Published:Updated:

எஸ்யூவிகளைத் தாண்டி ஸ்கோர் செய்யுமா ஸ்கோடா ஆக்டேவியா?

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஸ்கோடா ஆக்டேவியா

எஸ்யூவிகளைத் தாண்டி ஸ்கோர் செய்யுமா ஸ்கோடா ஆக்டேவியா?

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஸ்கோடா ஆக்டேவியா

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

விலை: சுமார் ` 31.20 - 34.75 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

பத்தாண்டுகளுக்கு முன்னர் செவர்லே க்ரூஸ், ஹோண்டா சிவிக், டொயோட்டா கரோலா, ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா, ஹூண்டாய் எலான்ட்ரா என D - செக்மென்ட் எக்ஸிக்யூட்டிவ் செடான் மார்க்கெட் பரபரப்பாக இருந்தது. அதன் பின்னர் வந்த காலக்கட்டத்தில், 20 லட்சத்துக்கு 7 பேர்களே சொகுசாகச் செல்வதற்கு ஏதுவாக SUV இருக்கும்போது, `எதுக்கு செடான்’ என இந்திய வாடிக்கையாளர்களை யோசிக்க வைத்தது. மேலும் சற்றே வசதியானவர்கள் ஆடி A4, BMW 3 சீரிஸ் என என்ட்ரி லெவல் லக்ஸூரி மார்க்கெட்டுக்குத் தாவினர். செவர்லே ஷட்டரைச் சார்த்திவிட்டுக் கிளம்ப, கரோலா, ஜெட்டா, சிவிக் என ஒவ்வொன்றாக சீனில் இருந்து மறைய, மேலே கூறிய லிஸ்ட்டில் எலான்ட்ரா மட்டும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் தாண்டி யுவனின் இசைபோல 20 வருடங்களாக எக்ஸிக்யூட்டிவ் செடான் செக்மென்ட்டில் தனக்கென ஒரு பென்ச்மார்க் வைத்திருக்கும் கார் என்றால், அது ஸ்கோடா ஆக்டேவியாதான்.

பெர்பாஃமன்ஸ் பிரியர்களான எங்களுக்கு நான்காம் தலைமுறை ஆக்டேவியாவை டெஸ்ட் டிரைவ் செய்யப் போகிறோம் என்றவுடன் பரவசம் தொற்றிக் கொண்டது.

10 இன்ச் டச் ஸ்க்ரீன் பயன்படுத்த நன்றாகத்தான் இருக்கிறது. சில பிஸிக்கல் பட்டன்களும் இருந்திருக்கலாம்.
10 இன்ச் டச் ஸ்க்ரீன் பயன்படுத்த நன்றாகத்தான் இருக்கிறது. சில பிஸிக்கல் பட்டன்களும் இருந்திருக்கலாம்.
இன்டீரியர், ப்ரீமியமாக இருக்கிறது. டச் ஸ்க்ரீன் சாலையை மறைக்கவில்லை.
இன்டீரியர், ப்ரீமியமாக இருக்கிறது. டச் ஸ்க்ரீன் சாலையை மறைக்கவில்லை.
எஸ்யூவிகளைத் தாண்டி ஸ்கோர் செய்யுமா ஸ்கோடா ஆக்டேவியா?

டிசைன்

அன்றும் இன்றும் என்றும் - வெளித்தோற்றம்தான் ஆக்டேவியாவின் பலம். ஏனெனில் பார்த்த உடனேயே, இது ஒரு விலை அதிகமான சொகுசு கார் என உணர்த்திவிடும்.

புதிய ஆக்டேவியா டிசைனில் மிகப் பெரிய அப்டேட் என்றால், வழக்கமான செடான்போல் அல்லாமல், டெயில்கேட்டும் பின்பக்கக் கண்ணாடியும் இணைந்த ‘ஃபாஸ்ட்பேக்’ வடிவமைப்பைச் சொல்லலாம்.

ஸ்கோடாவின் க்ரோம் சூழ்ந்த அகலமான கிரில் டிசைன், புதிய ஆக்டேவியாவிலும் தொடர்கிறது. முந்தைய தலைமுறை ஸ்ப்ளிட் ஹெட்லாம்ப்புக்குப் பதிலாக, கச்சிதமாகப் பொருந்தும் புது LED யூனிட், ஆக்டேவியாவை ஸ்கோடாவின் தற்போதைய வடிவமைப்பு மொழிக்குக் கொண்டு வருகிறது. அதேசமயம் பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது, முன்பக்கம் பானெட்டில் இருந்து பின்பக்கம் பூட் வரை நீளும் க்ரீஸ் கோடுகள், இது ஒரு VAG (Volkswagen Audi Group) கார் என அழுத்தமாகச் சொல்கின்றன.

பின்புறம் கூரை சட்டென முடியும் ஃபாஸ்ட் பேக் டிசைன், புதிய ஆக்டேவியாவை முன்பை விட ஏரோடைனமிக்காக மாற்றுவதாக ஸ்கோடா சொல்கிறது. பின்புற பூட் லிட்டின் மேல் ‘ஸ்கோடா’ என எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும் விதம் கவர்ச்சியாக இருக்கிறது. அந்த 17 இன்ச் அலாய்வீல்களிலேயே எவ்வளவு வேலைப்பாடுகள்!

