Published:Updated:

விமர்சனம்: ஃபோர்டு Vs ஃபெராரி

ஃபோர்டு Vs ஃபெராரி
பிரீமியம் ஸ்டோரி
ஃபோர்டு Vs ஃபெராரி

MATT DAMON CHRISTIAN BALE - FORD V FERRARI

விமர்சனம்: ஃபோர்டு Vs ஃபெராரி

MATT DAMON CHRISTIAN BALE - FORD V FERRARI

Published:Updated:
ஃபோர்டு Vs ஃபெராரி
பிரீமியம் ஸ்டோரி
ஃபோர்டு Vs ஃபெராரி

"7000 rpm-ல் எல்லாமே அற்பமாகிவிடும்.

அந்த சூன்யப் புள்ளியில் கார் தன் எடையை மறக்க ஆரம்பிக்கும்."

- படத்தின் நாயகன் கென் மைல்ஸ், தன் மகனிடம் சொல்லும் இந்த வசனம், பார்க்கிங்கில் இருக்கும் காரையோ, பைக்கையோ பார்க்கும்போது நினைவுக்கு வரும். ஒரு குறைந்தபட்ச வேகத்தில் நம் வாகனத்தைச் செலுத்திப் பார்க்கலாம் என்னும் ஆசையைத் தூண்டும். ஒரு சினிமா நம் மீது செலுத்தும் குறைந்தபட்சக் காதல் இதுதான்.

MATT DAMON CHRISTIAN BALE - FORD V FERRARI
MATT DAMON CHRISTIAN BALE - FORD V FERRARI

இரண்டு மிகப் பெரிய கார் நிறுவனங்கள். 24 மணி நேரப் பந்தயம். 1966-ல் நிகழ்ந்த ஒரு கார்(ப்பரேட்) யுத்தத்தை மையமாக வைத்து வெளியாகியிருக்கிறது ஃபோர்டு Vs ஃபெராரி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஃபிரான்சின் லீ மான்ஸ் நகரில் நடக்கும் `24 ஹவர்ஸ் ஆஃப் லீ மான்ஸ் போட்டி' மிகவும் பிரபலம். இது பாதுகாக்கப்பட்ட ரேஸ் ட்ராக்கில் நடக்கும் சர்க்யூட் ரேஸ் கிடையாது. நகரச் சாலைகளில் 400 கி.மீ வேகத்தில் கார் ஓட்ட வேண்டும். அதுவும் 24 மணிநேரம் ஓட்ட வேண்டும். இன்ஜினில் இருக்கும் ஒரு சின்ன 50 ரூபாய் கேஸ்கெட் உடைந்தால்கூட, அதோடு ரேஸில் இருந்து வெளியேற வேண்டியதுதான்.

வேகம் மற்றும் ஸ்திரத்தன்மை - இரண்டும் கலந்த இதில் எப்போதும் கில்லியாக இருக்கும் ஃபெராரி கார்களை ஆட்டம் காண வைக்கத் திட்டம் தீட்டுகிறது ஃபோர்டு.

ஃபோர்டுக்கும் ஃபெராரிக்கும் நடந்த வர்த்தகச் சண்டை உலகமறிந்தது. ஃபெராரியை வாங்கத் திட்டமிடுகிறது ஃபோர்டு. ஃபெராரியோ ஃபோர்டை நக்கலடித்து, ஃபியட்டுடன் கைக்கோக்கிறது. பெரும் அரக்கனைச் சீண்டிவிட்டு ஏளனம் செய்கிறார் என்ஸோ ஃபெராரி. (என்ஸோ ஃபெராரியின் இதே ஏளனத்தால்தான் ஃபெர்ருசியோ லம்போகினி, லம்போகினி நிறுவனத்தைத் தொடங்கினார்). படத்தில் இரண்டாம் ஹென்ரி ஃபோர்டு இவ்வாறாகச் சொல்வார்: “ஃபெராரி ஓர் ஆண்டில் தயாரிக்கும் கார்களைவிட, நாம் ஒரு நாளில் தயாரிக்கும் கார்களின் எண்ணிக்கை அதிகம்.”

