2020-ம் ஆண்டு டாடாவுக்கு ஸ்பெஷலாக இருக்கப் போகிறது. தன் பழைய புராணங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, புதிய கட்டமைப்புக்குள் இறங்குகிறது டாடா மோட்டார்ஸ். அடுத்தடுத்து டாடா லிஸ்ட்டில் வைத்திருக்கும் கார்களை இப்போது பார்க்கலாம்.

ALFA (ஆல்ஃபா) என்றால் Agile, Light, Flexible, Advance என அர்த்தம். இந்த ஆல்ஃபா பிளாட்ஃபார்மும், லேண்ட் ரோவர் பிளாட்ஃபார்மை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஒமேகா பிளாட்ஃபார்மும் சேர்த்துதான், அடுத்த 10 ஆண்டுகளுக்கு வரவிருக்கும் டாடா கார்களுக்கு அடிப்படையாக இருக்கப் போகின்றன.

எத்தனை கார்களை எதிர்பார்க்கலாம்?

இந்த கேள்விக்கு டாடா மோட்டார்ஸின் செயல் அதிகாரி கன்ட்டர் புட்செக், “4 ஆண்டுகளில் ஆல்ஃபா மற்றும் ஒமேகா பிளாட்ஃபார்மில் மொத்தம் 12 முதல் 14 கார்கள் கொண்டுவரும் திட்டம் இருக்கிறது” என்றார். இது தற்போது இருக்கும் கார் சந்தையில், 90 சதவிகிதத்தை கவர் செய்யும் முயற்சி.

என்னென்ன கார்களை எதிர்பார்க்கலாம்?

இதுவரை தெளிவான ஒரு திட்டத்தை டாடா நிறுவனம் முழுமையாகச் சொல்லவில்லை என்றாலும், இதுவரை நமக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் செய்திகளின் அடிப்படையில், சில கார்கள் நிச்சயம் வரும் எனச் சொல்லாம். ஹார்ன்பில் (H2X) கான்செப்ட்டில் ஒரு சப் காம்பேக்ட் எஸ்யூவி, ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் அடுத்த தலைமுறை நெக்ஸான் ஆகிய கார்கள் உறுதியாக வரும். சீன நிறுவனமான கீலி (Geely) உதவியோடு ‘பிளாக்பர்டு’ என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட காரைக் களமிறக்கவும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இது க்ரெட்டாவுக்குப் போட்டியாக இருக்கும்.

evision எனும் செடான் கான்செப்ட்டை ஜெனிவாவில் காட்சிப்படுத்தியிருந்தது டாடா. இந்த காரை ஹோண்டா சிட்டிக்குப் போட்டியாகக் கொண்டு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. மாருதி சுஸூகி டிசையருக்குப் போட்டியாக இதன் காம்பேக்ட் வெர்ஷன் ஒன்றும் வெளிவரும். எர்டிகாவுக்குப் போட்டியாக எம்பிவி ஒன்றும் இப்போது டாடாவின் பாக்கெட்டில் இருக்கிறது. வேகன் ஆருக்குப் போட்டியாக நிறுத்த ஒரு காரும் உண்டு. டியாகோ, டிகோர் மாடல்களும் - அதன் எலெக்டரிக் வெர்ஷன்களும் லிஸ்ட்டில் உண்டு.

ஆல்ஃபா அளவுக்கு ஒமேகா பிளாட்ஃபார்ம் இளக்கமானது கிடையாது. இதில் மூன்று கார்கள் மட்டுமே வரவுள்ளன. முதலாவதாக ஹேரியரின் 7 சீட் வெர்ஷன் (கிராவிடாஸ்), ஹெக்ஸாவுக்குப் பதிலாக கூபே போன்ற ரூஃப் கொண்ட எஸ்யூவி, இனோவாவுக்குப் போட்டியாக ஒரு எம்பிவி வரப்போகின்றன. ஒமேகா பிளாட்ஃபார்மில், தற்போது 2.0 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின் மட்டுமே இருக்கிறது. இந்த பிளாட்ஃபார்முக்காக, தற்போது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை உருவாக்கிவருகிறது டாடா.

சிறிய ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் பெட்ரோல், டீசல், ஹைபிரிட், எலெக்ட்ரிக் என எல்லாவிதமான பவர் ட்ரெயின் ஆப்ஷன்களும் உண்டு. ட்வின் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஒன்றையும் டாடா உருவாக்கி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது அல்ட்ராஸில் முதலில் அறிமுகமாகலாம்.

வி ஆர் வெயிட்டிங் டாடா!