Published:Updated:

6-வது இல்லை; 7-வதுதான் நமக்கு!

ஃபோக்ஸ்வாகன் போலோ
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் போலோ

ஃபோக்ஸ்வாகன் போலோ - international

6-வது இல்லை; 7-வதுதான் நமக்கு!

ஃபோக்ஸ்வாகன் போலோ - international

Published:Updated:
ஃபோக்ஸ்வாகன் போலோ
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் போலோ

6-வது ஜெனரேஷன் ஃபோக்ஸ்வாகன் போலோவின் சர்வதேச சந்தைக்கான புதிய ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் வெளியாகியுள்ளது. கொஞ்சம் ஸ்டைல், நிறைய புதிய உபகரணங்கள் மற்றும் அட்டானமஸ் டிரைவிங் வசதியையும் பெற்றிருக்கிறது புதிய வெர்ஷன். இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை.

டிசைன்:

வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் கோல்ஃப் மற்றும் ஐடி3 ஃபோக்ஸ்வாகன் ஹேட்ச்பேக் மாடல்களின் டிசைனைப் போலவே மறுவடிவம் செய்யப்பட்டிருக்கிறது புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல். முன்பக்க எல்இடி விளக்குகளில் மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக் கிறது. வீல்பேஸில் எந்த மாற்றமும் செய்யப் படவில்லை. பம்பர்களை மாற்றியமைத்ததன் காரணமாக பேஸ்லிப்ட் வெர்ஷன் கொஞ்சம் நீளமாக இருக்கிறது.

இன்டீரியர் மற்றும் வசதிகள்:

புது போலோ, நவீன இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. ஸ்டாண்டர்டாக 6.5 இன்ச் டச்ஸ்கிரீன் வசதியுடன் அனைத்து நவீன கனெக்ட்டிவிட்டி வசதிகளையும் உள்ளடக்கி இருக்கிறது. நாம் விரும்பினால் இரண்டாம் நிலை அட்டானமஸ் டிரைவிங் வசதியையும் பெற்றுக் கொள்ளலாம். பஸாத் மாடலில் இருக்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் லேன் கீப்பிங் அசிஸ்டன்ஸ் வசதியையும் போலோவில் சேர்த்திருக்கிறது.

1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், பவர் 110 bhp
1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், பவர் 110 bhp

பவர் ட்ரெயின்:

இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 1 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான். டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இருக்கிறது. பவர் அவுட்புட் 80bhp-ல் இருந்து 110bhp தான். கியர்பாக்ஸ், இன்ஜின் மற்றும் வேரியன்ட்டைப் பொருத்து மேனுவல் அல்லது டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் என மாறுபடுகிறது.

இந்தியாவுக்கு இது இல்லை!

5-வது ஜென்ரேஷன் போலோதான் நம் நாட்டில் விற்பனையில் இருக்கிறது. அது கடந்த காலங்களில் பல அப்டேட்களைப் பெற்றுவிட்டது. இந்த 6-வது ஜென் போலோ, நம் நாட்டுக்கு வராது. நேரடியாக 7-வது ஜெனரேஷன் போலோவை இறக்குவதுதான் ஃபோக்ஸ்வாகனின் திட்டம்!6-வதுஇல்லை; 7-வதுதான் நமக்கு!International