ஆம்! ஆனால், ஃபெராரியின் மீதிருக்கும் ஓர் ஏக்கம், ஃபெராரியை வாங்கத் தூண்டும் ஓர் ஆவல் - ஃபோர்டு கார்களின் மீது வராது. ஃபோர்டு என்பது ஒரு கார். அந்த நிறுவனம் கார்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். உலகச் சந்தையில், தார்ச் சாலைகளில் செல்ல ஃபோர்டு ஓர் அவசியமான கார். பெரும்பாலான பழைய படங்களில், நாம் ஃபோர்டு மஸ்டாங் கார்களைப் பார்க்க முடியும். ஆனால், ஃபெராரி வெற்றியாளர்களின் கார். ஒவ்வொருமுறை ஃபெராரி வெற்றி பெறும்போதும், அந்த ரசிகன் தானே அந்த ஃபெராரியை ஓட்டியதைப்போல் உணர்கிறான். அந்த ஏக்கம், ஃபெராரி கார்களின் மீதான அவனது காதலை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இதைத் தாமதமாக உணர்ந்த ஃபோர்டு, ரேஸ் கார்களில் முதலீடு செய்யத் துவங்குகிறது. ஷெல்பி அமெரிக்கன் நிறுவனர் கரோல் ஷெல்பியை (மேட் டேமன் ) நாடுகிறது ஃபோர்டு. அவர் கார் டிரைவரும், மெக்கானிக்குமான கென் மைல்ஸை (கிறிஸ்டியன் பேல்) நாடுகிறார்.

விமர்சனம்: ஃபோர்டு Vs ஃபெராரி

ஃபோர்டு - ஃபெராரி கார் போர்களை ஓரங்கட்டிவிட்டு, கார் காதலர்களான கரோல் ஷெல்பி, கென் மைல்ஸ் பற்றி அறிந்து கொள்வதற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம். 1959-ல், லீ மேன்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற கரோல் ஷெல்பி இதயக் கோளாறு காரணமாக இனி ரேஸ் கார் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்ட நபர். ‘ஜாக்கிரதையாக இருங்கள்' என்கிற அபாய ஒலிக்குப் பிறகு, தன் வீட்டு உபயோகக் காரை ரேஸ் கார் போல் ஓட்டி, `அடப் போங்கடா’ எனச் சொல்லும் கரோல் ஷெல்பியின் ரியாக்ஷன், ஆயிரம் கதைகளைச் சொல்லாமல் சொல்கின்றன.

பெயர் பெற்ற ஓவியன் ஒருவன், தன் இறுதிக் காலத்தில் வீடுகளுக்கு வெள்ளை அடிக்கச் சென்றானாம். அப்படியானதொரு ரேஸ் கார் கலைஞன் கென் மைல்ஸ். எல்லாம் தெரிந்தும், போதிய வாய்ப்புகள் இல்லாமல் கார் மெக்கானிக்காக நாள்களை நகர்த்தி வருகிறார்.ஷெல்பி மூலமாக, Ford GT40 Mk I காரைத் தயாரிக்கும் வாய்ப்பு கென் மைல்ஸுக்கு வருகிறது. இந்த உலகம் நம்மை அவ்வளவு எளிதில் நம்பி பொறுப்புகளை ஒப்படைத்துவிடாது. கென் மைல்ஸை ஓரங்கட்டிவிட்டு - பில் ஹில், ப்ரூஸ் மெக்லேரனை 1964 லீ மேன்ஸ் போட்டிக்கு அனுப்புகிறது ஃபோர்டு. எதிர்பார்த்தது போலவே தோல்வியைத் தழுவுகிறது ஃபோர்டு. மீண்டும் GT40 Mk II காருக்கான தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள்.