இதன் நீளம் 4,689மிமீ; அகலம் (1,829மிமீ). இது 3-வது ஜென்னைவிட 19 மிமீ நீளத்திலும், 5 மிமீ அகலத்திலும் அதிகம். இதன் வீல்பேஸ் 2,680 மிமீ. எனவே, பின் இருக்கை இடவசதியில் நிச்சயம் சொகுசு கேரன்ட்டி. அதைவிட, ஸ்கோடாவில் எப்போதுமே பூட் வசதியும் நம்மை இம்ப்ரஸ் செய்யும். இந்த ஆக்டேவியாவும் அப்படித்தான். 600 லிட்டர்கள் என்றால் எவ்வளவு பெரிய டிக்கி!

எஸ்யூவிகளைத் தாண்டி ஸ்கோர் செய்யுமா ஸ்கோடா ஆக்டேவியா?

வசதிகள் & சிறப்பம்சங்கள்

ஸ்கோடா ஆக்டேவியாவின் ஓனர்கள் பெரும்பாலும் டிரைவர் வைத்து ஓட்டுவார்கள் என்பதால், பின் இருக்கையில் இருந்து ஆரம்பிக்கலாம். லெதர் சீட்டில் உள்ள குஷனிங் சாஃப்ட்டாக இருக்கிறது அதேசமயம், முதுகு மற்றும் தொடைப் பகுதிக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. போன தலைமுறையை விட பின்னிருக்கையில் கொஞ்சம் கூடுதலாகச் சாய்ந்து கொள்ள முடியும். லெக்ரூம் தாராளமாக இருப்பதுடன், கால் பாதங்களை முன்னிருக்கைகளின் கீழே நீட்டி அமரவும் முடியும். பின்பக்க AC வென்ட்டுடன் இரண்டு சார்ஜிங் ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சார்ஜ் ஆகும் போது போனை வைத்துக் கொள்ள முன்னிருக்கையின் பின்னால் வழக்கமான நியூஸ் பேப்பர் பாக்கெட்டுடன், போன் வைத்துக் கொள்ள ஏதுவாக சிறிய பாக்கெட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தொட்டால் ஒளிரும் லைட் மற்றும் கப் ஹோல்டருடன் கூடிய கை இருக்கைகள் ஓனர்களிடம் இருந்து லைக்ஸ் அள்ளும்.

அப்படியே முன் பக்கம் சென்றால், டேஷ்போர்டு கொரிய கார்கள்போல் கேட்ஜெட்டுகளால் நிறைத்ததுபோல் இல்லாமல், ப்ரீமியம் பொருட்களுடன் நல்ல தரத்தில் ஒரு சொகுசான ஐரோப்பிய காராக இருக்கிறது.

தனியாக டேப் போல நிற்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் இப்போது ட்ரெண்டு என்றாலும், டிரைவருக்குச் சாலையை மறைக்காத வகையில் 10 இன்ச் டச் ஸ்க்ரீனை பொசிஷன் செய்திருப்பது நைஸ். வால்யூம் அட்ஜஸ்ட் செய்வதற்கு ஸ்லைடர் பார் கொடுத்திப்பது போல, AC பேன் ஸ்பீடுக்கும் மேனுவல் டயல் கொடுத்திருக்கலாம். ஒவ்வொரு முறை 3 மெனு தாண்டி டச் ஸ்க்ரீனில் பேன் ஸ்பீடு மாற்றும்போது, வாடிக்கையாளர்கள் கடுப்பாகப் போவது உறுதி.

பின்பக்க பூட், ஹேண்ட்ஸ் ஃப்ரீ அன்லாக்கிங் என்பதால், நீங்கள் சரியான இடத்துக்கு நேராகக் காலை நீட்டினால், தானாக திறக்கும். ஃபாஸ்ட்பேக் டிசைன் என்பதால் அகலமாகத் திறக்கும் 600 லிட்டர் பூட்டில், குடும்பமாகச் சுற்றுலா செல்ல தேவையான அளவுக்கு லக்கேஜ் எடுத்துச் செல்லலாம். பின்னிருக்கைகளை மடக்கினால், பிரம்மாண்டமாக மாறும் 1555 லிட்டர் பூட் வசதி, பல போட்டியாளர்களைத் தலை குனிய வைக்கிறது.

அப்படியானால், குறைகளே இல்லையா எனக் கேட்டால், இரண்டு பெரிய குறைகள் உள்ளன. ஒன்று, நம்ம ஊர் சுட்டெரிக்கும் வெயிலுக்கு வென்டிலேட்டட் சீட்டுகள் அவசியம் ஆகிறது. மற்றொன்று, சன் ரூப். இது நம்ம ஊரின் புழுதி மற்றும் காற்று மாசுக்கு அவசியம் இல்லையென்றாலும், 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரில், வாடிக்கையாளர் சன் ரூஃபை எதிர்பார்ப்பது தவறில்லையே? ஒரு செக்மென்ட் கீழே உள்ள வெர்னாவிலேயே ஹூண்டாய் இந்த வசதிகளைக் கொடுக்கும்போது, ஸ்கோடா இதை ஆப்ஷனலாகவாவது கொடுத்திருக்கலாம்.

