பக்க சீட் நல்ல கம்ஃபர்ட்டபிளா இருக்கு. என் குழந்தை அகிராவை வெச்சுக்கிட்டு வசதியாவே உட்கார முடியுது.

ஹைவேஸில் கிக்... மைலேஜில் பக்!

பின்னாடி உட்கார்ந்து பார்த்தேன். அதுவும் ஓகேதான். ஆனா ரொம்ப தூரப் பயணத்துக்கு பின் சீட்டில் 3 பேர்னா, கொஞ்சம் கஷ்டம்தான்! இன்னும் கொஞ்சம் பேக்ரெஸ்ட் சப்போர்ட் வேணும். நல்லவேளை – பின்னாடி ஏ.சி வென்ட் கொடுத்திருக்காங்க.

வெளியே

நிஷாந்த்: டிசைன் ரொம்பப் பிடிச்சிருக்கு. ஹெட்லைட், டிஆர்எல், டெயில் லைட்னு எல்லாமே எல்இடி..யா வாவ்! இதோட சைடு மிரர் வித்தியாசமா பொசிஷன் பண்ணியிருக்காங்க.

ஹைவேஸில் கிக்... மைலேஜில் பக்!

எல்லா காரிலும் பில்லருக்குப் பக்கத்தில்தானே இருக்கும்? இதில் கதவிலேயே ஃபிட் பண்ணின மாதிரி இருக்கு. கதவைத் திறந்தால் அதுவும் கூடவே வர்ற மாதிரி இருக்கு. எனக்கு இப்போ வரை ஒரு குழப்பம் – இது க்ராஸ்ஓவரா, எஸ்யூவியா?

காயத்ரி: ஹூண்டாய் கார்ல இருக்கிறது மாதிரியே ஸ்டைலா இருக்கு இதோட டைமண்ட் கட் அலாய் வீல். ரோட்டில் ஆரஞ்ச் கலர் ரூஃப் வெச்சு கிக்ஸ் ஓடிட்டிருக்கே... அது எனக்குப் பிடிச்சிருக்கு. ஓவர்ஆலா டிசைன் எனக்கு ஓகே! பூட் ஸ்பேஸ் 400 லிட்டருக்கு மேலே இருக்கும்போல! எவ்வளவு இடவசதி!

ஹைவேஸில் கிக்... மைலேஜில் பக்!

சஸ்பென்ஷன்

நிஷாந்த்: 17 இன்ச் வீல்கள்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. XL6 காரிலேயே 16 இன்ச்தான். சஸ்பென்ஷன் டைட் ஆகவும் இல்லை; சாஃப்ட் ஆகவும் இல்லை. பார்க்கிங், டிரைவிங்கில் ஸ்டீரியரிங் ரெஸ்பான்ஸ் நல்லாவே உணர முடியுது. கி.கிளியரன்ஸ் 210 மிமீ. ஆஃப்ரோடுகூடப் பண்ணலாம்போல!

காயத்ரி: சில கார்கள்ல ‘டமால் டுமால்’னு தூக்கிப் போடும். என் கணவர் ஓட்டுறவரை பெருசா உள்ளே குலுங்கல் தெரியலை. கார் திரும்பும்போது மட்டும் நானும் தம்பியும் லேசா ரோல் ஆனோம். மத்தபடி ஓகே!

டிரைவிங்

நிஷாந்த்: 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் நல்ல ஸ்மூத். சட் சட்னு மாத்த முடியுது. டீசல் காரா இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். 4 சிலிண்டர்தானே... கேப்ச்சர், டஸ்ட்டரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல்தான்னு மோ.வி.யிலதான் படிச்சேன்.

மற்ற போட்டியாளர்களை கம்பேர் பண்ணும்போது பவர் கம்மிதான்னு நினைக்கிறேன். என் ஃப்ரண்ட் கேப்ச்சர் வெச்சிருக்கார். கிளட்ச் ஹெவியா இருக்குனு சொல்வார்.

கிக்ஸில் பரவாயில்லை. லைட் வெயிட். கொஞ்சம் அவுட்டர்ல 140 கி.மீ வரை பறந்தேன். ஓரளவு ஸ்டேபிளாவே இருக்கு. ஆனா சிட்டிக்குள்ள டர்போ முழிக்க மாட்டேங்குதே?

ஹைவேஸில் கிக்... மைலேஜில் பக்!

காயத்ரி: பெட்ரோல் கிக்ஸ் சூப்பர் ஸ்மூத். 360 டிகிரி கேமரா, இந்த செக்மென்ட்டில் இதுதான் ஃபர்ஸ்ட்டாமே? பார்க்கிங் பண்ண சிரமமாகவே இருக்காது. நான்கூட ஈஸியா பார்க் பண்ணிடுவேன்னு நினைக்கிறேன்.

ஹைவேஸில் போயிக்கிட்டிருக்கும் போது பவர் விண்டோவைத் திறந்தால்... செம காத்து. ஸ்பீடோ மீட்டரைப் பார்த்தேன். 130 கி.மீ–னு காட்டுச்சு. நம்பவே முடியலை. அந்தளவு சூப்பர்!

எங்கள் தீர்ப்பு

‘‘பெட்ரோல் மாடலில் டாப் எண்ட் அதாவது XV Premium இல்லைனு நினைக்கிறேன். ஸ்டீயரிங்கில் ஆடியோ கன்ட்ரோல் இல்லை. சில எர்கானமிக்ஸ் குறைகள் தெரியுது. மற்றபடி டிரைவிங், கம்ஃபர்ட் எல்லாமே ஓகே! மழை நேரங்கள்ல லேசா தண்ணீர் உள்ள வர்றது மாதிரி தெரியுது. நிஸான் வெச்சிருக்கிற என் ஃப்ரண்ட்ஸும் இதையேதான் சொல்றாங்க.

மைலேஜில் இன்னும் ரொம்ப முன்னேற்றம் வேணும். சிங்கிள் டிஜிட்தான் வரும்னு நினைக்கிறேன். டீசல் பரவாயில்லை போல. எஸ்யூவினா சன் ரூஃப் வேணுமே? அது இல்லை.

11.5 லட்சத்தில் இருந்து 13.75 லட்சம் வரை விலை வருது பெட்ரோல் கிக்ஸ். விலையை இன்னும் குறைவாக்கணும். சர்வீஸ் சென்டர்களை அதிகப்படுத்தணும். மைலேஜிலும் நிஸான் எங்களைத் திருப்திப்படுத்தணும்!’’