ஃபோர்டு, கார்களை நேசிக்காமல் அதை வெறும் விற்பனைப் பொருளாகப் பார்க்கும் ஒரு நிறுவனம் என்பது, ஷெல்பிக்கும் மைல்ஸுக்கும் புரிய காலம் எடுக்கிறது. அடுத்த வில்லங்கம் ஃபோர்டின் முதன்மைத் துணைத் தலைவர் லியோ பீபி மூலம் வருகிறது. மீண்டும் ஓரங்கட்டப்படுகிறார் மைல்ஸ். தன் நிறுவனத்தைப் பணயம் வைத்து ஷெல்பி, மைல்ஸுக்கான லீ மேன்ஸ் வாய்ப்பைப் பெற்றுத் தருகிறார்.

ஃப்ளோரிடாவில் நடக்கும் 24 ஹவர்ஸ் ஆஃப் டேடோனாவில் வெற்றி பெற்றால், லீ மேன்ஸில் பங்கு பெறலாம் என, தன் எதிர்கால சாம்பியனுக்கு ஃபோர்டு கட்டளையிடுகிறது. 7000 rpm-ல் 24 ஹவர்ஸ் ஆஃப் டேடோனாவைக் கடக்கிறது மைல்ஸின் கார்.

அதன் பிறகென்ன? லீ மான்ஸ் ரேஸ்தான். முதல் லேப்பில் மைல்ஸின் கார் சோதனை செய்ய, அதற்குப் பிறகு எல்லாமே வெற்றிகள்தான். ஒவ்வொரு லேப்பிலும், முந்தைய லேப் சாதனையை முறியடிக்கிறார். ஒரு பெரும் நிறுவனம், தனி நபர் சாதனையைத் துச்சமெனக் கருதும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது ஃபோர்டு. தன் அணியிலிருக்கும் எல்லா கார்களும் ஒரே நேரத்தில் ரேஸ் டிராக்கைக் கடக்க, மைல்ஸை மெதுவாக ஓட்டச் சொல்கிறார்கள். விதிகளின் அடிப்படையில் பின்னால் வந்த சக ஃபோர்டு ஓட்டுநரான ப்ரூஸ் மெக்லேரன் (பின்னாட்களில் மெக்லேரன் கார் நிறுவனத்தை தொடங்கினார்) முதல் பரிசைப் பெறுகிறார். காலம், கென் மைல்ஸுக்கு என்றுமே ஆதரவாக இருந்ததில்லை. அடுத்த ஆண்டு டெஸ்ட்டிங்கில், கார் வெடித்துச் சிதறி உயிரிழக்கிறார் மைல்ஸ்.

கென் மைல்ஸின் கோபத்தை, ஆற்றாமையை, ஃபோர்டு நிறுவனத்தின் மீது காட்டும் ஏளனப் பார்வையை என ஒவ்வொரு ஃபிரேமிலும், தன் நுணுக்கமான அங்க அசைவுகளின் மூலம், கண் பார்வையும் மூலம் திரையில் கொண்டு வந்திருக்கிறார் கிறிஸ்டியன் பேல். அதேபோல் ஹென்றி ஃபோர்டை உட்கார வைத்து, ரேஸ் ஓட்டும் ஷெல்பி செய்யும் சர்க்கஸ்,வேற லெவல் அட்டகாசம்.

உண்மைச் சம்பவத்துக்கு மிகவும் நெருக்கமாக இதன் திரைக்கதையைப் புனைந்திருக்கிறார்கள் ஜேசன் கெல்லரும் ஜெஸ் பட்டர்வொர்த்தும் . கார் ரேஸ் காட்சிகளில் நம்மை, பக்கத்து சீட்டில் அமர்ந்து பார்க்க வைக்கிறார்ஃபீடன் பபமிசேல்.

கார் காதலர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டாட வேண்டிய சினிமா இந்த ஃபோர்டு Vs ஃபெராரி.