2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 190bhp பவரை வெளிப்படுத்துகிறது.
2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 190bhp பவரை வெளிப்படுத்துகிறது.


இன்ஜின் & பெர்ஃபாமன்ஸ்

இம்முறை ஸ்கோடா சூப்பர்பில் நமக்குப் பழக்கப்பட்ட 2.0லி, 4 சிலிண்டர் TSI பெட்ரோல் இன்ஜினை ஆக்டேவியாவில் பொருத்தியுள்ளது ஸ்கோடா. அதிகபட்சமாக இது 190bhp பவர் மற்றும் 320 Nm டார்க் செயல்திறன் கொண்ட இந்த இன்ஜின், முந்தைய தலைமுறை 1.8 TSI இன்ஜினை விட 10 bhp பவரும், 70Nm டார்க்கும் கூடுதலாகக் கொண்டுள்ளது. டீசல் இன்ஜினுக்கு வாய்ப்பில்லை ராஜா எனச் சொல்லிய ஸ்கோடா, ஆக்டேவியா RS க்கு மட்டும் காத்திருங்கள் என்று சொல்லியிருக்கிறது.

சக்தி வாய்ந்த இந்த இன்ஜினுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ட்ரான்ஸ்மிஷனிலும் மாறுதல்கள் செய்திருக்கிறது ஸ்கோடா. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் மட்டும் வரும் ஆக்டேவியா, இம்முறை அந்த 7 ஸ்பீடு DCT கியர்ப்காஸில், Ride by wire தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அதாவது கியர் லீவருக்கும், கியர்பாக்ஸுக்கும் நடுவே மெக்கானிக்கல் பாகங்கள் இல்லாமல் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் சென்சார்களின் உதவியுடன் கியர்கள் மாறும்.

இந்த Ride by wire சிஸ்டத்தில் இன்னும் மெருகு தேவை எனத் தோன்றுகிறது. ஏனென்றால், ஒரு ஸ்பீடு பிரேக்கரில் ஸ்லோ செய்து மீண்டும் புறப்படும்போது ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், ஜெர்க்குடன் கியர்கள் டவுன்ஷிப்ட் ஆகின்றன. ஆனால், மெல்ல த்ராட்டில் கொடுக்கும்போது இந்தப் பிரச்னையில்லை. எனவே உற்சாகமாக ஓட்டுவதற்கு, பேடில் ஷிஃப்ட்டர் உதவியுடன் மேனுவல் மோடில் வைத்து ஓட்டுவதே சிறந்தது.

2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஸ்போர்ட்டியாக இருப்பதால், உற்சாகமாக ஓட்டத் தூண்டுகிறது. கார்னரிங்கில் பாடிரோல் இல்லாமல், நிலைத்தன்மையுடன் இருப்பது நம்பிக்கையைக் கொடுக்கிறது. குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ்தான் என்பது மேடு பள்ளங்களில் பயமுறுத்துகிறது. ஆனால், குலுங்கல்களை நன்கு கட்டுப்படுத்துகிறது சஸ்பென்ஷன் சிஸ்டம். ஆனால், அதிர்வுகளால் ஏற்படும் சத்தத்தை உள்ளே கடத்துவதால், மோசமான சாலைகளை ஒருவித பீதியுடன்தான் கடக்க வேண்டியதாக இருக்கிறது.

தீர்ப்பு

எஸ்யூவிகளின் தொடர் தாக்குதலால், 2 கார்களுக்குச் சுருங்கிப் போயிருக்கிறது எக்ஸிக்யூட்டிவ் செடான் செக்மென்ட். இந்த செக்மென்ட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பதில், ஆக்டேவியாவின் பங்கு மிக அதிகம். டிரைவர் வைத்து சொகுசாகப் பயணிக்கும் செக்மென்ட்டில், 20 வருடங்களாகத் தனக்கென ஒரு வாடிக்கையாளர் வட்டத்தை வைத்திருக்கிறது ஆக்டேவியா.

ஆக்டேவியாவின் ஒவ்வொரு தலைமுறைக்கும், அதிக சிறப்பம்சங்கள் மற்றும் பெர்ஃபாமன்ஸ் உடன் சேர்த்து விலையையும் ஏற்றுவது ஸ்கோடாவின் வழக்கம். இம்முறை Style வேரியன்ட் 25.99 லட்சம் மற்றும் டாப் எண்டான L&K வேரியன்ட் 28.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைகளுடன் வந்திருக்கிறது. 7 சீட்டர் எஸ்யூவிகளைத் தாண்டி வாடிக்கையாளர்களை ஆக்டேவியா ஈர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எஸ்யூவிகளைத் தாண்டி ஸ்கோர் செய்யுமா ஸ்கோடா ஆக்டேவியா?
எஸ்யூவிகளைத் தாண்டி ஸ்கோர் செய்யுமா ஸ்கோடா ஆக்டேவியா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism