Published:Updated:

ஆட்டோமேட்டிக் பாதி… மேனுவல் மீதி! - சூப்பர் சோனெட்!

சோனெட்
பிரீமியம் ஸ்டோரி
சோனெட்

சோனெட்டின் ரிமோட் கீயை எடுத்து, பட்டன் ஸ்டார்ட் செய்து க்ளட்ச்சைத் தேடியவருக்கு இன்ப அதிர்ச்சி.

ஆட்டோமேட்டிக் பாதி… மேனுவல் மீதி! - சூப்பர் சோனெட்!

சோனெட்டின் ரிமோட் கீயை எடுத்து, பட்டன் ஸ்டார்ட் செய்து க்ளட்ச்சைத் தேடியவருக்கு இன்ப அதிர்ச்சி.

Published:Updated:
சோனெட்
பிரீமியம் ஸ்டோரி
சோனெட்
சின்ன காம்பேக்ட் காரில் இருந்து எஸ்யூவி–க்கு அப்டேட் ஆக நினைப்பவர்களுக்கு ஏற்ற சாய்ஸ்தான் கியாவின் சோனெட். ‘‘நான் க்விட் வெச்சிருக்கேன். எஸ்யூவிதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சோனெட் ஃபர்ஸ்ட் டிரைவ் படிச்சேன். இம்ப்ரஸ்ஸிவ்வா இருந்தது. டெஸ்ட் டிரைவ் பண்ணக் காத்திருக்கேன். சோனெட் வந்தா சொல்லுங்க!’’ என்று லாக்டெளன் சமயத்திலேயே நம்மிடம் ரிக்வொஸ்ட் வைத்திருந்தார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த அர்ஜூன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சோனெட்டின் GT Line பெட்ரோல் வெர்ஷன் நம் அலுவலகத்துக்கு வந்தபோது, சட்டென நமக்கு நினைவுக்கு வந்தவர் அர்ஜூன்தான். சோனெட்டைப் பற்றிச் சொன்னதும், ‘‘இதோ… வந்துட்டேன்…’’ என்று பாண்டிச்சேரியில் இருந்து விடியலோடு கிளம்பி வந்துவிட்டார் அர்ஜூன்.

சோனெட்டின் ரிமோட் கீயை எடுத்து, பட்டன் ஸ்டார்ட் செய்து க்ளட்ச்சைத் தேடியவருக்கு இன்ப அதிர்ச்சி. ‘‘வாவ்… IMT…யா? நானே இதுக்குத்தான் காத்துக்கிட்டிருந்தேன். நான் டிவிஎஸ் ஜைவ் பைக், 2 வருஷமா ஓட்டிக்கிட்டிருந்தேன். காரில் எப்படி க்ளட்ச் இல்லாம, கியர் மட்டும் போட்டு ஓட்ட முடியும்னு ஒரு பெரிய சந்தேகம் இருந்துச்சு. இன்னைக்கு அது தீரப் போகுது!’’ என்று உற்சாகமானார் அர்ஜூன்.

 1. ஆலோசனை - எப்படி இருக்கு சோனெட்? -  2. பெரிய டச் ஸ்க்ரீன் செம!
1. ஆலோசனை - எப்படி இருக்கு சோனெட்? - 2. பெரிய டச் ஸ்க்ரீன் செம!

ஆரம்பத்தில் க்ளட்ச் இல்லாத, கியர்பாக்ஸ் மட்டும் கொண்ட IMT மேனுவலில் கொஞ்சம் தயங்கியவர், போகப் போக என்ஜாய் செய்து ஓட்ட ஆரம்பித்தார். ‘‘கியர் மாத்த ஜாலியா இருக்கு! நான் வென்யூ பத்தி வீடியோ ரிவ்யூ பார்த்திருக்கேன்’’ என்று சொல்லிக் கொண்டே கியர் மாற்றினார்.

க்ரீப் ஃபங்ஷன் வேலை செய்கிறதா… மூன்றாவது கியரில் சிக்னலில் காரை ஸ்டாப் செய்தால் கார் மூவ் ஆகுமா… நியூட்ரலில் இல்லாமல் கியரில் காரை ஸ்டார்ட் செய்ய முடியுமா… On the Go–வில் அதாவது, கார் ஓடிக் கொண்டிருக்கும்போதே கியர் மாற்ற முடியுமா… என எல்லா கேள்விகளையும் அவராகவே கேட்டுக் கொண்டு, அவராகவே விடை தேடிக் கொண்டார்.

சோனெட் IMT-யை நாள் முழுதும் ஓட்டி முடித்துவிட்டு அவர் சொன்ன ரிவ்யூ.

‘‘ஆரம்பத்தில் க்ளட்ச் இல்லாம கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. ஆனா பழகினால்தான் இந்த IMT-யோட அருமை தெரியுது. ஆட்டோமேட்டிக் பாதி; மேனுவல் பாதி… இப்படி கார் ஓட்டிக்கிட்டே கியர் மாத்துறது செம அனுபவமா இருக்கு. சில கார்களில் டிராஃபிக்கில் ஓட்டினா டயர்டு ஆகிடும். எப்போடா வீட்டுக்குப் போய்ச் சேருவோம்னு இருக்கும். ஆனா, சோனெட்டில் டிராஃபிக்கில் ஓட்டினாலும் களைப்பு தெரியலை. ஜாலியாதான் இருந்தது. என்னைப் பொருத்தவரை கியா சோனெட், டிராஃபிக்கில் ஒரு ஃபன் டு டிரைவ் கார். இதுக்கு நிறைய காரணம் சொல்லலாம்.

 டர்போவின் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சூப்பர்! -  ரேணுகா அர்ஜூன்
டர்போவின் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சூப்பர்! - ரேணுகா அர்ஜூன்

சடர்ன் பிரேக் அடிக்கும்போது மேனுவல் கார்களில் ஒரு பிரச்னை உண்டு. கார் அப்படியே தடதடத்து ஸ்ட்ரக் ஆகி ஸ்டாப் ஆகிடும். இது பாதி மேனுவல் ஆச்சே… எப்படி இருக்குனு பார்க்கலாம்னு முயற்சி பண்ணினேன். 3–வது கியர்ல 40 கிமீ–ல் போய் ஒரு சிக்னலில் சடர்ன் பிரேக் அடிச்சேன். கியர் மாத்தவே இல்லை. ஆனா கார் ஆஃப் ஆகலை. இன்னொரு பெரிய ப்ளஸ் – செகண்ட் கியர்லயும் சோனெட்டைக் கிளப்ப முடியுது. அதேபோல, கார் ஸ்பீடா போய்க்கிட்டிருக்கும்போதே கியர் மாத்தினேன். வாவ்! என்னைப் பொருத்தவரை ஈஸி கியர் ஷிஃப்ட்டிங்தான்!

இதோட பெர்ஃபாமன்ஸ் பத்தியும் சொல்லியாகணும். டர்போ பெட்ரோல், செம பவர். 120bhp பவரும், 17.2kgm டார்க்கும் செம! வென்யூவில் இருக்கிறதுதானே? த்ராட்டில் ரெஸ்பான்ஸும் அருமையா இருந்துச்சு! ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டம், ஆன்ரோடில் சூப்பர்! நான் முடிஞ்சவரை டாப் ஸ்பீடு போய்ப் பார்த்தேன்.

இதோட ஹேண்ட்லிங் பத்திச் சொல்லியே ஆகணும். கார்னரிங்கில் இதோட கையாளுமை சூப்பர். பாடி ரோல் அவ்வளவா தெரியலை. எஸ்யூவிங்கிறதால நான் பாடி ரோல் நிறைய எதிர்பார்த்தேன். ஆனா, அருமை. அதைவிட ஹைவேஸ் ஸ்டெபிலிட்டி இன்னும் சூப்பர்.'' - இடைவிடாமல் பேசிக்கொண்டே போன அர்ஜூனை, ஸ்டாப் செய்துவிட்டுப் பேசினார் அவர் மனைவி ரேணுகா.

ஆட்டோமேட்டிக் பாதி… மேனுவல் மீதி! - சூப்பர் சோனெட்!

``டிசைன்தானே ஒரு எஸ்யூவியோட பெரிய அப்பீல்! சோனெட், இதிலும் வேற லெவல். அந்த டைகர் நோஸ் கிரில் குழந்தைகளுக்குக்கூட ரொம்பப் பிடிக்கும். டைமண்ட் கட் அலாய் வீல்ஸ், எண்டேவர் காரில் இருப்பதுபோல் டிஃப்யூஸர்னு கலக்குது சோனெட்.

அதைவிட வசதிகள்தான் வேற லெவல். செல்ட்டோஸில் இருக்கிறது மாதிரி எவ்வளவு வசதிகள். வென்யூவைவிட பெரிய டச் ஸ்க்ரீன். கனெக்ட்டிவிட்டிலேயும் கலக்குது சோனெட். ஆம்பியன்ட் லைட்டிங் வாவ் ரகம். எனக்கு ரொம்பப் பிடிச்சது வென்டிலேட்டட் சீட்ஸ்தான். எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் வியர்க்கவே வியர்க்காது. இப்போ சோனெட் வாங்கணும்னும் ஐடியா வந்துருச்சு. அர்ஜூனுக்கும் பிடிச்சிருக்குன்னு தெரியுது. சீக்கிரமே எங்களோட சொந்த சோனெட்டில் வந்து உங்களை மீட் பண்றோம்.!’ என்று சிரித்தார் ரேணுகா.

‘‘சோனெட் மிஸ் ஆயிடுச்சு!’’

ஆட்டோமேட்டிக் பாதி… மேனுவல் மீதி! - சூப்பர் சோனெட்!

சோனெட்டின் பெட்ரோல் வெர்ஷனை டெஸ்ட் டிரைவ் செய்ய நாம் அர்ஜூனை அழைத்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. மோட்டார் விகடனில் வரும் ஸ்பை ஷாட் பகுதியில் அடிக்கடி அர்ஜூனின் பெயரைப் பார்க்கலாம். காரோ, பைக்கோ – விற்பனைக்கு வருவதற்கு முன்பு சாலைகளில் Camouflauge தோற்றத்தில் செல்லும் வாகனங்களை விரட்டிச் சென்று படம் பிடிக்கும் வாசகர்களில் முக்கியமானவர் அர்ஜூன். புல்லட், எக்கோஸ்போர்ட்டில் ஆரம்பித்து கியாவின் செல்ட்டோஸ் வரை அர்ஜூனின் கேமராவுக்கு எதுவுமே தப்பவில்லை. ‘‘ப்ச்… சோனெட் மட்டும் எப்படி மிஸ் ஆச்சுனு தெரியலை!’’ என்று ஃபீல் செய்கிறார் அர்ஜூன்.

ரீடர்ஸ் ரிப்போர்ட் : கியா சோனெட் பெட்ரோல் IMT

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism