கார்ஸ்
Published:Updated:

தீபாவளி ரிலீஸ்! டஸ்ட்டர் திரும்பவும் வருது!

டஸ்ட்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
டஸ்ட்டர்

ஸ்கூப் நியூஸ்: ரெனோ – நிஸான்

டஸ்ட்டர்
டஸ்ட்டர்

நீங்கள் டஸ்ட்டர் விரும்பிகளாக இருந்தால், உங்களுக்காக இந்த ஒரு பக்கம். ரெனோவைத் தூக்கி நிறுத்தியதில் டஸ்ட்டரின் பங்கு முக்கியமானது…. இல்லை டஸ்ட்டர்தான் காரணமே!

அப்படிப்பட்ட டஸ்ட்டரைத் திடீரென ஒருநாள் தனது வலைதளத்தில் இருந்து டஸ்ட்டரை வைத்துத் துடைத்தது ரெனோ. இப்போது ரெனோவில் ட்ரைபர், கைகர், க்விட் என முத்தாக மூன்றே கார்கள்தான் விற்பனையாகின்றன. இப்போது மீண்டும் ஒரு ஹேப்பி நியூஸ்.

டஸ்ட்டர் – மறுபடி ஜென்மம் எடுக்கப் போகிறது. முற்றிலும் புதிய டிசைனில்… புதிய ப்ளாட்ஃபார்மில்… செம ஸ்டைலாக வரப் போகிறது டஸ்ட்டர் எஸ்யூவி. ரெனோவும் நிஸானும் சேர்ந்து 5,300 கோடிக்கு முதலீடு செய்யக் கையெழுத்திட்டு விட்டதாம்.

இதில் 2 மாடல்கள் நிஸான் பெயரிலும், 2 மாடல்கள் ரெனோவின் பெயரிலும் வரவிருக்கின்றன. இதில் முதல் அதிரடியாக டஸ்ட்டரைத்தான் ரெனோ கொண்டு வரலாம் என்கிறார்கள். குளோபலாக வெற்றி நடை போடும் டேஸியா டஸ்ட்டரை மாற்றம் செய்து, நம் ஊருக்கு புது ஜென் டஸ்ட்டர் இந்தியாவுக்கு வரலாம் என்கிறார்கள். நடுவில் ஸ்ப்ளிட் ஹெட்லைட் டிசைன் கொண்ட பம்பர், பின் பக்கம் முக்கோண வடிவில் டெயில் லைட்ஸ், ஸ்டைலிஷ் ஆன கறுப்பு அலாய் வீல்கள் என்று செம லுக்கான தோற்றத்தில் வரப் போகிறது டஸ்ட்டர். ரெனோவின் CMF-B எனும் கட்டுறுதியான ப்ளாட்ஃபார்மில் இது ரெடி செய்யப்படக் காத்திருக்கிறது. ஆனால், இது டேஸியா டஸ்ட்டர் எனும் பெயரில் வருமா என்று தெரியவில்லை. இதைத் தொடர்ந்து டெரோனோ போலவே டஸ்ட்டரின் வழித்தோன்றல் காரும் நிஸான் பேட்ஜில் வருமாம். அப்படியே இதையும் தொடர்ந்து, ஜூன் 2026 வாக்கில் அப்படியே 3 சீட்டர் எஸ்யூவியையும் கொண்டு வரப் போகிறதாம் ரெனோ.

அது சரி; இந்த டஸ்ட்டர் எப்போ வரும்? அதற்குத் தீபாவளி வரை காத்திருக்க வேண்டும் மக்களே! இந்த 2023 தீபாவளி இல்லை; 2025 தீபாவளிக்குத்தான் டஸ்ட்டரை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறதாம் ரெனோ.